த.மு.மு.க.வுக்காக வந்து தனக்காக வசூல் செய்த தவ்ஹீது தாஇ பி.ஜே.யிடத்தில் தியாகியாம்

பள்ளி கணக்கில் மட்டுமா 3 லட்சத்தைக் காணவில்லை? நான் அனுப்பிய பணக் கணக்குகளிலும் 3 லட்சத்தைக் காணவில்லை என்றவர்தான் லுஹா. மஸ்ஜிதுர் ரஹ்மான் கட்டடப் பணத்திலிருந்து ளுஹா கையாடல் செய்து, அதை அவருக்கான சம்பளமாக செலவுக் கணக்கு எழுதிய தொகை எவ்வளவு? அதுவரைக்கும் அவர் சம்பளமே வாங்கவில்லையா? தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன் என்று எழுதி இருந்தீர்கள். இது பற்றி விரிவாகவே விளக்க வேண்டி உள்ளது. 
http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_95.html 

லுஹா 1994ல் விஸா இல்லாமல் சவூதியிலிருந்து திரும்பி வந்தார். மீண்டும் சவூதி செல்ல விஸா கிடைக்கவில்லை. மேலும் என்னால் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனவே எனக்கு ஊரால் வருமானம் வருகிற மாதிரி ஏற்பாடு செய்து தாருங்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறேன் என்று என்னிடம் வேண்டுகோள் வைத்தார்.

எனவே சவூதியிலிருந்து  1994ஆம் ஆண்டு இந்தியா வந்த அரபி அஹ்மது அல் அஹ்மது அவர்களிடம் உங்கள் மர்க்கஸ் சார்பில்  லுஹா எங்களுக்கு தாஇயாக இருக்கட்டும். 500 ரியால் (ரூ4500) சம்பளம் கொடுங்கள் என்று பேசியது நான்தான். என் வீட்டில் வைத்து நடந்த இந்த பேச்சு வார்த்தையில் காலித், சிபகத், மன்சூர் போன்ற ஆரம்ப கால தியாக வரலாற்றுச் சொந்தங்கள் இருந்தார்கள்.

3 மாதங்களாக எவ்வித மார்க்கப் பிரச்சாரமும் செய்யாமல் லுஹா ஊர் சுற்றினார். நன்றாக பிரச்சாரம் செய்கிறார் என்று சொல்லி  அஹ்மது அல் அஹ்மதுக்கு போன் போட்டு சம்பளம் கேட்கச் சொன்னார். கூலி இக்பால் (இன்று ததஜ) இது ஹராம் எவ்வித பணியும்  செய்யாமல் பொய் சொல்லி சம்பளம் வாங்கி கொடுக்காதீர்கள் என்றார்.

1995ல் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கு அஸ்த்திவாரம் போட்ட நாம் கட்டுமான பொறுப்பை லுஹாவிடம் ஒப்படைத்தோம். பள்ளி கட்டிட வகைக்கு ஒப்புக் கொண்ட அஹ்மது அல் அஹ்மது அவர்கள் அதற்கு உரிய முழுத் தொகை கொடுத்து விட்டார். ஆனால் பள்ளி கட்டடிடப் பணி முழுமை அடையவில்லை. இதை ஒட்டி மூன்று லட்ச ரூபாய் பள்ளி பணத்தில் லுஹா கையாடல் பண்ணிவிட்டார் என்ற குற்றச் சாட்டுகள் வந்தது. அப்பொழுது லுஹா அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் எந்த கையாடலும் பண்ணவில்லை என்று சத்தியம் செய்தார். ஒரு மவுலவி அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து விட்டார். இனி அவர் அவமானப்படக் கூடாது என்று ”பணத்திற்கு நான் பொறுப்பு. என் கணக்கில் பற்று எழுதி கணக்கை காட்டுங்கள்என்றேன். இதுதான் நான் பொறுப்பு ஏற்ற கடன்.

1997 மே மாதம் லுஹாவின் கடனுக்கு நான் பொறுப்பு ஏற்றேன்- அத்தோடு நின்றாரா லுஹா? குடும்ப செலவுகளை ஒட்டி அவ்வப்போது பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய் என வாங்கினார். பிறகு தேவையில்லாமல் காவல் துறையை வம்புக்கு இழுத்து வீராப்பு பேசி, ஜெயிலுக்குப் போனார். அதை ஒட்டியும் செலவுகளை ஏற்படுத்தினார். இப்படி அடுத்தடுத்த செலவுகளை இழுத்து வைத்தார்.

பள்ளிப் பணியை ஒழுங்காக செய்யவில்லை. முழுப் பணம் தந்தும் பள்ளிக் கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கவில்லை. இந்தக் காரணத்தால்தான் மாதம் 4,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதை அஹ்மது அல் அஹ்மது நிறுத்தினார். அதனால் 1998ல் வேலை தேடி லுஹா சவூதி சென்றார். வேலை கிடைக்கவில்லை.

லுஹா தனக்கு வேலை கிடைக்காத கஷ்டத்தை எனது நண்பரிடம் கூறி மாதம் 3000 ரூபாய் தந்தால் போதும் ஊரால் வேலை செய்கிறேன் என்று கூறி உள்ளார். எனது நண்பர் என்னிடம் வந்து நீங்கள் மாதம் ரூ 5000 லுஹாவுக்கு கொடுங்கள் என்றார். வேறு எந்த உதவியும் இடை இடையே கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ரி மார்க்கப் பிரச்சாரம் செய்யட்டும் என நான்தான் லுஹாவுக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று நான்தான் பொறுப்பு ஏற்றேன். பள்ளிக்கும் சம்பளத்திற்கும் சம்பந்தம் இல்லை.

லுஹா இரவில் 11மணிக்கு மேல் உள்ள T.V. நிகழ்ச்சிகளை பார்ப்பது சம்பந்தமாக  லுஹா அவரது தம்பி அப்துல்ஜப்பார் இடையே சண்டை வந்தது. அப்துல்ஜப்பார் பாக வகைக்கு பணம் கொடுத்து போகச் சொல்ல ஒரு லட்சம் ரூபாய் லுஹா கேட்டார் அனுப்பிக் கொடுத்தேன்.

1998ல் இருந்து 1999ஜூன் வரை மாதம் 5,000 ரூபாய் வீதம் கணக்கு பண்ணி ரூபாய் 30,000 (முப்பதாயிரம்) + 30,000 (முப்பதாயிரம்)  என்று 2முறை அனுப்பிக் கொடுத்திருக்கிறேன்.

1999 த.மு.மு.க. வாழ்வுரிமை மாநாட்டு வசூலுக்கு துபை வந்த லுஹா 3 போன்களை பயன்படுத்தினார். அதில் ஒன்று அவரது தம்பி காஜாவின் . உஸாமா பர்னிச்சர் பார்ட்னர் போன். அதை பொதுவாகப் பயன்படுத்தினார். அந்த போனின் ஜுன் மாத பில் 1811 திர்ஹங்கள். ஜுலை மாத பில் 2129 திர்ஹங்கள். ஆக அந்த ஒரு போனுக்கு மட்டும் மொத்தம் 3940 திர்ஹங்களுக்குப் பேசி உள்ளார். இந்தப் பணத்தை அவரது தம்பி காஜா கட்டி இருப்பார் என்றுதான் எண்ணுவீர்கள். அதுதான் இல்லை அந்த பில்களை அவரது தம்பி காஜா என்னிடம் தந்து விட்டுப் போய் விட்டார்.

அதுமட்டுமன்றி லுஹாவின் மனைவியுடன் பேச என்று எனது போனையும் எனது நண்பர் போனையும் பயன்படுத்தினார். ஆக  மொத்தம் 3 போன்களுக்கும் சேர்த்து  6000 (ஆறு ஆயிரம்) திர்ஹங்களுக்கு மேல் போன் பில் கட்டினேன்.

கத்தாரிலிருந்து வந்த 2610 திர்ஹங்களை தந்து உடன் அல்  இர்ஷாத் பெண்கள் கல்லுாரிக்கு ரூபாய் 50 ஆயிரம் அனுப்பச் சொன்னார். உடன் அனுப்பி கொடுத்தேன். அதற்கு அப்பொழுதைய ரேட் 4300திர்ஹங்கள். அதில் அதிகப் பற்று 1690 திர்ஹங்கள். நெக்லஸ் வாங்கிக் கேட்டார் அதற்கு 1450 திர்ஹங்கள்.

வந்ததோடு கம்யூட்டர் வாங்கி கேட்டார். த.மு.மு.க. வாழ்வுரிமை மாநாட்டு வசூலுக்காக வந்த லுஹா கேட்ட கம்யூட்டருக்காக வசூல் செய்யப்பட்டது. த.மு.மு.க.வுக்காக வந்து தனக்காக வசூல் செய்த தவ்ஹீது தாஇ லுஹாவை தியாகி என்று பி.ஜே. பீற்றுவதைப் பாருங்கள். பி.ஜே. லுஹாவை பீற்றிப் புகழ்ந்தது ஏன் என்பதற்குரிய பதிலும் பி.ஜே. உரையிலிருந்தே இணைத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=ZDUwrPc5bfU&feature=youtu.be


லுஹா கம்யூட்டர் வகைக்கு ஒவ்வொருத்தரிடமாக கெஞ்சி வசூலானது 1,300 திர்ஹங்கள் மட்டுமே. சிஷ்டமோ 3518 திர்ஹங்கள் ஆனது.  இதில் அதிக பற்று 2218 திர்ஹங்கள்.

1999ல் வந்து 2மாதத்தில் இப்படி 10,000 (பத்தாயிரம்) திர்ஹங்களுக்கு மேல் எனக்கு செலவுகளை இழுத்து விட்டுப் போய் விட்டார் லுஹா. இதே கால கட்டத்தில் லுஹா மாதிரி ஒரு மவுலவிக்கு என் குடும்பத்தார்களிடம் கடன் வாங்கி கடன் கொடுத்திருந்தேன். அந்த நேரத்தில் அதிலிருந்து 75,000 ரூபாய் லுஹா வழியாக வந்தது. அதை நான் கடன் வாங்கியவர்களிடம் கொடுக்காமல் லுஹாவுக்கு விட்டுக் கொடுத்தேன். 

இந்த மாதிரி லுஹா கேட்டதையெல்லாம் 1995-லிருந்து வாங்கி அனுப்பி இருக்கிறேன். இவை காணாது என்று, தஃவா- மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை சொல்லுகிறோம் என்ற பெயரால் வசூலித்து மவுலவிகளுக்கு உதவும் பி.ஜே.யின் பினாமி அமைப்பான காயல்பட்டணம் இஸ்லாமிய கல்விச் சங்கம் மூலம் மாதம் 5000வாங்கி கொள்வதாக பி.ஜே. இடம் கூறி பி.ஜே. எனக்குத்  தெரிவித்தார்.

பள்ளி கணக்கில் மட்டுமா 3 லட்சத்தைக் காணவில்லை? நான் அனுப்பிய பணக் கணக்குகளிலும் 3 லட்சத்தைக் காணவில்லை என்ற கணக்கு தந்தவர்தான் லுஹா. நான் அனுப்பிய பணங்கள், பல வரவு வைக்காமல் விட்டு விட்டார். மேலோட்டமாகப் பார்த்தாலே இரண்டு லட்சத்திற்கு மேல் கண்ணுக்கு தெரிந்து விடப்பட்ட தொகையை சுட்டிக் காட்டினேன்.
2001 ஜனவரி நோன்பில் ஒரு லட்சம் + ஒரு லட்சம் என்று 2தடவை அனுப்பியது பற்றி நான் சுட்டிக் காட்டிய பிறகு பின் குறிப்பில் 2- லட்சம் வந்தது. கணக்கு அஸதுல்லா பாயிடம் உள்ளதால் செலவு விபரம் எழுத வில்லை என்று கைப்பட எழுதி அனுப்பினார். ஆனால் கணக்கில் ஒரு லட்சம் மட்டும் வரவு வைத்திருந்தார்.
லுஹாவின் இந்தக் கணக்கு வந்ததும் இது மாதிரி விடுபட்டவைகளை, லுஹா தம்பி காஜாவையும் லுஹாவும் செயலாளரும் அமானித மோசடியாளர்கள் என்று  என்னிடம்  கூறிய மஸ்ஜிதுர்ரஹ்மான் அன்றைய துணைத் தலைவர் கூலி இக்பாலையும்  கூட்டி வைத்து காட்டினேன். லுஹா தம்பி காஜா வாய் மூடிச் சென்றார்.

இவ்வறான குளறுபடிகளை சுட்டிக் காட்டிய பின் லுஹா எழுதிய வார்த்தை, ”எத்தனையோ விஷயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறீர்கள் அல்லாஹ்வுக்காக இந்த ஒரு விஷயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டுகிறேன்”  என்று தான் எழுதினாரே தவிர, சரியான கணக்குத் தரவில்லை. 
இப்படி ஆயிரமாயிரம் குறைகளை உடைய இவர்கள், ஊர் உலகத்தில் உள்ளவர்களை குறை சொல்வதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். அதனால் இவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த கேவலம்தான் உலகம் அறிந்த விபச்சாரகனை தலைவராக ஏற்றுக் கொண்டு அலைய வைத்துள்ளது.  

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.