தென்காசியில் தொழுதது தப்பா? தொழுதவர்களை அடித்தது தப்பா?

தென்காசியில் நடந்தது என்ன?

03/04, 2:05 pm] +91 97893 93096: ஜும்மா  கிடையாது  என்ன. பிரச்சனை? 


 04/04, 12:19 am]: இது எந்த ஜமாத்து சுன்னத் வல் மாத்தா Tmmk tntj intj அப்படி கேட்கிறேன் 

முஸ்லிம்கள் நடத்தும் தனியார் ஆஸ்பத்திரிகள் நெல்லையில் அறவே இல்லையா? முஸ்லிம் டாக்டர்கள் அறவே இல்லையா? 

இப்படி ஏராளமான கேள்விகள். முதலில் யா அல்லாஹ் இஸ்லாம் காட்டிய வழியில் தீர்வுகள், தீர்ப்புகள் காண விரும்பாத ஒவ்வொரு இப்லீஸ்களின் மீதும்  அவர்களின் கூட்டத்தார் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_3.html

இஸ்லாமிய  அடிப்படையில் சிந்திக்கத் துாண்டாமல் ஷய்த்தான்களின் வழியில் முஸ்லிம்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு குளிர் காயும் சுய நலம் தேடும் ஒவ்வொரு குட்டி ஷய்த்தான்கள் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன் என்று துஆச் செய்து கொள்கிறேன். 

தென்காசி செய்திக்கு முன் இரண்டு நாட்களாக மேலப்பாளையம் முஸ்லிம் நோயாளிகளை, கர்ப்பினிகளை, டயாலிஸஸ்களை முஸ்லிம் அல்லாத இன்ன இன்ன தனியார் ஆஸ்பத்திரிகள் அனுமதிப்பதில்லை என்று செய்திகள் காட்டுத் தீயாக பரவியது. 

அதை ஒட்டி முஸ்லிம்கள் நடத்தும் தனியார் ஆஸ்பத்திரிகள் நெல்லையில் அறவே இல்லையா? முஸ்லிம் டாக்டர்கள் அறவே இல்லையா? என்ற கேள்விகளும் வந்தன.

இன்ன இன்ன தனியார் ஆஸ்பத்திரிகள் முஸ்லிம்கள் உடையது தானே. இன்ன இன்ன டாக்டர்கள் முஸ்லிம்கள்தானே. முன்னாள் கவர்னர் பாத்திமா அவர்களுடைய வளர்ப்பு மகன் நெல்லையில் உள்ள இன்ன ஆஸ்பத்திரியில் தானே இருக்கிறார்.  இந்த   முஸ்லிம்கள்  டாக்டர்களெல்லாம் முஸ்லிம் நோயாளிகளுக்கு உதவ முன் வரவில்லையா? என்றும் கேள்விகள் வந்தன.

(டாக்டர் பாஷா மரக்கடை தாவூத் சாகிப் பேரன்.அவர்மனைவி டாக்டர். ஜாஸ்மின் கவர்னர் பாத்திமாவின் தம்பி மகள்.)

[04/04, 4:35 am] இஸ்ஹாக்காஞ்சி: தனியார் மருத்துவமனைகள் அவசர   கேஸ்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்தும் மேலப்பாளைத்தில் இருக்கும் செல்வன் மருத்துவமனை இன்று திறக்கவில்லை....

மேலப்பாளையம் மக்களின் தயவில் வளர்ந்த இந்த மருத்துவமனை இன்று அவசர காலத்தில் மேலப்பாளையம் மக்களை புறக்கனிக்கிறது  இனிமேலாவது  நாம் விழித்து கொள்ளவேண்டும்....


[04/04, 5:17 am] +91 98409 55471: மேலப்பாளைய மக்கள் விழிப்படையவே மாட்டார்கள். கொடி கோசம் வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களை குறை பேசியே காலத்தை கழிப்பது 

இந்த மாதிரி ஏகப்பட்ட வாத பிரதி வாதங்கள் நடக்கின்றன.

இந்த அசாதாரண சூழ்நிலையில்  யார்  தலையிட்டால் காரியம் நடக்கும் என்று உணர்ந்த அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் அந்த வேலைகளை கன கச்சிதமாக செய்தார்கள். அவர்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அருள்புரிவானாக ஆமீன். 

விளம்பரம் செய்யாமல் தென் மண்டல அதிகாரிகள், DGP அலுவலகம், தலைமைச் செயலகம் முதல்வர் அலுவலகம் என செய்திகளை கொண்டு சென்ற முஸ்லிம் அல்லாத பிரமுகர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.


இதில் மிக மிக பாிதாபமாகப் பார்க்கப்பட்டது டயாலிஸிஸ் பேஷண்டுகளை தனியார் ஆஸ்பத்திரிகள் டயாலிஸிஸ் பண்ண மறுத்து விட்டார்கள் என்பதுதான். அப்பொழுது  நம்மை  தொடர்பு கொண்டவர்கள் நினைவூட்டியது. 


மேலப்பாளையம்  தக்வா பள்ளி தலைவர் இனாயதுல்லாஹ், MMMK - டிரிப்புல் எம்கே  தலைவர் பாளை ரபீக் போன்றவர்கள் முஸ்லிம்களிடம் வசூல் செய்து நடத்துவதுதான் நஸீஹா டயாலிஸிஸ் சென்டர். 

ஆகவே டயாலிஸிஸ் பேஷண்டுகளை  முஸ்லிம்களின் நஸீஹா டயாலிஸிஸ் சென்டருக்கு போகச் சொல்லுங்கள் என்று.


நாம் தொடர்பு கொண்டு சொன்ன பிரமுகர் சொன்ன பதில். மேலப்பாளையம் டயாலிஸிஸ் பேஷண்டுகளுக்கு டயாலிஸிஸ் செய்ய மாட்டோம் என்று சொன்னதே உங்கள் நண்பர் தக்வா பள்ளி  இனாயதுல்லாஹ், MMMK  பாளை ரபீக் நடத்தும்   நஸீஹா டயாலிஸிஸ் சென்டர்தானே என்றார்கள். 


வீடியோவில் பேசி உள்ளவர்கள் தனியார் டயாலிஸிஸ் சென்டர் என்று தானே சொல்லி உள்ளார்கள்.   

நஸீஹா  என்றால் இனாயதுல்லாஹ் அல்லது பாளை ரபீக்கை தொடர்பு கொள்ள வேண்டியதுதானே என்றோம். 

பாளை ரபீக்கை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பாளை ரபீக்கும் முடியாது என்று மறுத்தாகக் கூறினார். 

மேலும் பாளை ரபீக் ஆதரவாளர் ஒருவரிடம் விசாரித்ததில் பாளை ரபீக் முடியாது என்று மறுக்கவில்லலை  டாக்டர்கள் சொல்வதுதான்  முடிவு என்றுதான் சொன்னார் என்றார்கள். 


நஸீஹா டயாலிஸிஸ் சென்டரோடு  தொடர்புடைய இருவரிடம் ஏன் மறுத்ததீர்கள் என்று  கேட்டதற்கு செய்து விட்டோமே என்றார்கள்.

முதலில் மறுத்தீர்களா? இல்லையா? என்று கேட்டதற்கு. கவர்மெண்ட் ஆர்டர் என்றார்கள். ஆர்டர் காப்பி தாருங்கள் என்றேன். இல்லை வாய் மொழி உத்தரவு என்றார்கள். இது பொய் என்றேன். ஒரு டாக்டர் பேசிய ஆடியோ கேட்கவில்லையா என்றார்கள்.


அந்த டாக்டர் பேசியது பொய் என்றேன். நான் விசாரித்ததில் கவர்மெண்ட் அந்த மாதிரி எந்த ஆர்டரும் போடவில்லை. இவர்களாக இட்டுக்கட்டி உள்ளார்கள் என்றேன். அதன் பிறகு, என்ன செய்ய எல்லாரும் பயப்படுகிறார்கள். நாங்கள் முயற்சி செய்து ஆர்டர் வாங்கி விட்டோம் என்றார்கள்.


நீங்கள் முயற்சி செய்ததாக என்னிடம் கூறாதீர்கள். அ.தி.மு.க. ஹயாத் அ.தி.மு.க. மாவட்ட, மற்றும் மாநில நிர்வாகிகள் மூலம் தலைமைச் செயலகம் முதல்வர் அலுவலகம் என கொண்டு போனார். அதன் பிறகு தலைமையில் இருந்து  ஆர்டர் வந்தது என்றேன். ஒத்துக் கொண்டார்கள்.

நேற்று வரை காபிர் பத்வா கொடுக்கப்பட்டவர் முடித்து கொடுத்ததை - செய்து கொடுத்ததை தாங்கள் செய்ததாக கூறி பெருமைப்படுகிறார்கள்.


இனி தென்காசி போவோம். 

தென்காசி மீன் மார்க்கெட் பின்புறம் உள்ளது சுன்னத் ஜமாஅத் பள்ளி.  VTS  ரஹ்மான் பட்சார் பையன்  VTS இஸ்மாயில் தான் தென்காசி நடுப்பேட்டை பள்ளி மற்றும் ஐக்கிய ஜமாஅத் தலைவராக உள்ளார். 

நிறைய பைக்குகள் பள்ளியை சுற்றி நின்றதும் போலீஸ் வந்து  ஊரடங்கு உத்திரவை மீறி ஜும்ஆ நடத்தாதீர்கள். பிரச்சனை வரும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  தொழ வந்தவர்களிடம் போகாதீர்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

மீறி ஜும்ஆ பாங்கு சொல்லி பயான் ஆரம்பித்ததும் வேறு வழி இன்றி ஆய்வாளர்  ஆடிவேல்,   கோபாலகிருஷ்ணன்  DSPக்கு தகவல் கொடுத்துள்ளார். 

DSP  படையுடன் வந்து  வெளியில் நின்றுள்ளார். பள்ளிக்கு வந்த எல்லா வாகனங்களையும் வீடியோ பண்ண சொல்லி உள்ளார். 

தொழுகை முடிந்ததும் எல்லா வாசல்களையும் அடைத்து விட்டு ஒரு வழியை மட்டும் திறந்து வைத்து . ஒவ்வொருவரையும் வீடியோ பண்ண சொல்லி உள்ளார்.  

வெளியே போனவர்கள் அக்கம் பக்கத்து வீட்டு மாடிகளில் நின்றும் குறுகலான தெருக்களிலில்  நின்றும் போலீஸ் மீது கல் வீசினார்கள் என்கிறது போலீஸ் தரப்பு.  மேலும் போலீஸ்கள் அடிபடும் வீடியோக்களை போலீஸ் தரப்பு வெளியிட்டுள்ளது . 

இல்லை பள்ளியில் இருந்து வெளியே வரும்போதே அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். DSP  ஐயர் RSS ஆதரவாளர்  என்கிறார்கள் தென்காசி சுன்னத்  ஜமாத் முஸ்லிம்கள்.

ஊரடங்கு உத்திரவை மீறி, நூற்றுக்கணக்கானோர் திரண்டதால், டி.எஸ்.பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார்  லத்தி சார்ஜ் செய்து சட்ட விரோத கூட்டத்தை கலைத்தனர் கூட்ட நெரிசலில் ஓடி விழுந்து எழுந்ததில் சிலருக்கு காயம்  பள்ளிவாசலிலிருந்து  சிலர் கல்வீசி தாக்கியதில்  காவலர்களுக்கும் காயம் என்று ஒரு செய்தி்.


ஊரடங்கு உத்திரவை மீறி ஜும்ஆ நடத்தாதீர்கள். பிரச்சனை வரும் என்ற ஆய்வாளர் ஆடிவேலை   சுன்னத்  ஜமாத் முஸ்லிம்கள்.  சரமாரியாக தாக்கினார்கள்.  அங்கிருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்து ஆடிவேலை மீட்டனர். உடனே அவர் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறது போலீஸ் தரப்பு.

இது சம்பந்தமாக வந்த முஸ்லிம்களின் கமாண்டுகள்

[03/04, 10:15 pm] +91 99444 92477: Pallivasalil tholugai nadathiyadhu sariya ah thavara thelivana vilakam tharavom

[03/04, 10:27 pm] வரம்பை மீறி செயல்படுவோருக்கான தண்டனையை காவல்துறை கொடுத்துள்ளது.


[03/04, 10:00 pm] +965 6576 9744: 👍👍 very good 👌

[04/04, 12:15 am] +965 9754 0083: இதெல்லாம் தேவையா


[04/04, 5:32 am] +91 83443 55791: என்னுடைய சுய விளக்கத்திற்காக கேட்கிறேன் அரசு ஒன்றுகூடல் தவிர்க்கும் நோக்கிலும் விசக்கிருமி பரவலை கட்டுபடுத்தும் வகையிலும் ஊரடுங்கு நடைமுறைபடுத்தும் போது நமது சுய கட்டுபாட்டை மீறும் போது இவ்வாறான பிரச்சனைகள் எலுகின்றனவே சிந்திப்பேமே....


[03/04, 10:01 pm]  இவர்களுக்கு மூலையே கிடையாதா 🤦🏾‍♂️

இன்று தென்காசி நடுப்பேட்டை பள்ளியில் நடந்த சம்பவத்தில் முழு தவறு நம்முடையது  இப்போதைய சூழலில் உணர்ச்சிவசம் படுவதை விட பொறுமை சிறந்தது 
பதிவை நீக்குவது நமக்குதான் நன்மையானது தவறு நம்முடையது பெரும்பான்மையான  ஆலிம்களின் வழிகாட்டுதலில் நம் சூழல் அறிந்துதான் தொழுகையை வீட்டில் தொழுதுகொள்ள அறிவிப்பு செய்யப்பட்டது அதை மீறி கூடியது தவறு தற்போதைய சூழலில் முஸ்லீம்கள் மீது பழி போடுவதற்கான வாய்ப்பினை நாமே உருவாக்கி கொடுக்க கூடாது நடுப்பேட்டை பள்ளி சம்பவம் நம் தவறு  இனி வரும் காலத்திலாவது இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் அதனை நடைமுறை படுத்தும் சூழல் சார்ந்து வகுப்புகள் மற்றும் பயான்கள் நடத்தி வழிகாட்டுவது சிறப்பாக அமையும் இன்ஷா அல்லாஹ்

[03/04, 10:12 pm]  இது தேவையா நமக்கு ஏற்கனவே கொரோனா ஜிகாத்னு சொல்லிட்டு இருக்கானுங்க நாம் தான் புரிந்து நடக்கனும்












Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.