அமீரக ஆங்கிலப் பத்திரிகையில் தெளிவாக வந்த செய்தி
[16/04, 5:59 pm] Lkms: அமீரக ஆங்கிலப் பத்திரிகையில் தெளிவாக வந்த செய்தியை ஏன் இந்தியப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி செய்திகளும் தவறாகச் சித்தரித்து மக்களைப் பீதியில் ஆழ்த்துகின்றனர்?
அமீரக அரசாங்கம் இங்கு வசிக்கும் வேலையைத் துறந்த இந்தியர்களையும், தாய்த் திருநாட்டிற்குப் போகத் துடிக்கும் இந்தியர்களையும் மட்டுமே இந்தியாவிற்கு அனுப்பும் ஏற்பாடுகளை முன்னெடுக்கிறது. அதுவும் இரண்டு நிபந்தனைகளின் பேரில்.
ஒன்று அவர்களுக்கு நோய்த் தொற்று இல்லாமல் இருக்க வேண்டுமென்பது. (அதற்கானப் பரிசோதனையை அமீரக அரசே நடத்தும்)
மற்றொன்று அவர்களே தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டுமென்று தன்னிச்சையாக விரும்பினால் மட்டுமே.
மற்றபடி நமது அரைவேக்காடு ஊடகங்கள் சொல்வது போல அமீரக அரசு இந்தியர்கள் எவரையும் வெளியேற்ற முனையவில்லை.
இது தெரியாமல் ஊரில் இருப்பவர்கள் இந்தச் செய்தி உண்மையா என்று பயம் கலந்த ஆதங்கத்திலும், வேறு சிலர் எள்ளலாகவும், மேலும் சிலர் மகிழ்ச்சியிலும் கேட்கின்றனர்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_16.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_16.html








Comments