பக்ரி, ஷிப்லி போன்றவர்கள் காட்டி கொடுக்கப்பட்டார்களா? மாட்டி விடப்பட்டார்களா?

கண்ணியத்திற்குரிய கம்பம் ஜபருல்லாஹ் அவர்களே! பழனிபாபா அவர்கள் நடத்திய புனித போராளி  இதழின் வெளியீட்டாளராக இருந்தவர்  தங்களுக்கு எழுதிய அறிவுரையைக் கண்டேன். அதை மலக்குல் மவுத்தை அனுப்புவது அல்லாஹ் தான், அண்ணன் அல்ல.- H. முஹம்மத் காமில், என்ற தலைப்பில் நானும் எனது பிளாக்கரில் பதிந்து உள்ளேன்.  தங்களுக்கு 22 வயதாக இருக்கும்போது  நடந்த நிகழ்ச்சி.

ரமழான் கடைசி 10, பிறை 27 (02.12.2002)  நடு நிசி நேரம் ஒரு மணி. மக்களெல்லாம் லைலதுல் கத்ரைத் தேடி பள்ளிவாசலில். போலீஸ் படையோ பக்ரி வீட்டில். பக்ரி வீட்டில் மட்டுமல்ல அவர் தாயார் வீடான தஃவா சென்டர், ஆயிஷா  சித்தீகா பெண்கள் கல்லூரி என 5 இடங்களில் போலீஸார் சோதனை போட்டார்கள். வரலாறு காணாத அளவுக்கு காயல் பட்டிணத்தை போலீஸ் சுற்றி வளைத்திருந்திருந்தது. 


பெருநாள் நெருங்கும் வேளையில் ஏன் இப்படி என ஊர் பிரமுகரும் சமுதாய ஊழியருமான அருமை நண்பர்  காயல் மஹ்பூப் கேட்டுள்ளார்கள். அதற்கு,  எங்கள் மேல் அதிகாரிகள் சொன்னதைச் செய்கிறோம் என்று போலீஸார் கூறினார்கள். பிறகு அந்தப் பிரமுகர் சென்னைக்கு போன் போட்டு பி.ஜே. இருக்கிறாரா? என்று கேட்டுள்ளார். போனை எடுத்த ஏ.எஸ். அலாவுதீன் பி.ஜே. இல்லை. எந்த மேட்டராக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள்| என்று கூறி உள்ளார்.


பக்ரி வீட்டை சோதனை போடுகிறார்கள் ஊரைச் சுற்றி போலீஸ் நிற்கிறது என்று பிரமுகர் கூறி உள்ளார். அப்படியா! என்று ஆச்சரியப்பட்டு கேட்கவில்லை. உடனேயே சொன்ன பதில் என்ன தெரியுமா? நீங்கள் போலீஸுக்கு கோ-ஆப்ரேட் பண்ணுங்கள் பக்ரியைப்  பற்றி மோசமான செய்திகள் வந்துள்ளன. போலீஸை பகைக்க வேண்டாம் என்பதுதான் அலாவுதீன் கூறிய பதில்.  

என்னையா ஒரு ஆளை குற்றவாளியா இல்லையா என்று தெரியும் முன்பே குற்றவாளி என்கிறீர்களே! என்று பிரமுகர் கேட்டுள்ளார். எங்களிடம் ஆதாரம் உள்ளது. அவருடைய நடவடிக்கை சரி இல்லை என்று ஏ.எஸ். அலாவுதீன் மேலும் கூறி உள்ளார்.

ரமழான் பிறை 28 அதிகாலை 5 மணிக்கு அப்துல் மஜீத் மஹ்ழரி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கிடைக்கிறது.. உடனே அந்தப் பிரமுகர் சென்னைக்கு போன் போட்டுள்ளார். அப்பொழுதும் பி.ஜே.யின் பினாமி போனை எடுத்துள்ளார். செய்தியைக் கேட்டதும் ”அந்தத் துரோகி ஒழிஞ்சிப் போகட்டும் அவன் ஐ.எஸ்.ஐ. உளவாளி ராஸ்கல் அவனை எல்லாம் .... ... ” என்று எழுத முடியாத வாசகங்களால் திட்டிக் கொண்டு இருக்கும்போதே பி.ஜே. போனை வாங்கி பேசுகிறார்.

பக்ரி இருக்கிறாரே அவர் ஒரு துரோகி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, அவரையும் இவரையும் போலீஸ் பிடித்ததில் தவறு இல்லை, அவருடைய நடைமுறை சரி இல்லை. நாங்கள் கண்காணித்து வந்தோம்.  போலீஸ்காரர்கள் சரியான ரூட்டில்தான் போய்க் கொண்டு இருக்கிறார்கள் அவர்களை தடுக்க வேண்டாம் என்று பி.ஜே. கூறி உள்ளார். 8ம் தேதி கூட்டத்திற்கு வருவீர்களே அப்பொழுது பேசிக் கொள்வோம் என்று  கூறி அந்தப் பிரமுகர் போனை வைத்து விட்டார்.


போலீஸ்காரர்கள் சரியான ரூட்டில்தான் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்று சம்பவ நேரத்திலேயே பி.ஜே. உறுதியாகச் சொல்லி உள்ளதால், போலீஸுக்கு ரூட்  போட்டுக் கொடுத்ததே இந்த பி.ஜே.தான் என்பதை அறிவுள்ள மக்கள் அன்றே புரிந்து கொண்டார்கள். பக்ரி என்று சொன்னாலே போலீஸ் பிடித்து விடும் என்று சமுதாய துரோகிகள் பயம்காட்டி வைத்திருந்தார்கள். அன்றைய தினம் வரை பக்ரியும் அவரைச் சார்ந்தவர்களும் பி.ஜே. என் மீது இட்டுக்கட்டியவைகளை பரப்பக் கூடியவர்களாகவே இருந்தார்கள்.

இருந்தாலும் அதை நாம் மனதில் கொள்ளவில்லை. உடனடியாக பக்ரிக்கு ஆதரவாக ஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி போன்ற துண்டு பிரசுரங்கள் வெளியிட்டோம். தமிழகத்தின் பல பள்ளிகளில் அவற்றை வினியோகித்தார்கள்.

அந்த நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் மணிச் சுடர்  நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் துபையில் இருந்தார்கள். உடனே, பல ஊர் பிரமுகர்களை  அழைத்துக் கொண்டு நான்  பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் தங்கி இருந்த இடம் தேடிச் சென்று சந்தித்தேன்.

மவுலவிகள் நுாஹு தம்பி ஹாமித் பக்ரி,  அப்தூரஹ்மான் ஷிப்லீ, அப்துல் மஜீத் மஹ்ழரி, வலிய்யுல்லாஹ் ஆகியோர் உட்பட 19 பேர்களை காட்டி கொடுக்கப்பட்டு விட்டார்கள் என்கிறார்கள். அது பொய், உண்மையிலேயே குற்றவாளிகளாக இருந்தால்தானே காட்டி கொடுப்பதற்கு. மாட்டி விடப்பட்டள்ளார்கள் சூத்திரதாரி அவர்களை மாட்டி விட்டிருக்கிறான். அப்பாவிகளான அவர்களுக்காக  மு.லீக் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.


எங்களது வேண்டுகோளை ஏற்ற பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் தாயகம் சென்ற பின்  ஹாமித் பக்ரி ஆலிமை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டார்கள். மு.லீக் மாநாட்டில் தேசிய தலைவர் பனாத்வாலா ஆலிம்கள் கைதை கண்டித்துப் பேசினார்கள். மு.லீக் தலைவர் அவர்களுடனும் நெல்லை மஜீது் போன்ற மு.லீக் பிரமுகர்களுடனும் தொடர்ந்து பக்ரி விடுதலை விஷயமாக பேசிக் கொண்டே இருந்தோம்.

நாங்கள் செய்த இந்த முயற்சி பக்ரி உட்பட யாருக்குமே தெரியாது. கடலுார் சிறையில் இருந்த அனைவரும் அண்ணனின் உதவி வரும் என்றே எதிர் பார்த்து இருந்தார்கள். அண்ணன் தங்களுக்கு எதிராக T.V.யிலும் மேடைகளிலும்  போன்களிலும் பேசி உள்ளார் என்று வரும் செய்திகள் எல்லாம் பொய் என்றே நம்பி இருந்தார்கள்.

அல்லாஹ்வின் அருளால் நாங்கள் மு.லீக் மூலம் எடுத்த முயற்சி எந்த அளவுக்கு எதிரொலித்தது தெரியுமா?  அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்த முனீர் ஹோடாவை  அழைத்துச் சொன்னார்.  நாம் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதே என்று.

அந்த நேரத்தில் சாத்தான்குளம் இடைத் தேர்தல் வந்தது. அதுவரை அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் தி.மு.க.வின் பக்கம் சென்று விட்டன. அப்பொழுது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மு.லீக்கும் தி.மு.க.  கூட்டணியில் சேர்ந்து விட வேண்டும் என்ற நிலையில் தான் இருந்தது. தமிழக மு.லீக்கில் பெரும்பாலானவர்கள் அந்தக் கருத்தில்தான் இருந்தார்கள்.

ஹாமித் பக்ரி போன்றோரின் விடுதலையை கருத்தில் கொண்டு மு.லீக்  அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று பேராசிரியப் பெருந்தகை காதர் மைதீன் அவர்கள் செயல்பட்டார்கள். வழக்கு கோர்ட்டுக்கு போய் விட்டதால்.  முதல்வர்  ஜெயலலிதா அவர்கள் சொன்னபடி பேராசிரியர் கே.எம்.கே. முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

ஒருவர் ஜாமீனைக் காட்டி அடுத்தடுத்தவர்கள் ஜாமீன் பெறும் வண்ணம் முதலில் ஒருவருக்கு கோர்ட் மூலம் ஜாமீன் வழங்கப்பட்டது. 5 நாட்கள் காவல்துறையின் கடும்பிடியிலும் கடலுார் மத்திய சிறையில் 100 நாட்களும் இருந்த ஹாமித் பக்ரி போன்றோர்    13.03.2003 அன்று விடுதலையானார்கள். இறுதியில் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று கோர்ட்டும் விடுவித்து விட்டது.

ஆனால் உண்மையான குற்றவாளியான சூத்திரதாரி இன்றைக்கும் ஜல்சா பண்ணிக் கொண்டுதான்  அலைகிறான். அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் அவனை ஆதரித்து நிற்பவர்களை யா அல்லாஹ் நீ பிடிப்பாயாக என்று துஆச் செய்வோம்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/blog-post_4.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.