தொழுகையா? பூஜையா? பள்ளியா? கோவிலா?

முஸ்லிம்கள் மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மண்ணின் மைந்தர்கள்  என்பதற்கு  எவை ஆதாரமாக உள்ளன?

அல்லாஹ்வை தவிர யாருக்கும் அடி பணியக் கூடாது. (யாருடைய காலிலும் வீழக் கூடாது) என்று சொன்னால் ஏற்பவர்களும் இருக்கிறார்கள். ஏற்காமல் நிரகரிப்பவர்களும் இருக்கிறார்கள். நிராகரிப்பவர்கள் என்றால்  காபிர் என்ற நிராகரிப்பாளர்களா?  

நிச்சயமாக  இல்லை. நம்மில் நாதாக்கள், நன்மக்கள், மகான்களான பெரியார்கள் என்று நம்பப்படுபவர்களுக்கும் அடி பணிந்து (காலில்) வீழலாம் என்று சொல்பவர்களும் முஸ்லிம்களே!  சும்மாவா சொன்னார்கள். ஆதாரம் காட்டித்தான் சொன்னார்கள். என்ன ஆதாரம்?


அல்குர்ஆன் 2;34 7:11, 17:61, 18:50, 20:116 ஆகிய 5 வசனங்களில் இடம் பெற்றுள்ளது. 
 لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا

லில்மலாயிகதிஸ்ஜுதுா லிஆதம Fபஸஜதுாா 
என்ற உள் வாசகம்.  இதற்கு, 


ஆதமுக்கு  சிரம்  பணியுங்கள்  என்று  நாம் சொன்ன போது  அனைவரும்   சிரம்  பணிந்தார்கள்   என்று  ஒரு  சாரார்  தமிழாக்கம்  செய்து உள்ளார்கள். 


ஸுஜூது  செய்யுங்கள்  என்று  நாம் சொன்ன போது அனைவரும் ஸுஜூது செய்தனர் என்று இன்னொரு சாரார் அரபி வாசகத்தையே தமிழ் நடையில் தந்து விட்டனர். 

15:30, 38;73 ஆகிய இரண்டு வசனங்களிலும்  சிரம்  பணிந்தார்கள்  ஸுஜூது   செய்தனர்  என்றே அந்த சாரார் தமிழாக்கம் செய்து உள்ளார்கள்.  


இதை வைத்துக் கொண்டுதான்  பலர் முதலில் சொன்ன  தவறான  வழிகாட்டுதல்களை சொல்லி வருகின்றனர். காரணம்  என்ன? 

ஒன்று இவற்றின் மூலத்தில் இல்லாத (ரஃஸ்)  சிரம் (தலை) என்ற வார்த்தையை  சேர்த்து  தமிழாக்கம் செய்தது. 

இன்னொன்று   ஸுஜூது  செய்யுங்கள்” ஸுஜூது செய்தனர் என்று அரபி வார்த்தைகளை அப்படியே தந்தது.

ஸஜத என்னும் மூலச் சொல்லிலிருந்து வந்தவைதான். ஸுஜூத், ஸஜ்தா, ஸாஜித், மஸ்ஜித் ஆகிய சொற்கள். ! 

ஸஜதா என்றதும் நினைவுக்கு வருவது. நாம் தினமும் தொழுகையில் 
1.நெற்றி, 
2. மூக்கு, 
3. இரண்டு உள்ளங்கைகள், 
4.இரண்டு மூட்டுக் கால்கள், 
5. இரு கால்களின் விரல்கள் 
ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும் வகையில் அல்லாஹ்வின் அடி பணிவது தான் நம் மனக் கண் முன் வரும். 

எனவே இந்த மாதிரிதான் ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்து இருப்பார்கள் என்று எண்ணுகிறார்கள். 

அந்த அடிப்படையில் பெரியார்களுக்கு ஸஜ்தா செய்யலாம். இது கண்ணியம் மற்றும் மரியாதை நிமித்தமான ஸஜதாதான்  என்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கு செய்கிற ஸஜதா மரியாதை, கண்ணியம் நிமித்தமாக அல்லாமல்  இழிவுபடுத்துகிற ஸஜதாவா? என்று கேட்டால். சிந்திக்கக் கூடிய  நன் மக்கள்  சிந்திக்கத்தான் செய்கிறார்கள்.


தொழுகையில் செய்யும் ஸஜதா முறையை முஸ்லிம்களுக்கு கற்றுத் தந்தது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தான். நபி(ஸல்) அவர்கள்  இந்த ஸஜதா முறையை நமக்கு கற்றுத் தருவதற்கு முன்னால் ஸஜதா என்ற வார்த்தை அரபியில் இருந்தது. அந்த  ஸஜதா என்ற வார்த்தைக்கு  இந்த  முறை பொருளாக  இருக்கவில்லை என்பதை விளங்க தவறி விட்டார்கள். 

உதாரணமாக நாம்  இறைவனை வணங்கும்  தொழுகையை எடுத்துக் கொள்வோம். அந்த தொழுகை என்ற வார்த்தை தமிழ் முஸ்லிம்கள் கண்டு பிடித்த புதிய வார்த்தையா?  இஸ்லாம் வருவதற்கு முன்பே   தமிழர்கள் வழக்கில் - பயன்பாட்டில் இருந்ததா? 

தொழுகை என்ற  சொல் இஸ்லாம் வந்த பின் முஸ்லிம்கள் கண்டு பிடித்தது அல்ல  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்  பயன்பாட்டில் இருந்த  சொல்தான். 

அதைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதுதான்  முஸ்லிம்கள்    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு ஆதாரமாக இன்றும் உள்ளது.


மஸ்ஜித் என்றால்  ஸஜதா  செய்யும் இடம். அந்த  பொருளில் தான் அரபியில்  மஸ்ஜித்  என்கிறார்கள். அதை தமிழாக்கம் செய்தால் சிரம் பணியுமிடம் என்றோ ஸுஜூது செய்யுமிடம் என்றோதான் நம் முன்னோர் கூறி வந்திருக்க வேண்டும். 

என்ன சொல்கிறோம் பள்ளிவாசல் என்கிறோம்.  பள்ளிவாசல்  என்ற இந்த சொல்லும் முஸ்லிம்கள்   மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு ஆதாரமாகும். எப்படி என்று கேட்கிறீர்களா?


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

இது குறள் இந்தக் குறளில் கடவுளை வணங்கும் செயலுக்கு பூஜை, புணஷ்காரம், ஜெபம்  என்றோ சொல்லப்படவில்லை. தொழுகை என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.   

வரலாற்றில் ஒன்றை  ஒப்புக் கொள்ளும்போது வரலாறு என்ற பெயரால் இட்டுக் கட்டப்பட்டவை அனைத்தையும் ஒப்புக் கொள்வதாக எண்ணி விடக் கூடாது. 

வள்ளுவர் ஆண்டும் வள்ளுவர் உருவமும் 19 ஆம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டவைதான். இதையும் இங்கே நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். 

முஹம்மது  நபி  (ஸல்) அவர்கள் காலத்தில் மை கொண்டு எழுதும் வழக்கம் வந்து விட்டது. அதற்கு  31:27. குர்ஆன்  வசனமும் குர்ஆன்   மூலப்பிரதிகளும் ஆதாரங்களாக உள்ளன.



குறள்கள் எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட  ஆதாரங்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. குறிப்பாக நபி (ஸல்)  காலத்துக்கு முந்தையது என்பதற்கு ஆதாரங்களாக உள்ளன. 

இட்டுக்கட்டி எழுதப்பட்ட புராண கால கட்டுக் கதைகளில் கூட அது பழைய வரலாறு போல் காட்டுவதற்காக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தை தமிழை தேடிப்பிடித்து  எழுதி வைத்துள்ளார்கள். 

அதில் கூட அவர்கள் கடவுளை திருபாற் கடலில் பள்ளி கொண்டான்  என்றுதான் எழுதி வைத்துள்ளார்கள். கோவில், திருச்சபை, ஆலயம்,  மடம் என்ற வார்த்தைகள். இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  தமிழில் காண முடியாது. 

நாம் எப்படி தமிழில் ஏற்கனவே இருந்த தொழுகை, பள்ளி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினோமோ  அது போல்தான். அரபுகள் நடைமுறையில் இருந்த  வார்த்தைகள்தான்  குர்ஆன் ஹதீஸில் பயன்படுத்தப்பட்டன. 

உதாரணமாக தொழுகையை எடுத்துக் கொள்வோம்.  ஸஜதா என்றதும்  எப்படி எட்டு உறுப்புகள் தரையில் படும் வகையில் உள்ளது என்று எண்ணுகிறார்களோ. அதே போல்தான் எண்ணுவார்கள். 

ஜாஹிலிய்யா காலத்து மக்களும் முந்தைய சமுதாயத்து மக்களும் தொழுதார்கள் என்றால். தக்பீர் சொல்லி கைகளை கட்டி ஸலாம் கொடுக்கும் வரையிலானது  என்ற நம் தொழுகை தான்  கண் முன் வரும். இந்த தொழுகை முறையை நமக்கு கற்றுக் கொடுத்தவர்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். 

முந்தைய சமுதாயத்தவர்கள் தொழுதார்கள் என்றால் அது என்ன மாதிரி இருந்திருக்கும்? நமக்குத் தெரியாது. அல் குர்ஆன்   8:35.   வசனத்தில்  ஸலாத்துஹும்

 صَلَاتُهُمْ  

அவர்கள் தொழுகை என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்கள் தொழுகை எப்படி இருந்தது?  சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை என்கிறான் அல்லாஹ். 

தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று நமக்கு கட்டளையிடப்பட்ட இடங்களில் எந்த ஸலாத்  என்ற  வார்த்தையை பயன்படுத்தினானோ அதே வார்த்தைதான். 

ஆக அந்தக காலத்தில் சீட்டியடித்ததையும், கை தட்டுடியதையும் தான்  ஸலாத் - தொழுகை என்று சொல்லி உள்ளார்கள் என்பதை குர்ஆன் ஆதாரத்துடன் தந்து விட்டோம். 


2;34 7:11, 17:61, 18:50, 20:116, 15:30, 38;73 ஆகிய  வசனங்களில் உள்ள  ஸஜதா பற்றியும்  குர்ஆன் ஆதாரத்துடன் சரியான விளக்கம் காண்போம் இன்ஷாஅல்லாஹ். 


இன்னொரரு விஷயத்தையும் இங்கே நினைவுக்கு கொண்டு வருகிறேன்.  தொழுகை, பள்ளி என்ற வார்த்தைகள் எப்படி முஸ்லிம்கள் மூவாயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய இந்த மண்ணின் மைந்தர்கள்  என்பதற்கு  ஆதாரமாக உள்ளனவோ. அது போல்தான் குடும்பப் பெயர்களும் ஆதாரமாக உள்ளன.

TMMK,MMK நெல்லை தலைவராக உள்ள K.S.  ரசூல் அவர்களிடமும் சொல்லி உள்ளேன் போஸ்ட்டர்களில்  காசியார் ரசூல் என்று போடுங்கள் என்று. 


லெப்பை, முஹம்மது லெப்பை, மொன்ன லெப்பை, அல்லெப்பை, கிதர்லெப்பை, கில்லெப்பை றாவுத்தர் லெப்பை, சப்பாணி லெப்பை, கம்ம லெப்பை, செம்ம லெப்பை, கொத்த லெப்பை,  லெப்பைஸா, லெப்பை காதர், லெப்பார்.  இந்த மாதிரி குடும்ப பெயர்களும் 1400 ஆண்டுகாலத்திற்கு முந்தையவர்கள் மேலப்பாளையம் முஸ்லிம்கள் என்பதற்கு ஆதாரமாக உள்ளன என்று பல முறை மேடைகளில் பேசி இருக்கிறேன்.


01-09- 2019 அன்று  நடந்த கூட்டத்தில் கூட குடும்ப பெயர்கள் சம்பந்தமாக  கேள்விகள் கேட்டு பரிசு வழங்கி ஊக்குவித்தோம். அது பற்றி அறிய விரும்புபவர்கள்  மூன்று தலைப்பில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 


சமாயினா, லெப்பை என்ற பெயர்கள் எப்படி வந்தது?





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு