2 : 3 الَّذِينَ- அல்லதீ(ரீ)ய்ன - எவர்கள் يُؤْمِنُونَ- யுஃமினுான - நம்பிக்கை கொள்வார்கள்

 படியுங்கள் பரப்புங்கள்  பயன் பெறுங்கள் சிந்தியுங்கள் செயல்படுங்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரபியுடன்   மொழி பெயர்ப்பு .  



الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

அல்லதீ(ரீ)ய்ன யுஃமினுான பில்கைபி    யுகீமூன ஸ்ஸலாத வ மிம்மா ரZஸஃக்னா ஹும் யுன்Fபிகூன்




الَّذِينَ-    அல்லதீ(ரீ)ய்ன -  எவர்கள் - அவர்கள்

يُؤْمِنُونَ-      யுஃமினுான -     நம்பிக்கை கொள்வார்கள்   -   நம்புவார்கள்.- நம்புகிறார்கள்.-

بِ - பி - கொண்டு - மீது


 لْغَيْبِ-  ல்கைபி- -   மறைவானது 



 بِالْغَيْبِ - பில்கைபி - மறைவானதைக் கொண்டும் - மறைவானவற்றின் மீதும் - மறைவானதையும்


يُقِيمُونَ   -  யுகீமூன  - நிலை நிறுத்துவார்கள் - நிலைநாட்டுவார்கள்-நிலைபெறச் செய்கிறார்கள்.நிறைவேற்றுவார்கள்


الصَّلَاةَ-    ஸ்ஸலாத     தொழுகை - 

وَ -   இன்னும் - மேலும் 

مِمَّا - மிம்மா - ஒன்றிலிருந்து

وَمِمَّا-  மிம்மா - எதிலிருந்து


رَزَقْنَا -   Zஸஃக்னா  வழங்கினோம் - அளித்தோம் -


هُمْ-  ஹும் அவர்கள்


يُنفِقُونَ-      யுன்Fபிகூன் - செலவு செய்வார்கள்.  தர்மம் புரிவார்கள் -(நல்வழியில்) செலவிடுவார்கள்.- 


தமிழ் நடையில் 7 மொழிப்பெயர்ப்புகள் :

1. அவர்கள் மறைவானவற்றை3 நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். -(PJதொண்டி)



2 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். - ஜான் டிரஸ்ட் 



3.அவர்கள்மறைவானவற்றைக் கொண்டு நம்புவார்கள்தொழுகையை நிலை  நாட்டுவார்கள்;  இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்வார்கள். -  (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)

4. அவர்கள், மனிதப்புலன்களுக்கு எட்டாத மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுவார்கள். மட்டுமின்றி, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அறவழியில் செலவும் செய்வார்கள். -  (அதிரை ஜமீல்)

5. அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.  ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

 

6. அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.

 (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

 

7. அவர்கள் எத்தகையோரென்றால்; மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்;நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.

(அல்-மதீனா அல்-முனவ்வரா)





https://kamfazlulilahi.blogspot.com/2019/06/2-3.html

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.