YMJ யிலிருந்து ஹாஜா நூஹ் ராஜினாமா ஏன்?


TNTJ வில் நாம் இருந்த போது அனைவரும் சேர்ந்து எடுத்த நல்ல நிலைபாடுகளை கூட தகுந்த காரணங்களோபோதுமான மார்க்க ஆதாரங்களோ முன்வைக்காமல் மாற்ற வேண்டும் என்று அல்தாபி விரும்பினாரா?. 

கொள்கை ரீதியிலான நிலைபாடு மாற்றங்களை கூட எவ்வித ஆலோசனையும் செய்யாமலே தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்து கொள்கை ரீதியில் இருக்கும்  நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடங்களை அல்தாபி ஏற்படுத்தி வருகிறாரா?
 பெறுநர் 
பொது செயலாளர் 
ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் 

அன்பான நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் 

9/9/2018 அன்று ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் என்ற அமைப்பு துவங்கப்பட்டு அதன் தலைவராக நான் இருந்து வருகிறேன்.  இந்நிலையில் சமீபத்திய ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் செயல்பாடுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. அதற்கு காரணம் அல்தாபி அவர்கள் எதை நினைக்கிறார்களோ அதை நோக்கியே செயல்பட வேண்டும் என்று அவரும் பெரும் பான்மை நிர்வாகிகளும் விரும்பினர்.

உதாரணத்திற்கு TNTJ வில் நாம் இருந்த போது அனைவரும் சேர்ந்து எடுத்த நல்ல நிலைபாடுகளை கூட தகுந்த காரணங்களோ, போதுமான மார்க்க ஆதாரங்களோ முன்வைக்காமல் மாற்ற வேண்டும் என்று விரும்பினார். அதுமட்டுமில்லாமல் உங்கள் மார்க்கம் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி  நடத்தி அதில் வரும் சில கேள்விகளுக்கு பதில் சொல்லும்  போது கொள்கை ரீதியிலான நிலைபாடு மாற்றங்களை கூட எவ்வித ஆலோசனையும் செய்யாமலே தன்னிச்சையாக முடிவுகளை அறிவித்து கொள்கை ரீதியில் இருக்கும் என் போன்ற சில நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார்.


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத்துக்கு இடையே இணக்கம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சகோ.ஹாமீம் இப்ராஹீம் மூலம் வந்த அழைப்பை ஏற்று TNTJ வுடன் பேச்சு வார்தைக்கு தயார் என்று 9/12/18 அன்று திருச்சியில் நடந்த YMJ யின் உயர்நிலை குழுவில் எடுத்த தீர்மானத்தை சகோ.அல்தாபி மூலம் சகோ.ஹாமீம் இப்ராஹீம் அவர்களுக்கு தகவல் தெரிவித்து ஹாமீம் இப்ராஹீம் அவர்களும் TNTJ சார்பில் முன்வந்த சகோதரரிடம் YMJ யின் மாநில நிர்வாகத்தின் தீர்மானத்தை தெரிவித்து பேச்சு வார்த்தை மூலம் மூமீன்களுக்கு இடையே நல்லிணக்கணம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகி இருந்த நிலையில் அதற்கு குந்தகம் ஏற்படும் வகையில் டிசம்பர் 9ம் தேதியில் இருந்தே செயல்பட்டு வருகிறார். 

குறிப்பாக நேத்தாஜி நகர் கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது TNTJ யின் மாநில நிர்வாகிகளுக்கு குஃப்ர்  ஃபத்வாவும்  அவர்களுக்கு பின் நின்று தொழக்கூடாது என்று மார்க்கத்திற்கு எதிரான தீர்ப்பை கொடுத்து நிர்வாகத்திற்கும் ஜமாத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். இது சம்மந்தமாக மாநில நிர்வாகமும் ஆலோசனை குழுவும் கூடி நல்ல முடிவை எட்டலாம் என்று இருந்த நிலையில் சோழபுரம்,விழுப்புரம் ஆகிய இடங்களில் சகோ.அல்தாபி பேசிய பேச்சு  தீய விளைவுகளை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

அதனை  தொடர்ந்து போதுமான மார்க்க ஆய்வு இல்லாமல் எலி கறி சாப்பிடலாம் என்ற அல்தாபியின் ஃபத்வா மீண்டும் ஒரு மன சங்கடத்தை ஏற்படுத்தியது. 

என்னை பொறுத்தவரை பீஜேவின் நான்கு சாட்சி குறித்த விளக்கத்தை அடிப்படையாக வைத்து பீஜேவையோ அல்லது TNTJ வையோ  குர்ஆன் மறுப்பாளர் என்று அழைப்பதில் நான் உடன்படவில்லை. எனவே அவர்களுக்கு குஃப்ர் பத்வா கொடுப்பதோ அவர்களுக்கு பின் நின்று தொழகூடாது என்று சொல்வதிலோ எனக்கு துளியும் உடன்பாடு இல்லை. இந்நிலையில் ஒரு ஜமாத்தில் கொள்கைரீதியில்  இரட்டை நிலையோடு இருப்பது என் மறுமை வாழ்வை பாழாக்கிவிடும் என்று அஞ்சுகிறேன். ஆகையினால் இந்த ஜமாத்தின் தலைமை பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் என்னை விடுவித்து கொள்கிறேன்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல் குரான் 5:2)

யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம் (அல் குரான் 92:5-7)

இப்படிக்கு 

ஹாஜா நூஹ் 
கோட்டார்
நாள்: 11/01/2019


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு