வாருங்கள் வராதீர்கள் என்று முரண்பாடானதா? பாங்கு

தவறுகள் சுட்டிக் காட்டப்படும்பொழுது வரட்டுக் கவுரவம் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்  என்பது அல்லாஹ்  கொடுத்த அருள்களில் ஒன்று.  கோட்டூர் கலீல் அவர்களுக்கு அல்லாஹ் மேலும் அருள் செய்வானாக ஆமீன்.

31/03, 6:47 pm] கோட்டூர் கலீல்: இனி வரும் பதிவுகள் திருத்தம் (மொழியாக்கம்) செய்து கொள்கிறேன் ஜஷாகல்லாஹ் ஹைரன்

[31/03, 6:52 pm] Fazlulilahi: வஇய்யாகும்

[31/03, 6:52 pm] கோட்டூர் கலீல்: வ ஹைர்

இஸ்ரவேலர்களுக்கு வீடுகளே பள்ளிகளாக என்பது குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணானது என்பதற்குரிய ஆதாரங்களை முந்தைய வெளியீட்டில் கண்டோம்.

10:87. வசனத்தில் உள்ள   قِبْلَةً -  கிப்லதன் என்ற வார்த்தைக்கு  பள்ளிகளாக கிப்லாக்களாக  என்று தமிழாக்கம்  செய்துள்ளதையும் அந்தந்த  தர்ஜமாக்களிலிருந்து  கண்டோம்.

அந்த தர்ஜமாக்களில் அவர்களே வெளியிட்டுள்ள கலைச் சொற்கள் விளக்கம் என்று ஒரு பகுதி இருக்கும் அந்த  கலைச் சொற்களில் என்ன விளக்கம் சொல்லி உள்ளார்கள்? என்பதை அறிய 5 வெளியீடுகளிலிருந்து JPG  பைலாக இணைப்பில் தந்துள்ளோம்.



கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு -திசை என்பது பொருள்என்றுதான் எல்லாரும் கலைச் சொற்களில் விளக்கம் எழுதியுள்ளார்கள். அதே அடிப்படையில்தான் இந்த வார்த்தையின் வேர்ச் சொல்லில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு மற்ற வசனங்களில்  முன்னர், முன்பாக, முன்னால். நேருக்குநேர், எதிரெதிராக, நோக்கி என்று மொழி பெயர்த்துள்ளார்கள். அதை ஏராளமான குர்ஆன் வசனங்களில் காணலாம். அவற்றை தரும் முன் சிறு விளக்கம்் 

சில வசனங்களில் எல்லாரும் முன்னோக்கி என்று மட்டும் மொழி பெயர்த்து இருப்பார்கள். சில வசனங்களில்  பாகவி முகம் நோக்கி  என்றும் IFTஎதிரெதிரே  என்றும் சவூதி முன்னோக்கியவர்களாக -நேருக்குநேர் நோக்கி  என்றும்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்கள்.  அவற்றை அப்படியே வரிசையாக தந்திருப்போம் . குழப்பம் அடைய வேண்டாம். பேஸ்புக், வாட்ஸப்களில் கலர் ஹை லைட் செய்ய முடியவில்லை. பிளாக்கரில் ஹை லைட் செய்து அடையாளம் காட்டி உள்ளோம்


1. வ அஃக்பலுா


قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ

... இவர்களை முன்னோக்கி வந்து 12:71.



2.அஃக்பல்னா
 وَسْــٴَــلِ الْقَرْيَةَ الَّتِىْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِىْ اَقْبَلْنَا فِيْهَا‌ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏

...... நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த 12:82.( ஜான், மலிவு, திரீயெம், பஷாரத்)





3. அ ஃக்பில்

 وَاَنْ اَ لْقِ عَصَاكَ‌ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ يٰمُوْسٰٓى اَ قْبِلْ وَلَا تَخَفْ‌ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ

... மூஸாவே! முன்னோக்கி வாரும்!  28:31


4.  அ ஃக்பல

 وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏


அவர்களில் சிலர் சிலரை நோக்கி முன்னோக்கி -முன்னோக்குவார்கள்  37:27.


5. Fப அ ஃக்பல

 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏

(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை நோக்கி - முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:50.


6. அ ஃக்பல

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏

அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். 52:25.

7. Fப அ ஃக்பல

 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ


 முன்னோக்கினர். 68:30.



8. முதஃகாபிலீ(ன) ன்
وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏


...ஒருவரையொருவர் முன்னோக்கி -  முகம் நோக்கி - எதிரெதிரே -முன்னோக்கியவர்களாகக் நேருக்குநேர் நோக்கி 15:47.


9. முதஃகாபிலீ(ன) ன்


عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ


ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு -  எதிர் நோக்கியவாறு முகம் நோக்கி  எதிரெதிரே   கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). 37:44.


10. முதஃகாபிலீ(ன) ன்
 مُّتَّكِـــِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ

ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக,  முகம் நோக்கி -  எதிரெதிரே -எதிர்நோக்கி   அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். 56:16


 ஃக்பில்,   ஃக்பல,  அஃக்பலுா, அஃக்பல்னா, F  ஃக்பல, முதஃகாபிலீ(ன)ன் போன்ற வார்த்தைகளுக்கு நோக்கி, முன்னோக்கி எதிரெதிரே என்றுதான் மொழி பெயர்த்துள்ளார்கள்  இவை யாவும்  கிப்லா என்ற வார்த்தையிலிருந்து  உள்ளவைதான்.


இப்படி எல்லா இடங்களிலும் நோக்கி, முன்னோக்கி என்று மொழி பெயர்த்தவர்கள், இந்த 10:87 வசனத்தை மொழி பெயர்க்கும் போது மட்டும் மேற்கண்ட அவர்களின் மொழி பெயர்ப்புகளுக்கு மாற்றமாகவும் அவர்களே எழுதிய கலைச் சொற்கள் விளக்கத்துக்கு மாற்றமாகவும்  பள்ளிகளாக என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.


ஹைய அலஸ்ஸலா(தி)த்  என்றால் தொழுகைக்கு வாருங்கள் என்று அர்த்தம். இதை அரபி தெரியாத  பாமரனும் விளங்கி வைத்துள்ளான்.  

மழைக்கால பாங்கில் ஹைய அலஸ்ஸலா(தி)த் என்று சொல்லாமல் ஸல்லுா Fபீ ரிஹாலிகும்  உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். இந்த ஹதீஸ் பலருக்கும் தெரியும். கொரோனா மூலம் பாமரனுக்கும்   தெரிந்து தெளிவாகி விட்டது. 

அப்படி இருக்க  நம்  நாட்டில் குறிப்பாக தமிழகத்தில்  பல சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில்.  ஆரம்பத்தில் மட்டும்  ஹைய அலஸ்ஸலா(தி)த்,   ஹைய Fபலாஹ்  சொல்லாமல் அந்த இடத்தில் ஸல்லுா Fபீ ரிஹாலிகும் என்று  அறிவித்து அல்லாஹு  அக்பர், அல்லாஹு  அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சரியான பாங்கு  சொல்லி  நிறைவு செய்தார்கள். 


நாட்கள் போகப் போக வழக்கமான பாங்கை முழுமையாக சொல்லி விட்டு. கடைசியில் ஸல்லுா Fபீ ரிஹாலிகும்  என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 

ஹைய அலஸ் ஸலா(தி)த்  தொழுகைக்கு வாருங்கள்  


ஸல்லுா Fபீ ரிஹாலிகும் உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்

அதாவது  வாருங்கள் வராதீர்கள் என்று   முரண்பாடான  பாங் அறிவிப்புகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.  வாருங்கள் வராதீர்கள் என்று   முரண்பாடானதா?  பாங்கு.

இது தமிழகத்தின் பல பகுதிகளின் நிலை மட்டுமல்ல.  தெருவுக்கு தெரு ஸனது பெற்ற மவுலவிகள் பன்மடங்காக நிறைந்து இருக்கும் மேலப்பாளையம் நிலையும் அதுதான்.  எந்த மவுலவிகளும் இதை கண்டு கொண்ட  மாதிரி தெரியவில்லை.

இந்திய நிலை இப்படி இருக்க அரபு நாடுகளில் பாங்கு சொல்லும் சில அரபிகள் நிலையும் அப்படித்தான் உள்ளது. முஅத்தின்களாக உள்ள சாதாரண அரபிகள் நிலை  அல்ல இது. குத்பா பண்ணக் கூடிய முதவ்வா (மவுலவி) என்று ஸனது வைத்துள்ள அரபிகள்  தான்  இப்படி  முரண்பாடான பாங் அறிவிப்புகளை செய்கிறார்கள்.  

இங்கே நாம் தனிப்பட்ட  யாரையும் குறை கூறி விமர்சிக்கவில்லை. சிந்திக்கவே வேண்டுகிறோம். படித்தவர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள் அல்ல. சிந்தனையாளர்கள் எல்லாம்  படித்தவர்களும் அல்ல.  படைத்த உமது இறைவனின் நாமத்தால் - பெயரால் படிப்பீராக என்று அருளப்பட்ட அல் குர்ஆனில் அல்லாஹ் அடிக்கடி கேட்பது சிந்திக்க மாட்டீர்களா? என்பது தான். 10:87.க்கு சரியான மொழி பெயர்ப்பு என்ன என்பதை அடுத்த வெளியீட்டில் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு