கை தட்டினால் என்ன ?? விசில் அடித்தால் என்ன ??


கை தட்டுவதற்கும் விசில் அடிப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லயைா?
தூரத்தில் போகும் ஒருவரை கூப்பிடுவதற்க்காக கை தட்டுவது ஹராமா? 

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில்33 அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்) 8:35. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_42.html

அறியாமை - ஜாஹிலிய்யா       காலத்து  வணக்க  வழிபாட்டில்  ஒரு  அங்கம்   கைத்  தட்டுவதும்  விசில்  அடிப்பதும்   என்று குர்ஆன் ஆதாரத்தைக் காட்டிய பிறகும்  கை தட்டினால் என்ன ??  விசில்  அடித்தால்  என்ன ??  என்று கேட்பது யார் ? எல்லாம் பெரிய பெரிய அல்லாமாக்கள் தான்.

அல்லாஹ் மனிதர்களை எச்சரிக்கிறான் நீங்கள் மறுபடியும் அறியாமை  காலத்து மூட பழக்கதின்  பக்கம் திருப்பாதீர்கள் என்று....

அதே  போல  ஒரு  மனிதரின்  உணர்ச்சிகள்  மிகும்  நேரத்தில் அல்லாஹு க்பர் என்று அல்லாஹ்வை போற்றி புகழ வேண்டும் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கட்டளை.

அல்லாஹ்வின் அறிவுறை நபி(ஸல்) ட்டளை இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு உணர்த்துவது தலைவர்களுக்காகவோ அல்லது ஒருவரை புகழுவதற்காகவோ கை தட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை நம்மால் உணர முடிகின்றது..... 

ஆனால் ஒரு சில இடங்களில் கையை தட்ட இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளதை ஹதீஸ் நூல்களில் நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக தொழுகையில் இமாம் தவறு செய்யும் போது அதை சுட்டிக் காட்டுவதற்க்காக   பென்கள் தங்கள் கைகளை தட்டலாம்...

ஒருவரை கூப்பிடுவதற்க்காக கை தட்டலாமா? என்ற வினா சரி தான் அதற்க்கு கை தட்டலாம். கை தட்டுவதில் இஸ்லாம் கூறுவது என்ன என்பதை இவர் முதலில் ணர வேண்டும். 

தூரத்தில் போகும் ஒரு    நபரை    அழைக்க   கை  தட்டி கூபப்பிட்டால் அது அந்த நபரை புகழ்வது போல் ஆகாது ஆனால் .......  சகாக்கள் மாநாடுகளில் கைத் தட்டுவது மேடையில் உள்ள தலைவர்களை கூப்பிடுவதற்க்காக அல்ல மாறாக அவர்களின் பேச்சில் உணர்ச்சி மிகுந் கருத்துக்கள் வெளிபடும் போது அவர்களை புகழ்வதற்க்காகவே அறியாமை காலத்தவர்களை போல‌ தவிற வேறு எந்த காரணமும் இதற்க்கு கூற முடியாது 

இந்த வரம்பு மீறலை தான் இஸ்லாம் தடுத்து இருக்கிறது என்பதை இந்து சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

அறியாமை காலத்துக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால் அவர்கள் இப்ராஹீம் நபியின் சிலையையும் இஸ்மாயில் நபியின் சிலையையும் இன்னும் பிற நபிமார்களின் சிலையையும் கை தட்டியும் விசில் அடித்தும் வரம்பு மீறி புகழ்ந்தார்கள் நீங்கள் உங்கள் மேடையில் உள்ள தலைவர்களை விசில் அடித்தும் கை தட்டியும் வரம்பு மீறி புகழ்கின்றீர்கள் அவ்வளவு தான் ??? 

பழைய கேள்விக்கு அளித்த பதில் மறு பதிப்பு 
8:35அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).முஹம்மது ஜான்

8:35அப்பள்ளியில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே மறுமையில் அவர்களை நோக்கி) "உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்" (என்றே கூறப்படும்.) அப்துல் ஹமீது பாகவி 

கஅபா ஆலயத்தில் அவர்களுடைய தொழுகை, சீட்டி அடிப்பதும் கை தட்டுவதுமே அன்றி வேறில்லை! எனவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்!”
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு