ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பதைச் சொன்னால் தலைவன்
அந்தத் தலைவன் யார்? முத்தவல்லிகளே ஊராமைக்காரர்களே உங்களுக்குத்தான் இந்தப்பதிவு
பேங்கில் உள்ள பணம் அல்லாஹ்வுக்குரியது. இஸ்லாத்தில் அல்லாஹ்வுக்காக என்று நேர்ச்சை வைத்தால் அதை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்.https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_21.html
கஞ்சி வரி, கழனி வரி, ஊர் வரி, ஊர் கந்துாரி வரி என்று வசூலித்து ஜமாஅத்துக்கு எவ்வளவு சேர்த்தாய் என்று அல்லாஹ் கேட்க மாட்டான். கஞ்சி பெயரால் வசூலித்து தராவீஹ் தொழுபவருக்கு கொடுக்கிறார்கள் என்று கொக்கரித்து சுன்னத் ஜமாஅத்தை விமர்சித்த தவ்ஹீது பள்ளி நிர்வாகிகளும் அதுதான் செய்தார்கள்.
முத்தவல்லிகளே, ஊரமைக்காரர்களே பள்ளி நிர்வாகிகளே அவர்கள் நிர்வாகம் 50 ஆயிரம் கடத்தில் வைத்து சென்றது. நாங்கள் வந்து 4 லட்சம் போட்டு வைத்து இருக்கிறோம் என்ற பெருமை உலக மக்களிடம் எடுபடும். அல்லாஹ்விடம் எடுபடுமா? அல்லாஹ் என்ன கேட்பான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "
ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே
(ஏன்)?" என்று கேட்பான்.
அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,
உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ்,
"உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம்
சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால்
அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான்.
அதற்கு மனிதன், "என்
இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?"
என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன
மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்:
அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று
கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு
தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான்.
அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு
தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன
மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை.
தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை
என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான். அபூஹுரைரா (ரலி) புகாரி. 5021.
அல்லாஹ்வின் மேற்கண்ட கேள்விப் பிடிகளிலிருந்து தப்ப இருப்பு பணங்களை உங்கள் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு அள்ளி வீசுங்கள். மற்ற நிர்வாகிகள் ஒத்து வரவில்லையா உங்கள் பதவியை துாக்கி வீசுங்கள். வீசி அல்லாஹ்வின் பிடியில் இருந்து தப்புங்கள்
Comments