சங்கிகளை சூழ்ந்து பீடிக்கும் கொரோனா. காப்பாற்ற துடிக்கும் முஸ்லிம்கள்.

குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வியாகூலப்பட்டு சேலை பற்றி கூறப்பட்டுள்ளது என்று வருங்காலத்தில் கூறுவார்களா?

யானைப் படையை பூனைப் படையால் விரட்டவில்லை. அதைவிட அற்பமான அபாபீல் எனும் மிகச் சிறிய பறவையால் கொன்று ஒழித்தான் அல்லாஹ். இது இஸ்லாமிய வரலாறு. இதை இறை நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) நம்புவார்கள். நம்பாதவர்களுக்கு இன்றைய கெரோனா ஒரு எடுத்துக் காட்டு.

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_6.html

கண்ணுக்குத் தெரியாத அற்பத்திலும் அற்பமான  கிருமியைக் கண்டு அணு ஆயுதப் படைகளுடைய வல்லரசுகள் ஆடிப் போய் நிற்கின்றன. ஆம் அல்லாஹ் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறான். சைனாவில் கொரானா வந்த போது  அவர்களுக்கு அல்லாஹ் அளித்துள்ள சோதனை என்று சொன்னவர்கள். இந்திய முஸ்லிம்கள். கொரானாவின் இந்திய விஜயத்தை சங்கிகளுக்கான சோதனை என்று விளங்காமல் இருப்பது ஏனோ?



உலகம் சுற்றிய  கொரோனா இந்தியாவில் இஸ்லாத்தை தழுவி விட்டது.  இந்திய முஸ்லிம்கள் தான் இஸ்லாத்தை தழுவாமல் கொரோனா பின்னாலேயே ஓடி அதை கட்டித் தழுவ துடிக்கிறார்கள். கொரோனாவோ தன்னை  இஸ்லாத்தில்  சேர்த்து விட்ட சங்கிகளுக்கு நன்றி செலுத்தும் வேலையை செய்கிறது. அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகக் கட்டித் தழுவி கூட்டி போகத் துடிக்கிறது. 

அதனால் ராம நவமி  கோயில் கொண்டாட்டம். சப்பரம் இழுத்தல். சுவாமி ஊர்வலம் என்ற பக்தியின் பெயரால் அவர்களை கூட்டமாக கூட வைக்கிறது. அனைவரையும் ஒன்றிணைத்து கொரோனாக்காரர்களாக  ஆக்கப் பாடுபடுகிறது். 

இது அல்லாஹ்வின் ஏற்பாடு என்று  புரியாத முஸ்லிம்கள் தான் அவர்கள் கூட்டமாக கூடா வண்ணம் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது  சங்கிகளை  சூழ்ந்து பீடிக்கும் கொரோனாவிடம் இருந்து சங்கிகளை  காப்பாற்ற முஸ்லிம்கள் தான் துடியாக துடிக்கிறார்கள்.

எந்த சங்கிகள் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைத்தார்களோ. அந்த சங்கிகளைக் கொண்டே அல்லாஹ் முஸ்லிம்களை பாதுகாக்கிறான். முஸ்லிம்களை கூட்டமாக கூட விடாமல் ஜும்ஆ தொழ விடாமல். ஊர் ஊராக சுற்றும்  தப்லீக்கிகளை ஊர் ஊராக  சுற்ற விடாமல் சங்கிகளின் அரசைக் கொண்டே அல்லாஹ் பாதுகாக்கிறான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட மறுக்கிறது.

எந்த ராமர் பெயரால்   பாபரி மஸ்ஜிதை இடித்தார்களோ.  அங்கே  அந்த ராமர் பெயரால் கோயில் கட்ட என்று கொரானா காலத்தில் கூட்டம் கூட்டமாக அவர்களைக் கூட வைப்பவன் அல்லாஹ்தான். இந்த நம்பிக்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட  மாட்டேன் என்கிறது.   கொரானா சங்கிகள் பின்னால் சுற்றட்டும்.  கொரானா பின்னால் சுற்றும் முஸ்லிம்களே   கொஞ்சம் குர்ஆன் பின்னால் சுற்றலாம் வாருங்கள்.

தினம் ஒரு வசனம் என்று வருகிறது. பரங்கிப் பேட்டை கபீர் அஹ்மது மதனி  அடிக்கடி சொல்வார்  குடலை பிறட்டுகிற மாதிரி இருக்கிறது என்று. அந்த மாதிரி  தமிழ் தர்ஜமாக்கள் வருகின்றன. இன்று  06- 04- 5:58 am க்கு 
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏
*(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்!* *(அல்குர்ஆன் : 18:6)* என்ற வசனம் எனக்குத் தெரிந்தவரிடமிருந்து வந்தது. தெரிந்தவர் என்பதால் உடனே  அவருக்கு பேசினேன். 

[06/04, 6:34 am]க்கு  கவலைப்பட்டு என்று திருத்தம் செய்து அனுப்பினார். 

இதில் உள்ள வியாகூலப்பட்டு என்ற தமிழ் உங்களுக்கு உடனே புரிந்து விட்டதா? என்று வாட்ஸப் குரூப்களிலும்  கேள்வி கேட்டு  அனுப்பினேன்.  பலர் உடனே புரியவில்லை என்று பதில் அனுப்பினார்கள். அரபிக் கல்லுாரிகளில் படித்தவர்கள் கூட. கூகிலில் போய் தான் விளக்கம் தேடி உள்ளார்கள். *"மனம் சஞ்சலப்பட்டு"* என்று புரிகிறேன் என்று ஒரு சகோதரர் பதில் அனுப்பி இருந்தார்.

இன்னொரு சகோதரர் ஆங்கில தர்ஜமாவை  பார்த்து விட்டு கவலை துக்கம் என்று பேசி அனுப்பி இருந்தார். இதற்கு ஒரு அம்மா தந்த பதில் [06/04, 7:45 am] பட்டு சேலை  பற்றியது என்று.  

வருங்காலத்தில் வியாபாரிகள் வியாகூலப்பட்டு என்று ஒரு சேலையை அறிமுகப்படுத்தினால் நம்மவர்கள் குர்ஆனில் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வியாகூலப்பட்டு சேலை பற்றி கூறப்பட்டுள்ளது என்று இந்த தர்ஜமாவை ஆதாரமாகக் காட்டினாலும் ஆச்சரியப்படவதற்கு இல்லை. 

[06/04, 8:21 am] fMasooth Annan: வியாகூலப்பட்டு என்ற தமிழ் வார்த்தை உடனே புரிந்துகொள்ள முடியவில்லை.அதே சமயத்தில் அடிக்கடி இந்த வசனம் மற்ற தர்ஜுமாவில் வாசிப்பதனால் புரிகிறது. கவலைப்பட்டு (பீஜே) துக்கித்து (ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி என்று பதில் அனுப்பி இருந்தார். 

இக்பால் மதனியுடன் தர்ஜமா பணியில் ஈடுபட்ட ஒரு சகோதரரும். ஜான் டிரஸ்ட், திரீயெம் பிரிண்டர்ஸ்  போன்ற மொழி பெயர்ப்புகளை சரி பார்ப்பு பணியில் ஈடுபட்ட ஒரு மவுலவி அல்லாத நண்பரும் இது பற்றி நம்மிடம் கருத்து பரிமாற்றம் செய்தார்கள். 

விசாரம், கலக்கம், அரவம், சர்ப்பம், ரிஷபம். போன்ற பழைய பஞ்சாங்கத் தமிழ் இன்னும் தமிழ் தர்ஜமாக்களை ஆக்கிரமித்துள்ளது பற்றி பலர்  பேசினார்கள்.  

தென்காசி உசேன் அவர்கள்   மொழி பெயர்ப்புகள் முஸ்லிம் அல்லாதவர்களும் புரியும் முழு தமிழில். நாம் பேச் கூடிய தமிழ் நடையில் வர வேண்டும். ஈமான் கொண்டவர்கள், மலக்குகள் என இப்படி அரபி வார்த்தைகளே மொழி பெயர்ப்புகளில் உள்ளன. இதனால் சகோதர சமுதாயத்தவர்கள்  கேட்கிறார்கள்.  அவை மாற்றப்பட வேண்டும். துாய தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு வந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

இலங்கை மவுலவி  அர்க்கம் அவர்களைக் கொண்டு அடைப்புக் குறிக்குள் கருத்து எழுதாத ஒரு தர்ஜமா வெளியிட  முயற்சி செய்ததாக ஒரு நண்பர் முன்பு கூறி இருந்தார்.  அந்த முயற்சியில் ஈடுபட்ட  அர்க்கம்  இறந்து விட்டார்கள்.

18:6 வசனத்தில் உள்ள  اَسَفًا‏ என்ற  வார்த்தையை அரபிகளுடன் பழகுபவர்கள்  நன்கு அறிவார்கள். தவறு நடந்து விட்டால் Sorry - வருந்துகிறேன் என்று சொல்வது போல் அரபிகள் ஆசிFப் என்பார்கள். அஸFபில் உள்ளது தான் ஆசிFப் அதுதான் அஸ(பன்)பா 18:6 என உள்ளது

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு