கலைஞர். கலைஞர் என்ற பட்டத்திற்கு 100 சதம் பொறுத்தமானவர்.
சூழ்ச்சியை சூழ்ச்சியால் வென்றவர் கலைஞர் என்ற தலைப்பில் மதார் என்ற சகோதரர் ஒரு ஆக்கம் அனுப்பி இருந்தார். அதை அரசியலில் ஈடுபாடுடைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்தேன். அதற்கு பதிலாக ”முத்தமிழ் வித்தவர்” என்ற தலைப்பில் ஹனீப் என்பவர் ஒரு ஆக்கம் அனுப்பி உள்ளார். இரண்டையும் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/01/100.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/01/100.html
[07/01, 6:07 pm] Madar: கலைஞருக்கு தெரியும்.. விவேகானந்தரை குமரிமுனையில் இருந்து அப்புறப்படுத்த
முடியாது என்று. அதனால் தான் வள்ளுவனை வானுயர நிறுவினார்.
கலைஞருக்கு தெரியும்... வால்மீகி ராமாயண உபநிடங்களை நிறுத்த சொல்ல முடியாது
என்று.. அதனால்தான், கம்ப ராமாயணத்தை முன்னிலை படுத்தினார்.
திருக்குறளை முன் நிறுத்தினார்..
கலைஞருக்கு தெரியும்.. சீதையின் செயலை விமர்சிக்க முடியாது என்று... அதனால்
தான், கண்ணகியின் வீரத்தை முன்னிலை படுத்தினார்.
கலைஞருக்கு தெரியும்.. மகாபாரதத்தை தடுக்க முடியாது என்று.. அதனால் தான், சிலப்பதிகாரத்தை வெகுஜனப்படுத்தினார்.
இது போல, சரியற்ற, தேவையற்ற ஒன்றை
அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை கொண்டு வந்தார்.
ஏறத்தாழ, 70 ஆண்டுகள், ஆரியத்திற்கு
இது போன்று ஊமைக்குத்துக்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
அவர்களால், வெளியே சொல்லவும் முடியவில்லை. உள்ளே
மெல்லவும் முடிய வில்லை.
அவர்களுக்கு தெரியும்.. கலைஞரை ஏன் எதிர்க்க வேண்டும் என்று. கலைஞருக்கும்
தெரியும்.. அவர்கள் ஏன் தன்னை எதிர்க்கிறார்கள் என்று.
புரிந்தவர்கள் கலைஞர் பின் நின்றார்கள்.
ஆனால், புரியாத பலர் ஊழல், ஈழம் என்று கட்டுக்கதைகளில் மூழ்கினார்கள்.
எதிர்மறை அரசியலை நேர் மறையாக செய்தவர் கலைஞர். கலைஞர் என்ற பட்டத்திற்கு 100 சதம் பொறுத்தமானவர்.
08/01, 6:22 am] Haneef: சமீபத்தில் திரு.பால.கௌதமன் எழுதிய ”முத்தமிழ் வித்தவர்” (வித்தகர்) என்ற ஒரு மலிவு விலை புத்தகத்தை படித்தேன். இதனின் விலை ரூபாய் 10தான். மக்கள் நலம் மக்கள் நலம் என்று
சொல்லியே தம் மக்கள் (குடும்ப) நலனுக்காக உழைத்த திராவிட சிசு தஷ்சினாமூர்த்தி
என்ற தெலுங்கு தமிழர், தமிழர்களை எப்படியெல்லாம் ஏமாற்றினார்
என்று மிகவும் நையாண்டியாக பல உண்மை நிகழ்வுகளை அதில் கூறியுள்ளார். அவற்றில் சில
இங்கே –
1. அனந்தநாயகி ஒருமுறை ”மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்று வள்ளுவர் கூறியுள்ளார் ஆனால் தங்கள் மந்திரிகள் நடக்கும் விஷயங்களை கூட
கூறமுடியாமல் முழிக்கின்றார்கள் என்றார். உடனே நமது வித்தகர் பலத்த நகைப்புடன் இது
திருவள்ளுவர் சொன்னதன்று ஔவையார் சொன்னது என்றும்,
படித்துவிட்ட
பேசவேண்டும் என்றும் கின்டல் அடித்தார்.
இது அவை
குறிப்பில் உள்ளது. உண்மையில் இந்த வாசகம் அதிவீரபாண்டியன்
எழுதிய ”வெற்றி வேட்கை“ என்ற நூலில் உள்ளது
2. ஒருமுறை நிரூபர்கள் சிலப்பதிகாரத்தை ஒருவரியில் கூறமுடியுமா என்று கேட்டதற்கு ” கண்ணகியின் இடையிலேயும், மாதவியின் இடையிலேயும் கோவலன் கண்ட வித்தியாசமே சிலப்பதிகாரம் என்றாராம். இப்படி ஒரு ரசனை !
3. மருத்துவம், சித்தாந்தம், வாழ்கைமுறை, விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் தமிழர்கள் முன்னேறியுிருந்தார்கள். இதை அளித்தவர்கள் பதினென் சித்தர்கள். ஒரு சமயம் திரு.வி.க விழாவிற்கு போய் அவரைப்பற்றி பேசாமல் ” சேலை கட்டிய மாதர்களை நம்பாதே என்றார்கள் சித்தர்கள்” காரணம் அவர்களுக்கு சேலையில்லாத மாதர்களைத்தான் பிடிக்கும் என்றார். இப்படி ஒரு தரம்கெட்ட விமரிசனம்.
4. நீங்கள் சமீபத்தில் ரசித்த ஜோக் எது என்று ஒரு நிருபர் கேட்டதற்கு நமது தஷ்சினாமூர்தி சமீபத்தில் ஒரு பிர்வியூ திரைஅரங்கிற்கு படம் பார்க சென்றேன். அங்கே கழிவறையில் நான் பார்த்த ஒரு வாசகம் படிக்க நேர்ந்தது அது ”இந்தியாவின் எதிர் காலம் உங்கள் கையில்”. இப்படி ஒரு ரசனை!
5. ராஜாத்தி என்ற தர்மாம்பாள் யார் ? என்று சட்டசபையில் ஒரு உருப்பினர் கேட்டார் அதற்கு வித்தகரி்ன் பதில் – கனிமொழி என் மகள் – கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் – இப்படி ஒரு விளக்கம்.
6. இவர் முதல்வராக இருந்தபொழுது ”பூளு பிலிம் பெருகிவிட்டதே” இதை தடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு. அதை தடுக்கச் சென்ற போலீசாரும் படத்தை பார்தது ரசித்துவிட்டுத்தான் வந்தனர் என்று ஒரு விளக்கம்.
7. இவரது ஆட்சிகாலத்தில் தான் ஆபாசத்தில் விஞ்சி நிற்பது இராமயணமா, மஹாபாரதமா என்ற அடல்ஸ் ஒன்லி பட்டி மன்றம் நடந்தது !
8. காமராஜருக்கு இவர்கள் சூட்டிய பட்டங்கள் – கள்ள தராசு, கருமுண்டம், பனம் கொட்டை மண்டை, யோக மங்களம், பஜனை நாயகம்.
கூட்டணியில் இருந்தால் மூதறிஞர் (ராஜாஜி) விலகினால் குலுக்குபட்டர் குடிலன்.
எம்.ஜி.ஆர் தயவில் பதவி பெற்று அவர் மேல் கவிதை
புனைந்தார் உயிர் உள்ளவரை மறவேன் என்று பிரிந்தவுடன் கிலட்டு நடிகர், புஷ்குல்லா தொப்பி,
மலையாளி.
கூட்டணி இருந்தால் வாஜ்பாய் ஜென்டில்
மேன் பாலிடிசியன் பிரிந்தால் பண்டாரம் பரதேசி.
கூட்டணி இருந்தால் நேருவின் மகளே வா
நிலையான ஆட்சி தருக பிரிந்தால் தமிழகத்தில் விதவை பென்சன் உள்ளது வேண்டுமானால்
இந்திரா பெற்றுக்கொள்ளலாம்
இவர்களது பகுத்தறிவும் சுயமரியாதையின்
லஷ்சனம் என்ன என்பதற்கு இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.
சென்னை மாநாகராட்சி தேர்தலில் கண்ணதாசன்
கடுமையாக தேர்தல் பணி செய்தாராம். அந்த தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்ற
போது வேட்பாளர்கள் பலர் அவர் வீடு தேடி வந்து நன்றி கூறினாராம். ஆனால் வெற்றி
விழாவில் அண்ணா கலைஞருக்கு கணையாழி குடுத்து வெற்றிக்கு காரணம் இவரே என்றாராம்.
இது பற்றி கண்ண தாசன் அண்ணாவிடம் கேட்க,
” நீயும் அவரை போல
ஒரு மோதிரம் வாங்கி கொடுத்தால்,
உனக்கும் மேடையில்
அணிவிக்கிறேன்” என்றாராம் !!
Comments