மறுமையில்தான் தீர்வு காண வேண்டுமா? நாமே சரி செய்து கொண்டு இம்மையிலேயே மீள வேண்டுமா?

கோபமான நிலையில் உள்ளவர்களிடம் போய் யார் என்ன சொன்னாலும் எடுபடாது. மனிதன் கோபம் அடைந்து விட்டால் அவன் மீது யாருடைய ஆதிக்கம் மிகைத்து விடுகிறது என்பதை எல்லாரும் அறிந்தே இருக்கிறோம்.
மனிதர்கள் யாராக இருந்தாலும் கோபமான நிலையில் அவர்கள் பேசும் பேச்சுக்கள் அவர்களுடையது அல்ல. இருந்தாலும் அவரவர்கள் வாயிலிருந்து வெளியான வார்த்தைகளுக்கு அவரவர்களே பொறுப்பு. ஒவ்வொருவரும் தான் பேசியது சரிதான் என்று வாயால் சொன்னாலும் அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி என்று தத்துவம் சொன்னாலும் அவர்கள் உள்ளம் உண்மையைச் சொல்லும்.
அதனால்தான் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னார்கள். இஸ்தப்ஸி கல்பக உனது கல்பை உள்ளத்தை- மனதை கேள் என்று. நாம் என்னதான் வாயால் வாதிட்டாலும் நமது மனசாட்சி சொல்லும் இன்ன இன்ன இடத்தில் நாம் தப்பு செய்து விட்டோம் என்று.
எனவே தீர்ப்பு அல்லாஹ்விடம் உள்ளது. அல்லாஹ்வின் தீர்ப்பு எப்படி இருக்கும்என்று அவரவர் மனதுக்குத் தெரியும். அவன் தீர்ப்பு அளித்து விட்டால் அதற்குப் பிறகு உள்ள நிலை என்ன? எனவே அல்லாஹ்விடம் போய் மறுமையில்தான் தீர்வு காண வேண்டுமா? நாமே சரி செய்து கொண்டு இம்மையிலேயே மீள வேண்டுமா?
17:23"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
: 'பிள்ளைகள் மீது அன்பு காட்டாதவர் (அல்லாஹ்வால்) அன்பு காட்டப்படமாட்டார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
17:24அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக "சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!'' என்று கேட்பீராக!
பெண்கள் தங்கள் பிள்ளைகளை அதிகமாக சபிப்பதால் அவர்கள் அதிகமாக நரகில் இருப்பதாக கண்டதாக நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கு இணை வைத்தவருக்கும்  தற்கொலை செய்தவருக்கும் நிரந்தர நரகம். என்பதை அனைவரும் அறிவோம். பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது தற்கொலைக்கும் ஷிர்க்குக்கும்சமம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.
நாம் எண்ணுகிறோம் நமக்கும் இன்னவருக்கும் பிரச்சனை என்று. உண்மை அது அல்ல. ஷய்த்தானுக்கும் நமக்கும்தான் பிரச்சனை. மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பதை ஷைத்தான் விரும்பவே மாட்டான். குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்தால் அந்த வீட்டில் எல்லாரும் சிரித்து சந்தோஷமாக இருப்பார்கள். ஷய்த்தான் வருத்தத்துடன் அழுது கொண்டிருப்பான்.
குடும்பத்தவருக்குள் சண்டை வந்து விட்டால் அந்த வீட்டில் எல்லாரும் வருத்தத்துடன் அழுது கொண்டிருப்பார்கள். ஷய்த்தான் தனது படை பட்டாளத்துடன் கூடி கும்மாளம் அடித்து சிரித்து சந்தோஷமாக இருப்பான்
'ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (5973)
அன்னையரைப் புண்படுத்துவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி (5975)
17:25 உங்கள் உள்ளங்களில் உள்ளதை உங்கள் இறைவன் நன்கறிபவன். நீங்கள் நல்லோராக இருந்தால் திருந்துவோரை அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.