ஹாமித் பக்ரி கழுத்தைப் பிடித்துக் கடித்துக் கொதறி இருப்பேன் என்று பி.ஜே. சொன்னது ஏன்?

டிசம்பர் 7.  வரலாற்றில் இன்று 07.12.2002. சனிக்கிழமை அன்றுதான் போலீஸாரே ஹாமித் பக்ரியையும் அவருடன் மாட்டி விடப்பட்டவர்களையும்  கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அதற்கு முன்பாகவே இந்த துறைகளின் பணிகளையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதி முத்திரை குத்திநாங்கள் விசாரித்ததில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என தீர்ப்பாகக் கூறினார்கள் பி.ஜே.சமாத்தினர். அதுவும் நடு சாமத்திலேயே என்பதை அறிந்து விட்டீர்கள்.

ஆகவே கம்பம் ஜபருல்லாஹ் அவர்களே! உங்களை கொலை செய்ய முயற்சி  செய்த அல்லாஹ்வின் சாபத்திற்குரிய கொலைகாரக் கூட்டம், அது உங்கள் குடும்பப் பிரச்சனை என்ற பொய்களை பரப்பி வருவது பற்றி ஆச்சரியப்படாதீர்கள். 

02.12.2002 அன்று ஹாமித் பக்ரி போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான உடனேயே எங்களுக்கும் ஹாமித் பக்ரிக்கும் சம்பந்தமில்லை என அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டோம் என்றார்கள் பி.ஜே. அணியினர். இப்படி பி.ஜே. சமாத் கூறி இருப்பதை கேள்விப்பட்ட எதிர் அணியினர் கூட நம்ப மறுத்தார்கள். 


நம்ப மறுத்தவர்களுக்குப்  பதிலடியாக எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என பகிரங்க  அறிவிப்பும் செய்தது அன்று பி.ஜே.யின் கஸ்டடியில் இருந்த கட்சி. போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றச் செய்தி; வெளியானதுதான் தாமதம், நாங்கள் விசாரித்த அளவில் அவருக்கு தொடர்பு இருக்கிறது. ஆகவே அவருக்காக நாங்கள் போராட மாட்டோம் என்றும் அறிவித்தது பி.ஜே. சமாத்.

தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது  காவல் துறையின் கடமை. அது சரியா தவறா என்று ஆய்ந்து தீர்ப்புக் கூற வேண்டியது கனம் கோர்ட்டாருடைய பொறுப்பு. அதற்கு முன்பாகவே ஹாமித் பக்ரிக்கு தீவிரவாதி முத்திரையையும் குத்தி விட்டார் பி.ஜே.

அத்தோடு நிற்கவில்லை T.V. பத்திரிக்கை பி.ஜே. சமாத் பிரச்சார மேடைகள்  என  எல்லா மீடியாக்கள் மூலமும் வெகு வேகமாக பரப்பச் செய்தார். 6.12.02 வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் நோன்புப்  பெருநாள்.  பக்ரியும் அவருடன் கைதான மவுலவிகளும் போலீஸ் கஸ்டடியில். 

ஹாமித் பக்ரியுடன் கூட்டமைப்பில் கைகோர்த்திருந்த மவுலவிகள். கல்விச்சங்கத்தில்  காசடிக்க மோசடி செய்தவரும் காலமெல்லாம் அபூதாவூது மொழி பெயர்த்து தருவதாக ஏமாற்றி பணம் பறித்த நன்றிகெட்ட மவுலவியும்  மற்றும் எல்லாரும்  பெருநாள் குத்பா-உரைகளிலும்  அன்றைய ஜும்ஆ உரைகளிலும் என்ன பயான் பேசினார்கள்? பக்ரியும் அவருடன் போலீஸ் பிடியில் உள்ளவர்களும் தீவிரவாதிகள்தான் என்ற தங்களது தீர்ப்பைத்தான் பயானாகப்(?) பேசினார்கள்.


அவர்களெல்லாம் தீவிரவாதிகள் என்று 03.12.2002 அன்று போனில் பேசிய பி.ஜே. 8ம் தேதி காயல் பொதுக் கூட்டத்திலும் இது மாதிரி பேசக் கூடும். எனவே முன்னதாகவே அவரை சந்தித்து அவ்வாறு பேசுவதை தவிர்க்கக் கூறுவோம், என காயல் ஐக்கிய ஜமாஅத் பிரமுகர்கள் முடிவு செய்தனர். அந்த முடிவுப்படி  பி.ஜே.யை சந்தித்து பேசினார்கள்.

பி.ஜே.யோ பேச்சை துவங்கும் போதே ஹாமித் பக்ரி என் முன்னால் இருந்தால் அவருடைய கழுத்தைப் பிடித்துக் கடித்துக் கொதறி இருப்பேன். எனக்கு அவர் மேல் அப்படி வெறி. முஸ்லிம் பாதுகாப்புப் படை அவசியமா? என்று பேச்சை துவங்கி உள்ளார். இவர்தான் நடிப்பதில் வல்லவராயிற்றே. எப்படிச் சொன்னால், எப்படி வாதம் வைத்தால். பொய்யையும் உண்மை என்று நம்ப வைக்க முடியும் என்பதில் திறமைசாலி ஆயிற்றே. அப்படியெல்லாம் சொன்னார், வாதங்கள் வைத்தார்.

பி.ஜே. மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்துள்ள பக்ரியின் மைத்துனர் ரபீக் இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கா?| என்று கேட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த பி.ஜே

முதன் முதலில் ஹஜ் சென்றவர் அபு சலீமை சந்தித்தது முதல் குற்றம்.

அவரிடம் பேசி விட்டு வந்து ஊரில் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து  ஆட்களை சேர்த்தது 2 வது குற்றம்.

பல கோயில்களைத் தகர்க்கத் திட்டம் தீட்டியது 3 வது குற்றம். இப்படி குற்றச் சாட்டுகளை நம்பர் போட்டு  பொய்களை அடுக்கிக் கொண்டு போனார் பி.ஜே.

பல தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ரகசிய கூட்டம் போட்டு செயல்பட ஆரம்பித்தது. கள்ள பாஸ்போர்ட்டில் உம்ரா சென்றது. அப்பொழுது அந்த தலைவனைச் சந்தித்தது. தங்கள் கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டு வந்தது. சிலோன் விவாதத்திற்காக சென்ற இடத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்தது. பணம் வாங்க அப்துர்; றஹ்மான் ஷிப்லியுடன்  சென்றது.

இமாம் அலி என்ற தீவிரவாதியுடன் தொடர்பு கொண்டது. அவனையும் இந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டது. தஃவா சென்டரை (இஸ்லாமிய கல்விச் சங்கத்தைக்) நான் கலைக்கச் சொன்னபோது.  வேறு பெயரில் செயல் படுத்தியது. இன்னும் ஊர் ஊராகச் சென்று அதை விரிவு படுத்த எண்ணியது என்று பி.ஜே. பல பொய்யான  குற்றச் சாட்டைத் தொடர்ந்து கூறினார்.


தஃவா சென்டரை கலைக்கச் சொன்னது ஏன்? அதில் தான் பி.ஜே. சொன்ன தேச விரோதச் செயல் நடந்துள்ளது என்றால், தஃவா சென்டரை சீல் வைத்த போலீஸ், தானாக கண்டு பிடித்து சீல் வைத்து இருந்தால், பக்ரிக்கு அடுத்த பொறுப்பில் இருந்த  ஷம்சுல் லுஹா, எம்.ஐ.சுலைமான், எம்.எஸ்.சுலைமான் போன்றோரையும் கைது செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் விசாரணைக்காவது அவர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அப்படியானால் என்ன அர்த்தம்?       

.
பி.ஜே. போலீஸுக்கு அடி வருடியாக ஆகிவிட்டார் இனி ஜிஹாத் பற்றி பேச மாட்டார். அவருக்கு அவர்தான் வளரணும். இஸ்லாத்தைப் பற்றி பி.ஜே.க்கு கவலை இல்லை. என்று பல சகோதரர்களிடம் தனியாக கூட்டம் போட்டு பக்ரி பேசி உள்ளார். அவரை 10 மாதமாக நாங்கள் வாட்ச் பண்ணினோம். எனக்கு எதிராக அதிகம் செயல்பட்டுள்ளார், தலைமையைக் கைப்பற்ற பக்ரி முயற்சி செய்தார் என்றும் பக்ரி பற்றி பி.ஜே. குற்றம் சாட்டினார்.


பி.ஜே.போலீஸுக்கு அடி வருடியாகி விட்டார் அவருக்கு அவர்தான் வளரணும். இஸ்லாத்தைப் பற்றி பி.ஜே.க்கு கவலை இல்லை, என்ற உண்மையைக் கூறி பி.ஜே.க்கு எதிராக  செயல்பட்டது தான் பக்ரி மீது தேச விரோத குற்றச் சாட்டு வருவதற்கு காரணம் என்பதை பி.ஜே.யுடன் நெருங்கிப் பழகியவர்கள் புரிந்து கொண்டார்கள். 10 மாதமாக நாங்கள் வாட்ச் பண்ணினோம் என்று இந்த சபையில் கூறிய பி.ஜே. தான் அதற்கு 3 மாதத்திற்கு முன்பு குழந்தை மனசு என்று பக்ரியை பாராட்டி இருந்தார். 


சபையில் இருந்த ஊர்ப் பிரமுகர் அவரைப் பற்றி இப்பொழுது பல குற்றச் சாட்டுக்கள் சொல்லக் கூடிய நீங்கள் உணர்வில் ஒரு செய்திப் போட்டு இவரைப் பற்றி எழுதி இருக்கலாமே என்று கேட்டார். அதற்கு பி.ஜே. அவர் மார்க்கப் பணி செய்து கொண்டுள்ளார். அது அழிந்து விடக் கூடாது அது மட்டுமல்ல. அவருடைய செயல் பாட்டில் ஆயிஷா சித்தீகாவும் ஒன்று அதுவும் பாதித்து விடக்கூடாது என்று தான் நாம் பப்ளிக் பண்ணவில்லை என்று கூறினார். இப்பொழுது மட்டும் அந்தப் பணிகள் பக்ரி செய்யவில்லையா? என்று யாரும் கேட்கவில்லை. இது பி.ஜே.க்கே உரிய சமாளிப்புதான் என்பது எல்லாருக்கும் தெரிந்தது.

இந்த வார உணர்வில் கூட உங்களுடன் ஹாமித் பக்ரிஅப்துல் மஜீத் மஹ்ழரி பேசுவதாக விளம்பரம் வந்துள்ளதே என்று கேட்டதற்கு அது என் பார்வைக்கு வராமல் வந்து விட்டது என்று சமாளித்துள்ளார்.


அப்படியானால் எங்க ஊர் ஆட்களிடம் இவர்  இந்த மாதிரி தீவிரவாதத்தை வளர்க்கிறார் என்று சொல்லி இருக்கலாம் இல்லையா? அல்லது இயக்க ரீதியாகக் குற்றம் சாட்டி அவரிடமே விசாரித்து இருக்கலாமே என்று ஊர்ப் பிரமுகர் கேட்டதற்கு பதில் கூறிய பி.ஜே. 8 ஆம் தேதி மீட்டிங்குக்கு வரும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம். அதனால் சொல்லவில்லை. அதற்குள் இப்படி நடந்து விட்டது என்று மழுப்பினார்.

கைது சோதனை எல்லாம் டிசம்பர் 6 ஐ காரணம் காட்டித்தானே தவிர நீங்கள் சொல்லுகின்ற மாதிரி தீவிரவாதத்தை காரணம் காட்டி அல்ல என்று கூறியதற்கு பதில் சொல்லாமல் அடுத்தக் குற்றச் சாட்டுக்குத் தாவிய பி.ஜேஇவர் கடந்த ஜுன் மாதம் குற்றாலத்தில் ரகசிய கூட்டம் போட்டுள்ளார் என்று கூறி உள்ளார்.



பி.ஜே. சொன்ன அந்த ஜுன் மாதத்தில் தான் பி.ஜே,யும் கூட்டமைப்பு மவுலவிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லூரில் முகாமிட்டிருந்தனர். தர்ஜுமா சரி பார்க்கும் பணிக்காக முகாமிட்டுள்ளதாக கூறிக் கொண்டார் பி.ஜே. 

என்ன சரி பார்ப்பு என்றாலும் அவர் வீட்டு முன்தான் சொர்க்க வாசல் திறக்காதா என்று எல்லாரையும் காத்து கிடக்க வைப்பார். அப்படிப்பட்டவர் குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லுாரில் வந்து 20 நாட்களுக்கு மேல் முகாமிட்டு இருந்தது ஏன்? அறிவுள்ளவர்களுக்கு புரிந்திருக்கும்.

குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊரை மையமாகக் கொண்டு இருந்த பி.ஜே.யும் அவருடன் இருந்த ரகசிய ஆட்களும் நெல்லை, வ.உ.சி. மாவட்டங்களில் 20 நாட்களுக்கு மேல் சுற்றி சுற்றி வந்தார்கள். காயல் பட்டிணமும் சென்று வந்தனர்.  

பி.ஜே. சொன்ன அந்த  ஜுன்  மாத முகாமின் போது தான், உளவுத் துறையால் கண்காணிக்கப்படுகிறது என்று துபை ஐ.ஏ.ஸி.யை  கலைத்து விட்டு ஜே.டி. பெயரில் செயல்பட ஆரம்பித்த அமைப்பின் அன்றைய தலைவரும் 2 முறை குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லூருக்குச் சென்று பி.ஜே.யை சந்தித்து  வந்தார். 

ர்ஜாவில் இருந்த காஜா பிர்தவ்ஸி தன் அண்ணன் லுஹாவுடன் பல முறை குற்றாலத்திற்கு அருகில் உள்ள கடையநல்லூருக்குச் சென்று வந்தார்கள். ஆக ஜுன் மாதத்தில் குற்றாலத்தில் கூட்டம் நடத்தப் பட்டிருப்பது உண்மை. அது பி.ஜே.ன் உத்தரவுப் படி தான் நடந்திருக்கிறது. என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் நாயகர் அபுசலீமின் அண்ணன் பி.ஜே.தான். சூத்திரதாரி பி.ஜே.யின் இயக்கத்தில் செயல்பட்ட ஒரிஜினல் தீவிரவாதிகளைக் காப்பாற்ற ஹாமித் பக்ரி, அப்துர்றஹ்மான் ஷிப்லி போன்றவர்களை மாட்டி விட்டுள்ளார் பி.ஜே. 

சீனில் ஒன்றைக் காட்டுவதும் பின் பக்கமாக இருட்டில் திருட்டு வேலை செய்வதும் பி.ஜே.க்கு கை வந்த கலை2002 ஜுன் மாதம் குற்றாலத்தில் ரகசிய கூட்டம் போட்டது யார்? அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். 

சதி செயல் செய்தவன் (பி.ஜே.) புத்திசாலி அதை சகித்துக் கொண்டிருந்தவர்கள்  (பக்ரி,ஷிப்லி போன்றவர்கள்) குற்றவாளி். இந்த உண்மைகளைச் சொன்னால்  சதிகாரன்.    http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_68.html




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.