கோ எஜுகேஷன் பி.ஜே. அன்றும் இன்றும்


இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும் கூட ஆண்களும்-பெண்களும் இணைந்து படிக்கும் கோ எஜுகேஷன் எனும் கல்வி நிலையங்களே பெருமளவில் உள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் கல்வி கற்பது மார்க்க அடிப்படையில் சரியல்ல என்றாலும், நிர்பந்தம் காரணமாக நமது சமுதாய மாணவ-மனைவியர் கல்வி கற்று வருகின்றனர். இந்த கோ எஜுகேஷன் கல்வி பற்றி பீஜே, தனது இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா..? என்ற நூலில்

'இஸ்லாம் கல்வியை வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை. கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் முறையைத்தான் இஸ்லாம் எதிர்க்கிறது' என்று பதிவு செய்துள்ளார். அதாவது ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் கோ எஜுகேஷன் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று கூறுகிறார். ஆனால் இந்த தடைக்கு அவர் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை. ஆயினும் சில காரணங்களை முன்வைக்கிறார்.

அதாவது கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களால் வஞ்சித்து அனுபவிக்கும் செய்திகளும் , சக மாணவர்களால் ஏமாற்றப்படுவதும் அன்றாட செய்திகளாகிவிட்டன.

இவ்வாறு சேர்ந்து படிப்பதால்தான் ஆண்களின் கவனமும் சிதறடிகப்படுகின்றன.பெண்கள் தனியாக படித்தால் படிப்பு ஏறாது என்று கூறமுடியாது.

எதில் பாதுகாப்பு அதிகமோ அந்த வழியில் நின்று பெண்களுக்கே உரிய கல்லூரியில் பெண்கள் பயிலுவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பானது என்று இஸ்லாம் கூறுகிறது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார். அதாவது கோ-எஜுகேஷனுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று திடமாக மறுக்கிறார்.

இதே அறிஞர், சில ஆண்டுகளுக்கு முன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் தலைமையகத்தில் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் கோ-எஜுகேஷன் கூடுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
" நபி[ஸல்] அவர்கள் காலத்தில் இதுபோன்ற கல்விக்கூடங்கள் வைத்து கற்றுக்கொடுத்தல் என்ற நடைமுறை இருந்ததில்லை. எனவே கல்வியை விட்டுப்புட்டு பொதுவாக ஒரு சபையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து உக்காருவதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா..? அப்பிடீன்னு பாத்தம்னா அனுமதியிருக்குது. நபிகள் நாயகம்[ஸல்] பெண்கள் பள்ளிவாசலுக்கு தொழ வந்தார்கள்.. அந்த அடிப்படையில் ஆண்களும்-பெண்களும் சேர்ந்து படித்தல் என்பதில, ஒரு சபைல சேர்ந்து உக்காருதல் என்பதில தப்பு கெடயாது...பக்கத்து பக்கத்துல உக்காரலன்னா தப்பில்லை. என்கிறார். அதாவது கோ-எஜுகேஷன் கூடும் என்று கூறி தனது முந்தய 'கூடாது' என்ற நிலைக்கு முரண்பட்ட வரலாறும் உண்டு.

சரி! இப்போது (24-8-2014) திருச்சி செயற்குழு தீர்மானத்தில்...

கோஎஜுகேசன் கல்வி முறை ஒழிக்கப்பட வேண்டும்.

சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளார்கள்.

இதுபோன்ற தீர்மானங்ளை இதற்கு முன்பும் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அதே காலத்தில் கோ எஜுகேஷனுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதிய காலத்திலேயே மறுபக்கம் கோ எஜுகேஷனுக்கு ஆதரவான விளம்பரத்தை உணர்வில் போட்டு காசு பார்த்தார்கள்.

''பெட் இன்ஜினியரிங் கல்லூரி, ஆண்-பெண் இருபாலருக்கும் கட்டுப்பாடான ஹாஸ்டல் வசதியுடன் என்ற விளம்பரத்தையும்,
''எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி, எங்கள் மாணவ மாணவியர்களை 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் தொழில்நுட்ப வல்லுனர்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்ற விளம்பரத்தையும் உணர்வு வார இதழில் வெளியிட்டார்கள்.

அப்பப்பா இத்தனை பல்டிகள் அடித்தும் எப்படி அப்பாவிமாதிரி முகத்தை வைத்துக்கொள்ள அண்ணனால் மட்டுமே முடிகிறது?

நன்றி -முகவை அப்பாஸ்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.