மேலப்பாளையம் டிசம்பர் 6 மறக்க முடியுமா? யாரும் மறைக்க முடியுமா?

டிசம்பர் 6 ன் அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது 

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள் 1992 ஆம் ஆண்டு தமிழத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு மேலப்பாளையத்தில் மட்டும்தான் துப்பாக்கி சூடு நடந்தது. 1992 டிசம்பர் 7இல் நடந்த அந்த துப்பாக்கி சூட்டுக்கு இறையாகி இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25 இஸ்லாமிய இளைஞர்கள் படு காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த 40 இஸ்லாமிய இளைஞர்கள் மீது அநியாயமாக பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்.
த.மு.மு.க.வின் முதல் டிசம்பர் 6 போராட்டம் முழு கடை அடைப்பு போராட்டம் தான். ஜெயலலிதா முதல்வராக இருந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் எந்தக் கைதும் கிடையாது. 

அரசியல் சார்பற்றது என்று நோட்டீஸ் போடவில்லை. கட்சி அரசியல் சார்பற்றது  என்றே போடப்பட்டிருந்தது.


குணங்குடி ஹனீபா அவர்களின் வீடான மனித நேய இல்லம் தான் அமைப்பின் அலுவலக முகவரியாக இருந்தது. இதோ முதல் போராட்ட நோட்டீஸ். 
1996 கவர்னர் மாளிகையில் தொழுகைப் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. தொழுகை என்பது போராட்டமா? வணக்கமா? விமர்சனங்கள் அனல் பறந்தன. 
கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் என்று ஆனது. 
கலைஞர் ஆட்சியில் இரவோடு இரவாக இருபத்தைந்தாயிரம் பேர் கைது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. இந்தப் போராட்டம் பற்றி ஆங்கிலப் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த கலைஞர் அவர்கள், ராடிகல் குரூப் என்றார். கல்ப் நியூஸ். கலீஜ் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் இந்தச் செய்தி இடம் பெற்றது

சபாரி டிரஸ் போட்டுக் கொண்டு பீல்டுக்கு வந்திருந்தவர்களெல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடினார்கள். வெளிநாட்டில் தினக் கூலியாக நின்றவர்களெல்லாம் தங்கள் எதிர்ப்பை பேக்ஸ்களாக அனுப்பினார்கள். தலைமைச் செயலக பேக்ஸ் அனைத்து வைக்கப்பட்டது. உடனே கலைஞர் வீட்டுக்கு பேக்ஸ்கள் பறந்தன. அங்கும் பேக்ஸ் மிஷின் அனைத்து வைக்கப்பட்டது. 

1997 பேரணிக்கு தடை விதித்தது கலைஞர் அரசுமறக்க முடியாத டிசம்பர்-6 கொட்டும் மழையிலும் கொதி நீராய் கொந்தளித்தது கூட்டம். அந்நியரல்ல அந்நியரல்ல என்றும் நாங்கள் அந்நியரல்ல. அகதிகள் அல்ல அகதிகள் அல்ல என்றும் நாங்கள் அகதிகள் அல்ல போன்ற கோஷங்களுடன் அதிர்ந்தது சென்னை. 



ஆக கலைஞர் ஆட்சி கைது செய்யும் ஆட்சியாக இருந்தது. 

போராட்டம் பள்ளியை மீட்க வேண்டும் என்பதற்காக அல்ல தன்னை காக்கவே என்று 1995லேயே  ஒருவர் ரகசிய வாக்குமூலம் கொடுத்து விட்டார்.  அடுத்த ஆண்டு அயோத்திக்கு போவோம் என்று சொன்னதும்.  எங்களை எப்போது அயோத்திக்கு அழைத்து போவீர்கள் என்று மேடை தோறும் கேட்க வைத்ததும் உண்மை அல்ல அதெல்லாம் ஒரு நாடகம் தான் என்றும் கூறிவர் நாடகத்தை முடித்து விட்டார். 

இறை இல்லம் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு யார் போராட்டம் நடத்தினாலும் அவரவர்கள் நிய்யத்படி அல்லாஹ் நன்மையை கொடுப்பான்.

http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/6.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.