தப்லிக் இஜ்திமா 3 நாள் இஜ்திமாவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் என்ன என்ள?

தவறை தவறு என்று சொல்ல துணிவில்லாதவன் முஸ்லிமா? நாம் கேட்கவில்லை  ஸைபுத்தீன் ரஷாதி கேட்கிறார்
நீண்ட நெடுநாள் முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வைக்க மாட்டீர்கள். இதை 1994 டிசம்பர் 6ல் பார்த்து விட் டோம். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சூடு இருந்த அப்பொழுது அது பற்றியும் தடா பற்றியும் பேச மறுத்தவர்கள் மார்க்க விஷயத்திலாவது சரியான தீர்மானங்கள் கொண்டு வாருங்கள். 



1) இனிமேல்
பெரியார் கதைகள்,
குரான் சுன்னாவுக்கு மாற்றமான செய்திகளை நம்ப-பின்பற்ற மாட்டோம்

2)கட்டுக்கதைகளை சுமந்துள்ள அந்த அமல்களின் சிறப்புகளை தூர வைத்து விட்டு அல்குரானையும் சுன்னாவையும் முன்னிலைப்படுத்துவோம் 

3) பஜ்ருக்கு பின்னர் ஆதாரமே இல்லாத கதைகளை பேசாமல் இனிமேல் குரான் சுன்னாவை வாசிப்போம் 

4)குடும்பத்திற்கு உழைத்து கொடுக்காமல் ஜமாத் வருபவரை ஏற்க மாட்டோம்

5) முஸ்லிம் அல்லாதவரிடத்திலும் தாஃவா செய்வோம் 

6) இஸ்லாம் என்பது வெறுமனே ஆன்மீகம் மட்டுமல்ல அது அரசியலும் சார்ந்தது

7) தர்கா வைத்து பிழைப்பு நடத்தும் பள்ளிகளுக்கு இனிமேல் ஜமாத் செல்ல மாட்டோம் 

8) பொதுவாக தப்லீக் ஜமாத் நன்மையை ஏவுவார்கள் என்று ஒரு கருத்து உள்ளது.
(இருந்து விட்டுப் போகட்டும்) 

சமுதாயத்தில் நடக்கும்
தீமைகளையும்
தயவு தாட்சண்யம்மின்றி
தடுக்க முன்வரவேண்டும்

என்றெல்லாம் தீர்மானம் போட்டால் மிகுந்த நலனாக உங்களுக்கும்-சமூகத்திற்கும் இருக்கும் !
                 செய்வீர்களா..?
https://mdfazlulilahi.blogspot.com/2019/01/3.html




*தப்லீக்ஜமாத்தில் வேதம்போல கருதப்படும் அமல்களின் சிறப்பின் சிறப்புகள்...!*

*அமல்களின்சிறப்புகள்' என்ற தொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம்.*

*கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம் 943)*

*கையில் காசில்லாமல் ஹஜ்ஜுக்குப் போனவருக்கு நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணமுடிப்பு வழங்கியது (பக்கம் 925)* 

*கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்குப் போர்வையைப் பரிசளித்தது (பக்கம் 944)*

*பசியாளிக்கு நபி (ஸல்) கிச்சடியும் குழம்பும் கொடுத்தது (பக்கம் 945)*

*கப்ரிலிருந்து கொண்டே நபி (ஸல்) ஒருவருக்கு ரொட்டி கொடுத்தது (பக்கம் 797)* 

*ஷாஹ் வலியுல்லாஹ்வுக்கு நெய்ச்சோறு ஒரு மரவை கொடுத்தது (பக்கம் 799)*

*அல்லாஹ்வின் மீது காதல் கொண்டால் மரணம் கிடையாது (பக்கம் 657)*

*தொழும்போது ஆப்பரேஷன் - 1 (பக்கம் 143)* 

*தொழும்போது ஆப்பரேஷன் - 2 (பக்கம் 144)*

*பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவு முழுக்க நின்று தொழுது, அதிலேயே இறந்துபோகப் பந்தயம் (பக்கம் 43,44)* 

*இறந்த பிறகு கபுரில் தொழுத மய்யித் ஸாபித் அல் பன்னானி (பக்கம் 129, தொழுகையின் சிறப்பு-14)*

*நாற்பது ஆண்டுகள் தூங்காத பெரியார் (பக்கம் 118, தொழுகையின் சிறப்பு-1)*

*அறுபது ஆண்டுகளாக அழுது கொண்டே இருந்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-2)*

*பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார் (தொழுகையின் சிறப்பு-11)*

*எழுபது ஆண்டுகள் இடைவிடாது தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-15)*

*அறுபது ஆண்டுகள் இஷாவுக்கு செய்த ஒளுவோடு ஃபஜ்ருத் தொழுத பெரியார் (தொழுகையின் சிறப்பு-17)*

 *நாற்பது ஆண்டுகள் இரவில் அழுது, பகலில் நோன்பு வைத்த பெரியார் (தொழுகையின் சிறப்பு-13)*

*அரசராகப் பொறுப்பேற்றதால் மனைவியுடன் உறவு கொள்ள மறுத்த அரசர் (தொழுகையின் சிறப்பு-12)* 

*பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை மட்டுமே சாப்பிட்ட பெரியார் (தொழுகையின் சிறப்பு-7)*

*நாற்பது ஆண்டுகள் இரவு முழுவதும் தொழுது, பகல் முழுதும் நோன்பிருந்தவர் (பக்கம் 132)*

*தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 132)*

*130 வயதுவரை தினமும் இருநூறு ரக்கத்துக்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 86)*

*ரமழான் மாதத் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முடித்த இமாம் (பக்கம் 132)*

*ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுத பெரியார் (பக்கம் 132)* 

*முப்பது/நாற்பது/ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுத இமாம் (பக்கம் 132)*

*ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நஃபில் தொழுத இமாம் (பக்கம் 130)*

*ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நஃபில் தொழுத பெரியார் (பக்கம் 160)* 

*ஓர் இரவுக்கு ஒரு ருகூ; ஒர் இரவுக்கு ஒரு ஸஜ்தா செய்த பெரியார் (பக்கம் 161)*

*நோன்பு துறக்கும்போது வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 62)*

*ஸஹரிலும் வயிறு நிறைய உண்ணக் கூடாது (பக்கம் 64)*

*கடும் குளிரின்போது உடைகளைக் கழற்றி வைத்துக் கொள்ள வேண்டும் (பக்கம் 64)* 

 *ஸஹருக்கும் இஃப்தாருக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டி போதும் (பக்கம் 65)*

 *ஸஹருக்கும் இஃப்தாருக்கும் பால் கலவாத தேநீர் மட்டும் போதும் (பக்கம் 65)*

 *சந்திக்காமலேயே சப்பாணியை நடக்க வைத்தவர் (பக்கம் 124)*
 *தொழுகையில்லாமல் சொர்க்கத்தில் எப்படி காலம் தள்ளுவது? பெரியாரின் கவலை (பக்கம் 45)* 

*இதுபோன்ற கதைகள் 'அமல்களின் சிறப்பு'களில் நிறைந்திருக்கின்றன. விரிவஞ்சி, சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.*

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு