பயந்து விட்டோமா?
ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளர் மவுலவி J.S.ரிபாஈ ரஷாதிக்கு பகிரங்க கடிதம் -1
சொன்னீர்களா இல்லையா?. ஏமாற்றினீர்களா? இல்லையா?.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
மவுலவி J.S.ரிபாஈ ரஷாதி அவர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. 14-07-2018சனி அன்று 2 மவுலவிகளுக்கு முன்னிலையில் பேசியபோது 3 மாதம் டயம் தாருங்கள். 3 மாதம் கழித்து பள்ளிகளை ஒப்படைத்து விடுகிறேன் என்று சொன்னீர்களா இல்லையா?. டயம் சொல்லி நாட்களை கடத்தி ஏமாற்றி விடலாம் என்ற உள் நோக்குடன் நீங்கள் டயம் கேட்டுள்ளீர்கள்.
முன்பு போல் ஊர் சுற்ற மாட்டேன் கட்சி கட்சி அலைய மாட்டேன் தஃவா பணியில் முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று கூறியும் எங்களை ஏமாற்றினீர்களா? இல்லையா?.
இப்படி ஏமாற்றிய உங்கள் மீதும் உங்கள் மனைவி மக்கள்மீதும் உங்களை உண்மைப்படுத்தி ஆதரித்து நிற்கும் ஒவ்வொரு அயோக்கியர்கள் மீதும் நீங்கள் நிர்வாகிகள் என்று கூறுபவர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களது மனைவி மக்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக! ஆமீன் என்று பிரார்த்தித்தவனாக நீங்கள் என்னைப் போன்றவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பள்ளிவாசல்களின் தலைவர் பதவி பெற்றீர்கள் என்ற விஷயங்களுக்கு வருகிறேன்.
2014ல் பீ.ஜே. ஜரீனா பஞ்சாயத்து மேட்டரை முதன் முதலில்எனக்கு போன் போட்டு சொன்னது யார்? J.S. ரிபாஇயாகிய நீங்கள்தானே. இது பற்றி தகவல்கள் உங்களுக்குத்தெரியாதா? என்றும் கேட்டீர்கள். அப்பொழுது தாங்கள் முதல் முறையாக தமுமுகவின் மாநில தலைவராக இருந்தீர்கள்.
நான் தாயகம் வந்திருந்தபொழுது கோவை செய்யதுஅவர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். டவுணில் ஜும்ஆமுடித்து விட்டு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தகோவை செய்யது சொன்னார் பீ.ஜே. ஜரீனா மேட்டரைநான்தான் தலைவர் ரிபாயிடம் காரில் போய்க்கொண்டிருந்தபொழுது சொன்னேன். உடனே காரில்இருந்தபடியே (பஸ்லுல் இலாஹியாகிய) உங்களுக்கு போன்போட்டு சொன்னார் என்றார்.
பீ.ஜே. ஜரீனா விவகாரத்தை நீங்கள் அறிந்தவுடன்உடனடியாக எனக்கு போன் போட்டு சொன்ன உங்களுக்கு அதே மாதிரி பிரச்சனை வந்த உடன் என்ன ஆனது? யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். (புகாரி 5036 ) என்ற ஹதீஸ் வந்து விட்டது. கைர். நீங்கள் ஜரீனா மேட்டரை உடனடியாக எனக்கு சொன்னதன்நோக்கம் என்ன?
உங்கள் அந்தரங்கங்களை நாம் துருவித் துருவி ஆராயவில்லை. தஃவா பணியில் முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று 2010லிருந்து கூறி வந்த தாங்கள்,. பள்ளி தலைவர் பதவி பெறும்போது முன்பு போல் ஊர் சுற்ற மாட்டேன் கட்சி கட்சி அலைய மாட்டேன் என்றீர்கள். அதன் பிறகு தஃவா பணி செய்யாமல் அலைந்தீர்களே என்ன பணி செய்ய அலைந்தீர்கள்?
உங்கள் அந்தரங்கங்களை நாம் துருவித் துருவி ஆராயவில்லை. தஃவா பணியில் முழுமையாக ஈடுபடப் போகிறேன் என்று 2010லிருந்து கூறி வந்த தாங்கள்,. பள்ளி தலைவர் பதவி பெறும்போது முன்பு போல் ஊர் சுற்ற மாட்டேன் கட்சி கட்சி அலைய மாட்டேன் என்றீர்கள். அதன் பிறகு தஃவா பணி செய்யாமல் அலைந்தீர்களே என்ன பணி செய்ய அலைந்தீர்கள்?
------------------------------------------------------------------------------------------
ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளருக்கு பகிரங்க கடிதம் -2
பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ அவருக்கு பெயர்தான் J.S. ரிபாயோ?
ம.ஜ.க. மாநில நிர்வாகி J.S. ரிபாயி அவர்களே! நீங்கள் ஜரீனா மேட்டரை உடனடியாக எனக்கு சொன்னதன் நோக்கம் என்ன? இந்த மாதிரி அநியாங்களை சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமல் மற்றவர்களிடம் சொல்லி புறம் பேசிக் கொண்டிருக்க மாட்டேன். யாருக்கும்பயப்படாமல் பகிரங்மாக சம்பந்தபட்டவர்களை எதிர்த்து நிற்பேன். மக்களிடம் கொண்டு செல்ல தயங்க மாட்டேன்என்பதுதானே!
அப்பொழுது இது பற்றி அப்பல்லோ ஹனீபா, ஆடிட்டர்அப்துர்றஹ்மான், வக்கீல் கோபிநாத், மண்ணடி அப்துல்லாஹ்போன்றவர்கள் சாட்சி சொன்னாலும் சொல்லாவிட்டாலும்இதை நான் நம்புவேன். காரணம் கடந்த கால வரலாறுஆதாரமாக உள்ளது என்று நான் சொன்னதை J.S.ரிபாஇயாகிய நீங்கள் உங்கள் விஷயத்திலும் மனதில்நிறுத்திக் கொள்ளுங்கள்.
J.S. ரிபாஇ அவர்களே! 2011ல் மீண்டும் தமுமுகவின் மாநிலபொறுப்பில் வர முடியாது என்று எண்ணிய போது இனிதஃவா பணி செய்ய விரும்புகிறேன் என்று என்னைதொடர்பு கொண்டு சொன்னீர்களா இல்லையா? எதிர்பாராவிதமாக தலைவராக ஆனீர்கள். J.S. ரிபாஇயாகிய தங்களுக்கு தலைவர் பதவி கிடைத்த பிறகு தஃவா பணி பற்றி தாங்கள் பேசவேஇல்லையே ஏன்?
2வது முறையாக தமுமுக தலைவராக தாங்கள் வர வாய்ப்புஇல்லை என்று உங்கள் மனதில் எண்ணிய போதும் தாங்கள்.எனக்கு போன் போட்டு மீண்டும் தமுமுக தலைவராக நான்வர விரும்பவில்லை. தஃவா பணி செய்ய விரும்புகிறேன்என்று சொன்னீர்களா இல்லையா?
மனதில் எண்ணிய தாங்கள் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு உள்ளத்தில் உள்ளதை அறிய நீங்கள் என்னஅல்லாஹ்வா என்ற வாதம் வைக்க நினைக்காதீர்கள். தஃவாபணியில் ஈடுபாடாத, ஈடுபாடு இல்லாத உங்களதுபிந்தைய செயல்பாடுகள் தான் நீங்கள் இப்படித்தான்எண்ணியுள்ளீர்கள் என்பதை புரிய வைத்தது.
தமுமுக தலைவராக இருந்து கொண்டே தஃவா பணியைநன்கு செய்யலாமே. மற்றவர்களையும் முடுக்கி விடலாமே தஃவாவுக்காக IPPயை நன்கு பலப்படுத்தலாமே என்றேன்.
மேலப்பாளையத்துக்காரர்கள் உயர் பதவிகளில் இருப்பதைவிரும்பும் நான் அப்படியெல்லாம் விட்டு விடாதீர்கள்.தமுமுக தலைவராக இருந்து கொண்டே தஃவா பணிசெய்யுங்கள் என்றும் அழுத்தமாகச் சொன்னேன்.
அதே கால கட்டத்தில் 2014, 2015களில் பள்ளிவாசல்அமைப்பது சம்பந்தமாக மேலப்பாளையம் நகர தமுமுக நிர்வாகிகளை அழைத்து என் வீட்டில் பலஆலோசனைகளை நடத்தியுள்ளோம். அதில் உங்களைஅழைக்கவே இல்லை. மேலப்பாளையம் தமுமுக நிர்வாகிகள் பல இடங்களை கொண்டு வந்தார்கள்.
போட்டி பள்ளி, பிரிவினைப் பள்ளி மாதிரி ஆகி விடக்கூடாது. பள்ளி இல்லாத பகுதியில்தான் இடம் வேண்டும். டூ வீலர்கள் நிறுத்துவதற்கும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் கார்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.மக்கள் நடைபாதைகளுக்கு இடையூராக பள்ளி அமைந்துவிடக் கூடாது என்று பல இடங்களை தவிர்த்தேன்.
குறிப்பாக கடைப்பள்ளி எதிரிலும் மஸ்ஜிதுர்றஹ்மான்அருகிலும் வந்த இடங்களை போட்டி பள்ளி மாதிரி ஆகி விடக் கூடாது என்பதற்காக வேண்டாம் என்றேன். 2014ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 2015 மே, ஜுன் ஆகிய இந்தகாலக்கட்டத்தில் நடந்த இவற்றில் எதிலும் J.S.ரிபாஇயாகிய நீங்கள் இருக்கவில்லை. காரணம் உங்களை நாம் அழைக்கவில்லை.
தஃவா பணி செய்ய விரும்புகிறேன் என்று என்னிடம்அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த J.S. ரிபாயி அவர்களேதாங்கள் எதிர்பாரா விதத்தில் ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி போன்ற மூத்த தலைவர்கள் தயவில் முதல் முறைதலைவர் ஆனது போல் மீண்டும் அவர்கள் தயவில்இரண்டாவது முறையாகவும் த.மு.மு.க. தலைவராகஆனீர்கள். அதன் பிறகு தஃவா பணி பற்றி தாங்கள் பேசவேஇல்லையே ஏன்?
பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ J.S. ரிபாயி?
பதவி கிடைத்து விட்டால் தஃவா பணி பற்றி பேசவே மாட்டாரோ அவருக்கு பெயர்தான் J.S. ரிபாயோ
-----------------------------------------------------------------
JSR அவர்களே அவசர கதியில் உருவாக்கிய பள்ளியில் ஒழுங்காக தொழ வந்தீர்களா? தஃவா பணிதான் செய்தீர்களா?
கடிதம் -3 ம.ஜ.க. மாநில நிர்வாகி J.S. ரிபாயி அவர்களே! இரண்டாவது முறையான தலைவர் பதவி பாதியில் போகப்போகிறது என்ற நிலை வந்ததும் எனக்கு போன் போட்டுதமுமுக தலைவராக நீடிக்க விரும்பவில்லை. அரசியல்பேச்சுக்கள் மனதுக்கு ராஹத் இல்லை. தஃவா பணி செய்யவிரும்புகிறேன் என்று சொன்னீர்களா இல்லையா?
தமுமுக தலைவராக இருந்து கொண்டே தஃவா பணியைநன்கு செய்யலாமே என்றே மீண்டும் வலியுறுத்தினேனா இல்லையா? அல்லாஹ்வின் நாட்டம் குணங்குடி ஹனிபா விட்டுக் கொடுத்த தயவில் J.S. ரிபாஇயாகிய நீங்கள் துணைத்தலைவராக ஆனீர்கள்.
தக்வா இனாயதுல்லாஹ் போன்றவர்கள் தலைவராகஇருந்தவர் எப்படி துணைத் தலைவராக கீழே இறங்கலாம்என்று விமர்சனம் செய்தார்களா இல்லையா? K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி போன்றவர்கள் நேரில் எனதுமுன்பாகக் கேட்டார்களா இல்லையா? தஃவா பணியில்ஈடுபடப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் என்றீர்களா இல்லையா?
இம்தாதியை தென்காசியில் ஒரு முறையும்கடையநல்லுாரில் ஒரு முறையும் சந்தித்தபொழுது இனிதஃவா பணியில் ஈடுபடப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் என்று அவரை அருகில் வைத்துக் கொண்டு என்னிடம் வாக்குறுதி அளித்தீர்களா இல்லையா?. இம்தாதியிடமும் சொன்னீர்களா இல்லையா?
இம்தாதி மட்டுமல்ல இன்னும் பல மவுலவிகள் இது மார்க்கஅறிஞர்களுக்கு இழுக்கு. தர்ஜா உயர வேண்டுமே தவிரகீழிறங்குவது சரி இல்லை. தலைவராக இருந்த நீங்கள் எப்படி துணைத் தலைவராக இருக்கலாம்? என்று கேட்டார்களா இல்லையா?
உடனே ராஜினாமா செய்து விடுகிறேன். தஃவா பணியில்இறங்கி விடுகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் என்று பல மவுலவிகளுக்கு முன்பும் வாக்குறுதி அளித்தீர்கள் அவர்களும் அதை நம்பினார்கள். நானும்நம்பினேன்.
உடனே ராஜினாமா செய்து விடுகிறேன். தஃவா பணியில்இறங்கி விடுகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் என்று பல மவுலவிகளுக்கு முன்பும் வாக்குறுதி அளித்தீர்கள் அவர்களும் அதை நம்பினார்கள். நானும்நம்பினேன்.
உங்கள் வாக்குறுதியை நம்பி செயல்பட்ட எங்களை ஏமாற்றினீர்களா? இல்லையா?
நீங்களும் நானும் கடையநல்லுார், தென்காசி, நாகர்கோயில்என பல ஊர்களுக்கு பல முறை சென்றுள்ளோம். அப்படிச் சென்ற ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊரிலும் சந்தித்தஎல்லா மவுலவிகளிடமும் என் முன்னிலையில் நீங்கள் சொன்னது. ஊருடன் இருந்து தஃவா பணி செய்யப் போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன்என்பதுதான். அப்படிச் சொன்ன J.S. ரிபாயி அவர்களே நீங்கள் ரய்யானில் செய்த தஃவா பணிகள் என்ன?
தஃவா பணியில் இருந்த ராஹத் மன சந்தோஷம் அரசியலில்இல்லை என்று கமாலுத்தீன் மதனி அவர்கள் வீடு தேடிப்போய் சொன்னீர்கள். உடன் இருந்த நான் உங்களை ரொம்பஉயர்வாக எண்ணினேன்.
நான் நினைத்து இருந்தால் என்னையே முன்னிலைப்படுத்தி இருக்க முடியும். ஸபா பள்ளிக்கு இடம் தருவதாக என்னிடம் சொன்னவரிடம் என் பெயரிலேயே எழுதி வாங்கி இருக்க முடியும்.
எல்லாரும் இலாஹி நீங்கள் தான் தலைவராக இருக்க வேண்டும். உங்கள் பெயரில்தான் பதிய வேண்டும் என்று சொன்னார்கள். உங்கள் கடந்த கால வரலாறு எப்படிஇருந்தாலும் ஊருடன் இருந்து தஃவா பணி செய்யப்போகிறேன். இனி எந்த இயக்கத்திலும் ஈடுபட மாட்டேன் என்று மூச்சுக்கு முன்னுாறு தடவை என்பார்களே அது போல் சொன்ன உங்கள் சொல்லை நம்பினேன். அதனால்தான் J.S. ரிபாயி அவர்களே உங்களை நான் முன்னிலைப்படுத்தினேன்.
2016ல் உங்களுடன் நான் நேரில் பார்த்து வண்டிகள்நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. மக்கள்நடைபாதைகளுக்கு இடையூராக பள்ளி அமைந்து விடும்.ஆகவே இந்த இடம் சரி இல்லை, காணாது எனவே இது வேண்டாம் என்று சொன்ன இடம்தான் இன்றைய ரய்யான்.அன்று அந்த குடோன் டபுலாகவும் இருந்தது. அவசர கதியில் தங்களுக்கு பள்ளித் தலைவர் என்ற பெயரால் ஒரு இருப்பிடம் வேண்டும் என்ற வரட்டு கவுரவத்திற்காக என்னிடம் பணம் வாங்கி சிறிய இடத்திற்கு அட்வான்ஸ் போட்டு விட்டீர்கள்.
ஆனால் வேறு ஒரு பெரிய இடத்தைச் சொல்லித்தான் என்னிடம் அட்வான்ஸ் போட பணம் கேட்டு போன் போட்டீர்கள். மஸ்ஜித் - பள்ளிவாசல்அல்லாஹ்வுக்காகத்தான் உருவாக்க வேண்டும். உங்களின் வரட்டு கவுரவத்தை நிலை நாட்ட உங்களுக்கு தலைவர் பதவி வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின்பள்ளியையும் பயன்படுத்திக் கொண்டீர்கள்.
யா அல்லாஹ் J.S. ரிபாஈயின் இந்தச் செயலுக்காக ரிபாஇ மீதும் அவரை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன்.
J.S. ரிபாஈ அவர்களே! பார்க்கிங் வசதி இல்லாத மக்கள்நடைபாதைகளுக்கு இடையூரான நாம் வேண்டாம் என்று சொன்ன இடம் இது. ஆகவே அட்வான்ஸை திரும்ப கேளுங்கள் என்று எனது நண்பர்கள் சொன்னார்கள்.அல்லாஹ்வின் நாட்டம் என விட்டு விட்டேன்.
J.S. ரிபாஈ அவர்களே! தங்களைக் காட்டிக் கொள்ள ஒரு இருப்பிடம் வேண்டும் என்பதற்காக மிக மிக வேகமாக பள்ளிவாசலாக ஆக்கும் பணியை அவசர கதியில் செய்ய வைத்தீர்கள். அதில் 1. தஃவா பணி செய்தீர்களா? 2. நீங்கள்தான் ஒழுங்காக தொழ வந்தீர்களா?
J.S. ரிபாஈ அவர்களே! தங்களைக் காட்டிக் கொள்ள ஒரு இருப்பிடம் வேண்டும் என்பதற்காக மிக மிக வேகமாக பள்ளிவாசலாக ஆக்கும் பணியை அவசர கதியில் செய்ய வைத்தீர்கள். அதில் 1. தஃவா பணி செய்தீர்களா? 2. நீங்கள்தான் ஒழுங்காக தொழ வந்தீர்களா?
------------------------------------------------------
J.S.ரிபாயிக்கு பள்ளி தலைவர் பதவி மட்டும் இனிக்குமோ? இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?
கடித எண் 4 J.S.ரிபாஈ அவர்களே! ரய்யான் பள்ளியாக ஆனதும் நன்றாக ஓதக் கூடிய மவுலவி M.A.S. செய்யது அஹ்மது ஸலபி அவர்கள் தானாக முன் வந்து பஜ்ர் உட்பட அனைத்து தொழுகைகளிலும் சம்பளத்தை எதிர்பார்க்காமல் இமாமத் செய்யக் கூடியவராக இருந்தார். J.S.ரிபாஈயாகிய உங்களைவிட அழகாக ஓதக் கூடிய, பயான் செய்யக் கூடிய ஸலபி தொழ வைத்தால் J.S. ரிபாய் ஆகிய உங்கள் இமேஜ் கெட்டு விடும் என்று எண்ணினீர்களா இல்லையா?
அதனால் ஸலபியை இமாமத் செய்ய விடக் கூடாது என்று முடிவு எடுத்தீர்களா இல்லையா? சக நிர்வாகியிடம் ஸலபியை இமாமத் செய்ய விடாதீர்கள் என்றீர்களா இல்லையா?. ஸலபியை இமாமத் செய்ய விடக் கூடாது என்பதற்காக உடனடியாக சம்பளத்திற்கு இமாமை தேடிப் பிடித்துப் போட்டீர்களா இல்லையா? இப்படியெல்லாம் செய்த J.S.ரிபாஈ அவர்களே! நீங்கள் பள்ளிக்கு வந்து தொழுபவராக தஃவா செய்பவராக இருக்கவில்லையே ஏன்?.
ஸலபியை பள்ளியில் சேர்க்காதீர்கள். அவன் அஹ்லே குர்ஆன், ஆள் சேர்த்து விடுவான் என்று தக்வா பள்ளி நிர்வாகி ஒருவர் பெயர் சொல்லி அவர் உங்களிடம் சொன்னதாகச் சொல்லி உள்ளீர்கள். இதுவெல்லாம் பதவிக்காக உங்களுடன் இருக்கக் கூடிய நீங்கள் நிர்வாகிகள் என்று சொல்லக் கூடியவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
நீங்கள் சொன்ன தக்வா பள்ளி நிர்வாகியிடம் போன் போட்டு கேட்டேன். தக்வாவில் ஸலபியையும் ஸலபி தம்பியையும் கூப்பிடக் கூடாது என்று இன்றும் சொல்வேனே தவிர அடுத்த நிர்வாகத்தில் நான் ஏன் சொல்லப் போகிறேன் என்று கூறி விட்டார்.
பள்ளி பொருளாதார சூழலில் சம்பள இமாம் தேவையா?குர்பானிக்கு ஆடு பிடித்து வருகின்ற மாதிரி வட நாட்டிலிருந்து ஆட்களை பிடித்து கொண்டு வந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? J.S.ரிபாயாகிய நீங்களும் ஆலிம்ஸா தானே. நீங்கள் இமாமத் செய்தால் என்ன? பள்ளி தலைவர் பதவி தேவை அது இனிக்கும் இமாமாக தொழ வைப்பது மட்டும் கசக்குமோ?
பஜ்ர், இஷாவுக்குப் பின் விபரம் தெரியாதவர்கள் சுக்குமி ளகுதி ப்லி சுக்கு மிளகு திப்லி என்பதை சுக்குமி ளகுதி ப்லி என படிப்பது போல் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறார்கள். அதைவிட ஆலிம்ஸாவான நீங்கள் அவ்வப்போதைக்கு தேவையான ஆயத்து ஹதீஸ்களை தினமும் சொல்லுங்கள் என்றேன்.
கடையநல்லுாரில் உள்ள அமைப்பு சாரா தவ்ஹீது பள்ளிகளில் நிர்வாகிகளாக உள்ள ஆலிம்கள்தானே பொறுப்புடன் இமாமாக இருக்கிறார்கள். தஃவா பணி செய்கிறார்கள்.
மக்தப் பாடம் உட்பட அனைத்தும் அவர்களே நடத்துகிறார்கள். வரட்டு கவுரவம் பார்ப்பதில்லை. சிறு சேமிப்பு, வட்டி இல்லா கடன் என பல சேவைப் பணிகளை மஸ்ஜிதுல் முபாரக்கை மர்க்கஸாக கொண்டு செயல்படுகிறார்கள். J.S.ரிபாயியாகிய நீங்கள் உண்மையான தாஇயாக இருந்தால்தானே உங்களுக்கும் அந்த பொறுப்புணர்வு வரும்.
உங்கள் உள்ளத்தில் தஃவா பணிதான் நோக்கமாக இருந்தால் தானே அந்த பொறுப்புணர்வு இருக்கும். கடையநல்லுார் ஆலிம்களிடம் உங்களை மாதிரி வரட்டு கவுரவம் இல்லை அதனால் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள்.
உங்களுக்கு தஃவா பணி செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இதைச் செய்திருப்பீர்கள். உங்கள் ஆளுமையைக் காட்ட ஜும்ஆ மேடையை மட்டும் உங்களுக்குரியதாக ஆக்கிக் கொண்டீர்கள். காணாததற்கு உங்கள் ஆளுமையைக் காட்ட நிலை நாட்ட பெருநாளை ஒட்டி தனி திடல் கண்டீர்கள்.
யா அல்லாஹ் J.S.ரிபாயி தனது ஆளுமையைக் காட்ட ஜும்ஆ மேடையை மட்டும் தனக்குரியதாக ஆக்கி இருந்தால், தனது ஆளுமையைக் காட்ட நிலை நாட்ட ரிபாயிக்கு பெருநாளை ஒட்டி தனி திடல் வேண்டும் என்பதற்காக திடல் உருவாக்கி இருந்தால் J.S.ரிபாயி மீதும் அதற்கு துணை நின்றவர்களில் திருந்தியவர்கள் தவிர மற்ற அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக ஆமீன்.
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்
ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள். 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?
கடித எண் 5 ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! ஸலபியை பள்ளியில் சேர்க்காதீர்கள். அவன் அஹ்லே குர்ஆன், ஆள் சேர்த்து விடுவான் என்று தக்வா பள்ளி நிர்வாகி ஒருவர் சொன்னதாக சொன்னீர்கள் அல்லவா?
தாயகம் வந்த நான் நண்பருடன் தக்வா இனாயதுல்லாஹ் அவர்களை சந்தித்தோம். M.A.S. ஸலபி, உஸ்மானி ஆகியோர் அஹ்லே குர்ஆன்கள் ஆகவே தான் உஸ்மானியை முன்பே நீக்கி விட்டோம் என்றார்.
எப்படி அஹ்லே குர்ஆன் என்கிறீர்கள் என்று கேட்டோம்? கபுர் வேதனை சம்பந்தமான ஹதீஸ்கள் அறிவுக்கு பொருந்தவில்லை என பேசினார் என்றார். நான் உடனே பதில் விளக்கம் சொன்னோம். உங்களை மாதிரி பதில் விளக்கம் சொல்ல அந்த இடத்தில் ஆள் இல்லை என்றார்.
அஹ்லே குர்ஆன்கள் மறுக்கும் கபுர் வேதனை உண்டு என்பதற்கு ஆதாரமாக குர்ஆன் வசனங்களையே எடுத்துக் காட்டி பஜ்ரிலும் இஷாவிலும் தொடராக ரையானில் விளக்கம் கூறினோம்.
நீங்கள் என்ன சொன்னீர்கள். உங்கள் சுய நலத்தை மனதில் வைத்துக் கொண்டு அமைப்பு சாரா பள்ளி என்று எங்களை ஏமாற்றிய மாதிரி, கருத்து வேறுபாடுகளான விஷயங்களை இந்த பள்ளியில் பேசக் கூடாது. பேச மாட்டோம் என்று அறிவித்துக் கொண்டே இருந்தீர்கள். நாம் பேச வேண்டும் என்று ஜும்ஆவில் அறிவித்தோம்.
ரிபாஈ மஸ்ஜிதுர்றஹ்மானில் பொருளாளராக இருந்தபொழுதும் இப்படித்தான் வீட்டில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வர மாட்டார். தக்வா பள்ளியில் செயலாளராக இருந்தபொழுதும் பள்ளிக்கு தொழ வந்ததில்லை. அதே மாதிரிதான் இப்பொழுதும் ரய்யான் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்.
வீட்டில் இருந்து கொண்டே பள்ளிக்கு தொழ வராமல் இருக்கிறார். நாங்களும் பல தடவை சொல்லி விட்டோம்.அண்ணே பள்ளிக்கு வாங்க என்று கெஞ்சாமல் கெஞ்சி விட்டோம். தலைவராக இருந்தால் பள்ளிக்கு வரணும் என்பது சட்டமா? என்று ரிபாயி கேட்கிறார். இப்படியாக ரய்யானில் புறம் பேசிக் கொண்டவர்கள் யார்?
மஸ்ஜிதுர்றஹ்மான், தக்வா பள்ளி என தொழ வராமல் பதவியில் இருந்த கடந்த கால உங்கள் வரலாற்றை புறமாகப் பேசியவர்கள் யார்? நிச்சயமாக புதியவர்களால் பழைய வரலாறு பேச முடியாது புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் யாரையெல்லாம் ரய்யான் நிர்வாகிகளாகப் போட்டால் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் உங்களைச் சார்ந்தே இருப்பார்கள் என்று எண்ணி பதவி கொடுத்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் தான். இன்றைய இறை வசனம் என்ற தலைப்பில் புறம் வேண்டாம் என்று FBயில் போட்டு விட்டு பள்ளியில் வைத்து புறம் பேசியவர்கள்.
அண்ணே பள்ளிக்கு வாங்க என்று உங்களை கெஞ்சாமல் கெஞ்ச அஷ்ரபுக்கு தலை எழுத்தா? பழைய வரலாற்றைச் சொல்லி அசன் போன்றவர்களை பள்ளியில் புலம்ப யார் காரணம். ஜே.எஸ். ரிபாஈ அவர்களே! பதில் சொல்லுங்கள் 4 லட்டர்கள் அனுப்பியும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?
Comments