இதுதான் எல்லா அமைப்புகளையும் குறை சொன்ன அமைப்பு சாரா பள்ளி ஜமாஅத்தார்களின் நிலை.


குற்றாலத்தில் கூட்டம் நடந்தது உண்மை. இது தெரிந்திருந்தும் பொய் என்று வாதம் வைத்து அவர்கள் விடுதலைக்காக எவ்வித ஆதாயமும் தேடாமல் துணிந்து நின்று முயற்சி செய்த அல்லாஹ்வின் அருளுக்குரியவர் மீதும் அவருக்கு துணை நின்ற மேலப்பாளையம், குத்தாலம், இளையான்குடி திருப்பணந்தாள், முத்துப் பேட்டை, கடையநல்லுார் சகோதரர்களுக்கு என்றென்றும் அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டுமாக ஆமீன்.

இன்றைக்கு ஒருவனின் சூழ்ச்சி கைங்கர்யம் என்று எழுதி சொந்த அரிப்பை தீர்த்துக்  கொண்டிருக்கும் எந்த ஆலிம்ஸாக்களும் அந்த சூடான நேரத்தில் வாய் திறந்து பிடிபட்டவர்கள் பெரைக் கூட சொல்லவில்லை. சூட்டோடு சூடாக மேலப்பாளையத்தில் தான் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகுதான் ஒவ்வொருவராக பெயர் சொல்ல ஆரம்பித்தார்கள். 

தமிழக ஸ்டைலில் தொப்பியும் சவூதி ஸ்டைலில் நீள தாடியும் வைத்துக் கொள்கிறார்கள். சமரசமில்லா சமுதாய போராளிகளின் தலைவன். இப்படி தங்களுக்கு தாங்களே புகழ் மாலை சூட்டிக் கொள்கிறார்கள். அந்தரங்கத்திலோ அதிகாரிகளிடம் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து கிடக்கிறார்கள். கால்களை கட்டியாகப் பிடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள் என்று கதறிக் கொண்டு இருக்கிறார்கள்.


உண்மை வரலாற்றை எழுதுங்கள் என்று என்னை வற்புறுத்தும் நல் உள்ளங்களே! உங்களுக்காகவே உண்மைகளை போட்டு உடைக்கிறேன். 1995ல் தடா எதிர்ப்பு பேரணி நடத்தினோம். உண்மையான வழக்கு தான். வாயை வாடகைக்கு விட்டு பிழைத்த தொண்டை தொழிலாளிகள்  வெறியூட்டி பேசினார்கள்.  இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள். ஆனால்  பொய் வழக்கு என்று கூறி போராட அழைத்ததால்தான் ஜாக் சார்பில் நடந்த அந்த பேரணிக்கும் பொது மக்கள் திரண்டு வந்தார்கள்.

பொது மக்களிடம் பொய் வழக்கு என்று சொல்லி விட்டு. அந்தரங்கத்தில் அதிகாரிகளிடம் போய். நீங்கள் போட்ட வழக்கு உண்மைதான் என்று இரட்டை வேடம் போட்டது கிடையாது. தடா சிறைவாசிகள் விடுதலைக்காக என த.மு,மு.க. புணர்நிர்மானம் செய்யப்பட்டது. இதன் பிறகுதான் தமிழகத்தில் ஏராளமான அமைப்புகள் உருவாகின.

இந்த நிலையில் அமைப்பு சாரா ஜமாஅத் என்றும் பள்ளிகள் உருவாகின. அணி சேரா நாடுகள்  என்ற பெயரில் அணி சேர்ந்த நாடுகளைப் போல். அமைப்பு சாரா ஜமாஅத் பள்ளிகள் கூட்டமைப்பு என்றும் அதற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியிலிருந்து பல பதவிகள் உருவாக்கப்பட்டன. இவர்களை பல பட்டறை ஜமாஅத் என்று டிரைனேஜ் ஷம்சுல்லுஹாவும் டிரைனேஜ் கூட்டத்தினரும் கூறுவார்கள்.

2013ல் பெங்களூர் குண்டு வெடிப்பு நடந்தது. இதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மேலப்பாளையத்தைச் சார்ந்தவர்களும் கைது செய்யப்பட்டார்கள். பொய் வழக்கு என்று எல்லா அமைப்புகளும் தனித்தனியாகவும் இணைந்தும் போராடின. 

அமைப்புகள் தங்கள் விளம்பர ஆதாயத்துக்காகத்தான் போராடின. அதனால்தான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகவில்லை என்று அமைப்பு சாரா பள்ளி நிர்வாகிகளும் பேச்சாளர்களும் வாய் கிழிய பேசினார்கள்.

கடைசியில் நடந்தது என்ன? அமைப்பு சாரா பள்ளி நிர்வாகிகளும் அவர்களின் வீர தீர பேச்சாளர்களும் தென்மண்டல ஐ.ஜி.யை சந்தித்து நீங்கள் குற்றவாளிகளைத்தான் பிடித்துள்ளீர்கள். இது பொய் வழக்கு இல்லை என்று கூறி விட்டு வந்தார்கள். இதுதான் எல்லா அமைப்புகளையும் குறிப்பாக த.மு.மு.க.வையும் குறை சொன்ன அமைப்பு சாரா பள்ளி ஜமாஅத்தார்களின் நிலை.


இந்த 2013 வழக்ககுகளிலும் சரி 1990 களிலும் சரி  மேலப்பாளையம் இளைஞர்களைக் காட்டிக் கொடுத்து காசு வாங்கியவர்கள் யார்? 

தங்களை போராளிகள் போலும் தேடப்படுகின்றவர்களுக்கு உதவி வருவபவர்கள் போலும் காட்டிக் கொண்டவர்கள்தான் காசுக்காக காட்டிக் கொடுத்தார்கள். 

இப்படிக் காசுக்காக காட்டிக் கொடுத்து காசு பார்த்து ரியல் எஸ்டேட் அதிபர்களாகி விட்டார்கள். இவர்கள் மீது யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன் என்று துஆ கேட்க மாட்டார்கள். தங்கள் வெறுப்புக்குரிவர்கள் யாரோ அவர்களைப் பற்றி மட்டும் வாய் கிழிய பேசிக் கொண்டே இருப்பார்கள்.. கை வலிக்க எழுதிக் கொண்டே இருப்பார்கள்.. .

ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்றைக்கும் அதாவது 2010களிலும் வாயை வாடகைக்கு விட்டு இளைஞர்களை கடல் கடந்த நாடுகளின் சிறைகளிலும் தள்ளி பிழைப்பு நடத்தி வரும் தொண்டை தொழிலாளிகளுக்கு எதிராகவும் தங்களை போராளிகள் போலும் தேடப்படுகின்றவர்களுக்கு உதவி வருவபவர்கள் போலும் காட்டிக் கொண்டு உளவுத்துறைக்கும் காவல் துறைக்கும் கைக் கூலிகளாக இருந்து காசு பார்த்து ரியல் எஸ்டேட் அதிபர்களாகி விட்டவர்களுக்கு எதிராகவும் இருகரமேந்துங்கள்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.