பள்ளிகள் பல கட்டித் தந்த அஷ்ஷைகு அஹ்மது அல் அஹ்மது
மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான், கோவை கோட்டை மேடு பள்ளி உள்பட ஏராளமான பள்ளிகள் கட்ட பண உதவிகளை அள்ளி வழங்கியவர். காயல்பட்டிணம் மவுலவி ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள் தனது இரங்கல் ஆடியோவில் கூறி உள்ளது போல். தவ்ஹீது தாஇகளுக்கு பேருதவியாக இருந்தவர். தாஇகளை நன்கு மதித்து நன்கு கவனிப்பவர்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_23.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_23.html
1994 செப்டம்பரில் ஸுலைமான் அல் குனைனியுடன் மேலப்பாளையம் வந்த அஹ்மது அல் அஹ்மது அவர்களுக்கு கூளி இக்பால் அவர்கள் கோணத்து ((KSK) புகாரி இல்லத்தில் வைத்து ரிகாஃக் என்ற அரபு உணவு தயாரித்தார்.
காயங்கட்டி இலாஹி இல்லத்தில் வைத்து அரபக ஸ்டையில் குழந்தைகளைக் கொண்டு சிறப்பான வரவேற்பு செய்து விருந்தளிக்கப்பட்டது.
மஸ்ஜிதுர் றஹ்மான் கட்டித் தர கோரிக்கை வைத்தோம். சவூதி சென்று சூப்பர் மார்க்கட் 500 ரியால் சம்பளத்திற்கு வேலை செய்தவர் ஷம்சுல் லுஹா. அவருக்கு அந்த வேலை பிடிக்காத நிலையில் தமாம் மர்கஸில் வேலை போட்டுக் கொடுக்கப்பட்டு பிறகு கேன்சலில் வந்துள்ளார் ஷம்சுல் லுஹா.
அந்த ஷம்சுல் லுஹாவுக்கு மாத சம்பளம் கொடுத்து தமாம் மர்கஸ் சார்பான தாஇயாக மேலப்பாளையத்தில் இருக்கச் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. JAQH அமீர் கமாலுத்தீன் மதனி அவர்களும் பரிந்துரை செய்தார்கள். கோரிக்கைகள் இரண்டையும் ஏற்றுக் கொண்டார்.
இந்த மாதிரி தமிழகத்தில் பல தாஇகளுக்கு மாத சம்பளம் கொடுத்து தவ்ஹீது பிரச்சாரம் செய்ய உதவியவர் அஷ்ஷைகு அஹ்மது அல் அஹ்மது.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்றார். கோவைக்கும் சென்னைக்கும் அவர்களுடன் சென்றோம். அவரது மரணச் செய்தி வந்தது.
[22/04, 4:27 pm] ஜமீல்காக்கா:
توفي قبل قليل الشيخ أحمد بن عبدالله الأحمد الداعية في مركز الدعوة والارشاد بالدمام؛ على إثر إصابته بنزيف دماغي، وسيصلى عليه في مقبرة الدمام الثانية عشر وربع ظهرا...
اللهم أوسعه رحمتك وعفوك، وإنا لله وإنا إليه راجعون. ولا حول ولا قوة الا بالله العلي العظيم...
அதை அறிந்து பலர் அவரது மறுமைக்காக துஆச் செய்து இருந்தனர் அதில் ஒன்று
[23/04, 10:37 am] முன்னாள் சிறைவாசி கோவை: அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை வாஜிபாக்கட்டும் அவனது அருளை பெற்ற நபிமார்கள் ஷுஹதாக்கள் சித்தீக்கீன்கள் ஸாலிஹீன்களோடு சேர்த்து வைப்பானாக அவருடைய குடும்பத்தார்க்கு அழகிய பொறுமைமை தருவானாக
[
Comments