ஓய்ந்தது மாநாட்டுப் பிரச்சாரம் ஓயாது திரு குர்ஆன் திரு நபி வழிப் பிரச்சாரம்
பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் எது? அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் செயல் எது? யார் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு
வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர்
அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்:
புகாரி 6094
நாங்கள் அறிந்ததை வைத்தே சாட்சி சொல்கிறோம்” (12:81) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பது போல சாட்சி சொல்ல வேண்டும். கேட்பவர்கள் எப்படி சொல்லச் சொல்கிறார்களோ அப்படி பொய் சாட்சி சொல்லி சத்தியம் செய்தவன்கள் பற்றி அல் குர்ஆன் என்ன சொல்கிறது?
அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன்
எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! அவன் குறை
கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.(அல்குர்ஆன் 68:10,11)
மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும். இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக்குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)
“நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்
தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்” (அல்-குர்ஆன் 16:105)
பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று திரும்பத் திரும்ப நாம் சொல்லவில்லை நபி நாயகம்(ஸல்) அவர்கள் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். போதும் போதும் 'அவர்கள் நிறுத்திக் கொள்ளக் கூடாதா?' என்று நாங்கள் கூறும் அளவுக்கு சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (புகாரி 5976 வது ஹதீஸின் சுருக்கம்) அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி)
.'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம் சொல்வது பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் என்று நபி நாயகம்(ஸல்) அறிவிப்பு செய்தார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்: 'பொய் சாட்சியம்' என்றே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன். புகாரி 5977. அனஸ் இப்னு மாலிக்(ரலி)
Comments