2:18. செவிடர்கள்; ஊமையர்கள்; குருடர்கள். எனவே அவர்கள் திரும்ப - மீளவே மாட்டார்கள்.

இந்த வசனத்தை மேடைக் கவர்ச்சித்த தமிழிலில்   கண்ணிருந்தும் குருடர்கள். காதிருந்தும் செவிடர்கள்.  வாயிருந்தும் (நாவிருந்தும்) ஊமையர்கள்  என்பார்கள். 

காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும்.  கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும். அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் - நாவில் ஏற்படும் குறைபாடு தான் காரணம்   என்று மனித அறிவு சொல்லும்.  அறிவியல் ஆய்வில் அப்படி இல்லை என்றே முடிவாக ஆகி உள்ளது.
காதுகளில் குறைபாடு ஏற்படுவதால் மற்றவர்கள் பேசுவது உள்ளங்களில் – மனதில்  பதிவதில்லை. எனவே பிறவியில் செவிடாக இருப்பவருக்கு வாய் பேச முடிவதில்லை என்றுதான் இன்றைய விஞ்ஞான மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

இந்த 2:18 வசனத்தில் சிலரைப் பற்றி விமர்சனம் செய்யும் அல்லாஹ், அவர்களை செவிடர்கள்;  குருடர்கள்;  ஊமைகள் என்று விமர்சித்துள்ளான்.

2:7 வசனத்தில் அவர்களின் காதுகளான செவிப்புலன்களிலும் முத்திரை இடப்பட்டு விட்டது என்பதன் மூலம் செவிகளில் முத்திரை உள்ளதால் அவர்கள் செவிடர்கள் என்று தெளிவாக புரிந்து கொள்கிறோம்.

அவர்களின் கண்களில் திரை உள்ளது என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதன் மூலம் பார்வையில் திரை உள்ளதால் அவர்கள் குருடர்கள் என்று புரிந்து கொள்கிறோம். இந்த இரண்டும் எல்லாக் காலத்திலும் மக்கள் சாதாரணமாக அறிந்த புரிந்த உண்மைகள் தான்.

ஊமைகளாக அவர்கள் ஆனதற்கு காரணம் அவர்களின் வாய்களில் நாவுகளில் முத்திரை இடப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறவில்லை. அவர்களின் உள்ளங்களில் முத்திரை இடப்பட்டுள்ளதாகவே கூறி உள்ளான்.

உள்ளத்தில் முத்திரையிடப்படுவதால் தான் செவிட்டுத் தன்மை ஏற்படுகிறது இந்த உண்மையை குர்ஆன் அருளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் விஞ்ஞான மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள உண்மையாகும்.


எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி அவர்கள், அவர்களது காலத்தில் அவர்களது சமுதாயத்தில் நிலவிய அறிவைக் கொண்டு இப்படிக் கூறவே முடியாது. ஆகவே இந்த வசனங்கள் ஏக இறைவனிடம் இருந்து வந்தது தான் அல் குர்ஆன் என்று நிரூபித்துக் கொணடிருக்கின்றன.

இனி வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம் காண்போம்.


صُمٌّۢ - ஸும்மும்(ன்)
செவிடர்கள்

بُكْمٌ- புக்முன் 
ஊமைகள்

عُمْىٌ -ஃஉம்யுன்
குருடர்கள்

فَ - FA ப
ஆகவே – ஆக – ஆனால் – எனவே – எனினும் – பின்னர்- பிறகு- ஆதலி்ன்

هُمْ- ஹும்
அவர்கள் – இவர்கள்

لَا يَرْجِعُونَ- லா யர்ஜி ஃஊ(ன)ன்.
திரும்ப (மீள) மாட்டார்கள் - மீண்டு வர மாட்டார்கள்

தனித் தனி வார்த்தைகளாக பார்த்த நாம் இனி இணைத்து ஓதுவோம்.


صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ‏

ஸும்மும்(ன்)  புக்முன்  ஃஉம்யுன்  FAபஹும் லா யர்ஜி ஃஊ(ன)ன்.

தமிழாக்கங்கள்

2:18. (இவர்கள்) செவிடர்கள்ஊமைகள்குருடர்கள். எனவே இவர்கள் (நல்வழிக்கு) திரும்ப மாட்டார்கள். (PJ)


(ஏனெனில்) அவர்கள் (செவியிருந்தும்) செவிடர்கள், (நாவிருந்தும்) ஊமையர்கள், விழிகண் குருடர்கள். எனவே, அவர்கள் (நேர்வழிக்கு) மீளவே மாட்டார்கள். (அதிரை ஜமீல்)


(அவர்கள்) செவிடர்களாகஊமையர்களாககுருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (ஜான்)


(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும்ஊமையர்களாகவும்குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால்இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். (அப்துல் ஹமீது பாகவி)


அவர்கள் செவிடர்களாய்ஊமையர்களாய்குருடர்களாய் இருக்கின்றனர். எனவேஇப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்;  (IFT)

(இவர்கள்) செவிடர்கள் (உண்மையை கேட்கவே மாட்டார்கள்)ஊமையர்கள் (உண்மையைப் பேசவே மாட்டார்கள்)குருடர்கள் (அவர்களுக்கு பலன் தரக் கூடியதைப் பார்க்கவே மாட்டார்கள்)ஆகவேஇவர்கள் (சத்தியத்தின்பால்) மீள மாட்டார்கள். ((சவூதி)



2:18. (அவர்கள்) செவிடர்கள்ஊமையர்கள்குருடர்கள். ஆகவே அவர்கள் (நேர்வழியின்பால்) மீள மாட்டார்கள். (பஷாரத்)

2:18. (அவர்கள் நேர்வழி பெற முடியாச்) செவிடர்கள்ஊமையர்கள்குருடர்கள். எனவே அவர்கள் (நல்வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (மலிவு பதிப்பு)







Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.