2:14. (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது,

இந்த பதிவின் மூலம் ஒரே நேரத்தில் ஒன்பது தர்ஜுமா உங்களைத் தேடி வருகின்றது.  இந்த பதிவு போட ஆரம்பித்த காரணம். 

2012லிருந்து நாம் நடத்திய பரிசுப் போட்டியில் குர்ஆன் ஹதீஸுடைய குறிப்பிட்ட  குடும்பத்து  பிள்ளைகளே பரிசு பெற்று வருகிறார்கள்.  மற்ற வீட்டு பிள்ளைகள் துாங்காமல் விடிய விடிய இருந்து ஆயத்துகளை தேடியும் பதில் கிடைக்கவில்லை. 

காரணம் வார்த்தை வித்தியாசம். ஒரு மொழி பெயர்ப்பில் ஆலம் என்பதற்கு அகிலம் என்றும் இன்னொருவர்  உலகம் என்று மொழி பெயர்த்து இருப்பார். ஆகவே குர்ஆன் இண்டக்ஸ் பொருள் அட்டவணை போட முடிவு செய்து அதில் ஈடுபட்டு ஒரு தலைப்பு வெளியிட்டோம். 

அந்த நிலையில் வார்த்தைக்கு வார்த்தையுடன். அரபு தமிழ் தங்லீஷ் மாதிரி தமிழ் அரபியுடன் வெளியிட வேண்டினார்கள். அந்த அடிப்படையிலேயே இந்த வெளியீடுகள்
https://mdfazlulilahi.blogspot.com/2019/11/214.html


وَ -     

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  


إِذَا لَقُوا- இதா(ரா) லஃகூ

சந்திக்கும் போதுசந்தித்தால்

الَّذِيْنَஅ ல்லதீ(ரீ)ன

 அவர்கள் - எவர்கள் -சிலர்

آمَنُوا-  ஆமனுா


நம்பிக்கை கொண்டோர் (கொண்டவர்கள்) - விசுவாசங்கொண்டோர்


قَالُوا- காலுா


கூறுகின்றனர்- கூறினார்கள்- சொல்கிறார்கள்.கூறுகிறார்கள்

آمَنَّا- ஆமன்னா 

நாங்கள்  ஈமான்  கொண்டோம் - நம்பினோம்- நம்பிக்கை கொண்டுள்ளோம்-விசுவாசங்கொண்டிருகிறோம்

وَإِذَا خَلَوْا-வ இதா(ரா) ஃகலவ் 


தனித்திருக்கும்போது- தனித்து விட்டால்- தனித்து விட்டாலோ- தனிமையில் இருக்கும்போது,



إِلَىٰ شَيَاطِينِهِمْ- இலா ஷயாதீனிஹிம் 


தமது ஷைத்தான்களுடன்- தங்கள் ஷைத்தான்களுடன் - அவர்களுடைய  ஷைத்தான்களுடன்


قَالُوا- காலுா

கூறுகின்றனர்- கூறினார்கள்- சொல்கிறார்கள்.கூறுகிறார்கள்


إِنَّاஇன்னா


நிச்சயமாக நாங்கள்


مَعَكُمْ-மஃஅகும் 

 உங்களுடன்


إِنَّمَاஇன்னமா 

நிச்சயமாக திண்ணமாக- உறுதியாக  (என்று உறுதிபடுத்தும் இந்த வார்த்தைகளுக்கு இணையாக உறுதிபடுத்தும் இடைச் சொல் தாம்தான் என்ற பொருளும் உண்டு)

نَحْنُநஃஹ்னு

நாங்கள் 


مُسْتَهْزِئُونَ- முஸ்தஹ்Zஸிஃஊ(ன)ன்.


கேலி (பரிகாசம்செய்பவர்கள்

இனி இணைத்து படியுங்கள்

وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ‏

வ இதா(ரா)  லஃகுல்லதீ(ரீ)ன ஆமனுா ஃகாலுா ஆமன்னா வ இதா(ரா) ஃகலவ் இலா ஷயாதீனிஹிம்  ஃகாலுா இன்னா  மஃஅகும் இன்னமா நஃஹ்னு முஸ்தஹ்Zஸிஃஊ(ன)ன்.



2:14. நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும்போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும்போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.-( P.J)




2:14.  இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, "நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள்.     
(அன்வாருல் குர்ஆன், ஜான் - இம்தாதி)


2:14.  மேலும் இறை நம்பிக்கையாளர்களை (நயவஞ்சகர்களாகிய) அவர்கள் முஃமின்களைச் சந்திக்கும்பொழுது, "நாங்களும் (உங்களைப் போன்றே) ஈமான் கொண்டுள்ளோம்" என்று கூறுகின்றனர்ஆனால் தங்களது (தலைவர்களான) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம்; (முஃமின்களை அவ்வாறு கூறி) நாங்கள் பரிகாசம்  செய்கின்றோம் என்று கூறுகின்றனர் (பஷாரத்)



2:14 மேலும் (நயவஞ்சகர்களான) அவர்கள் சந்திக்கும் போது, "நாங்கள் இறை நம்பிக்கை கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்நிச்சயமாக நாங்கள் (இறை நம்பிக்கையாளர்களைபரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்" எனக் கூறுகிறார்கள் (மலிவு பதிப்பு)





தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால்அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால்நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர். –பாகவி


இன்னும் இறைநம்பிக்கை கொண்டிருப்போரை அவர்கள் சந்தித்தால், ‘நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்எனக் கூறுகின்றனர். மேலும் தங்கள் ஷைத்தான்களுடன் அவர்கள் தனிமையில் இருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்! உண்மையில் நாங்கள் அவர்களைப் பரிகாசம்தான் செய்து கொண்டிருக்கிறோம்” எனச் சொல்கின்றனர்.-  (IFT)


இன்னும்அவர்கள் விசுவாசங்கொண்டோரை சந்தித்தால், “நாங்களும் (உங்களைப் போல்) விசுவாசங்கொண்டிருகிறோம்” எனக்கூறுகிறார்கள்மேலும்அவர்கள் தங்களின் (இனத்தவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டால், “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் விசுவாசிகளைப்)   பரிகாசம்  செய்யகூடியவர்கள்தாம்” எனக் கூறுகின்றனர். (சவூதி)




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.