சிறைவாசிகள் சிறையில் இருந்தோர் சார்பில் கலைஞரிடம் த.மு.மு.க. மூலம் நமது முயற்சியில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள்


சிம் (SIM) தடை செய்யப்பட்டபொழுது குரல் கொடுத்த த.மு.மு.க. அல் உம்மா மீதான தடை நீக்கப்பட பாடுபடாதது ஏன்? 

வழக்குகள் முடிந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் உள்ளதே ஏன்?

சிறைவாசிகள் வீடுதலை, சிறையில் இருந்தவர்கள் நலன் குடும்ப நலன் விஷயத்தில் எந்த மாதிரியான உயரிய முயற்சிகள் த.மு.மு.க மூலமும் செய்துள்ளோம் என்பதை அறிய முழுமையாகப் படியுங்கள்.

2006 சட்டமன்ற தேர்தலில் இலாஹிக்கு (எனக்கு) என்று கலைஞரிடம் .மு.மு.. பாளைத் தொகுதியை பெற்றது. .மு.மு.. தேர்தலில் போட்டியிடாத அமைப்பு என்பதால் வேறு ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் போட்டியிட அந்த கட்சிக்கு கொடுக்கப்பட்டது

அந்தக் கட்சியின் தலைவர் வாக்குறுதி அளித்து ஏமாற்றினார். ஆகவே தி.மு..விடம் பெற்ற சீட்டை திரும்ப கொடுத்தார் தலைவர் பேராசியர் MHJ. அப்போது எனது வேண்டுகோள்படி மைதீன் கானுக்கே சீட் கொடுக்கனும் என கண்டிஷன் வைத்து சீட்டை திரும்பக் கொடுத்தார்.

2006ல் அமைச்சரான பிறகு மேலப்பாளையம் பசார் திடலுக்கு மைதீன் கான் வந்தார். அப்பொழுது நான் போட்டியிடாவிட்டால் மைதீன் கானுக்கே திரும்ப தருவோம் என்று செய்யது மைதீன் அவர்களிடம் வாக்குறுதி அளித்தபடி நடந்ததற்கு மீண்டும் நன்றி கூறினார். பிறகு மேல்சபையோ வக்பு வாரியமோ அமைக்கும் போது உங்களுக்கு வாய்ப்பு தருவோம் என்றார்.

எனக்கு .மு.மு.. தலைமை வாக்குறுதி அளித்துள்ளது. ஹைதர் அலியும் வக்பு வாரியம் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் எனக்கு நன்றி செய்வதாக இருந்தால். இன்று (2006) வரை எட்டு ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம்கள் விடுதலைக்கு உதவுங்கள் என்றேன்.

பிறகு அமைச்சர் மைதீன் கான் ஊர் வரும்பொழுதெல்லாம்  சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக நான் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினேன். எனக்குத் தெரிந்த உயர் அதிகாரிகளிடமும் பேசினேன். அவர்களில் ஒருவர் இன்றும் பொறுப்பில் உள்ளார்.

.மு.மு.. தலைமை சார்பில் தலைவர் பேராசியர் M.H ஜவாஹிருல்லாஹ் பொதுச் செயலாளர் ஹைதர் அலி போன்றவர்கள்  முதல்வர்  டாக்டர் கலைஞர் கருணாநிதியிடம் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சிறைவாசிகள், சிறையில் இருந்தவர்கள் சார்பில் வைத்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் கொடுத்தார்கள்.


சிறைவாசிகள், சிறையில் இருந்தவர்கள் சார்பிலான அந்த கோரிக்கைகளை அல் உம்மா என்று அறியப்பட்ட 17 பேர் என் வீட்டுக்கு வந்து எழுதி தந்தார்கள்.  அந்த கோரிக்கைகள்.

1. சிறையில் இருந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வழக்குகள் முடிந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் உள்ளது. இதற்கு தடையாக காவல்துறைதான் உள்ளது. எனவே பாஸ்போர்ட் கிடைக்க வழி செய்ய வேண்டும். 

2. சிறையில் இருந்தவர்கள் என்ற காரணத்துக்காக எங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதாரத்துக்கு வழி செய்து வறுமையை நீக்க வேண்டும்.

3. ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு பிணையில் விட வேண்டும். விரைவில் பொது மன்னிப்பு அளிப்பதற்கு சட்டத்தின் மூலம் வழி செய்ய வேண்டும்.

4. சிறைவாசிகள் சிறை சென்றவர்கள் பிள்ளைகள் கல்வி கற்க வழி வகை செய்து தர வேண்டும். 

(அந்த ஆண்டே த.மு.மு.க. தலைமையிடமிருந்து கல்வி உதவித் தொகை வாங்கி கொடுத்தோம்)

5. டிசம்பர் 6 போன்ற நேரங்களில் போராட்டம் அறிவித்த அமைப்பினருக்கு பிரிவண்டிங் அரஸ்ட் இல்லாத நிலையிலும் சிறை சென்றவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பிடித்து வைக்கும் நிலையை இல்லாமல் ஆக்க வேண்டும் .

6. சகஜ நிலை உள்ள நேரங்களிலும் தொழுது விட்டு கூட்டாக பள்ளிவாசல் அருகிலோ, கடைகள் பக்கத்திலோ நின்று பேசக் கூடாது என விரட்டுவது. நாங்கள் நிற்கும் பள்ளியின் முத்தவல்லி, கடை உரிமையாளர்களை மிரட்டுவதை காவல் துறை நிறுத்த வேண்டும்.

7. சிறைவாசிகள் சிறை சென்றவர்கள் குடும்பத்துக்கு கடன் வழங்குதல் வேண்டும்.

8. ஆயுள் கைதிகளை அவர்கள் குடும்பத்தார் அடிக்கடி பார்க்க முடியா வண்ணம் தொலை தூரத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கடலூர் சிறையில் உள்ள மொட்டை அப்பாஸ் அவர்களை அவரது ஊரான கோவைக்கு மாற்ற வேண்டும். அண்ணா, காந்தி பிறந்த தினங்களுக்காக அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்கி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

9. டி.என்.டி.ஜே. போன்ற அமைப்புகள் தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றி போலீஸில் புகார் செய்யும்பொழுது அல்-உம்மா என்று புகார் செய்தால் காவல்துறை விசாரணை செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறது. இந்த போக்க நிறுத்த வேண்டும்.

10. சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகளுக்கு போதிய மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும்.


11. சிறை சென்றவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களது சகோதரிகளுக்கு திருமணம் என்பது சிக்கலாக இருந்து வருகிறது. எனவே சிறையில் இருப்பவர்கள் சிறை சென்றவர்கள் குடும்ப பெண்கள் திருமணத்திற்கு வழி காண வேண்டும்.

12. வெளி நாட்டு வேலை வாய்ப்புக்கு விஸா பெற எங்களுக்கு விபரம் தெரியாது எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் .

13. அல் உம்மா மீதான தடை நீக்கப்பட வேண்டும்.

கோரிக்கை 11,12 அரசு சம்பந்தமானது அல்ல. சமுதாய ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். விஸா விஷயத்தில் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். TNTJல் உள்ள அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி உறவினர் (வெடிக்காத குண்டு வழக்கு) போன்றவர்களுக்கு ஏற்கனவே விஸா உதவி செய்து இருக்கிறேன். த.மு.மு.க.வையும் விஸா உதவி விஷயத்தில் கவனம் செலுத்தச் சொல்வோம் என கூறி விட்டோம் .

13. அல் உம்மா மீதான தடை நீக்கப்பட வேண்டும்.  இது உங்கள் அமைப்பு என்ற முறையில் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் த.மு.மு.க.வை ஈடுபடும்படி கோரிக்கை வைக்க முடியாது. அது ஈடுபடாது என்றேன்.

சிம் தடை செய்யப்பட்படபொழுது த.மு.மு.க. குரல் கொடுத்ததே என்றார்கள். அது வேறு நிலை. இது வேறு நிலை. இப்பொழுது எதற்கு அல் உம்மா? என்றேன். அதற்கு நாங்கள் ஜனநாயகவாதி என்று செயல்பட்டு காட்ட என்றனர்.

ஜனநாயகவாதிகள் என்று செயல்பட்டுக் காட்ட த.மு.மு.க இருக்கிறது. உங்களை த.மு.மு.க.வில் இணைந்து செயல்படுங்கள் என்று கூறி இருக்கிறேன். நீங்கள் ஏன் சேரவில்லை என்றோம். 

த.மு.மு.க.வில் உள்ளவர்கள் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல் பார்க்கிறார்கள். எங்களில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு இதுவரை கார்டு தரவில்லை என்றார்கள்.

நீங்கள் கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடங்கள். இன்ஷா அல்லாஹ் ஒரு பெரிய நிகழ்ச்சி மூலம் உங்கள் அனைவரையும் த.மு.மு.க.வில் இணைப்போம் சிறைவாசிகளுக்கும் விடுதலை பெற்று தருவோம் என்று கூறினோம்.

20-05-2006  அன்று எனது இல்லத்தில் கூடிய கூட்டதில் முன்னதாக பேசிய நான் கூறியவை.

8 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்களின் விடுதலை விஷயத்தில் த.மு.மு.க. கவலை.  கொண்டுள்ளது. அதற்காக முயற்சிகள் எடுத்து ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருகிறது.

1993 இல் தடாவில் போட்ட இதே அல் உம்மா அணியினரை இதே த.மு.மு.க.தான் இதே ஆட்சியாளர்களிடம் பேசித்தான் 1996 முதல் கோர்ட் மூலம் விடுதலை வாங்கித் தந்தது 

கோர்ட்டு செலவுக்கு ஒண்ணரை லட்சம் அர்ஜண்ட்டாக வேண்டும் என்று J.S. ரிபாஈ போன் போட்டு கேட்டார். காயல்பட்டிணம் சகோதரரிடம் கடன் வாங்கி கொடுத்தேன். 

பிறகு விடுதலையான அதே அல் உம்மா அணியினரால்தான் அதே ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தப்பட்டது. விடுதலை வாங்கித் தந்த அதே த.மு.மு.க.வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.


இப்பொழுதும் அதே அல் உம்மா அணியினரை அதே த.மு.மு.க.வினர்தான் அதே ஆட்சியாளர்களிடம் விடுதலை வாங்கித் தருவதில் முனைப்பாக உள்ளார்கள். அதே நேரத்தில் மீண்டும் முன் போல் நடந்து விடுவார்களோ என்ற அச்சம் எல்லா மட்டத்திலும் உள்ளது.

எனவே அப்படி இருக்கக் கூடாது. இனிமேல் அது மாதிரி எதிலும் ஈடுபட மாட்டோம் என்று வாக்குறுதி தாருங்கள். இப்பொழுது நமதூரில் உலவி வரும் லுஹாவை கொலை செய்தல் போன்ற விரும்பத் தகாத சில செய்திகளை ஒட்டியே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அப்படி ஏதாவது நடந்தால் நமது முஸ்லிம் சகோதரர்களான சிறைவாசிகளின் விடுதலைதான் பாதிக்கும். த.மு.மு.க. ஒதுங்கி விடும். இனி எந்த முயற்சியும் த.மு.மு.க. செய்யாது. 

எனவே இனிமேல் இது மாதிரி எதிலும் ஈடுபட மாட்டோம் என நீங்கள் வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி தந்தால்தான் த.மு.மு.க. தலைமை தொடர்ந்து முயற்சிகள் செய்யும் என்று கூறினோம்.

இதன் பிறகு பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் செய்தார்கள். குறிப்பாக ஏதோ ஒரு குரூப் செய்ய நாங்கள் தண்டனை அனுபவிப்பது என்ற நிலையை விட நாங்கள் செய்து விட்டுப் போனால் மன நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தையும் பலமாகப் பேசினார்கள்.

இனி நீங்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டால் அதை பார்த்துக் கொண்டு த.மு.மு.க. சும்மா இருக்காது. இந்த உத்தர வாதத்தை த.மு.மு.க. தலைமையிடமிருந்து நான் வாங்கித் தருகிறேன் என்றேன்.

இதன் கோரிக்கைகளை வைத்தார்கள். இதை மத்திய-மாநில அரசு மூலம் த.மு.மு.க.வால்தான் செய்ய முடியும். த.மு.மு.க. தலைமை நினைத்தால் அரசை அணுகி செய்து தர முடியும் என்றார்கள்.


அவர்கள் கோரிக்கைகளை கூறும்படி கூறினோம். அவர்கள் கூறியவற்றில் நாம் ஏற்றுக் கொண்ட 13 வகையான கோரிக்கைகளை அவர்களில் ஒருவரைக் கொண்டே பேப்பரில் எழுதும்படி கூறினோம். அவற்றை த.மு.மு.க. தலைமைக்கு தெரிவித்து நிறைவேற்றித் தர தொடர்ந்து முயற்சி செய்து வருவேன் என்று வாக்குறுதி அளித்தேன்.

அதன் பிறகு இனிமேல் சட்டத்தை கையிலெடுக்கும் மாதிரி எந்த செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று 17 பேரும் வாக்குறுதியளித்து சத்தியம் செய்தார்கள். இதில் கலந்து கொள்ள முடியாமல் போன இருவருக்கும் சேர்த்து 17 பேரும் வாக்குறுதி தந்தார்கள்.

எனவே இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் பொறுப்பு ஏற்கிறேன்.

அதற்காகவே பாளை, மதுரை, கோவை, திருச்சி என சிறைகளுக்குச் சென்று வந்தேன். (எனது இந்த சந்திப்பை கொச்சைப்படுத்தித்தான் தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் சிறைவாசிகள் என்ற பெயரில் நோட்டீஸ் போட்டார்கள்)

ஏற்கனவே திட்டமிட்டிருந்த செயல்களை நமது வேண்டுகோள்களை ஏற்று உடனடியாக நிறுத்தி விட்டார்கள். எனவே சிறைவாசிகள் சத்தியத்தை மீற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே இவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் விஷயத்தில் த.மு.மு.க. மத்திய- மாநில அரசுகளையும் அரசு அதிகாரிகளையும் அணுகி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று த.மு.மு.க. தலைமைக்கு கடிதம் எழுதினேன். TMMK தலைமையும் முயற்சிகள் செய்தது.

ஆனால் வாக்குறுதி அளித்தவர்களே வாக்குறுதியை மீறினார்கள். பல்வேறு கொலைச் சம்பவங்கள் நடந்தன. உங்களின் இந்தச் செயல் 8 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் விடுதலைக்கு தடையாகும் என்று கண்டித்தேன். 

உடனே  சிறையில் உள்ளவர்களில் என்னிடம் பண உதவி பெற்றவர்களே நள்ளிரவில் என்னை மிரட்டினார்கள். உங்கள் விஷயத்திலும் நாங்கள் வேறு முடிவு எடுக்க வேண்டி வரும் என்றார்கள்.

இதன் பிறகு கருணாநிதியும், அரசும் உயர் அதிகாரிகளும் இவர்கள் விடுதலை பற்றி பேச மறுத்து விட்டார்கள்பேச வேண்டாம் என்று கூறி விட்டார்கள்இப்பொழுது சொல்லுங்கள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக இருந்தவர்கள் யார்

உண்மை இவ்வாறு இருக்க இயக்கங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்று கேட்டு அடிக்கடி சேற்றை வாரி வீசி வருகிறார்கள்.

விடுதலையை விரும்பும் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்கு தடையாக  யாருடைய செயல்பாடுகள் இருந்தனவோ அவர்களக்கு எதிராக இனியாவது துஆச் செய்வீர்களா?

காசுக்காக காட்டிக் கொடுப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவர்கள் மீதும் காசு பார்ப்பதற்காக தாங்களே சம்பவங்கள் செய்யச் சொல்லி விட்டும் சம்பவங்கள் செய்து விட்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்


தலைமறைவாக இருப்பவர்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களை தங்கள் பொறுப்பில் தங்க வைத்து நல்ல வசூலித்து விட்டு. போலீஸ் மற்றும் உளவுத் துறையிடம் நல்ல பேரம் முடிந்ததும் காட்டிக் கொடுத்து காசு பார்த்தார்களே அந்த நம்பிக்கை துரோகிகள் மீதும்  அவர்களுக்கு பக்க பலமாக இருப்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக ஆமீன் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.