மத்ஹபுகளை மரை கழன்றவர்களே, பைத்தியங்களே பின் பற்றுவார்கள்.

மறுமையில் அல்லாஹ் நண்டு திண்ணியா? நீ ஷாபியா? ஹனபியா? ஷாபி என்றால் சொர்க்கத்துக்கு போ ஹனபி என்றால் நரகத்துக்குப் போ. சுறா மீன் சூப்பு குடித்தாயா? ஹனபியா உனக்கு  நரகம். ஷாபியா உனக்கு சொர்க்கம் என்றா தீர்ப்பு அளிப்பான்?

ஒரே செயல் ஒரு சாராருக்கு ஹலால் - கூடும்இன்னொரு சராருக்கு ஹராம்கூடாது என்றால் இது பைத்தியக்கார சட்டமா இல்லையா? இதுதான் மத்ஹபுகளின் சட்டங்கள். மத்ஹபுகளின் இந்த சட்டங்களை மரை கழன்றவர்களே, பைத்தியங்களே  பின் பற்றுவார்கள்அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஹராமாக்க இவர்கள் யார்? என்று பேசியவர்கள் வகுத்துள்ள சட்டங்களைப் பாருங்கள்

நிர்வாகியாக உள்ளவர்கள் ஹஜ் சர்வீஸ் நடத்துவது கூடாது- ஹராம்நிர்வாகி அல்லாதவர்கள் ஹஜ் சர்வீஸ் நடத்துவது ஹலால்- கூடும்.

நீ நிர்வாகியா நீ ரியல் எஸ்டேட் பண்ணுவது ஹராம் கூடாது. நீ நிர்வாகி இல்லையா உனக்கு ரியல் எஸ்டேட் ஹலால் – கூடும்.

நிர்வாகியா நீ ஷேர் சேர்ப்பது ஹராம் -  கூடாது.  நிர்வாகி இல்லையா உனக்கு ஹலால் – கூடும்.

2மத்ஹபில் 2 இமாம்கள் 2 கருத்துச் சொன்னதை  பைத்தியக்கார சட்டம் என்றார்கள். ஒரே அமைப்பு ஒரே இமாம். 2 கருத்துச் சொல்லி உள்ளார். ஒரே அமைப்பில் உள்ளவர்களுக்கு ஆளுக்கொரு சட்டம் கூறி உள்ளார். இது கிறுக்குத்தனமா இல்லையா?

குர்ஆன் ஹதீஸ்களை மட்டுமே பின்பற்றுபவர்கள் நாங்கள் என்று பீற்றிக் கொள்ளும் இவர்கள். நிர்வாகிக்கு ஒரு சட்டம் நிர்வாகி அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து என்ன ஆதாரம் தந்துள்ளார்கள்? 

நிர்வாகியாக இருந்து கொண்டு குலுக்கக் கூடாது. சாதாரண உறுப்பினராக இருந்து கொண்டு குலுக்கலாம் (தவறாக எண்ணக் கூடாது நாம் சொன்னது  சீட்டுக் குலுக்கலைத்தான்) 

மறுமையில் அல்லாஹ் நீ நிர்வாகியாக இருந்து கொண்டு ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தினாயா உன் இயக்க பைலாப்படி உனக்கு நரகம். நீ சாதாரண உறுப்பினராக இருந்து கொண்டு குலுக்கினாயா? உனக்கு சொர்க்கம் என்றா அல்லாஹ் தீர்ப்புக் கூறுவான்?

அரசியலில் ஈடுபட்டாயா உனக்கு நரகம்.  பினாமி கட்சிக்கு 2 சீட்டு வாங்கி கொடுத்தாயா? உனக்கு சொர்க்கம் என்றா  அல்லாஹ் தீர்ப்பு அளிப்பான்.

சொந்தக் கட்சியில் ஜெயித்தவனா உனக்கு நரகம். பினாமி கட்சியில் ஜெயித்தவனா உனக்கு சொர்க்கம் என்றா  அல்லாஹ் தீர்ப்பு அளிப்பான்.

அல்லாஹ் ஹலால் ஆக்கியதை ஒரு சாராருக்கு ஹலால் இன்னொரு சாராருக்கு ஹராம் என அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைக்கிறான் என்றால் அவன் யார்? 
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_11.html 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.