கொரோனாவால் கொலையாகும் நாட்டு வைத்தியங்கள்
அவசரத்துக்கு ஆங்கில வைத்தியம். முழுமையாகக் குணம் பெற நாட்டு
வைத்தியம். இதுதான் இன்றைய சரியான நிலை.
என்னை நாட்டு வைத்திய எதிரியாகவே நாட்டு வைத்திய ஆதரவாளர்கள் கருதுவார்கள். நாட்டு வைத்திய விஷயத்தில் நான் ஊருக்கு உபதேசி அல்ல.
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_70.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/04/blog-post_70.html
2015 பிப்ரவரி 21 வெள்ளியன்று காலை நான் சென்ற காரின் முன் டயர் வெடித்தது. மூன்று குரங்கு கரணங்கள் போட்டு எதிர் திசையில் தலைகீழாக வீழ்ந்தது.
விழுந்த அந்த வேகத்தில் இழுத்துக் கொண்டு போய் பாலைவன மணலில் தலை கீழாக மூழ்கியது. எனது வலது கை முறிந்தது. ஆம்லன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் அலோபதி அவசர சிகிச்சை நடந்தது. ஆபரேஷன் செய்யனும் என்றார்கள். டிஸ்சார்ச் பண்ணுங்கள் இந்தியா போகிறேன் என்றேன்.
இந்தியாவில் குடும்பத்தார்கள் 2 ஆங்கில மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆபரேஷன் செய்யனும் என்றார்கள். பல தலைவர்களும் நண்பர்களும் ஆங்கில மருத்துவமனைக்கு போக வலியுறுத்தினார்கள். வேண்டாம் என்று ஜங்ஷன் பாலஸ்டிவேல்ஸில் உள்ள பண்டாரம் என்ற நாட்டு வைத்தியரிடமே சிகிச்சை செய்து குணம் ஆனேன்.
அதே ஆண்டு மே 17 அன்று ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. 3 ஆங்கில மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆபரேஷன் செய்யனும் என்றார்கள். ஆஞ்சோ டெஸ்ட் எடுத்து 90 சதம் ஆகவே ஆபரேஷன் மஸ்ட் என்றார்கள். அவசர சிகிகச்சைக்கு ஐயாயிரம் ரூபாய் ஊசி மட்டும் போட்டு விட்டு வந்து விட்டேன்.
பிறகு ஆபரேஷன் அல்லாத நாட்டு வைத்தியம் நகரத்து வைத்தியம் என்று சகிச்சை பெற்று இன்று வரை நன்றாக இருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்
இதே மாதிரிதான் 2009ல் எனது தாயாருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. எல்லாரும் ஆபரேஷன் பண்ணனும் என்றார்கள். அவசரமாக தாயகம் சென்றேன். மருத்துவ மனையில் சொன்னார்கள். 2 நாளில் ஆபரேஷன் செய்து ஆக வேண்டும் இல்லை என்றால் உங்கள் தாயார் உங்களுக்கு இல்லை என்றார்கள். நான் பணம் இல்லை என்றேன். உங்கள் தாயார் உங்களுக்கு இல்லை என்றார்கள்.
டிஸ்சார்ச் பண்ணுங்கள் என்றதற்கு ஆபத்து என்று மறுத்தார்கள். பணம் ரெடி பண்ண. நீங்கள் தரும் ரிப்போர்ட்டை வைத்து தான் குடும்பத்தாரிடம் பணம் வாங்கனும் என்றே ன். உடனே டிஸ்சார்ச் செய்து ரிப்போர்ட் தந்து விட்டார்கள்.
ஆபரேஷன் செய்யவில்லை. அல்லாஹ் அருளால் இன்றும் நாட்டு வைத்தியம் நகரத்து வைத்தியம் அவசரத்துக்கு அலோபதி என்று ஓடிக் கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்
ஹார்ட் அட்டாக் விஷயத்திலேயே ஆங்கில மருத்துவத்தைச் செய்யாத நான் நாட்டு வைத்திய எதிரியா? சிந்தித்து விளங்கிக் கொள்ளுங்கள்.
கொரோனா புதிய நோய். ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றபடி நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சத்தான உணவுகளை உண்டு கொண்டு தனித்து இருப்பதே சிறந்தது. சொல் கேட்காதவர்கள். குறிப்பாக முதியவர்கள் வெளியே சென்று வலிய இழுத்து வந்து விடுகிறார்கள். ஒருவர் செய்த தவறுக்கு குடும்பமே தனிமைப்பட வேண்டியது இருக்கிறது.
ஒருவர் செய்த தவறுக்கு ரூம் மேட்களே பலியாக வேண்டி இருக்கிறது. தேவையில்லாத குற்றச்சாட்டுக்களைக் கூறி கொலை பாவத்துக்கு ஆளாகாதீர்கள்.
Comments