காய்ந்த வயிற்றுக்கு கஞ்சி வார்த்திடவே கஞ்சி அரசியல்
[18/04, 5:33 pm] +965 9750 6427: நாகப்பட்டினம் வடக்கு மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிந்த
மயிலாடுதுறை மாவட்ட அனைத்து சுன்னத்துவல் ஜமாஅத் கூட்டமைப்பின் தீர்மான விவரம்
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_18.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_18.html
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
தமிழக அரசின் 144 ஊரடங்கு தடை விதித்துள்ள நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்சி கொடுக்க முன்வந்த தமிழக பள்ளிவாசல்களுக்கு அனுமதியை தமிழக அரசு மறுத்ததால் இப்போதுள்ள அரசின் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த வருடம் அரசு வழங்க கூடிய 2020 க்கான இலவச பச்சை அரிசியை அனைத்து ஊர் ஜமாத்தார்கள் வாங்க வேண்டாம் என்றும் மேற்படி அரிசியை கொரோனா நிதிக்காக அரசே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு
நிர்வாக குழுவினர்கள்
9443573820, 9443150959, 9443319657,
மயிலாடுதுறை மாவட்ட அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு மயிலாடுதுறை.
[18/04, 5:57 pm] +965 9750 6427: அதுக்குதான் அவர்களின் நம்பர் பதிவு, இடம் பெற்று உள்ளது நீங்கள் நேரடியாக அவர்களை தொடர்பு கொண்டு சொல்லலாம் ஜீ, pls do it 🏻
••••••••••••••. ••••••••••••••
*"நோன்புக் கஞ்சி அரசியல்"...*
••••••••••••••. ••••••••••••••
காஜிகளை வைத்து காய் நகர்த்தி காரியம் சாதித்த தமிழக அரசு...?
நடந்தது என்ன...??
*கழுகுப் பார்வையின் உண்மைத் தகவல்கள்...*
16/04/2020 வியாழனன்று அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள், "அனைத்து பள்ளிகளுக்கும் ரமலான் மாதம் முழுவதும் 5450 டன் அரசி வழங்கப்படும். ஆனால் ரமலான் மாதம் நோன்புக்கஞ்சியை பள்ளியில் காய்ச்ச கூடாது. மேலும் ரமலான் மாதம் முழுவதும் பள்ளிகளில் இரவு விசேஷத் தொழுகைகள் நடைபெறாது என்றும் , இது இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு, அவர்களும் அதை வரவேற்றிருக்கிறார்கள்" என்று கூறுகிறார் .
ஆனால் இது சம்பந்தமாக அனைத்து இஸ்லாமியக் கட்சி கூட்டமைப்பிடமோ ,அதன் தலைமையான மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடமோ ஆலோசனை எதுவும் கேட்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல... இதுவரை அரசாங்கத்தால் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாகப் பார்க்கப்பட்ட 'இஸ்லாமிய கட்சிகள் கூட்டமைப்பு' மற்றும் 'ஜமாஅத்துல் உலமா சபை' இப்போது புறந்தள்ளப்பட்டு அதற்கு மாறாக தற்போது 'தமிழக மாவட்ட காஜிகள்' தமிழக இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளாக அரசாங்கத்தால் புதிதாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். ஊடகங்களிலும் காட்டப்பட்டிருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத புதிய பார்வையாக இது இருப்பதால் இதில் ஏதேனும் "சங்கிகளின் சகுனி வேலைகள்" இருக்கிறதோ..? என்கிற ரீதியில் *கழுகுப்பார்வையை* நாம் செலுத்தினோம். அதில் கிடைத்த "அதிர்ச்சித் தகவல்கள்" உலமாக்களாகிய உங்களுக்கு இதோ...
மாநில ஜமாஅத்துல் உலமா சபை கடந்த 14/04/2020 அன்று, நோன்புக்கஞ்சி சம்பந்தமாக (இஸ்லாமியர்களின் சார்பாக) தங்களது சபை தமிழக அரசிடம் பேசத் திட்டமிட்டுள்ளது.. என்று ஓர் அறிக்கை வெளியிடுகிறது.
ஆனால் 16/4/2020 அன்று, "இஸ்லாமிய பிரதிநிதிகளான காஜிகளிடம் பேசி முடிவு செய்து விட்டோம்." என்று ஒரு முடிவை தலைமைச் செயலர் நியூஸ் சேனலில் வெளியிடுகிறார்.. இதற்கிடையில் உண்மையில் நடந்தது என்ன...?
மாநில ஜமாஅத்துல் உலமா சபை நோன்பு சம்பந்தமாக பேச வருவதை அறிந்த அரசு மாநில சபையிடம், "நீங்கள் வரும் போது உங்களுடைய லெட்டர் பேடில் ஓர் அறிக்கையை எழுதிக் கொண்டு வாருங்கள்.. அதாவது எங்களுக்கு கஞ்சிக்கான அரிசி நீங்கள் தரவேண்டும் , நாங்கள் ரமலான் மாதம் முழுவதும் பள்ளியில் கஞ்சி காய்ச்ச, மற்றும் தொழுகை நடத்த மாட்டோம்" என்று எழுதிக் கொண்டு வரச்சொல்லி அழுத்தம் கொடுக்கிறது..
ஆனால் மாநில சபையோ, "ஊரடங்கு என்பது மே மாதம் மூன்றாம் தேதி வரை தான். ரமலான் மாதம் முழுவதும்... என்று நாங்கள் எழுதி தர முடியாது அதுமட்டுமல்ல.. உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு பின்பு தான் நாங்கள் ஆலோசனை செய்து முடிவு செய்வோம்.
மக்களின் மனதில் உள்ள கோரிக்கையை நாங்கள் பேசுவதற்கே வந்து இருக்கிறோம்.. ஆனால் நீங்களோ பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பே எங்களிடம் அதற்கான முடிவை எழுதிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள்.. அது முடியாது".. என்பது போல் கூறி இருக்கிறது..
அரசு தங்கள் முடிவை மாநில சபை மீது திணிக்க முயல , மேலும் தங்களின் கைப்பாவையாக இவர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு இருக்கிறது தைரியமான மாநில உலமா சபை...
"இவர்கள் நம் வழிக்கு வரமாட்டார்கள் .. இவர்களை அழைத்துப் பேசினால் வேலைக்கு ஆகாது" என்று மாநில சபையை அழைக்காமல் புறந்தள்ளி இருக்கிறது அரசு.
*இது மாநில சபையை அழைக்காமல் விட்டதின் முதல் காரணம்...*
அதுமட்டுமல்லாமல் .. வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் கொரானா பாதிப்பில் இருக்க, "அவர்களை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்கும்-கவனித்துக் கொள்வதற்கும் அரசிடம் இடவசதி இல்லை" என்று கூறி தமிழகத்தின் மூன்று மர்கஸ் பெரிய பள்ளியில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு இருக்குமாறு அரசாங்கமே உத்தரவிட்டிருக்கிறது .
மேலும் அவர்களை (வெளிநாட்டவர்கள் ஆக இருப்பதால்) விருந்தினர்களாக கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அங்கிருந்த இஸ்லாமிய தலைவர்களிடத்திலேயே ஒப்படைத்திருக்கிறார்கள்..
அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த , தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூன்று பள்ளிகளிலும் 'கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட பள்ளி' என்று நோட்டீஸ் ஒட்டி இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா..? என்பதை அவ்வப்போது கவனித்து வந்த அதிகாரிகள் "நீங்கள் வெளியில் செல்லாமல் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அழகிய முறையில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறீர்கள்"..என்று பாராட்டியும் சென்றிருக்கிறார்கள்.
இவ்வளவும் நடந்து இருக்க திடீரென செய்தியில் "பள்ளிவாசலில் பதுங்கி இருந்த வெளிநாட்டவர்களைப் பாய்ந்து பிடித்தோம் " என்று கைது செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது இந்த அரசு.
இந்த பச்சை துரோகத்தைத் தாங்கமுடியாமலதான் அதற்கு எதிராகவும் மாநில சபைகடந்த 15/ 4 /2020 ல் தன் அறிக்கையில் "அப்பாவி வெளிநாட்டு இஸ்லாமியர்களை தமிழக அரசு யாரையோ திருப்திப்படுத்த கைதுசெய்து இருக்கிறது".. என்று குறிப்பிட்டு அறிக்கை விட, மேலும் கோபமாகிப் போன அரசு இதனாலும் மாநில சபையை அழைக்காமல் புறந்தள்ளி இருக்கிறது..
*இது அரசு மாநில சபையை புறக்கணிக்க இரண்டாவது காரணம் இது..*
தன் முடிவுக்குக் கட்டுப்படவில்லை என்பதாலும், தனக்கு எதிராக அறிக்கை விட்டார்கள் என்பதாலும் , தமிழக அரசு மாநில சபையை அழைக்காமல் அடுத்து என்ன செய்யலாம்..? என்று யோசனை செய்ததில் அப்பாவிகளாய் இருந்த காஜிகள் அவர்களின் கண்களுக்கு வசமாய் சிக்கிக் கொண்டார்கள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் வக்ஃபு போர்டு உடைய முக்கியப் புள்ளியான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி மூலம் இவர்களே "மாதிரி அறிக்கை" ஒன்றை தயாரித்து, அதை அனைத்து மாவட்ட காஜிகளுக்கும் அனுப்பி, காஜிகளுடைய லெட்டர் பேடில் இதையே எழுதித் தருமாறு நிர்பந்தப்படுத்த பட்டிருக்கிறார்கள்.
பாவம் காஜிகள்... 20,000 ரூபாய் சம்பளம் , அரசாங்க உத்தியோகம், பச்சை நிற கையெழுத்து , இந்தச் சூழலில் அரசாங்கத்தை எதிர்த்தால் என்னவாகும்..? என்பதை உணர்ந்த காஜிகள்... யோசிக்காமல் அவசரத்தில் மாநில சபை பொறுப்புதாரிகளிடம் , இன்னும் சொல்லப்போனால் தூத்துக்குடி மாவட்ட காஜியாகவும் , மாநில உலமா சபை பொருளாளராகவும் இருக்கக்கூடியவரிடம் கூட ஆலோசனை கேட்காமல் பெரும்பாலான மாவட்ட காஜிகள் அப்படியே ரப்பர் ஸ்டாம்ப்பாக மாறி இருக்கிறார்கள்..
இப்படித்தான் கடந்த வியாழக்கிழமை அன்று தமிழக இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த இஸ்லாமிய பிரதிநிதியாக இந்த காஜிகள் காட்டப்பட்டு, காஜிகளை வைத்து காய் நகர்த்தி, அரசு தான் செய்ய நினைத்ததை சுலபமாக செய்து முடித்து, தலைமைச் செயலரின் அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறது...
இது எதுவுமே தெரியாமல் நம் தலைமை காஜியும் இதற்கு சாட்சியாகிவிட்டார் என்பது தான் வேதனை..
ஆனால் "தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதி யார்..?"
"தமிழக இஸ்லாமிய மக்கள் யாரை தங்களின் வழிகாட்டிகளாக பார்க்கிறார்கள்..?"
"யாருடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு கடந்த தேர்தலில்தமிழக அரசியலை மாற்றி அமைத்தார்கள்.. ?"
"யாருடைய வேண்டுகோளுக்கு தலைசாய்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கில் ஒரே நேரத்தில் 'கலெக்டர் ஆஃபீஸ் முற்றுகைப்' போராட்டத்தை முன்னெடுத்தார்கள்?" என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாமல் இல்லை...
இன்ஷா அல்லாஹ்..
ஊரடங்கு மே 3 இல் முடிவுக்கு வருமானால் அடுத்தகட்ட நிகழ்வுகளை மாநில சபையே நமக்கு வழிகாட்டும்.. அதையே தமிழக இஸ்லாமிய சமூகம் செயல்படுத்தும்...
அவர்களின் சூழ்ச்சி வெகுநாள் நிலைத்து நிற்காது..
*"அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள்.. அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்.. சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே"..*
[18/04, 5:09 pm] +91 87900 43017: *அன்பார்ந்த ஜமாத்தார்களுக்கு*
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தற்போதிய சூழலில் ஒரு செய்தி உலாவருவதை அறிந்தேன். அது என்ன செய்தி என்று நினைக்கிறீர்களா ???
அரசாங்கள் வழங்கும் நோன்பு கஞ்சிக்கான அரிசியை எந்த ஜமாத்தார்களும் வாங்காதீர்கள். வாங்க மாட்டோம் என்று அரசுக்கு கடிதம் எழுதுங்கள் என்ற செய்திதான்.
இந்த செய்தியை அனைவரும் சற்று நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டிய தருணம். ஏன் தெரியுமா ? நாம் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தோம் அந்த முடிவு எந்த தருணத்தில் எடுத்தோம் அதனால் அரசுக்கும் மக்களுக்கும் ஏற்படும் நெருக்கடியையும் நன்மையையும் உணர்ந்து எடுத்த முடிவு . தற்போது அந்த சூழ்நிலை மாறி இருக்கு கொரோனா ஜிஹாத் என்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பழி வாங்க துடிக்கும் காவி கயவர்களும் அதன் கூட்டணிகளும் மீடியைவை வைத்து பொய்யை மூலத்தனமாக கொண்டு பரப்பிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாம் எடுத்து வைக்கு ஒவ்வொரு அடியும் ஆழமாகவும் காவி கயவர்களின் அடி வயிற்றை கலக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் . நாம் உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு ஒரு முடிவை எடுப்பதால் சமூகத்திற்கும் சமுதாயத்திற்கு நலன் உண்டா என யோசித்து எடுக்க வேண்டும் ? இல்லையெனில் அதன் பாதிப்பை மீண்டும் நாம் தான் ஏற்க வேண்டியிருக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தின் போது நாம் எடுத்த முடிவை வைத்து இப்போது காரியம் சாதிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை . நான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வேண்டாம் என்று சொன்னால் அதனை வைத்து அரிசியில் அரசியல் செய்வார்கள். நான் எடுக்கும் முடிவால் அரசாலும் அரசியல் வியாதிகளுக்கு என்ன நெருக்கடி ஏற்பட போகிறதா? அல்லது அவர்களுக்கு சாதகமாக போகிறது என்று யோசிக்க வேண்டும்
நான் வேண்டாம் என்று சொன்னால் அதை சத்தமில்லாமல் ஈர துணியில் கோழியை அமுக்கும் கதையாக ஆயிரமாயிரம் கிலோ அரிசியை அமுக்கி கட்சி தலைவர்களுக்கும் மாவட்டம், வட்டம் தொண்டர்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டு கொரோனா வைரஸ் போல கண்களுக்கு தெரியாமல் போகலாம். அது சமூக ஊடகங்களில் வராது வர போவதுமில்லை.
*கால சூழ்நிலைதான் நாம் எடுக்கு முடிவு சாதகமாக போகிறதா ? இல்லை பாதகமாக போகிறதா என்று முடிவு செய்யும்*
இதனை உணர்ந்து ஏழை மக்களுக்கு துயர் துடைக்கும் பணியில் முன்னணியில் இருக்கும் நாம் அரசு வழங்கும் அரிசியை
ஏழைகளின் பசி போக்கும் பணியில் பயன்படுத்திக்கொண்டு விழிப்போடு செயல் படக்கூடிய சிந்தனை உள்ள சிறந்த மக்களாக செயல் பட நம்மை படைத்த இறைவம் உதவி செய்வானாக என சொல்லி எனது கருத்தை நாடெங்கும் எடுத்துச்செல்ல அனைவரும் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
என்றும் உங்கள் நேசன்
Comments