தப்லீக் ஜமாஅத்தினருக்கு கொரோனா உண்மையா? பொய்யா?

பாசிட்டிவ் ஆக இருந்து நெகடிவ் ஆகி குணம் அடைந்து உள்ளனர் என்று PAK சொல்லி உள்ளது உண்மையா?

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_15.html



1. எவன் அநீதியான விஷயத்தில் தன் சமுதாயத்தினருக்கு உதவி புரிகின்றானோ அவன் கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவனைப் போன்றவன் ஆவான். அந்த ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்வான்”

2. “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி ஆகாது. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி #அநீதியை செய்யும்போது அவன் செய்வது #தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு #உதவினால்_அதுவே_இனவெறி”  இது முஃமின்களுக்கான முதல் எச்சரிக்கை. நாம் சொன்னவை அல்ல நபிகள் நாயகம் சொன்னவை. (முதலில் உள்ள ஹதீஸ் அபூதாவூதில் உள்ளது., 

ஒரு முறை புசைலா (ரலி) நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது #இன_வெறியாகுமா” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் அளித்த பதில் தான்  2வதாக உள்ள ஹதீஸ் (அஹ்மது 107 )  








தமிழ்நாட்டின் பல  ஊர்களின் ஆஸ்பத்திரிகளிலிருந்து தப்லீக் ஜமாத் கார்குண் சாத்திகள்  கொரோனா இல்லை என்று வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கருத்து மோதல்கள் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.


மேலப்பாளையத்து சாத்திகள் வீடு திரும்பியதும். கருத்து மோதல் மன்னர்களும். அரசியல் மற்றும் இயக்கங்களில் சல்லிக் காசுக்கு போகாத  புரயோஜனமில்லாத ஆதாய கூட்டத்தினர்களும்  கும்மி அடித்து(பிரச்சனைக்) கொடிகளை  துாக்கி  விட்டார்கள்.

தப்லீக் ஜமாஅத் மீது  கொரோனா பொய்க் குற்றச்சாட்டு என்று சாத்திகள் நம்பினால் அவர்கள் டிஸ்சார்ச்  ரிப்போர்ட் காப்பிகளை தரட்டும். உங்கள் ஆதரவு வக்கீல்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று பலர் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறோம் என்பதை முதலில் தெரிவித்துக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன்.

ஜ.உ.சா.வின் தலைவரும் 23 கூட்டமைப்புகளின் தலைவருமான புலவன் காஜாமைதீன் பாகவி அவர்கள். பாசிட்டிவ் ஆக இருந்து  நெகடிவ் ஆகி குணம் அடைந்து உள்ளனர் என்று கூறி உள்ளார். இது சம்பந்தமான எனது முடிவை  பிறகு தருகிறேன். 

முன்னதாக, சவூதியிலிருக்கும் மேலப்பாளையம் நண்பர் நாம் தமிழர் அப்துல் வாஹித் அவர்கள் பதிவின் ஒரு பகுதியை பாருங்கள்.

இது (PAK சொன்னது) தறான கருத்து   தப்லீக் ஜமாஅத்தினர் அனைவரையும் இந்தியா முழுவதும் குரோனா  நோயாளிகளாக சித்தரிக்க வேண்டும்.  என்ற  மத்திய பிஜேபி அரசின் திட்டத்தின்படி  பரிசோதனைக்கு சென்ற அனைவரையும் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே குரோனா  நோயாளிகளாக சித்தரிக்கப்பட்டனர். என்று பதிவு செய்துள்ளார்.



மேலப்பாளையம் #தப்லீக் சகோதரர்களுக்கு #கொரானா_வைரஸ்_இல்லை என்று உறுதியாகிய பின் #அரசு அவர்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் ஆரம்பத்தில் #பாசிடிவ் வாக இருந்து தற்போது #நெகடிவ் ஆக மாறிவிட்டது என்று சொல்வது #சரியா? அல்லது அவ்வாறு #செய்தியாக்கப்பட்டுள்ளதா?  அல்லாஹ்வே மிக மிக அறிந்தவன்  என்பன போன்ற விமர்சனங்களும் உண்டு.

பெர்சனாலாக  விமர்சனங்கள் அனுப்பியவர்கள் பெயரை வெளியிட மாட்டேன். இவர்கள் பதிவுகளாக போட்டுள்ளார்கள். அதனால் பெயருடன் போட்டுள்ளேன்.

இவ்வாறான நிலையில் வழக்கம் போல் உங்கள் கருத்து என்ன என்று கேட்கக் கூடிய  நண்பர்கள் இதிலும் கேட்டுள்ளதால் இந்தப் பதிவு. 

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது சளிப் பிரச்சனை என்று தனியார் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால்.  நெஞ்சகப் பிரிவில் சேர்க்கும் நிலை என்றால் உடனே  அவர்கள் சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தி விடுவார்கள்.  

சளிப் பிரச்சனையால் ஆஸ்பத்திரி நெஞ்சகப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பேஷண்ட் வீடுகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் போய், வீடு சுத்தமாகவும் சுகாதாரமாகவும்   இருக்கிறதா? என்று பார்வையிடுவார்கள். மருந்து தெளிப்பார்கள்.  

வலது பக்கம்  7 வீடுகள், இடது பக்கம்  7 வீடுகள் என   இரண்டு பகுதிகளிலுமாக  உள்ள 28 வீடுகளுக்கும் போய் இன்ன வீட்டில் உள்ளவர் சளிப் பிரச்சனையால் ஆஸ்பத்திரி நெஞ்சகப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

ஆகவே  எச்சரிக்கையாக இருங்கள் என்று சொல்லிச் செல்வார்கள். கொரோனா சாதாரண  இருமல் சளிப் பிரச்சனை மாதிரிதான் என்று சொல்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த விபரங்கள் தெரியும்? 

மளையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் பேசக் கூடிய தப்லீக் ஜமாஅத்தினருக்கு  கொரோனா வரவில்லை. தமிழ் பேசும் தப்லீக் ஜமாஅத்தினருக்கு  மட்டும் கொரோனா வந்தது எப்படி? இது பி.ஜே.பி. எடுபிடி  எடப்பாடி அரசின்  சதி என்கிறார்கள் சில மேதாவிகள். 

தப்லீக் இஜ்திமா மாவட்ட அளவில் நடந்தால் ஊர்வாரியாக கூடாரம் அமைப்பார்கள். மாநில அளவில் நடந்தால் மாவட்ட வாரியாக பந்தல்களை அமைப்பார்கள்.. 

இந்திய அல்லது உலக அளவில் என்றால் மொழி வாரியாகப் பந்தல்களை பிரிப்பார்கள். மாவட்ட அளவிலான மாநாடு கூட அவர்களால்  அரங்க நிகழ்ச்சியாக நடத்த இயலாது. அவ்வளவு கூட்டம் வரும். டெல்லியில்  நடந்தது அந்த மாதிரி இஜ்திமா அல்ல. இஜ்திமா என்றால் எல்லா மொழியினரும்  ஒரே இடத்தில் கூடி இருப்பார்கள்.  

தொடராக நடந்து வந்த மொழி வாரியான  தப்லீக் கார்குண்களின்  அரங்க நிகழ்ச்சிதான்.  மார்ச் 15ல் நடந்தது 

தமிழ் பேசும் தப்லீக்   கார்குண்களின்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உலக அளவிலான  தமிழ்  பேசும் தப்லீக்  கார்குண்கள்தான் 

எனவே மளையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் பேசக் கூடிய தப்லீக்குகள் மார்ச் 15ல் கலந்து கொள்ளவில்லை.

மார்ச் 17க்குப் பிறகு உலக  அளவில் விமான போக்கு வரத்துகள் நிறுத்தம் ஆரம்பமானது. போர்டிங் போட்ட பிறகு பூட்டப்பபட்ட விமானத்தின் கதவுகளை திறந்து இறக்கி விடப்பட்டார்கள். இது உலகம் முழுவதும் நடந்தது.  

அன்றுதான் ஷாஹின் பாக் உட்பட அத்தனை குடியுரிமை போராட்டமும் ஒத்தி வைப்பு என்று. மரத்தடியில் கூட்டமைப்பு சார் பேட்டி கொடுத்தார். புலவன் காஜாமைதீன் பாகவி அவர்கள்.  

வட நாட்டில் கொரோனா கோர தாண்டவம் ஆடியபொழுது கூட தமிழகத்திற்கு வராது என்று மார் தட்டினார்கள். தமிழகத்தில் கொரானா என்றதும். அதிகாரிகள் ஆடிப் போய் விட்டார்கள்.  

1700 பேர் கலந்து கொண்டிருக்கலாம். இதில் 334 பேர் நோய் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

700 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இப்படி கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அறிக்கை விட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவசர கூட்டம்  நடத்தினார்.


அதன் பிறகுதான் தப்லீக், கார்குண், இஜ்திமா, சாத்திகள் ஜில்லா, கஸ்த், குஸுஸி கஸ்த் என்ற வார்த்தைகள் கிடைக்கின்றன. புதிய அதிகாரிகளுக்கு புரியாத பாஷையாக வார்த்தைகளாக இருக்கின்றது. 

கார்குண் என்று சொன்னால் கர்டூனா? சார்க்கோலா என்று கேட்கக் கூடிய நிலையில்  தானே முஸ்லிம்களே இருக்கிறார்கள். புதிய அதிகாரிகள் என்ன செய்வார்கள்? அதனால் அரசு திணறியது.

மார்க்கம் சார்ந்த தவ்ஹீது அமைப்புகள் பற்றியோ மமக, மு.லீக்,  SDPI,  TMMK போன்ற அரசியல்  சார்ந்த கட்சிகள் பற்றியோ கேட்டால் தலைமையிலிருந்து அடிமட்டம் வரை ஒருவர் விடாமல் லிஸ்ட்டும் அட்ரஸும் எடுத்து விடுவார்கள். 

மதுரையில் உள்ளவர் தப்லீக் போனவர் இல்லை. வீட்டில் இருந்த அவரை குஸுஸி கஸ்த் செய்யப் போன இந்தோனிஷியாகாரரிடமிருந்து தொற்றி அவர் இறந்து விடுகிறார். 

அவர் குடும்பம் முழுவதும் தனிமைப்படுத்தப் பட்டார்கள். இப்படி பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பமாக இருந்தால் உங்கள் மனம் என்ன சொல்லும்?  

குஸுஸி கஸ்த் செய்ய வந்த கூட்டத்தவரை கூட்டி வந்தவரை என்ன செய்திருப்பீர்கள்? இப்படியான பாதிப்புகள் தொடர்ந்தது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் களம் இறங்கினார்கள். இவர்களால் ஏற்பட்ட ஏற்பட உள்ள ஆபத்துகளை எடுத்துச் சொல்லி உள்ளார்கள்.  இதன் பிறகு டில்லிக்கு 600 பேரை அழைத்துச் சென்றவர் இன்னவர். இவர் டில்லியிலிருந்து 60 நபர்களை கூடுதலாக அழைத்து வந்துள்ளார். 

அவர்கள் தான் பிரச்சினை. இவர் பெயர் இது. இன்ன இடத்தில் குடி இருக்கிறார். முழு விவரமும் அவர் கையில் உள்ளது. இவர் பெயர் இது. ........  இன்ன பள்ளிவாசல் தலைவர். இவருடைய வீடு ... உள்ளது. இவருடைய போன் செல் இது. இவருடைய மகன் பெயர் இது செல் நம்பர்: இது.

இன்ன  ஹஜ்ரத்  இன்ன பள்ளி இமாம்.  செல் இது: பொருப்பு தாரி செல் நம்பர்:இவர்கள்  தப்லீக் ஜமாஅத்தின் ...இப்படி விபரங்களுடன் கொடுத்துள்ளார்கள். இதன் பிறகு அலர்ட்டான அரசு அதிகாரிகள்    6 பேரை  கஸ்டடி எடுத்தார்கள்.

அதில் 3 பேர் கொரானாவில் அட்மிட் ஆகி இருந்தார்கள். இவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்த பிறகு அவர்கள் தான் 1600 பேர் லிஸ்ட்டை போன் நம்பருடன் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் ஜ.உ.சா.வின் தலைவரும் 23 கூட்டமைப்புகளின் தலைவருமான மேலப்பாளையம் புலவன் காஜாமைதீன் பாகவி அவர்கள். ஜ.உ.சா.வின் தலைமை அலுவலகத்தில் கூட்டமைப்பு தலைவர்களையும்  23 கூட்டமைப்புகளில் இல்லாத மு.லீக் தலைவர் காதர் மைதீன் அவர்களையும் உடன்  வைத்துக் கொண்டு தப்லீக் ஜமாஅத்தினர் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று  அறிக்கை  விட்டார்.

இதற்கு பிறகு தலைகள் அரசுக்கு ஆதரவாக இருக்க. வால்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன. அரசு வெளியிடும் கணக்குகள்  தப்பு தப்பாக இருக்கிறது. என்று எல்லாரும் சொல்ல.  (கூட்டல் கணக்கு தவிர) எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று மன்சூர் காசிமி. வீடியோ வெளியிட்டார்.  Mansoor Mohamed என்ற பேஸ்புக்கில்  காணலாம்.

PAKவுக்கு சிங்கி அடிப்பதாக பலர் விமர்சனம் செய்து உள்ளார்கள். மேலப்பாளையம் கடைப்பள்ளியில் நின்று கொண்டு மேலப்பாளையம் எல்கைக்கு  உட்பட்ட கீழாப்பாளையத்தில் உள்ள வீட்டையே  கண்ணால் காண முடியாது.

அப்படி இருக்க  மேலப்பாளையம் பள்ளிகளில் நின்று கொண்டு  மக்காவில் உள்ள அல்லாஹ்வின் வீடான கஃபாவை கண்ணால் கண்டார்கள் என்று  ஜ.உ.சா.வின் தலைவர் பேசியபொழுதெல்லாம்  விமர்சனம் செய்தவன் நான்.

அதைக் கண்டு கொள்ளாமல்  9 துவாரங்களையும் ஒட்டு மொத்தமாக பொத்திக் கொண்டு இருந்த மவுலவிகளும் இஸ்லாமிய பற்றாளர்களும்(?) தான் பாசிட்டிவ் ஆக இருந்து  நெகடிவ் ஆகி குணம் அடைந்து உள்ளனர் என்றதும்  கொதித்துப் போய் துள்ளி குதிக்கிறார்கள். 

இதில் அரசியல் பண்ணினால் ஆதாயம் கிடைக்கும் மார்க்க விஷயத்தில் உண்மையைச் சொன்னால் ஆதாயம் கிடைக்காது. அதனால் அதைக் கண்டு கொள்ளாதவர்கள்  பாசிட்டிவ் ஆக இருந்து  நெகடிவ் ஆகி குணம் அடைந்து உள்ளனர் என்பதை எதிர்த்து நிற்கிறார்கள். 

ஒருவர்  காய்ச்சல், பிரஷ்ஷர், தலை சுற்று, வாந்தி, பேதி, இருமல் என்று போனால் அந்த நோய் இருக்கிறது என்று தான் சேர்ப்பார்கள். எப்போது டிஸ்சார்ச் செய்வார்கள்? 

காய்ச்சல், பிரஷ்ஷர், தலை சுற்று, வாந்தி, பேதி, இருமல் இல்லை என்று ஆன பிறகு இல்லை என்று சொல்லி டிஸ்சார்ச் செய்வார்கள். காய்ச்சல் என்று சேர்த்தார்கள். இப்பொழு இல்லை என்று டிஸ்சார்ச் செய்கிறார்கள் என்று வாதம் வைத்தால் அவர்கள் அறிவாளிகளா?

அந்த மாதிரி நோய்களில் கூட நாம் விரும்பியவாறு டிஸ்சார்ச் என்று சொல்லி விட்டு வர முடியுமா?  பெரிய டாக்டர் கூறி விட்டார் இன்னும் 4 நாள் என்றால் வாய் மூடி இருப்போம்.  அப்படித்தானே,

சிகிச்சை இல்லை சும்மாதான் வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்விகள் வேறு. அல்கானில் மட்டும் 3 பன்துாக்குகள்(ஸ்டார் ஹோட்டல்கள்) கொரோனா சிகிச்சைக்கு என்று ஒதுக்கி உள்ளார்கள்.  அதிலும் தனித்து இருப்பது  சத்தான உணவு உண்ணுவது. அதுதான் சிகிச்சை. இதுதான் எல்லா அரபு நாடுகளிலும் செய்கிறார்கள். இங்கே  9 துவாரங்களையும் பொத்திக் கொண்டு இருந்து விட்டு இந்தியா பற்றி குறை கூறுகிறார்கள்.

சும்மா இருப்பவர்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் கொண்டு போய்  வைத்து 15 நாட்கள் சோறு போட அரசுகளுக்கு  பைத்தியமா?  உலக நாடுகள் முழுவதும்  எதை சிகிச்சை என முடிவு செய்து உள்ளார்கள். அதைத்தான் இந்தியாவிலும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

பீ.ஜே.பி, RSSஐ எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்க்க வேண்டிய விதத்தில் எதிர்ப்போம் என்று விளக்கி கொரோனா விஷயத்தில்  தவறான பதிவு போட்டவர்களிடம் முடிந்தவரை பேசி புரிய வைத்துள்ளேன். திருந்தியவர்கள் பலர். திருந்ததாதவர்கள் முதலில் உள்ள  ஹதீஸுக்குரியவர்கள்.

கிணற்றில் விழுந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு ஒட்டகத்துடன் சேர்ந்து அவனும் கிணற்றில் வீழ்ந்து சாவான்

பாசிட்டிவ் ஆக இருந்து  நெகடிவ் ஆகி குணம் அடைந்து உள்ளனர் என்று PAK சொன்னது  பொய் என்றால்  அவர் மீதும்  அந்த விஷயத்தில் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். போதுமா?  இந்த துஆ அவருக்கு உரியது இல்லை எனில் இந்த விஷயத்தில் அவரை எதிர்த்து நிற்பவர்கள் மீது நிச்சயமாக திரும்பும். 

தப்லீக் ஜமாஅத்தினர் அனைவரையும் இந்தியா முழுவதும் குரோனா  நோயாளிகளாக சித்தரிக்க வேண்டும்.  என்ற  மத்திய பிஜேபி அரசின் திட்டத்தின்படி  பரிசோதனைக்கு சென்ற அனைவரையும் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே குரோனா  நோயாளிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பது உண்மையானால். யா அல்லாஹ் அப்படிச் செய்தவர்களை கூண்டோடு கொரோனாவிலேயே அழித்தொழிப்பாயாக ஆமீன். 

இந்த துஆ அவர்களுக்கு உரியது இல்லை எனில் இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள்  பற்றி பொய்க் குற்றச்சாட்டு கூறுபவர்களின் பக்கம் கண்டிப்பாக திரும்பும்.

RSS, இந்து முன்னணி போன்றவர்கள்  பொய்களை பரப்புகிறார்களே அதனால் நாங்களும் பதிலடி கொடுக்கிறோம் என்கிறார்கள். அவர்களுக்கு

எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் – ( அபூதாவூத்) இந்த ஹதீஸையே பதிலாக தருகிறோம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு