பத்திரிகை செய்தி - தடா ஜெ அப்துல் ரஹிம் இந்திய தேசிய லீக் கட்சி



சமீபகாலமாக அதிமுக ஆட்சியில் உள்ள அரசு அதிகாரிகள் முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் சிந்தனையோடு செயல்படுகின்றனர் இந்த செயலை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் ..

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் கொரோன நோயாளிகள் அனைவரும் தப்லீக் ஜமாஅத்தினர் என்பது போல திட்டமிட்டு ஊடகங்கள் மூலமாக நோயை கூட மத சாயம் பூசிய பேட்டி அளித்து வந்தார் என்பதை நாம் அறிந்ததே 


19-04-2020 நெல்லை மேலப்பாளையத்தில் ரேபிட் கிட் மூலம் கொரனோ பரிசோதனை மையத்தை நெல்லை மாநகர ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

இந்நிகழ்வில் மாநில ஜமாஅத் உலமா சபை தலைவர் கண்ணியத்திற்குரிய P.A.காஜா மொய்னுத்தீன் பாகவி அவர்களுடன் இயக்கம் மற்றும் கட்சிகளின் பிரதிநிகளும் கலந்துகொண்டனர்...

ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அவர்கள் சமுதாய மக்களின் தேவையை கோரிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கூறும் போது அதை பொருட்படுத்தாமல்  இடையிலேயே கிளம்பி சென்று விட்டார் அதே போன்று செய்தியாளர் சந்திப்பில் ஜமாஅத் உலமா சபை தலைவரை அமர சொல்லாமல் நிற்க வைத்து சமுதாயத்தை  மிகுந்த  சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார் 

ஜமாஅத்துல் உலமா சபை என்பது ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்தின் தலைமை அதனுடைய தலைவரை அலட்சியப்படுத்துவது ஒட்டு மொத்த சமுதாயத்தை அதிமுக அலட்சியப்படுத்துவதாக உள்ளது 

தமிழக முதல்வர் , காவல்துறை அதிகாரிகள் , தமிழக தலைமை செயலாளர் அவர்கள் உட்பட அனைவரும் ஜமாஅத் உலமா சபை தலைவர் அவர்களை கண்ணியப்படுத்தும் போது நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் இந்த செயல் கண்டனத்திற்குரியது

நெல்லை மாவட்ட ஆட்சியரின் இந்த இழி செயலை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் அதே நேரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் 

அன்புடன் 
தடா ஜெ அப்துல் ரஹிம் 
இந்திய தேசிய லீக் கட்சி 
மாநில தலைவர்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு