கரோனா 470 இந்து வேத பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

திருமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 470 வேத பாடசாலை மாணவர்கள் பற்றிய பத்திரிக்கை செய்திகள்

திருமலையில் உள்ள வேதபாட சாலையில் தங்கி படிக்கும் 470 மாணவர்களில், 5 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து, மாணவர்கள் தனி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் படிக்கும் வேதபாட சாலை மாணவர்கள் பலர் திருமலையிலேயே தங்கி விட்டனர். இவர்கள் அனைவரையும் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால் சிலர் மட்டும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது இந்த பாட சாலையில் 470 பேர் தங்கி உள் ளனர்.

இந்நிலையில், இந்த வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்களில் சிலர் மும்பையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். இவர்கள் சில நாட்களுக்கு முன் திருமலைக்கு திரும்பி வந்து விட்டனர். 

ஆனால், நேற்று முன் தினம் திடீரென இவர்களில் 5 மாணவர்களுக்கு கரோனா அறிகுறி இருப்பதை அறிந்தனர். உடனடியாக இவர்கள் அனைவரும் திருப்பதியில் உள்ள சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். 

இவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். 

உடனடியாக தர்மகிரியில் உள்ள 470 மாணவர்களையும் திருமலையில் உள்ள நந்தகம் பக்தர்கள் தங்கும் விடுதியில் நேற்று மதியம் அழைத்து வந்து தனிமைப்படுத்தினர்.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவியிடம் கேட்டதற்கு, ‘‘வேதபாட சாலையில் படிக்கும் மாணவர்கள் ஏற்கெனவே அரசு நிபந்தனைகளின்படி தனித்தனியாக தங்கி படித்து வந்தனர். 

இவர்களின் சொந்த ஊர் வெகு தூரம் என்பதாலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பதாலும் இவர்கள் திருமலையிலேயே தங்கி உள்ளனர். தற்போது 5 மாணவர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தனித்தனியாக வேறொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’’ என கூறினார்

நன்றி 
தி ஹிந்து
புனித பூமி

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தாக்குதலின் பயமின்றி வழிபாட்டை மேற்கொள்ள, கோயிலுக்கு வரும் அனைவரும் தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். மார்ச் 14) முதல் தெர்மல் ஸ்கிரீன் என்ற நவீன முறையில் மருத்துவ சோதனை நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில்,காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் யாரிடமாவது தென்பட்டால், கோயில் பணியாளர்கள், அவர்களுக்கு மாஸ்க் தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளதா? என மருத்துவகுழுவினர் கேட்டறிந்து தீவிர சோதனை செய்கின்றனர். அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக உள்ள வர்கள் மட்டுமே திருமலைக்கு வரவேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தானமும் கேட்டுக்கொண்டுள்ளது.


நன்றி 
பிபிஸி

கொரோனா பீதியால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களை வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஏழுமலையான் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான விசே‌ஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக முக்கியமான பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே திருப்பதி பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நலப் பாதிப்புகள் இருந்தால் திருமலைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருமலை–திருப்பதி தேவஸ்தானம் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சின்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-–
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி தரிசனத்துக்காக வந்து திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு ஆந்திர மாநில அரசின் உத்தரவுபடி தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. திருமலையில் உள்ள வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளை விரைவில் மூட ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு பக்தர்கள் காத்திருப்பதை தவிர்த்து 17ந் தேதியில் இருந்து பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். டைம் ஸ்லாட் பக்தர்கள் திருமலை–திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஏழுமலையான் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான விசே‌ஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது. அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய இருந்த பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடாக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.
மே மாதம் வரை ரத்து
முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்களும் வருகிற மே மாதம் வரை ரத்து செய்யப்பட உள்ளது. பக்தர்கள் இதற்கேற்பத் தங்களின் பயணங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முன்பதிவுக் கட்டணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்குக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும். அந்த பக்தர்கள் திருமலையில் உள்ள கூடுதல் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். திருமலை அடிவாரத்திலிருக்கும் அலிபிரி டோல்கேட், அலிபிரியிலிருந்து படிக்கட்டுகள் வழியாக மலையேறுபவர்கள் புறப்படும் இடம், ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாஸ்க் அணிவது பற்றியும் கொரோனா பாதிப்புகள் அறிகுறிகள், செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றியும் பக்தர்களுக்கு விளக்கிக் கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள், விளம்பரங்கள், போஸ்டர்கள் நோட்டீட்ஸ்களாக வழங்கப்படுகிறது.
பக்தர்கள் அனைவருக்கும் ஸ்க்ரீன் டெஸ்ட் செய்த பிறகுதான், திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வைரஸ் தாக்கத்தை
கட்டுப்படுத்த மகா யாகம்
கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 19-ந்தேதி வரை 3 நாட்களுக்கு திருமலை அருகே பார்வேடு மண்டபத்தில் சீனிவாச சந்தியோற்சவா சகிதா தன்வந்திரி மகா யாகம் செய்யப்பட உள்ளது. அதில் விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி, மந்ராலயம் சொரூபானந்தேந்திரா சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
20% குறைந்தது
கொரோனா பீதியால் திருப்பதியில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. திருப்பதியில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 78,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சாதாரண நாட்களில் இந்த நேரத்தில் 1 லட்சம் வரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கொரோனா பீதியால் 20 சதவீத பக்தர்கள் தரிசனத்துக்கு வரவில்லை.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் மாடவீதிகளில் சென்று மற்ற கோவில்களிலும் தரிசனம் செய்வார்கள். அன்னதான கூடத்திற்கு சென்று சாப்பிடுவார்கள்.
ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா பீதியால் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து தரிசனம் முடிந்ததும் நேரிடையாக ஊருக்கு திரும்பி விடுகிறார்கள். இதனால் கோவில் வளாகம், மாடவீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஓட்டல், கடைகளிலும் பக்தர்கள் கூட்டமின்றி வியாபாரம் குறைந்துள்ளது.
நன்றி 
மக்கள் குரல்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு