2:15 கண் என்பதற்கு பார்க்கும் கண் என்பது மட்டும் தான் பொருளா? தமிழில் எத்தனை வித கண்கள் உள்ளன?

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள  யமுத்து  (நீட்டுதல்,  அதிகப்படுத்தல்) என்பது போன்ற சொற்கள் தனித்த நிலையில் பல பொருள்கள் தரும்.  உதாரணமாக ஐன் (கண்) என்ற அரபு வார்த்தை தனித்து இருக்கும் போது கண். தங்கம், முட்டுக் கால், தலைவன், உளவாளி, பிரமுகர், ஊற்றுக் கண் என்று 70 (அதாவது அதிகமான) பொருள் தரும் என்பார்கள் அரபிகள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/215.html

நமது தாய் மொழியாகிய தமிழ் மொழியில் கூட கண் என்பது பல பொருள்கள்  தரக் கூடியது தான். ஐன் என்பதை பார்க்கக் கூடிய  கண் என்ற பொருளில் குர்ஆனின்    12:84.    15:88.          18:28.     20:131.    36:66.   52:20  54:37.   90:8ஆகிய  வசனங்களில்  அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான். 


ஊற்றுக்   கண் என்ற பொருளில் 2:607:16044:2544:52. 54:12. 55:50. 55:6676:18.   ஆகிய  வசனங்களில்  அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான். அது மாதிரி தான் நாமும் தமிழ் மொழியில் பயன்படுத்தி வருகிறோம்.


தேங்காய்  கண்  பனங்காய்  கண் எனும் போது தேங்காய்பனங்காய்களிலுள்ள  குழிகளை குறிக்கிறது.

ரொம்ப பொடி(சிறிய) கண்ணாக இருக்கிறது. கொஞ்சம் பரும் (பெரிய) கண்ணாக வேண்டும் என்றோ, பரும் (பெரிய) கண்ணாக இருக்கிறது. பொடி(சிறிய) கண்ணாக வேண்டும் என்றோ பெண்கள் சொல்வார்கள். எதைப் பார்த்து சொல்வார்கள்? 

சல்லடை, அருத்து, பலகணி (இடியாப்பம், முறுக்கு அச்சு) போன்றவற்றை வாங்கும் போது சொல்வார்கள். இங்கே கண் என்பது எதைக் குறிக்கிறது? அவற்றில் உள்ள சிறு சிறு துவாரம் (ஓட்டை)களை குறிக்கிறது.


கண் வந்து விட்டது இனி புண் உடைந்து விடும் என்பார்கள்உடலில் ஏற்படும் புண்கட்டி போன்றவற்றில் ஜலம் (சீழ்வெளி வருவதற்குரிய பழுத்த கரு முனை உருவானதும் அந்த கரு முனைக்கு (புண்ணின் வாய் துளைக்கு) கண் என்பார்கள்.  


தோகையின் கண்கள் என்பார்கள். இது மயில் போன்ற பறவையின் சிறகில் உள்ள கருப்பு நிற புள்ளிகள் என்று அர்த்தம் தரும்.

ஊசிக் கண் சிறியதாக இருக்கிறது என்பதன் மூலம் ஊசியின் துளையை கண் என்பார்கள். ஆறு, வாய்க்கால், கால் வாய் போன்றவற்றில் உள்ள மதகுகளை கண்மாய் என்பார்கள். 

தனித்த நிலையில் பல பொருள் தரும் இந்த மாதிரி வார்த்தைகள். இன்னொரு வார்த்தையுடன் சேரும் போது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட வார்த்தையாக ஆகி விடும். அப்போது அது ஒரு பொருளை (அர்த்தத்தை)த்தான் தரும். ஒரு அர்த்தம் தான் வரும்.

இந்த வசனத்தில்  யமுத்து என்பதற்கு நீட்டுதல்,  அதிகப்படுத்தல் என்பது நேரடி பொருள் என்றாலும் இங்கே விட்டு விடுகிறான்- விட்டு வைத்திருக்கிறான்.          அவகாசம்             அளித்துக்          கொண்டு   இருக்கின்றான் என்ற பொருள் தருகிறது. 

நீட்டுதல் என்பதற்கு நேரடி பொருள் ஒன்றாக இருந்தாலும் அதுவும் பல பொருள் தரக் கூடியது தான்.  அதையும்

சட்டத்தின் கண்ணில் அனைவரும் சமம். 
அந்தக் கட்சி தான் ஊழலின் ஊற்றுக் கண்.
அறிவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும். 
வரலாற்று கண் கொண்டு பார்க்க வேண்டும். 
அவன் நம்மீது கண் வைத்து இருக்கிறான். 

அவன் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்

இலக்கிய வசனங்களையும் இனி வரும் இடங்களில் விளங்குவோம். இன்ஷாஅல்லாஹ். இப்பாழுது 2:15 வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை பார்ப்போம்.


اَللّٰهُ-அல்லாஹு  -
அல்லாஹ்
 يَسْتَهْزِئُ- யஸ்தஹ்Ziஸிஃஉ
பரிகசிக்கிறான் - பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான் - கேலி செய்கிறான்

بِهِمْ-பிஹிம்
அவர்களுடைய

 وَ -     
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   

يَمُدُّ-யமுத்து

நீட்டுதல்  - அதிகப்படுத்தல்


هُمْ-  ஹூம் -

அவர்கள் – இவர்கள்


فى பீ (Fee) -  

ல். 


طُغْيَانِ- துஃக்யானி

வழிகேடு – அத்துமீறல்- வரம்பு மீறல் -அட்டூழியம்

هِمْ‌ஹிம்

அவர்களுடைய - அவர்களின்


يَعْمَ- யஃம
கபோதி- குருடு

 هُوْنَ- ஹுன
அது -அவர்கள்

يَعْمَهُوْنَ- யஃமஹு(ன)ன் 

அவர்கள் கபோதிகளாக (விழிகண்  குருடர்களாக – கண் மூடித்தனமாக) இருக்கிறார்கள்

 اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏

அல்லாஹு யஸ்தஹ்Ziஸிஃஉ பிஹிம் வ யமுத்து ஹும் பீ(FE) துஃக்யானி ஹிம் யஃமஹு(ன)ன்

இனி 10  மொழி பெயர்ப்புகளின்  தமிழாக்கத்தை பாருங்கள்


1. அதிரை ஜமீல்

விழிகண் குருடர்களாய் இவர்களின் வழிகேட்டிலேயே தட்டழியும்படி விட்டுக் கொடுத்து,  அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கிறான். 2:15.


 2. அன்வாருல் குர்ஆன், 3.ஜான் - 4. இம்தாதி)



அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.  2:15.


5.  (மலிவு பதிப்பு)
அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கின்றான். மேலும் அவர்களின் வழிகேட்டிலேயே தட்டுத் தடுமாற விட்டு வைத்திருக்கிறான்.  2:15. 

6. (பஷாரத்)
2:15.  அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் அவர்களின் வழிகேட்டிலேயே அவர்கள் தடுமாறுகிறவர்களாக அவர்களை விட்டு வைத்திருக்கிறான்.   2:15. 


7.பாகவி
(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும்அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்.2:15

8.(IFT)
அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். (அவன்) அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டு இருக்கின்றான்; (அவர்களோ) தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்று கொண்டேயிருக்கிறார்கள். 2:15


9.(சவூதி)
அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களுடைய வழிகேட்டில் கபோதிகளாக அவர்களை(த்தட்டழியும்படி) விட்டு வைத்திருக்கிறான். 2:15

10.P.J
அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில்  அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான். 2:15

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.