வேண்டாம் வேண்டாம் அரிசி வேண்டாம் அன்று. வேண்டும் வேண்டும் அரிசி வேண்டும் இன்று
சும்மாவா சொல்லி உள்ளான் அல்லாஹ் லா முபத்தில கலீமா தில்லாஹ் அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை என்று . உணர்ச்சிக்கு அடிமையான மனிதன் நேற்று இன்று நாளை என்று தினம் ஒன்று சொல்வான்.
அரிசி வேண்டாம் வாங்காதீர்கள் என்றார்கள் ஒரு சாரார். நாம் சொன்னோம். நமக்கு ஆதாரம் வேண்டும் என்று அரசிடம் போராடுகிறோம். அரசு தரும் அரிசியை வாங்குவது ஒரு ஆதாரம்.
ஒரு பள்ளிவாசலுக்கு உரிமை கொண்டாடும் இரண்டு இயக்கத்தவர்களில் பொசிஷன் - நிர்வாகம் தங்கள் கையில் இல்லாத இயக்கத்தவர்கள்.அந்த பள்ளி பெயரில் அரிசி வாங்கி விடுவார்கள்.
அந்த ரசீதை கோர்டடில் சமர்ப்பித்து பள்ளி தங்களுக்குரியது என்பதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள். ஆதாரம் வேண்டும் என்று போராடுகிறவர்கள் பள்ளிக்கு ஆதாரமாக உள்ள அரிசியை வேண்டாம் என்பது என்ன மாதிரியான அறிவுடைமை? என்று கேட்டோம்
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_52.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_52.html
நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பன்னெடுங்காலமாக தமிழ்நாடு அரசு பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகின்றது.
*ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரிசியும் வேண்டும் பள்ளிவாசல்களில் விநியோகிக்க அனுமதிக்கவும் வேண்டும்* என்கிறார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளித்து வருகின்றோம்.
முஸ்லிம்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதம் ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களும் 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து இறைவனை வழங்கி வழிபட்டு, இல்லாதோருக்கு ‘ஜகாத்’ எனும் ஏழை வரி வழங்கி வருகின்றனர்.
இவ்வருட ரமலான் நோன்பு எதிர் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி துவங்குகின்றது. கொரோனா தடுப்பு ஊரடங்கு நடைமுறைகளை ரமலான் நோன்பு காலங்களிலும் அரசின் நடவடிக்கைகளின்படி, மார்க்க அறிஞர்கள் கூறி வரும் வழிமுறைகளை முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து பின்பற்றிட மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பன்னெடுங்காலமாக தமிழ்நாடு அரசு பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்கி வருகின்றது. நோன்பிருப்பவர்கள் பள்ளிவாசல்களில் வழங்கும் கஞ்சியை பருகியே நோன்பை திறக்கின்றனர்.
சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கும், அதை மக்களுக்கு வழங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கிடுமாறும், கஞ்சிக்கான பச்சரிசியை வழக்கம்போல் இவ்வருடமும் அரசு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அன்புள்ள,
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய தலைவர்,
இ.யூ.முஸ்லிம் லீக்
----------------------------------------------------------------------------------------------------
#அதிகாரிகளுடன்_சந்திப்பு !
திருநெல்வேலி தூத்துக்குடி குமரி விருதுநகர் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி திரு கருணாகரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா சதிஸ் பிரபாகர் ஐ.ஏ.எஸ், கொரோனா சிறப்பு அதிகாரி காவல்துறை ஐஜி மகேஸ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி, திருநெல்வேலி எஸ்.பி., திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர், மாநகராட்சி ஆணையாளர், மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட அரசு அதிகாரிகளுடன்...
இன்று கொரோனா அவசர உதவி குழு தலைவரும் ஜமாத்துல் உலமா சபை தலைவருமான பி.ஏ.காஜா மொய்னுதீன் ஹஸரத் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு கோரிக்கைகள் அதிகாரிகளிடம் வைக்கப்பட்டது. நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர்.
இந்த சந்திப்பில் ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.கே.
தலைமையில் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், தமுமுக மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் எம்.கே.எம். கபீர், அதிமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் எஸ்.எஸ். ஹயாத், திமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் கைய்யும், கலந்து கொண்டனர்...
Comments