தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பு கஞ்சி பற்றி ஜ.உ.சாவின் அறிக்கை

*காயல்பட்டினம் அனைத்து சமுதாயக்*
*கூட்டமைப்பு KACF-ன் அறிவிப்பு....!*
----------------------------------------------------------
*நோன்புக் கஞ்சி பள்ளிகளில்*
*போடுவது சம்பந்தமான செய்தி!*!
--------------------------------------------------------
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_85.html
*அன்புடையீர்.,*

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....*

*இறைவனின் சாந்தியும் சமாதானமும்*
*நம் அனைவரின் மீதும் சூழட்டுமாக...!*

*எதிர் வரும் ரமளானை முன்னிட்டு*
நோன்புக் கஞ்சி பள்ளிகளில் போடுவதற்
கான சாத்திய கூறுகள் குறைவான
இத் தருணத்தில், மாவட்ட ஆட்சியரை
இது விசயமாக நாம் தொடர்பு கொண்டு
பள்ளிகளில் கஞ்சி போடுவதற்கான
மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்து தர
நாம் முயற்சித்தின் விளைவாக இன்று
மாவட்ட ஆட்சியரின் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலகத்தில் இருந்து 
வஹிதா மேடம் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இது சம்பந்த
மாக பேசினார்கள்.

*அதாவது பள்ளிகளில் கஞ்சி ஊற்று*
வதோ, பள்ளிகளில் சென்று கஞ்சி
அருந்துவதோ முடியாத சூழல் இருப்பதால்,
சமூக இடைவெளியை பேண வேண்டிய
திருப்பதால் பள்ளிகளுக்கு கூட்டமாக
வந்து கஞ்சி வாங்க முடியாது. ஆனால்
கஞ்சி தயாரித்து அதை வீடுகளுக்கு
கொடுத்து அனுப்பலாம். அதற்கு
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி அவர்
களின் பரிந்துரை கடிதம் வேண்டும் 
என்றும், எந்நிலையிலும் சமூக இடை வெளியை பேணுவோம் என்ற உத்தர
வாதமும் தர வேண்டும் என்றார்.

*அதன் அடிப்படையில் உடனே நமது*
மரியாதைக்குரிய தூத்துக்குடி மாவட்ட
அரசு காஜி மௌலானா மௌலவி 
S.T.அம்ஜத் அலி ஆலிம் அவர்களை 
தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடு
களை செய்தோம்.அல்ஹம்து லில்லாஹ்.

*இன்ஷா அல்லாஹ் எதிர் வரும்* 
ரமளானில் நாம் பள்ளிகளில் சென்று 
நோன்பு திறக்க முடியா விட்டாலும், வீடுகளுக்கு கஞ்சி கொடுத்து விடும் ஏற்பாடுகளை நாம் செய்து கொள்ளலாம். 

*அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்*
அவர்களுக்கும், நமது மாவட்ட அரசு
காஜி அவர்களுக்கும் *காயல்பட்டினம்*
*அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின்*
சார்பில் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.

*இவண்*
*காயல்பட்டினம் அனைத்து சமுதாயக்*
*கூட்டமைப்பு KACF*
*மெயின் ரோடு, காயல்பட்டணம்.*
13-04-2020




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு