1980களிலிருந்து பி.ஜே. சம்பளமே வாங்கவில்லையா?

அந்நஜாத் துவங்கும் முன் துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு  பி.ஜே. கடிதம் எழுதினார்  அதில் எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம் என்று எழுதி இருந்தார்.

அந்நஜாத் ஆரம்பித்த பிறகு மாதச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளத்தில் இருந்தும் வெறுமனே வாயளவில் சம்பளம் வேண்டாம் என்று நடித்தார். நான் அந்நஜாத் ஆசிரியர் பணிக்காக ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவுமில்லை, வாங்குவதாகவும் இல்லை என்று 1986 ஜூன் அந்நஜாத்   பக்கம் 2ல் எழுதினார். பி.ஜே.யின் நடிப்பை, எழுத்து வேஷத்தை புரியாதவர்கள் பி.ஜே.க்குரிய சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை.

உடனே தொண்டியில் போய் உட்கார்ந்து கொண்டார். எனக்கும் மனைவி, மக்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடப் போகிறேன். ஆகையால் அந்நஜாத் ஆசிரியர் பணியைத் தொடர முடியாது என்று கூறினார் ரகசிய கூலி P. ஜைனுல் ஆபிதீன்.

(இப்படித்தான் த.மு.மு.க.வின் முஸ்லிம் டிரஸ்ட் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு மிரட்டி ரமழான் நிகழ்ச்சிக்கு பணம் பெற்றார். மேடைகளில் இல்லை என்றார்)

அதன் பிறகு மாதம் 1000 ரூபாய் சம்பளத்தை மினிட் புக்கில் எழுதி உறுதி செய்து கொண்டார். எந்த லுஹா பி.ஜே. மேடைகளில் பேசி விட்டு பணம் வாங்கினார். ஐயாயிரம், பத்தாயிரம் வாங்கினார் என்று கணக்கு எழுதினாரோ. அதே லுஹாவின் கைப்பட எழுதப்பட்டதுதான் இந்த சம்பள விபரம்.

மாதத்தில் இருபது நாட்கள்தான் வேலை செய்வார்கள். மற்ற நாட்கள் அவர்களது குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்ட வேண்டும். ஆசிரியர் பி.ஜெ. துணை ஆசிரியர் லுஹா ஆகியவர்கள் அவர்கள் மனைவி, மக்களோடு இருக்கும் அந்த நாட்களில் அந்நஜாத் சம்பந்தமாக எந்த பொறுப்பையும் கொடுக்கக் கூடாது. 1986ல், 20 நாள் வேலைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம், அது மட்டுமா?

அந்நஜாத் பரிசீலனைக்காக, அவசர ஆலோசனைக்காக திருச்சி வந்து போவதற்குரிய டி.ஏ., தங்கும் வசதி, உணவு மற்றும் அவசிய தேவைகளுக்கான செலவுகளை அந்நஜாத்தே ஏற்க வேண்டும். 
ஆசிரியர் பி.ஜெ. திருச்சிக்கு வந்தால் அவர் நல்ல வசதியுடன் தங்க அட்டாஜ் பாத் ரூமுடன் கூடியதாக லாட்ஜ் இருக்க வேண்டும். 


(நல்ல வசதியுடன் கூடிய அட்டாஜ் பாத் ரூம் கேட்டபொழுதே உஷாராகி இருக்க வேண்டும்)

அதை அந்நஜாத் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியருக்கு அந்நஜாத் சைக்கிள் வாங்கி கொடுக்க வேண்டும். (அன்று சைக்கிள் இன்று வெளிநாட்டுக் கார்) இப்படி ஒப்பந்தத்துடன்தான் தவ்ஹீத் பிரச்சார வேலைக்கு திரும்பி வந்தார். ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். 

இவரிடம் கொள்கைப் பற்று இருந்ததா? பொருளாதாரப் பற்று இருந்ததா?

இப்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட பின் மீண்டும் வேலைக்கு வந்த மகாப் பொய்யர் தான் பி.ஜே.  இவர் சொல்கிறார் 1980களிலிருந்து சம்பளம் வாங்கவில்லை என்று. 




தவ்ஹீது பிரச்சாரத்திற்காக ஆயிரத்தில் துவங்கி பல்லாயிரங்கள் வரை ரகசியமாக கூலிகளைப் பெற்றவர் பி.ஜே. இப்படி காலம் காலமாக ரகசிய கூலிக்கு மாரடித்து வருபவர் பி.ஜே. 

அப்படிப்பட்டவர் அவ்வப்போது 1980களிலிருந்து ஒன்றுமே வாங்கவில்லை என்று பெரும்பாலான மேடைகளில்  சொல்லிக் காட்டுவார். அந்த வீடியோக்களை அனுப்பி ததஜக்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். 

கூலி வாங்கி விட்டு மேடைகளில் இல்லை என்று சொல்வதன் நோக்கம். அதை நம்பியவர்கள்  ரகசிய கூலியிடம் ரகசியமாக பணத்தை கொடுத்து விட்டு போய் விடுவார்கள். ஆகவே அப்படி பேசுவதை அவர் ரகசிய  தொழிலாக ஆக்கிக் கொண்டார். ரகசியக் கூலி பி.ஜே. 

புரட்சி மின்னல், அல் ஜன்னத் பற்றி அடுத்தடுத்து வரும். இவர்கள் கொள்கைப் புலி அல்ல. கூலிப் படைகள் தான். கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் தான்.
http://mdfazlulilahi.blogspot.ae/2017/12/1980.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.