Er. LKMA. முகம்மது சலீம் B.Sc.,BE, M.Tech, இறந்து விட்டார்.


UAE சென்று ETISALAT நிறுவனத்தில் தலைமைப் பொறியாளர்களில் ஒருவராகவும், அபுதாபி காவல்துறையில் செயற்கைக்கோள் தொடர்புப் பொறியாளராகவும்  பணியாற்றிய Er. LKMA. முகம்மது சலீம் B.Sc.,BE, M.Tech, இறந்து விட்டார்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/er-lkma-bscbe-mtech.html
மேலப்பாளையம் நகராட்சி முன்னாள்  சேர்மன் வழக்கறிஞர் LKM. அப்துர் ரகுமான் BA.BL அவர்களின் மகனார் தான் முகம்மது சலீம். LKM. அப்துர் ரகுமான் BA.BL அவர்கள் அரசியல் வாழ்வை பலர் கூறுவார்கள். வக்கீல் தொழிலில் பொய் சொல்ல வேண்டி உள்ளது என்று அதை விட்ட மேலப்பாளையம் நன்மக்கள் இருவரில் ஒருவர்.   LKM. அப்துர் ரகுமான்  அவர்கள்.  



புலவன்களைக் கொண்டு சீறாப்புராணம் என்ற பெயரில் புராணக்கதைகளையும் பொய்களையும் அவிழ்த்து விட்ட காலத்தில் பொய்ப் பெட்டி புலவன்களின் பொய்களை எதிர்த்து பிரச்சாரம் செய்த அன்றைய ஏகத்துவாதி

சிராதுல் முஸ்தகீன் பாலம் எவ்வளவு  சிமெண்ட், ஜல்லி, கம்பிகள் கொண்டு கட்டப்பட்டது என்று கேள்வி கேட்டு. இஹ்தினாஸ்ஸிராதல் முஸ்தகீம்  என்பதற்கு சரியான விளக்கம் அளித்த அன்றைய தவ்ஹீதி. 

மு.லீக் துண்டு எப்பொழுதும் அவரது தோளில் தவழும்.  அவரது மகனார்தான்  இன்று இறந்து விட்ட Er. LKMA. முகம்மது சலீம் B.Sc.,BE, M.Tech,  அவர்கள். அது பற்றி  LKS. முகம்மது மீரான் முகைதீன் BCom,  LKS.கல்வத் பீர் முகம்மது BE, ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி 



திருநெல்வேலி மேலப்பாளையம் மைலக்காதர் தெரு முன்னாள் மேலப்பாளையம் சேர்மன் வழக்கறிஞர் LKM. அப்துர் ரகுமான் BA.BL அவர்களின் மகனாரும் எங்கள் சகோதரியின் கணவரும் எங்கள் சம்பந்தியுமான, வானியல் அறிஞர், அன்பு மச்சான், Er. LKMA. முகம்மது சலீம் B.Sc.,BE, M.Tech, (IIT)அவர்கள் 14.4.2020 அன்று அதிகாலை 1.00மணியளவில் காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி முதல் மாணவராகக் கற்றுத்தேர்ந்து,  புனித சவேரியார் கல்லூரி, மற்றும் சென்னை கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் மற்றும்  , சென்னை IIT யில் M.Tech பட்டம் பெற்றார்.

 மேனாள் குடியரசுத்தலைவர் APJ. அப்துல்கலாம் அவர்கள் தலைமையின் கீழ், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிலையத்தில் விஞ்ஞானியாக6 ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர் UAE சென்று ETISALAT நிறுவனத்தில் தலைமைப் பொறியாளர்களில் ஒருவராகவும், அபுதாபி காவல்துறையில் செயற்கைக்கோள் தொடர்புப் பொறியாளராகவும்  பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டு முதல் தாயகத்தில் உள்ளார்.
முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி கல்விக்கமிட்டி உறுப்பினராகப் பணியாற்றி வந்தார்.

அன்னார் ஜனாஸா தொழுகை, நல்லடக்கம் மேலப்பாளையம் நெய்னார் முகம்மது மூப்பன் ஜும்மா பள்ளியில் காலை 11.00 மணிக்கு நடைபெறும்.

LKS. முகம்மது மீரான் முகைதீன் BCom
LKS.கல்வத் பீர் முகம்மது BE,
LKS. House,
மேலப்பாளையம், திருநெல்வேலி.

Comments

This comment has been removed by the author.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு