மக்கா,மதீனாவில் 20 ரகஅத்துகள் 10 ரகஅத்துகளாக குறைக்கப்பட்டது

ஹரமைன்களில் பொது மக்கள் தராவீஹ் தொழ அனுமதி இல்லை. 
சவூதியின் எல்லாப் பள்ளிகளிலும் இரவுத் தொழுகை (தராவீஹ்)   எட்டு ரகஅத்கள் மட்டுமே நடக்கும். உலக மக்கள் சங்கமம் ஆகும் ஹரமைன்களில் மட்டும் 20 ரகஅத்துகள் நடந்து வந்தன. அது கொரோனாவை ஒட்டி 10 ரகஅத்துகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

ஹரமைன்களில்  இப்தார் நிகழ்ச்சிகள் கேன்சல் செய்யப்பட்டது.  

ஹரமைன்களில் இஃதிகாFப்  இருப்பதும் கேன்சல் செய்யப்பட்டு விட்டது. 


ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும். புகாரீ (1782) முஸ்லி­ம் (2408) என்ற  ஹதீஸ் அடிப்படையில்  ரமழானில்  லட்சக்கணக்கில் உம்ரா செய்ய வருவார்கள். அந்த உம்ராவுக்கும் மறு அறிவிப்பு வரை அனுமதி இல்லை. 

ரமழான் வந்து விட்டால் அரபு நாடுகளில் அரபிகள் சார்பாக தினமும் இப்தார் நிகழ்ச்சிகள் நடக்கும். சொந்தச் செலவில் பெரிய பெரிய கூடாரங்கள் அமைத்து ஒவ்வொரு பகுதியிலும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் நோன்பாளிகளுக்கு  பிரியாணி, ஹரீஸ், முஷாவி போன்ற உயர் ரக உணவுகள்  ஜுஸ், மற்றும் பழங்கள் வைத்து நோன்பு துறக்கச் செய்வார்கள். அவற்றுக்கு அனுமதி இல்லை. 

காவல்துறை முதல் அனைத்து துறை சார்பிலும்  நோன்பு துறக்கும் நேரத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக  எல்லா சிக்னல்களிலும் நின்று  கொண்டு வாகனத்தில் செல்வோர்  நோன்பு துறக்க இப்தார் கிப்ட்   கொடுப்பார்கள் அவற்றுக்கும்  அனுமதி இல்லை. 

இப்படியாக எல்லா அரபு நாடுகளிலும் சொந்த செலவில் செய்யும் அனைத்து இப்தார் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை என்றதும் விட்டு விட்டார்கள். ஆனால்  வசூல் பண்ணி கஞ்சி காய்ச்சக் கூடிய அமைப்புகள் மட்டும் அனுமதி பெற  இந்த நிமிடம் வரை முட்டி மோதி முயற்சி செய்து வருகிறார்கள். அனுமதி  கிடைக்காது என்பதே உறுதியான தகவலாக உள்ளது.

இது சம்பந்தமான  அரபக அறிக்கைகளைக் காண பிளாக்கர் லிங்கை கிளிக் செய்து  பார்க்கவும்.







21/04, 11:08 am] +91 98840 40016: *கரோனா அச்சம்: மெக்காவில் இரு புனித மசூதிகளில் ரமலான் மாதத்திலும் தொழுகை நடத்தத் தடை: சவுதிஅரேபிய அரசு அறிவிப்பு*

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் அச்சம் காரணாக புனித ரமலான் மாதத்திலும் மெக்காவில் உள்ள இரு புகழ்பெற்ற புனித மசூதிகளில் தொழுகை நடத்த தடை நீடிக்கும் என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபி அரசு உத்தரவிட்டது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இதனால் இந்தியாவிலுந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹஜ் புனிதப் பயணம் செல்லத் தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சவுதி அரேபியில் இதுவரை கரோனாவுக்கு 103 பேர் உயிரிழந்துள்ளனர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ரமலான் மாதத்தில் புனித மசூதிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு ஏற்றார்போல் சவுதி அரேபி மதகுரு ஷேக் அப்துல்லா அல் ஷேக் மக்களுக்கு விடுத்த செய்தியில் புனித ரமலான் மாதத்தில் மக்கள் யாரும் மசூதிக்கு வர வேண்டாம். வீ்ட்டிலேயே தொழுகயை மேற்கொள்ளலாம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேண்டுகோள் விடுத்தார்

இந்நிலையில் வரும் 24-ம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதால் மெக்காவில்உள்ள பெரிய மசூதி, இறைத்தூதர் மசூதி ஆகியவற்றில் மக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம்எழுந்து அதை மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

அதுகுறித்து மெக்காவில் உள்ள இரு புனித மசூதிகளின் தலைவர் ஷேக் டாக்டர் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சுதாயிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில்

“ மெக்காவில் உள்ள மிகப்பெரிய மசூதி ( மஜ்ஜித் அல் ஹரம்), இறைத்தூதர் மசூதி (அல் மஜ்ஜித் அல் நபவி)ஆகியவற்றில் ரமலான் மாதத்திலும் தொழுகைக்கு மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மக்களை தொழுகைக்கு அழைப்பது நேரடியாக ஒளிபரப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------------------------------------

உமர் ஷரீஃப் காஸிமி,  (தாருல் ஹுதா. சென்னை -1. வாட்சப் +91 9884469044, email: muftiomar@gmail.com)  எழுதி  1). ஷைக் அனீசுர் ரஹ்மான் உமரி, மதனி தலைவர் ஜம்யித்தே அஹ்லே ஹதீஸ் தமிழ் நாடு, பாண்டிச்சேரி.

2). ஷைக், முனைவர் ஜோ ஆலம் உமரி மதனி (பேராசிரியர் ஜாமிஆ தாருஸ்ஸலாம், உமராபாத்)

3). ஷைக், முனைவர் ஆர்.கே. நூர் முஹம்மது உமரி, மதனி (நிறுவனர் மற்றும் பேராசிரியர் அல்அதான் கல்லூரி, சென்னை). ஆகயோர்  சரிகண்டு ஒப்புதல் வழங்கியது

தராவீஹ் தொழுகை மற்றும் பெருநாள் தொழுகை

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்..

வல்லமையும் கண்ணியமும் மிக்க அல்லாஹு தஆலா வரும் ரமழானை நமக்கு சிறப்பாகித் தருவானாக! அவனுடைய அருளையும் நன்மைகளையும் அதில் நமக்கு விசேஷமாக அதிகம் வழங்குவானாக! இன்னும் கொடிய வைரஸ் நோயிலிருந்து நம் அனைவரையும் பாது காப்பானாக!! ஆமீன்.

கண்ணியமிகு ரமழான் மாதம் மிக அருகில் வந்துவிட்டது. இந்த நிலையில் நாம் சில முக்கியமான நபிவழி முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுவது மிக அவசியம் ஆகும்.

இந்த நோய் சமூக தொற்றாக மாறினால் மிகப் பெரியளவில் உயிர்கள் பலியாகும் என்பதை உலகளவில் நாம் கண்கூடாக பார்த்தும் படித்தும் வருகிறோம்.

இன்றைய இந்நேரம் வரை 2,503,347 இருபத்தி ஐந்து இலட்சத்தி, முப்பத்தி மூன்றாயிரத்தி நாற்பத்தி ஏழு நபர்கள் இந்நோயினால் பாதிக்கப் பட்டிருப்பதுடன்,  171,792 ஒரு இலட்சத்தி எழுபத்தி ஓர் ஆயிரத்தி ஏழு நூற்றி தொன்னூத்தி இரண்டு நபர்கள் இந்நோயினால் இறந்துள்ளார்கள்.

ரமழான் மாதம் வணக்க வழிபாட்டுக்காக உள்ள சிறப்பான மாதம். அதே நேரத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் பள்ளிவாசலில் ஒன்று கூடுவது மிகவும் ஆபத்தாக அமையலாம். இந்த நோய் தொற்று முற்றிலும் அழிகின்ற வரை அல்லது இதற்கு சரியான மருந்து கண்டுபிடிக்கப் படுகின்ற வரை நாம் சமூக விலகலை கடைப்பிப்பதுதான் மார்க்க அடிப்படையில் மிக சரியானதாக அமையும்.

ஆகவே, ஸவூதி அரேபியாவின் மூத்த ஃபத்வா குழு தராவீஹ் தொழுகை அந்நாட்டில் உள்ள மஸ்ஜிதுகளில் நடைபெறாது என்றும் பெருநாள் வரும் முன் இந்த நோய் தொற்று குறையவில்லை என்றால் பெருநாள் தொழுகையை வீட்டில் குத்பா இன்றி தொழுது கொள்ளும்படியும் தீர்ப்பு வழங்கி அறிவிப்பு செய்திருக்கின்றார்கள்.

ஆகவே, கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மஸ்ஜிதுகளிலும் பொதுவான இடங்களிலும் மக்கள் ஒன்று கூடி தராவீஹ் தொழுகை நடத்த முயற்சிக்க வேண்டாம். அது மார்க்கத்தையும் சட்டத்தையும் மீறியதாக ஆகிவிடும். அறிஞர்களின் கூற்றுக்கு செவி சாயுங்கள்!! மார்க்க கல்வி அறிவு இல்லாமல், மூத்த அறிஞர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் வாட்சப் மற்றும் முகநூலில் வருகின்ற பத்வாக்கள் மற்றும் உணர்ச்சியை தூண்டும் பேச்சுகளுக்கு மயங்கி விடாதீர்கள்.

சமுதாயத்தில் ஒரு பெரும் கூட்டம் அறிஞர்களையும் சமுதாய தலைவர்களையும், அவர்கள் எல்லோரும் விலைபோனவர்கள் என்று விமர்சித்துவருவது மிகவும் வேதனையளிக்கிறது.

உங்கள் மூத்த அறிஞர்களின் வழிகாட்டலை விட்டு நீங்கள் விலகி சென்றால் பிறகு, உங்களை வழிகெடுப்பது இப்லீசுக்கும் சமூக விரோதிகளுக்கும் மிக இலகுவாகிவிடும். 

அல்லாஹ் பாதுகாப்பானாக! ஆமீன்.

பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள்
➡️ ஒவ்வொரு வீட்டாரும் தத்தமது வீடுகளில் தராவீஹ் தொழுது கொள்ளுங்கள்!

➡️ பல வீட்டார்கள் ஒரு வீட்டில் ஒன்று சேர்ந்து தொழுவதையும் தவிர்த்துவிடுங்கள்!

➡️ உங்களுக்கு தெரிந்த சூராக்களை அமைதியாக, நிதானமாக ஓதி தொழுங்கள்!

➡️ வீட்டில் யாருக்கு அதிகம் ஓத தெரிகிறதோ அவர் தொழ வைக்கட்டும்!

➡️ நீண்ட நேரம் தொழ விரும்பினால் ஒரு சூராவையே அதிகம் அதிகம் பல முறை ஓதி தொழுது கொள்ளுங்கள்! அதில் எவ்வித தவறும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு வசனத்தை ஒரு ரக்அத்தில் திரும்ப திரும்ப ஓதி இரவெல்லாம் நின்று தொழுதார்கள். பல ஸஹாபாக்கள் இவ்வாறு செய்ததற்கு ஆதாரம் உள்ளது.

➡️ குர்ஆனை கையில் வைத்துக்கொண்டு ஓத விரும்பினால் அதற்கும் சில அறிஞர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் அடிமை கையில் குர்ஆன் பிரதியை வைத்துக் கொண்டு இரவில் தொழவைப்பார். அவரைப் பின்பற்றி ஆயிஷா அவர்கள் தொழுவார்கள்.

➡️ மொபைல் ஆப்களில் இருந்தும் குர்ஆனை ஓதலாம்.

➡️ முதல் வரிசையில் ஆண்களும், பிறகு பின்னால் வரிசையில் பெண்களும் நிற்கட்டும்!

➡️ வீட்டில் ஆண்கள் பெண்கள் இருந்தால் ஆண்களில் ஒருவர் இமாமத் செய்யட்டும். ஆண்களுக்கு பெண் இமாமத் செய்யக்கூடாது. பெண்களுக்கு பெண் இமாமத் செய்யலாம்.

➡️ வேறு ஓர் இடத்தில் தொழுகை நடத்தப்பட்டு அதை ஒளிப்பரப்பு செய்து அந்த ஜமாத்தை பின்பற்றி தொழுவது கூடாது என்பதுதான் மிக அதிகமான அறிஞர்களின் சரியான முடிவாகும்.

➡️ உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்கள் நோன்பை விட்டுவிட்டு வேறு நாட்களில் அந்த நோன்புகளை கழா செய்து கொள்ள வேண்டும். 

➡️ உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நன்கு கல்வி படித்த அறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்!
வதந்திகளையும் உறுதி செய்யப்படாத செய்திகளையும் பரப்பாதீர்கள்! நம்பாதீர்கள்!
அல்லாஹ் மிக அறிந்தவன்.

























Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.