ஸுமாமாவும் நபிகள் நாயகமும் ஸுஸ்மாவும் நாமும்
கொல்லப்படுவதற்குத் தகுதியான இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனை பல கொடுமைகளை
முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய சிற்றரசர் ஸுமாமாவை நபி(ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள்? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.
ஸுஸ்மா சுவராஜுக்கு கிட்னி மாற்று சிகிச்சை முடிந்து அடுத்த தேர்தலில் ஓய்வு என
அறிவித்தாகிவிட்டது.
அமித்ஷா விற்கு
பன்றி காய்ச்சல் என மருத்துவமனையில் அனுமதி.
உமாபாரதி உடல்நல
கோளாறினால் ஓய்வு என அறிவித்தாகிவிட்டது.
மத்திய சட்டம் & தகவல் துறை
அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் நுரையீரல் தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.
பா.ஜ.க
பொதுச்செயலாளர் ராம் லால் நொய்டா மருத்துவமனையில் அனுமதி.
அருண் ஜெட்லி
அமெரிக்காவில் கிட்னி மாற்று சிகிச்சைக்கு அனுமதி.
மனோகர்
பாரிக்கருக்கு கேன்சர் என தகவல்.
இதை ஒட்டி நம்மவர்கள் செய்து வரும் விமர்சனங்களை எல்லாரும் பார்த்து
இருப்பீர்கள்.
நபி(ஸல்) அவர்கள் 'நஜ்த்' பகுதியை
நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச்
சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து)
கொண்டு வந்தார்கள். யமாமா எனும் பகுதியில் அதிகாரம் செலுத்தும் சிற்றரசராக ஸுமாமா
இருந்தார். அந்த சிறிய ஆட்சியாளரைத்தான் தான் நபி (ஸல்) அவர்களின் படையினர் கைது
செய்து கொண்டு வந்தார்கள்.
முஹம்மதே! நீங்கள்
என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொள்கிறீர்கள். அதற்கு நான்
தகுதியானவனே என்ற (புகாரி 4372) ஸுமாமாவின் வாக்கு மூலத்திலிருந்தே ஏன் பிடித்து வந்தனர்
என்ற காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கொல்லப்படுவதற்குத்
தகுதியான பல கொடுமைகளை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்திய சிற்றரசர் ஸுமாமா. அவர் முஸ்லிம்களுக்கு
எதிராக செய்த கொடுமைகள் காரணமாகவே அவருக்கு எதிராகப் படையை நபி(ஸல்) அவர்கள்
அனுப்பினார்கள்.
இது போன்ற
கொடுமைகள் செய்த தலைவர்களும், சிற்றரசர்களும்
மன்னிக்கப்படுவது என்பது அன்றைய வரலாற்று வழக்கத்தில் இருந்ததில்லை.
என்னைக்
கொல்லவும் நியாயம் இருக்கிறது; மன்னித்தால் நான் நன்றியுடையவனாக
இருப்பேன் என்று அவர் கோருகிறார். அதுவும் வேண்டிய அளவுக்குப்
பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்தால் போதும் என்பது தான் அவரது
கோரிக்கையாக இருந்தது.
கொல்லப்படுவதற்குரிய
அத்தனை நியாயங்கள் இருந்தும், அதுவே அன்றைய உலகில் வழக்கமாக
இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவரைக் கொல்லவில்லை. மூன்று நாட்களாக அவரை
விடுவிக்கவும் இல்லை..
மூன்றாம்
நாளில் அவரிடம் எந்தப் பணத்தையும் கேட்காமலும், எந்த
நிபந்தனையும் விதிக்காமலும், எந்த ஒப்பந்தமும் எழுதிக் கொள்ளாமலும், எந்தப்
பேச்சு வார்த்தையும் நடத்தாமலும் விடுதலைச்
செய்ய சொல்கிறார்கள்.
உண்மை முஸ்லிம்களின்
நடவடிக்கைகளையும், அவர்களின் கொள்கைகளையும், அவர்களின்
அப்பழுக்கற்ற நேர்மையையும் நேரில் காண்பவர் நிச்சயம் எதிரியாக தொடர மாட்டார் என்று நபி
(ஸல்) நம்பியதால் தான் பயங்கரமான எதிரியைச் சர்வ சாதாரணமாக விடுதலை செய்து விட்டார்கள்.
நபி (ஸல்)
அவர்கள் எதிர் பார்த்தது போலவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். அவர்
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நஞ்சென வெறுக்கும் நிலையில் தான் கைதாகி இருந்தார்.
மூன்றே
நாட்களில் அவரது உள்ளம் தலைகீழ் மாற்றம் அடைந்தது. உலகிலேயே நபி(ஸல்) தனது அதிக
அன்புக்குரியவராக மாறியதாகக் கூறுகிறார்.
முஸ்லிமல்லாத
எதிரிகளிடம் கூட நபி (ஸல்) எந்த அளவு கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டார்கள் என்பதை
இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.
நபி(ஸல்)
அவர்களது எளிமை, அடக்கம் போன்ற எல்லாப் பண்புகளையும் அவர் உன்னிப்பாகக்
கவனித்து ஆச்சரியப்படுகிறார்.
மாற்றுத் துணிக்குக்
கூட வழியில்லாமல் இருக்கும் அந்தச் சமுதாயத்தையும் வெறும் பந்தல் போடப்பட்ட திடலே
பள்ளிவாசலாகவும், ஆட்சியாளரான நபி(ஸல்) அரண்மனையாகவும் இருப்பதையும் காண்கிறார். மக்களை
அடிமைகளாக நடத்தாமல் சக தோழர்களாக நபி(ஸல்)
நடத்தும் விதத்தையும் காண்கிறார்.
இவ்வளவு
கஷ்டமான நேரத்திலும் தம்மிடம் ஈட்டுத் தொகை வாங்க வேண்டும் என்று எண்ணாமல் நபி(ஸல்) விடுதலை செய்வதையும் அறிந்து பிறகு தான்
இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) பற்றியும் அவர் மனதுக்குள் கற்பனை செய்திருந்த
தவறான எண்ணங்கள் விலகின.
இந்தச்
சிறிய நிகழ்ச்சியிலிருந்து இத்தனை விஷயங்களையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
எதிரிகளிடம்
கூட இத்தனை கனிவாக நடந்து கொண்டதால் தான் மக்களின் உள்ளங்களை நபி(ஸல்) அவர்கள் வென்றெடுத்தார்கள்.
---------------------
உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி திருடிய போது அவருக்காக பலரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்த போது என் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
நபிகள் நாயகத்திற்கு எதிரிகளாகவும், சிறுபான்மையினராகவும் இருந்த யூத இனத்துப் பெண்மணி விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொண்டு வந்து தந்த போது அதைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் பெருந்தன்மை இருந்தது. அவள் விஷம் கலந்த செய்தி தெரிந்தவுடன் அவள் பிடித்து வரப்பட்டாள். அவளைக் கொன்று விடலாமா? என்று நபித் தோழர்கள் கேட்ட போது, வேண்டாம் எனக் கூறி மறுத்து விட்டார்கள்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் நமக்கு உள்ள படிப்பினை என்ன?
நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையை இஸ்லாத்தை அறிந்து ஏற்று பெயர் தாங்கிகளாக இருந்தவர்களிடம் காட்டினார்கள். நாம் இஸ்லாத்தைப் பற்றி தெரியாத முஸ்லிம் அல்லாதவர்களிடம் மட்டும் காட்டுகிறோம். இஸ்லாமிய வேஷதாரிகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறோம்.
அதனால்தான் விபச்சாரம் செய்து விட்டு பள்ளிவாசலில் தலைவராக இருக்கலாம். எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்ட நாலு நாய்கள் நம்மை ஆதரிக்காமலா இருக்கும் என்ற தைரியத்தில் விபச்சார ஆலிம்ஸாக்கள் தங்கள் காலரை துாக்கி விட்டு சமுதாயத்தில் வேஷம் போட்டுத் திரிகிறார்கள்.
அதனால்தான் விபச்சாரம் செய்து விட்டு பள்ளிவாசலில் தலைவராக இருக்கலாம். எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்ட நாலு நாய்கள் நம்மை ஆதரிக்காமலா இருக்கும் என்ற தைரியத்தில் விபச்சார ஆலிம்ஸாக்கள் தங்கள் காலரை துாக்கி விட்டு சமுதாயத்தில் வேஷம் போட்டுத் திரிகிறார்கள்.
Comments