உண்மையான ஜிஹாதிகளுக்காக துஆச் செய்யவில்லை அதனால்?

கதை அல்ல, கற்பனை அல்ல நடந்த சம்பவம். இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக  செயல்பட்டு உம்முல் முஃமினீன்களை இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான ஜிஹாதில் பலர்  ஈடுபட்டனர்.

போலீஸ், ராணுவம், உளவுத்துறை இப்படியான நாட்டின் அத்தனை பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் வாகனங்களும் ஒரு இரவில் குறிப்பிட்டவர் பணி புரியும் அலுவலகத்தைச் சூழ்ந்தன.

https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_29.html

எல்லாரும் மப்டியில். அந்த பில்டிங்கிலிருந்த பாபர் ஷாப், கேரேஜ், சிற்றுண்டிச் சாலை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடைக்கு வந்தது போல் அந்தந்த கடைகளுக்கு முன் நின்று  கஸ்டமர் போல் பேசிக் கொண்டிருந்தனர்.


அவர்களில் குறிப்பிட்டவர் பணி புரியும் பாஸிடம் சென்ற அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டையைக் காட்டி இன்ன ஆளை சப்தமில்லாமல் எங்களுடன் அனுப்பித் தா. யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது என்கிறார்கள். பாஸும் ஒத்துழைக்கிறார். 

பாஸுக்கு கீழ் உள்ளவரை அனுப்பி குறிப்பிட்ட அந்த நபரிடம் அன்பாக சிரித்துப் பேசி  இவர்களுடன் கொஞ்சம் போய் வா என்று சொல்ல வைக்கிறார். சம்பந்தப்பட்டவரும் வேலை செய்யும் இடத்திலிருந்து வெளியேறுகிறார்.

பில்டிங் கதவை ஒட்டி மிக நெருக்கத்தில் மெர்சிடிஸ் கார் கதவு திறந்திருக்க  காரில் ஏறுகிறார். இரண்டு பக்கமும் இரண்டு முரட்டு மனிதர்கள் ஏறுகிறார்கள். பாஸ் வெளியில் வந்து சிரித்த வண்ணம்  சைகையால் ஸலாம் சொல்லி முடிக்கும் முன் நொடிப்பொழுதில் மின்னல் வேகத்தில் கார் பறக்கிறது. பாஸைப் பொறுத்தவரை அது கடைசி ஸலாம் என எண்ணி உள்ளார்.

சிறிது துாரத்தில் உள்ள ஒரு இருட்டுக்குள் கார் நிறுத்தப்பட்டு கண்களை கட்டி விடுகிறார்கள். பிறகு எந்த சிக்னலிலும் கார் நிற்காமல் போகிறது. போவது அரசு அதிகாரிகள் வாகனம் என்று தெரியாதவர்கள் சிக்னலில் நிற்காமல் போவதை கண்டிக்கும் அபாய  ஹாரண் அடிப்பதை அவர் உணர்ந்தாராம். அதில் இருந்த அதிகாரிகள் பேசிக் கொண்டார்களாம் என்ன இவனிடம்  எந்த பதட்டமும்  மாற்றமும்  இல்லாமல்  துாங்குகிறானே  என்று.

எங்கே எந்த இடம் என்று தெரியவில்லை பாதாள சிறை. பல  வாசல்கள் தாண்டி கொண்டு போகிறார்கள் என்பது மட்டும் கண்கட்டப்பட்டவருக்குப் புரிகிறது.  பிறகு கைகளை  பின் பக்கமாக கட்டி உள்ளார்கள்.  குரல்கள்  மாற்றம் மூலம் அதிகாரிகள் மாறி விட்டார்கள் என்று உணர்கிறார். 

உண்மையைச் சொல்லி விடு உனது நண்பன் இன்ன ஆளை கொண்டு வந்து விட்டோம். அவன் எல்லாவற்றையும் சொல்லி விட்டான். நீயும் சொல்லி விடு என்று கேட்டு இருக்கிறார்கள்.

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. அவன் என்ன சொன்னான் என்று எனக்கு என்ன தெரியும்? என்ன சொன்னான் என்று சொல்லி கேளுங்கள் என்று பதில் கூறுகிறேன் என்றதும் தர்ம அடி சரமாரியாக விழுந்திருக்கிறது. பசி, தண்ணீர் தாகம் இதையெல்லாம் சொல்ல முடியவில்லை.

ஒரு நேரம் சாப்பாடு இல்லை என்றதும் வாட்ஸப் மூலமான ஒப்பாரிகளைக் கேட்கிறோம். அவரோ ஆள் மாறி மாறி வந்து அடிக்கிறார்கள் என்பதை மட்டும்  உணர்கிறார். பசி, தாகம் பற்றி சிந்திக்கவே இல்லையாம். விடிய விடிய அடி விழுந்தும் அவர் வாயிலிருந்து எந்த  வார்த்தையும் வந்து வீழவில்லை.

அவனை பிடித்து விட்டோம் இவனை பிடித்து விட்டோம் எல்லாரும் உன்னைப் பற்றி சொல்லி விட்டார்கள். என்று சொல்லியும் அவர் யாரையும்  காட்டிக் கொடுக்கவில்லையாம்.  இரண்டு நாட்கள் சூரியனையே கண்ணில் காணாது இருந்தும்  கல்லுளி மங்கன் போல் இருந்திருக்கிறார்.

அடிகளுக்கும் அசையவில்லை ஆசை வார்த்தைகளுக்கும் மசியவில்லை. அல்லாஹ் அவருக்கு அளித்த அறிவைக் கொண்டு பேசினாராம். அல்லாஹ்வின் அருளால் விடுதலையாகி இருக்கிறார்.

வெளியில் வந்த அவர்,  ஜிஹாதி என்பதால் பிடிக்கப்பட்டதாக யாரிடமும் கூறவில்லை. களவு கேஸ், களவாணி என்னைப் போல் இருந்ததால்  தவறாக பிடித்துச் சென்று விட்டார்கள் என்றே சக ஊழியர்களிடம் கூறினாராம்.

விசாரிக்க வந்த ஜிஹாதிகளில் ஒருவர் மட்டும் நம்பவே இல்லையாம். பாஸிடம்  பேசிய அதிகாரிகள் களவு கேஸ் மாதிரியான வார்த்தைகளை கூறவே இல்லை.    உடல் மெலிந்து விட்டதற்கு வயிற்றுப் போக்கு என்று கூறி இருக்கிறார், இரண்டு நாட்களுக்கு முன் இருந்த உங்களின் மேற் பற்கள் 2 எங்கே?  என்று திரும்பத் திரும்ப கேட்கவே.

தனிமையில் கூறினாராம்.  கொண்டு போன உடனேயே பற்களை உடைத்து விட்டார்கள்.  எந்த வேதனைகளையும் நினைத்துப் பார்க்கவே இல்லை.  நாமும் நமது சகாக்களும் மீள்வது எப்படி என்ற சிந்தனை மட்டுமே இருந்தது என்றாராம்.  அவர் உளறி இருந்தால்  50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்குமாம்.

பத்ர் போர்ப்படை வீரர்கள் பாவங்களை மன்னித்து  இஸ்லாம்   மரியாதை செலுத்தியது. போர்ப்படை வீரர்களுக்கு  இஸ்லாம்  காட்டிய மரியாதையை பார்த்து தான்  ராணுவ  வீரர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் தனி மரியாதையைக் கொடுத்து வருகின்றன.

அல்லாஹ்  பத்ர் போர்ப்படை வீரர்கள் பாவங்களை மன்னித்தது பற்றி பிரச்சாரம் செய்த பிரச்சார பீரங்கிகள். பல்லுடைந்த போதும் சொல் உடையாத  உண்மையான அந்த ஜிஹாதிக்காக நன்றி செலுத்தி  துஆச் செய்யாது இருந்தது கூட தப்பு இல்லை.

அவர் மீது பலி சுமத்தி நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களை சும்மா விட்டானா?  சீரழித்து சின்னா பின்னமாக ஆக்கி விட்டான்.

இதை அறிந்த  சமுதாய மக்களாவது துஆச் செய்தார்களா? இல்லை அல்லாஹ்  அந்த சமுதாயத்தின்  மீது போலிகளை ஏவி  விட்டான்.

தாடி, பாடி,  உணர்ச்சிகளை துாண்டி விடும் பேடிப் பேச்சாளன் இதுதான்  ஜிஹாதிகளுக்கு அளவு கோலானது.  அவர்கள் நிலை என்ன, போலீஸ்  சும்மா கையை பிடித்து விட்டாலே சீலையோடு மோண்டு ஊர் உலகை மாட்டி விடுகிறார்கள்.

தாகத்துக்கு தண்ணீர் கொடுத்தவன். டீ வாங்கி கொடுத்தவன் பசிக்கு சோறு கொடுத்தவன். . அவசரத்துக்கு என்று சொன்னதால் செல் போன் கொடுத்து உதவியவன். சிம் கார்டு வாங்கி கொடுத்தவன்   இப்படி ஒருத்தன் பாக்கி இல்லாமல் காட்டி கொடுத்து மாட்டி விடுகிறார்கள்.

தொண்டை தொளிலாளிகளான மைக் மாவீரர்கள். கூட்டத்தைக் கண்டவுடன் காகா வலிப்பு காரன் மாதிரி கத்தி விட்டு  ரகசியமாக அதிகாரிகளுக்கு போன் போட்டு மன்னிப்புக்  கேட்பவன்.

காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டவன் காசுக்காக முஸ்லிம்களை கொலை செய்தவன். சம்பந்தம் இல்லாத அப்பாவி முஸ்லிம்களை கொலை வழக்கில் மாட்டி விட்டவன்.

முஸ்லிம்களைமிரட்டி பணம் பறிப்பவன், டிராவல்ஸ் பெயரால் விஸா மோசடிகள் உட்பட பல வகையில் மோசடிகள் செய்து கோடிகளை  கொள்ளை அடித்தவன்களெல்லாம்  ஜிஹாதிகளாக  வலம்  வருகிறார்கள்.

உலக வல்லரசான அமெரிக்காவையே கொரோனா மூலம்   புரட்டிப் போட்டு விட்ட அல்லாஹ்வின் பிடி இவர்கள் மீது இறுகாது என்று எண்ணிக் கொண்டு ஊர் உலகை ஏமாற்றித் திரிகிறார்கள்.

கடந்த ஆண்டே எழுதினேன். சிறைவாசிகள் விடுதலை என கண்ணீர் வடிக்கிறார்கள். அது உண்மை என்றால்    பைவ் ஸ்டார் ஹோட்டல்களில்  இப்தார் பார்ட்டி நடத்தி பொன்னாடை போர்த்தி மகிழ்கிறீர்களே! உங்கள் கண்ணீர்   ஊர் உலகை ஏமாற்றத்தானே  என்று.

அத்துடன் சும்மா இருக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் போட்டு நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி அல்ல ஒரே ஒரு கேள்வி கேட்டேன்.

நீங்கள் சிறையிலிருந்தால் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் இப்தார் பார்ட்டி நடத்தி பொன்னாடை போர்த்தியவர்களுக்காக எப்படி கை ஏந்துவீர்கள்?

இந்த ஆண்டு  பைவ் ஸ்டார் ஹோட்டல்களில்  இப்தார் பார்ட்டி நடத்தி பொன்னாடை போர்த்த வழி இல்லாமல் ஆக்கி விட்டான் அல்லாஹ். 
















Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு