அனீபா சொன்னதா உண்மை?

பள்ளிவாசல்களை இழுத்து மூட காரணமாக இருந்தது ஆட்சியாளர்களா?  மக்களா?

Quarantine குவரண்டைன்  என்பதற்கு உண்மையான பொருள் என்ன?

உண்மை வீட்டை விட்டு வெளியேறும் முன் பொய் உலகை சுற்றி வந்து விடும். இந்த தத்துவத்தை சொல்லாத ஆட்களும் இல்லை.  இதன்படி உலகை சுற்றி வந்த பொய்களை  நம்பி பரப்பாதவர்களும் இல்லை.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_77.html


2020 பிப்ரவரி  27 முதல் நாம் இருக்கும் அரபக மஸ்ஜிதுகளின் இமாம்கள் கொரோனா பற்றிய எச்சரிக்கைகைளை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மார்ச் 3, 4,5 ஆகிய மூன்று நாட்கள் தொடராக மஃரிபு, இஷா ஜமாஅத் முடிந்த உடன். அரசு சார்பான அறிக்கையை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் படித்தார்கள்.

கொரோனா வேகமாக பரவி வருகிறது. வெளியில் போகாதீர்கள். தனித்து இருப்பதே  கொரோனாவுக்கான சிகிச்சை. ஆகவே  வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். விரும்பினால் ஆஸ்பத்திரிக்கு போங்கள். 

உங்களில் யாருக்கேனும்  தொடரான தும்மல், இருமல், சளி, காய்ச்சல் இருந்தால்  பள்ளிக்கு தொழ வராதீர்கள். வீட்டில் தொழுது கொள்ளுங்கள். போஸா (தக்பீல்) - முத்தம் கொடுத்தல், முஆனாகா -கட்டித் தழுவுதல், முஸாபஹா- கை குலுக்கல் போன்றவற்றை செய்யாதீர்கள் என்பது உட்பட பல எச்சரிக்கைகைளைச் சொன்னார்கள்.

எல்லாப் பள்ளிகளிலும் சானிட்டரி ஜெல்கள் வைத்தார்கள். பர்ளு தொழுததும் போய் விடுங்கள். சுன்னத்களை  உங்கள் இடங்களில் ( அல் மகானக்) தொழுது கொள்ளுங்கள் என்றார்கள்.

நாம் எல்லாப் பள்ளிகளையும் மஸ்ஜிதுகள் என்றே சொல்வோம். அரபிகள்  ஐவேளை தொழுகை நடக்கும் பள்ளிகளை  மஸ்ஜிதுகள் என்றும் ஜும்ஆ  நடக்கும் பள்ளிகளை ஜாமஆ என்றும் கூறுவார்கள். 

04-03-2020 அன்று எல்லா ஜாமஆக்களுக்கும் கொரோனா பற்றிய எச்சரிக்கைகைளை அரபக அரசுகள் சொல்லின . 10 நிமிடத்துக்குள் ஜும்ஆ குத்பாவையும் தொழுகையையும் முடித்து விட வேண்டும்  என்ற அறிக்கையை பகிரங்கமாகவும் ஆக்கினார்கள். 

என்ன நடந்தது? தும்மல், இருமல், சளி, காய்ச்சல்  உள்ள வதனி அல்லாதவர்கள் குறிப்பாக வெளிநாட்டவர்கள் மஸ்ஜிதுகளுக்கு வருவதை நிறுத்தவில்லை. மஸ்ஜிதுகளில் வந்து இருமிக் கொண்டும் துப்பிக் கொண்டும் இருந்தார்கள்.

06 -03-2020,  13 -03-2020 ஆகிய இரண்டு  ஜும்ஆக்களிலும் பெரும்பாலான வதனிகள் தங்கள் இயல்புகளுக்கு மாற்றமாக பர்ளு தொழுகை முடிந்ததும்  அமைதியாகவும் அதி விரைவாகவும் ஜாமஆக்களை  விட்டு வெளியேறினார்கள்.

வெளிநாட்டவர்கள் மட்டும் அவர்கள் தான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ள முஸ்லிம்கள் போல் பேசிக் கொண்டார்கள். 10 நிமிடத்துக்குள் பர்ளான ஜும்ஆ குத்பாவையும் தொழுகையையும் முடித்து விட்ட நிலையிலும் தஸ்பீஹ்கள் சுன்னத்தான தொழுகைகள் என அமல்களில் லயித்தார்கள்.

சட்டத்துக்கு கட்டுப்படாமல் நடந்து கொண்டார்கள்.  இதுதான் இந்தியா போன்ற நாடுகளிலும்  நடந்துள்ளது. சகோதரர் ஹஸன் அலி பதிவு ஒரு ஆதாரம்.


சட்டத்துக்கு கட்டுப்படாதவர்களால் கொரோனா பரவியது. அதன் பிறகுதான் அனைத்துப் பள்ளிகளையும் இழுத்து மூட அரபக அரசுகள் உத்தரவு போட்டன. பள்ளிவாசல்களை இழுத்து மூட காரணமாக  இருந்தவர்கள் யார்? அரசாங்கங்களா?  மக்களா?

கொரோனா பிரச்சனை வந்தது முதல் உண்மைகளைவிட  பொய்கள் வேகமாக மக்களைப் போய்ச் சேர்ந்து விட்டது. குர்ஆனில் முடி என்று ஆதாரமான போட்டோவுடன் பரப்பினார்கள். எங்க வீட்டு குர்ஆனிலும் முடி என்று வழி மொழிந்தவர்கள் ஏராளம். இந்த அதி அற்புத  ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் யார்?

குர்ஆனில் கொரோனா  பற்றி ஆயத்து - அத்தாட்சி உள்ளது என்று சம்பந்தமே இல்லாத ஒரு வசனத்தை எவனோ ஒருவன் படம் பிடித்து போட்டான். அதை ஆய்வு(?) செய்து அதிவேகமாக பார்வேடு பண்ணிய அறிஞர் பெருமக்கள் யார்?

கொரோனா  பற்றி ஹதீஸில் கூறப்பட்டு இருக்கிறது என்று ஒரு மவுலவி பேசினார் . ஹதீஸுக்கு விளக்கமாக  ஒருவர் எழுதியதை படித்து விட்டு ஹதீஸ் என தப்பாக பேசி விட்டார். என நிரூபித்து அவரே ஒப்புக் கொண்ட பின்னரும்  பரப்பி மகிழ்ந்த மேதாக்கள் எல்லாம் யார்?

1000 ஆண்டுகளுக்கு முந்தைய அரபு கிதாபில் நம் முன்னோர் முன்னறிவிப்பு செய்து விட்டார்கள். கி.பி 2020 மார்ஸில் கொரோனா வரும் என எழுதி உள்ளார்கள் இதோ ஆதாரம்  என்று அரபி இபாரத்துடன் போட்டார்கள்.

இரண்டு நுாற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதுதான்  கி.பியும் கி.மு.வும் அதில் உள்ள மார்ச்சும் என்று அறியாத அப்பாவி அதி மேதாவியால் தான்  இது இட்டுக்கட்டப்பட்டது. இதை அல்லாஹ்வின் அருளுக்குரியவர் நிரூபித்தார். அதற்குப் பின்பும் பார்வேடு பண்ணி பேரின்பம் கண்ட பெருமக்கள் யார்?

இங்கே ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். பழசு தேவை இல்லை என்று கூறி விடாதீர்கள். பழசாக இருந்தாலும் ஆதாரம் என்பவற்றை தர  வேண்டிய நேரத்தில் தந்தால் தான் பயன் தரும். பழசாக இருந்தாலும்   ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம்  உடைய நன்மக்களே ஏற்றுக் கொள்வார்கள்.

ஏர் கூல் அப்துல் வஹ்ஹாப் அவர்கள்   நெல்லை கயத்தாரில் ஏற்பாடு செய்த கூட்டம் 2000ல் நடந்தது. அதில் கலந்து கொண்ட  நான்.   கி.பி. ஆண்டு முந்தியா ஹிஜிரி ஆண்டு முந்தியா என்ற கேள்வியை கேட்டேன். பதில் தந்த  அனைவரும் கி.பி. ஆண்டுதான்  என்றார்கள்.  அது தவறு என்று கூறி உண்மையை விளக்கினேன். இதை  1996 முதல் விளக்கி வருகிறேன் என்பதையும் கூறினேன்

30-06-2006ல் உண்மை இனி உறங்காது என்ற நமது பிளாக்கரில் ஹிஜ்ரி என்ற பெயருக்கு காரணம் என்ற  தலைப்பில் எழுதினோம். அதை 11.09.2018ல் இந்த பிளாக்கரில் மறு பதிப்பு செய்துள்ளோம். ஹிஜிரி ஆண்டுகளில் கூறப்படுபவை தொகுக்கப்பட்ட உண்மையான வரலாறாகும். கி.பி, கி.மு வில் கூறப்படுபவை வகுக்கப்பட்ட கணக்கே தவிர தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது என்பதை விளக்கி இருந்தோம்.

மவுலவிகளால் மொழி பெயர்க்கப்பட்டு வரும் குர்ஆன்,  ஹதீஸ் தர்ஜமாக்களில் கூட மூலத்தில் இல்லாத கி.பி, கி.மு.க்களை அடிக்குறிப்புகளாக சேர்த்து திணித்து விடுவதையும் நபி(ஸல்) அவர்கள் கி.பி. எத்தனையாவது ஆண்டு பிறந்தார்கள் என கேள்வி கேட்டு முஸ்லிம்களே பரிசு கொடுத்து திணித்தது  பற்றியும்  கண்டித்து இருந்தோம்.


Quarantine குவரண்டைன் என்ற  வார்த்தைக்கு தனிமைப்படுத்துதல் என்று பொருள்.  இது உலகம் அறிந்த உண்மையாக இருக்கிறது. குவரண்டைன் என்பது எவன் காதிலோ குவாரண்டைம் என்று விழ. சங்கிகள் கொரோனாவுக்கு முஸ்லிம் பெயர் வைத்து இஸ்லாத்தில் சேர்த்து விட்ட  கதைகளை சொன்னவர்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  குவாரண் என்ற முஸ்லிம் இருந்தார். அவர் கண்டு பிடித்தது தான் கொரானாவுக்கான  டைம் 40 நாற்கள் என்பது. அதுதான் குவாரண்டைம் என்று ஆகி விட்டது என்றார்கள். பல ஆண்டுகளுக்கு முந்தைய  இங்லீஷ் டிக்சனரிகளில்  குவாரண்டைன் உள்ளது.








அது உண்மை என்று நம்பினால். குவாரண் தந்த டைம் படி 40 நாட்கள் அமைதியாக இருக்கச் சொல்ல வேண்டியதுதானே முடியவில்லை. ஆனால் குவாரண் தந்த டைம்  என்பதையும் பரப்பி மகிழ்ந்தார்கள்  மாமேதைகள்?



உண்மை என்ன? மருத்துவ உலகின் மாமேதை என்று போற்றப்படுபவர் அபு அலி இப்னு சீனா அவர்கள்.  அமீரகத்தில் அவரது பெயரால் இப்னு ஸீனா என்ற பெயரில் மெடிக்கல் ஷாப்கள் நிறைய இருக்கின்றன.

மற்ற அரபு நாடுகளில் இருக்கின்றனவா?  தெரியாது.  அந்த அபு அலி சீனா அவர்கள் (பிளேக் போன்ற) கொள்ளை நோய்களிலிருந்து காக்கப்பட  நாற்பது நாட்கள்  தனிமையில் இருக்க வேண்டும். சமூக இடைவெளி வேண்டும்.  என்று கூறி இருக்கிறார். நாற்பது நாட்கள்  தனிமையில் இருந்து விட்டால் நோய் குணமாகி விடும் என்றும்  கூறி இருக்கிறார்.

இப்னு சீனா ஒரு முஸ்லிம் நம் சமுதாய மன்னோடி என்று மகிழ்வதில் நமக்கும் பெருமையே.. அதற்காக மார்க்க  முலாம் பூசி. சில கப்ஸாக்களையும்  கலந்து.  இஸ்லாம் காட்டிய முன் மாதிரி  என்பது சரியா?  இஸ்லாம் காட்டிய அழகிய  முன் மாதிரி அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் மட்டுமே இருக்கிறது.

10 நாளுக்கு முன்பு ஒரு ஊரில் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று ஒருவர் கதறி அழுது ஆடியோ வெளியிட்டார்.  சும்ம அழவில்லை, உணவுகளை வினியோகித்த ஒருவர் பெயரை குறிப்பிட்டு. குற்றம் சாட்டி  அழுதார். அனுதாபப்பட்டவர்கள் அதி வேகமாகப் பரப்பினார்கள். சர் சர் என அந்த ஆடியோக்கள் எட்டுத் திக்குகளிலிருந்தும் வந்து குவிந்தன.


கதறி அழுது  பேசியவர் தனது குரல் தெரியக் கூடாது என்பதற்காக. மூக்கைப் பொத்திக் கொண்டு  பேசி இருக்கிறார். அவர் யார் மீது குற்றம் சாட்டினாரோ அவரிடமே உணவு பொட்லங்களை கை நீட்டி வாங்கி இருக்கிறார் என்பது வெளியானது. அவர் மன்னிப்புக் கேட்டு அழுததால் அவர் யார் என்று அடையாளம் காட்டாமல் மன்னிக்கப்பட்டார். இந்த மாதிரி நிறைய இருக்கின்றன.

சாப்பாடுகள் ஒழுங்காகக்  கிடைக்கவில்லை. வெஜிடேபில் (காய்கறிகள்) சைவம் மட்டுமே தருகிறார்கள். அசைவமே இல்லை என்று பரபரப்பாக பரப்பினார்கள். நல்ல தரமான சாப்பாடு கிடைத்தது என்று சில முன்னாள்கள்  சொன்னார்கள்.

அதற்காக முன்னாள் புரபசர் போன்றவர்கள் உட்பட பலர் கைக்கூலிகளாக விமர்சிக்கப்பட்டார்கள்.  அப்படி விமர்சித்தவர்களே  இப்பொழுது  பிரியாணி தயாரித்து வினியோகிக்கும் போட்டோ மற்றும் வீடிாயோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.  அதாவது குற்றச்சாட்டுக்கள் கூறியவர்கள் கூற்றுக்கு அவர்களே மறுப்பு  வெளியிட்டு  வருகிறார்கள்.


ரேபிட் கிட் மூலம் கொரனோ பரிசோதனை 19-04-2020 முதல்  உலகம் முழுவதும் துவங்கியது. அரபகத்திலும் துவங்கியது. இன்ன இடத்தில் இருக்கிறோம் வந்து சோதனை செய்து கொள்ளுங்கள் என்ற பொதுவான அறிவிப்புதான்.  




நம்ம நாடு மக்களாட்சி நாடு  என்பதால்.  சில பிரமுகர்களை அழைத்து ஆரம்பித்து  வைத்தார்கள். அதைப் பற்றியும்  குற்றம் குறை என விமர்சனங்கள்.  அதிலும் உள்ள அவர்களது முரண்பாடுகளை அறிவுள்ளவர்கள் அறிவார்கள்.


தலைப்புக்கு வருவோம். அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து நெடுஞ்செழியன், கருணாநிதி என எல்லா திராவிடத் தலைவர்களையும் இப்தார் நிகழ்ச்சிகள் என்ற பெயரால்  அழைத்து  அவர்களை நோன்பு துறக்கச் செய்து அவர்களை  பேசவும் வைப்பார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களும் வட நாட்டு தலைவர்களும் நோன்பு  வைத்த முஸ்லிம்களை அழைத்து நோன்பு துறக்கச் செய்து அவர்கள் பேசுவார்கள். 

முஸ்லிம்களால்  அழைக்கப்பட்டு பேச வைப்பட்டவர்களும் சரி. முஸ்லிம்களை அழைத்து பேசியவர்களும் சரி. நோன்பு பற்றி என்ன பேசினார்கள்? நோன்பு  ஏன் கடமை ஆக்கப்பட்டது என்பதற்கு என்ன காரணம் சொன்னார்கள்?

பசியின் கொடுமையை பணம் படைத்தோரும் உணர்ந்திடச்  செய்யவே நோன்பு என்று அத்தனை பேரும் பேசினார்கள். அப்துஸ் ஸமது ஸாஹிப் போன்ற குர்ஆனுடன் தொடர்புடையவர்களைத் தவிர மற்ற   முஸ்லிம் தலைவர்களும்  இதைத்தான் பேசினார்கள்.  காரணம் யார்?

ரமழான் மாதம் பிறந்து விட்டது என்றதும் எல்லா முஸ்லிம் வீடுகளிலும்  ஸ்பீக்கர்கள் அலறும்.  பசியின் கொடுமையை பணம் படைத்தோரும்  அறிந்திடச் செய்தது யாராலே? என்று ராணி கேட்பார்.

இஸ்லாம் கண்ட ரமழானைய்ய்ய்.... என்று இழுத்து  இஸ்லாம் கண்ட ரமழானை இனிதே அமைத்த நபியாலே  என்பார்  நாகூர்  அனீபா.

நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக, இறை அச்சம் உடையவர்களாக, பயபக்தி உடையவர்களாக ஆகலாம். இறைபக்தி மேலோங்கி பாவங்களிலிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ளலாம் போன்ற பொருள்பட உள்ள

 لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏

லஃஅல்லகும் தத்தஃகூன் 2:183, என்று அல்லாஹ் சொல்லி உள்ளான்.

எது மெஜாரிட்டி தமிழ் மக்களிடம் எடுபட்டுள்ளது?  

எது அதிகமான தமிழ் மக்களிடம்  சென்றடைந்துள்ளது? 

மெஜாரிட்டி மக்கள் நம்புவதால் அல்லாஹ் சொன்னது பொய்? 

அனீபா பாடியது உண்மை அப்படித்தானே எடுத்துக் கொள்ள வேண்டும்?


இந்த மாதிரிதான் கொரோனா பிரச்சனை வந்தது முதல் உண்மைகளை விட  பொய்கள் வேகமாக மக்களைப் போய்ச் சேர்ந்து  கொண்டிருக்கிறது. உண்மையைச் சொன்னால் அரசாங்க கைக் கூலி, அரசு அடிமை என்கிறார்கள். யார் அடிமை?

தப்லீக்  ஜமாஅத்துக்கு போனவர் குடும்ப  பெண்டு பிள்ளைகளையும் கொண்டு போய்  Quarantine குவரண்டைனில் வைக்க துணை நின்று விட்டு அதை சமுதாயத்துக்கு தெரியாமல்  மறைத்தார்களே அவர்களா? நாமா?

டெல்லி நிஜாமுதீன் மர்க்கஸ் பிரிவு தப்லீக் ஜமாஅத்தினர்கள் மீது சென்னையில்  FIR போட்டு  புழல் சிறையில் வைத்து இருக்கிறார்களே அது பற்றி வாய் திறக்காதவர்களா?  நாமா?

டெல்லி  டெல்லி  என்று ஏன் எழுதுகிறீர்கள் என்ற விமர்சனம் வேறு. மவுலானா இப்றாஹீம் டிஉல், மவுலானா லாட் தலைமையில் குஜாராத்தை தலைமையாகக் கொண்ட தப்லீக் பிரிவும் உள்ளது.  எந்த தப்லீக் என்ற சந்தேகம் வரக் கூடாது என்பதற்கே டெல்லி என்று எழுதுகிறோம். வமா அலைனா இல்லல் பலாஃக்ஃ



முதலில் கணக்கிட துவங்கியது கி.பி. ஆண்டா? ஹிஜிரி ஆண்டா?


என்ற விபரத்தை முழுமையாக அறிய  லிங்கை கிளிக் செய்யவும்.









Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு