நம்ம ஊர் மேலப்பாளையம் செய்தி உண்மை நிலை என்ன?

பாஸிட்டிவ்என்பது உறுதியா? மேலப்பாளையம் செய்தி எது உண்மை? எது பொய்? என்று தெரியவில்லைநீங்கள் வெளியிடுங்கள் என்று பலர் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதால் இந்தப் பதிவு. ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் நம்ம ஊருக்கு எதிரி நம்ம ஊர்வாசிகளே. முஸ்லிம்களுக்கு எதிரி முஸ்லிம்களே!
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_2.html
இஸ்லாத்தை குர்ஆன் ஹதீஸ் என்ற மூல ஆதாரத்திலிருந்து உள்ளதை உள்ளபடி சொன்னால் ஏற்காமல் ஓட ஓட விரட்டி அடித்த சமுதாயம்  நம்ம முஸ்லிம் சமுதாயம்.


மக்களிடம் எதைச் சொன்னால். எப்படிச் சொன்னால். வரவேற்பார்கள் என்று மஷுரா என்ற கலந்தாலோசனை செய்து மக்கள் வரவேற்கும் வண்ணம் இல்லாததை, இஸ்லாத்தின் பெயரால் இட்டுக்கட்டிச் சொன்னால். அவர்களை மாலை போட்டு மகான் பட்டமளித்து வர வேற்கும் சமுதாயம் முஸ்லிம் நம்ம சமுதாயம்

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் உள்ள மார்க்க விஷயத்திலேயே இப்படி என்றால் ஆதாரங்கள் இல்லாத உலக விஷயத்தில் சொல்லவும் வேண்டுமா? எதிர்க்க வேண்டிய காலம் வரை காபிர் என்பார்கள்.  

தேவை என்றதும் முன்னால் வைத்துக் கொள்வார்கள். அதுதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. அவர் அப்படி சொல்கிறார். இவர் இப்படி சொல்கிறார் என்றவர்களுக்கு எனது பாணியில் நான் சொன்ன பதில் என்ன என்பதை அனைவரும் அறிவீர்கள்.

யாரெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தையும் இஸ்லாத்தையும் தங்கள் வளர்ச்சிக்காக, விளம்பரத்துக்காக, பயன்படுத்த. இல்லாததை இட்டுக்கட்டிச் சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்களோ அவர்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக ஆமீன். என்பதை மீண்டும் பதிவு செய்து கொள்கிறேன்.


சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடரின் போது நம்மிடம் உதவி பெற்ற முஸ்லிம் அல்லாதவர்கள்தான் இன்று நம்மை எதிர்க்கிறார்கள். ஆகவே இனி  பேரிடர்களின் போது உதவக் கூடாது என்ற பதிவுகளும் பேஸ்புக்குகளில் வந்த வண்ணம் உள்ளன.


சுனாமி, புயல், வெள்ளம் போன்ற பேரிடரின் போதும் சரி இந்த கொரானாவின் போதும் சரி  யார் அல்லாஹ்விடம் நன்மை நாடி உதவினார்களோ உதவுகிறார்களோ அவர்களுக்கு இந்த மாதிரி சிந்தனை வராது. அவர்களுக்கு அல்லாஹ்வின் பேரருள் என்றென்றும் உண்டாவதாக ஆமீன்

யார் இயக்க வெறியில் படம் காட்டி பெருமையடிக்க உதவது போல் நடித்தார்களோ, இல்லாத லாரி வாடகையை கஜா புயல் கணக்கில் எழுதினார்களோ  அவர்களைப் போன்றவர்களுக்கு இந்த மாதிரி சிந்தனை தான் வரும். அவர்களுக்குரிய அஜிரைசரியான கூலியை அல்லாஹ் கொடுப்பான்.

நம்ம ஊர் மேலப்பாளையம்  செய்தி உண்மை நிலை என்ன?

மேலப்பாளையம் 16 களக்காடும் செய்துங்க நல்லுாரும் சேர்த்து 6.  ஆக 16 +6=  22 பேர். 

29-03-2020 அன்று ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்கிறார்கள்

29ம் தேதி டெஸ்ட்டில் எந்த ரிப்போர்ட்டும் இல்லை

30ம் தேதியும் டெஸ்ட்டில் ரிப்போர்ட்டு இல்லை

31ம் தேதி டெஸ்ட்டில் தான் 17 பேருக்கு நோய் தொற்று பாஸிட்டிவ் என்று காட்டி உள்ளது.

நோய் தொற்று பாஸிட்டிவ் என்றால் கொரோனா தொற்று நோய் என்று சொல்ல முடியாது

பாஸிட்டிவ் என்பது உறுதி. என்ன பாஸிட்டிவ்? என்பது உறுதி இல்லை.


தடுமலும் தொற்றுதான் 
சளியும் தொற்று நோய்தான். 
ஆக பாசிட்டிவ் என்று காட்டுவது. தடுமலாகவும் சளியாகவும் கூட இருக்கலாம். 

கொரோனா ஸ்டேஜ்  14 நாட்களுக்குப் பிறகுதான் தெரியும்.  

கொரோனாவா இல்லையா? என்று தெளிவாகத் தெரிய 14 நாட்கள் ஆகும்..

இப்பொழுது isolated ஐஸ்லோடெடு என்ற சாதாரணமான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில்தான் வைத்துள்ளார்கள்.

quarantine குவாரண்டைன் என்ற ஆங்கில சொல்லுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட என்பது தான் பொருள். 

என்றாலும் Extremely intense என்ற மிகத் தீவிர - அதி தீவிர பிரிவைத்தான் கொரோனாவுக்கு quarantine குவாரண்டைன் வார்டு என்கிறார்கள். 

அந்த quarantine குவாரண்டைன் வார்டில் இவர்கள்  வைக்கப்படவில்லை.

கொரோனா quarantine குவாரண்டைன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு என்றால் டாக்டர்கள் உட்பட மருத்துவ குழுவினர்கள் அனைவரும் முகம் மூடிய புர்கா போன்ற பாதுகாப்பு கவசம் அணிந்து கொண்டுதான் சிகிச்சை அளிப்பார்கள்.

இப்பொழுது isolated ஐஸ்லோடெடு என்ற சாதாரணமான வார்டில்தான் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மொத்தமாக வைத்துள்ளார்கள்.

quarantine குவாரண்டைன் என்ற தனிமைப்படுத்தப்பட்ட வார்டு என்றால் இவர்களை மொத்தமாக  வைத்து இருக்க மாட்டார்கள். 

ஒவ்வொரு வரையும் தனித் தனியாக தனிமைப்படுத்தி வைப்பார்கள். அல்லாஹ் அருளால்  இப்பொழுது வரை எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள்.

மேலும் பிரசவம், டயாலிஸ், குழந்தைகள் மருத்துவர்கள் உட்பட மேலப்பாளைய என்றால் ஹைகிரவுண்டுக்கு போங்கள் என்று சொல்கிறார்கள். ஹைகிரவுண்டுக்கு போனால் அங்கேயும் பிரச்சினை  என அறிந்ததும் அ.திமு.க. பகுதி செயலாளர் ஹயாத் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்.

மாவட்டச் செயலாளர், மாவட்ட அமைச்சர்,  .தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் வரை செய்திகளை கொண்டு சென்றுள்ளார்கள். இன்றைய முயற்சியில்  டயாலிஸ் பிரச்சனையை முடித்து கொடுத்துள்ளார்கள். 


[02/04, 6:02 am]  Will look into it immediately
[02/04, 1:26 pm]  It will be solved sir 

என்று சுருக்கமாகத்தான் உயரதிகாரிகள் பதில் கொடுப்பார்கள். கொடுக்க முடியும்.  அவருக்கு நீண்ட பதில் வந்துள்ளது என்று சொல்பவர்கள் நீண்ட பதிலை நம்பிக்  கொள்ளுங்கள்.

அனைத்து கட்சியினரும் சமுதாய நலனில் அக்கறை  உள்ள அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.

70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட மாவட்டம் அமைதியாக  இருக்கிறது.  இணைப்பில் உள்ள பேப்பர்களை கிளிக் செய்து பார்க்கவும் உண்மையில் நெல்லையில் மட்டும் 31.03.-2020வரை இரண்டாயிரத்தி ஐநுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

22 முஸ்லிம்கள் சென்றதை கூ ஹு என்று ஆக்கியவர்கள் மேலப்பாளையத்து முஸ்லிம்கள்.

மேலப்பாளையத்தில் பால், இட்லி, தோசை மாவு, மீன், காய்கறி போன்றவற்றை தெருவில் கொண்டு வந்து விற்றவர்கள்.  நத்தம் போன்ற சுற்று வட்டாரத்து இந்து சகோதரர்கள்.

கயிறு கட்டியும் மரங்களை போட்டும் வழிகளை மறைத்தார்கள்.  அடுத்த தெருவாசிகள் உறவினர்கள் இந்த தெருவில் இருந்தாலும் அவர்களை பார்க்க வராதீர்கள் என்று போர்டுகளும் வைத்தார்கள்.

அதுதான்  சுற்று வட்டாரத்து இந்து சகோதரர்களிடம் பீதியை ஏற்படுத்தியது.    இன்று டாக்டர்களையும்  பீதி அடைய வைத்து விட்டது.  இந்த உண்மையை எழுதுவதால் என்னை திட்டுபவர்கள்  திட்டிக் கொள்ளட்டும். வமா அலைனா இல்லல் பலாஃக்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.