மாற்றங்களுக்குக் காரணம் ஆய்வா மனோ இச்சையா? அமீர் பற்றி பி.ஜே. அன்றும் இன்றும்

IACயில் பொருளாளராக இருந்த பி.ஜே. அதிலிருந்து விலகி அதை எதிர்க்கும்பொழுது  எனக்கு ஒரு  அமீர் இருக்கிறார் அவர்தான் கமாலுத்தீன் மதனி என்றார். 1989 முதல் 1994 வரை ஜாக்கில் இருந்தபொழுது அமீருக்கு கட்டுப்பட வேண்டும். அதுதான் இஸ்லாம் என்றார்.  ஜாக்கை எதிர்த்தபொழுது அமீருக்கு கட்டுப்படத் தேவை இல்லை என்றார். 




ஒரே இயக்கத்தில் இருப்பது வழிகேடு என்றார். அதனால்தான் 15 அமைப்புகளில் இருக்கிறேன் என்றார். இப்பொழுது ததஜவில்தான் இருக்க வேண்டும் என்கிறார். கமாலுத்தீன் மதனிக்கு கட்டுப்படக் கூடாது என்பதற்காகவே 1999ல்  மார்ச் மாத அல்முபீன் இதழை அமீருக்கு கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சிறப்பிதழ் வெளியிட்டார். 

விபச்சாரம் செய்தவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளலாமா? என்ற பிரச்சனை கேள்வியாக வந்த பின்னர் என்ன சொல்கிறார்.

""எங்களது விருப்பிலும், வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும், இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் செவிசாய்ப்போம், கட்டுப்படுவோம் என்றும்  அல்லாஹ்விடமிருந்து அமைந்திருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாத வரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போட மாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தோம்."" அறிவிப்பவர் : உப்பாதா பின் ஸாமித் (ரலி) நூல் :புகாரி 7056. 



இந்த ஹதீஸம் மற்றும் இது போன்ற ஹதீஸ்களும் ஆட்சி அதிகாரம் படைத்த அமீருக்குக் கட்டுப்படுவதை மட்டும் தான் குறிக்கும் என்று நாம் வாதிட்டாலும், இதில் ஒளிந்திருக்கும் அடிப்படை கருத்து என்பது நம்மை வழிநடத்தி நேரான பாதையின் பால் செலுத்துகின்ற ஒவ்வொரு சிறு குறு அதிகார மையங்களுக்கும் பொருந்த தான் செய்யும் என்பதை மறுக்க முடியாது என்கிறார்.

இந்த வாதத்தை சொல்லித்தான் தான் பட்ட கடனுக்காக பள்ளிவாசலை இயக்கத்திற்கு தாரை வார்த்த பாடைப்புகழெல்லாம் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

ஆக அமீர் பற்றி ஜாக்கில் இருந்தபொழுது எதிர்த்தபொழுது, ததஜவுக்கு முன்பு பின்பு என பல நிலைபாடுகள் உள்ளது. எனவே பி.ஜே.யின்  மாற்றங்களுக்குக் காரணம் ஆய்வா மனோ இச்சையா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.