பொதுச் செயலாளரை மனப்பூர்வமாகவா நேசித்தோம்? சந்தர்ப்பத்திற்காகவே ஆதரித்தோம்


எப்பொழுதுமே டென்சனாகவும் காட்டுக் கத்தலுமாக கத்தக் கூடிய பொதுச் செயலாளரை யாராவது பிரியமுடன் ஆதரிப்பார்களா? உள்ளூர் நிர்வாகிகளுடனான பிரச்சனைதான் பொதுச் செயலாளரை ஆதரிக்க வைத்தது. அந்த ஒரு கோடி எங்கே?  அரங்கம் தெரியும் அந்தரங்கம் யாருக்குத் தெரியும்?
இருக்கும்பொழுது இல்லாததை இட்டுக் கட்டி இகழ்வது. இறந்து பின்  பொய்யானவைகளைப் புனைந்து புகழ்வது. இந்த நிலை தான் கடந்த காலங்களில் இருந்தது. இன்றும் இருக்கின்றது. கடந்த காலத்தவர்கள் மனிதப் புனிதர்கள். இப்பொழுது உள்ளவர்கள் அனைவரும் பதருகள் என எழுதுவது எல்லாரின் நிலையாக உள்ளது.

கோவை பாஸித் அவர்களின் இன்றைய பதிவில் மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி பற்றி எழுதி உள்ளார்கள். இந்தியாவில் நடந்த கலவரங்களுக்கெல்லாம் பாகிஸ்தான் ISI தான் காரணம். இப்படிப் பேசியே வானுக்கும் பூமிக்குமாக குதித்த அத்வானி, ராஜீவ் காந்தி உட்பட எந்த எந்த அரசியல்வாதிகள் பாகிஸ்தான் ISIல் எவ்வளவு எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற விபரத்தை அந்த தடா எதிர்ப்பு பேரணி  நிகழ்ச்சியில்தான் வாசித்தோம்.

தடா எதிர்ப்பு பேரணி நடந்த ஆண்டுக்கு முன்பு இதே திருச்சியில் ஒரு முஸ்லிம் கட்சியின் பொதுக்குழு கூடியது. தலைவர் அமெரிக்க உளவுத்துறையிடம் ஒரு கோடி வாங்கி விட்டார் என்று சண்டை நடந்தது.

1989ல் மு.லீக்கிலிருந்து பொதுச் செயலாளர் அப்துல் லத்தீபை தலைவர் அப்துல் ஸமது நீக்கினார். நானும் மேலப்பாளையத்தில் உள்ள எனது நண்பர்களும் அப்துல் லதீபை ஆதரித்தோம்

மனப்பூர்வமாகவா பொதுச் செயலாளரை ஆதரித்தோம்? தொண்டர்களை அரவணைத்து அன்பாகவும் அழகாகவும் கனிவாகவும் இனிமையாகவும் பேசக் கூடிய தலைவர் எங்கே? இவர் எங்கே? அந்த தலைவரை விட்டு விட்டு. எப்பொழுதுமே டென்சனாகவும் காட்டுக் கத்தலுமாக கத்தக் கூடிய பொதுச் செயலாளரை யாராவது பிரியமுடன் ஆதரிப்பார்களா?

உள்ளூர் நிர்வாகிகளுடனான பிரச்சனைதான் பொதுச் செயலாளரை ஆதரிக்க வைத்தது. மேலப்பாளையம் மு.லீக் நகர நிர்வாகிகளில் VST ஷம்சுல் ஆலம் போன்றவர்கள் தவ்ஹீத் எதிர்ப்பில் முன்னணி வகித்தார்கள். மு.லீக்கிலிருந்து எங்களை ஒதுக்கி வைத்து செயல்பட்டார்கள். ஆகவே அவர்களை பலி வாங்க வாய்ப்பாக பயன்படுத்தினோம்.

நாங்கள்தான் உண்மையான  மு.லீக். உயிருள்ள மு.லீக் ஆகவே ஸமது ஸாஹிப் ஷம்சுல் ஆலம் போன்றவர்களை மு.லீக்கிலிருந்து நீக்கி விட்டோம் என்று பத்திரிக்கையில் அறிக்கை விட்டோம்.  அன்றைய மு.லீக் மாவட்டச் செயலாளர் கோதர் மைதீன் Ex MLA பேட்டையிலிருந்து மேலப்பாளையம் ஓடி வந்து எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

மேலும் தவ்ஹீது கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்காத அந்தக் கால கட்டத்தில் மு.லீக் லத்தீப் அணி என்ற பெயரால் லைசென்ஸ் போட்டு கூட்டம் நடத்தவே பொதுச் செயலாளர் லத்தீபை ஆதரிப்பது போல் நடித்தோம். இதுதான் உண்மை.

1987ல் திருச்சி காஜா நகரில் ஜமாஅத்துல் உலமா மாநாடு நடந்தது. அந்நஜாத் எங்கள் செருப்பை விட  கீழானது என்று ஒருவர் பேசினார். அதன் பிறகு பேசிய மு.லீக் தலைவர் ஸமது ஸாகிப். ஆலிம்கள் தங்கள் செருப்பைக் கூட மதிக்கிறார்கள் என்று அவருக்கே உரிய நடையில் அதை வழி மொழிந்து பேசினார்.

நானும் நிஜாமுத்தீனும் ஸமது ஸாகிபிடம் நேரில் சென்று கேட்டோம். மு.லீக் ராணுவம் மாதிரி. வெளியில் இருந்து வரும் தாக்குதல்களுக்குத்தான். பதிலடி கொடுப்போம். உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிப் சொன்னார் என்று நீங்கள் எங்களிடம் சொன்னதை மறந்து விட்டீர்களா? என்று கேட்டோம். திருச்சி மாநாட்டில் நான் அப்படி பேசவில்லை என்று எங்களிடம் மறுத்து விட்டார்.

1997ல் இதே ஜுன் மாதம்  திருச்சியில் நடந்த தேசிய லீக் (லத்தீப் அணி) செயற்குழுவில் கட்சி வளர்ச்சிப் பணி, மாநாடு வகைகளுக்காக வசூலிக்கப்பட்ட  பணம்  ஒரு கோடி எங்கே? என்ற கேள்வி வர. அந்த ஒரு கோடி பொருளாளரிடம் இல்லை என்னிடமே இருக்கிறது என்று லத்திப் ஸாஹிப்  அந்த ஒரு கோடிக்கு பொறுப்பு ஏற்றார்.

பிறகு 16-11-1997ல் கூட்டப்பட்ட தேசிய லீக் (லத்தீப் அணி) பொதுக்குழு முறையாக நடக்கவில்லை என்று திருப்பூர் சத்தார் நோட்டீஸ் போட்டார். நோட்டீஸ் இணைப்பில் உள்ளது பார்த்துக் கொள்ளவும்

நோட்டீஸில் ஒரு கோடி விஷயமும் எழுதப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அப்துல் லத்தீப் அவர்களைத்தான் தி,மு.க. கைக்கூலி என்பார்கள். ஆனால் அப்துல் லத்தீப் அவர்களே தேசிய லீக்கின் ஒரு பகுதியினரை தி,மு.க. கைக்கூலிகள் என்று சொல்லும் காலமும் வந்தது. அண்ணனே தம்பிகளை ஆட்டு மந்தைகள் என்று சொன்ன மாதிரி.

இன்றைய சூழலை ஒட்டி தமிழக முஸ்லிம்களின் அரசியலுக்கு ஒரே முகம் அது முஸ்லிம் லீக் என்ற நிலை உருவாக வேண்டும். 

எல்லா முஸ்லிம் கட்சிகளையும் கலைத்து விட்டு, அரசியல் ரீதியாக(மட்டும்) முஸ்லிம் லீக்கை வலுப்படுத்தலாம் போன்ற கருத்தக்களை பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

யாரும் மனிதப் புனிதர்கள் அல்ல. அரங்கத்தைத்தான் பெரும்பாலானவர்கள் பார்த்து இருப்பார்கள். அந்தரங்கத்தை பார்த்தவர்கள் என்றுமே குறைவாகத்தான் இருப்பார்கள்.

2006ல் த.மு.மு.க.வின் அரசியல் அமைப்பாக மு.லீக்கை த.மு.மு.க. ஏற்று செயல்படும் என்று த.மு.மு.க. தலைமையே தானாக முன் வந்தது.   பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியது. துபை தமிழ் ரெஸ்ட்ராரண்டு அதிபராகவும் காயிதே மில்லத் பேரவை தலைவராக இருந்தவர் தான் மு.லீக் முன்னோடிகளில் ஒருவரான தாவூத் பாஷா.

 RBD  ராஜகிரி பண்டாவடை தாவூத் பாஷா கல்லூரி தாளாளரான தாவூத் பாஷா அவர்கள் முன்னிலையில் தான் அவரது வீட்டிலும் பொது இடங்களிலுமாக மு.லீக் தலைவர் பேராசிரியர் காதர்மைதீன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி வாங்கப்பட்டது. த.மு.மு.க. சார்பில் மு.லீக்கை அரசியல் அமைப்பாக ஆதரிப்போம் என்று  வாக்குறுதி அளிக்கப்பட்டது.  

அளித்த வாக்குறுதி மீறப்பட்டதால்தான் ம.ம.க. உருவானது. இது மாதிரியான பல உண்மைகளை எழுத வேண்டும் என்று திருச்சியில் உள்ள ஒரு மவுலவி வேண்டுகோளை ஏற்று எழுத இருந்தேன். 

அந்த நிலையில் தான் பலர் இந்த மாதிரி கருத்துக்களை போட்டுள்ளார்கள். ஏற்கனவே என்ன நடந்தது என்பதை ராஜகிரி தாவூத் பாஷா அவர்களே 2006ல் தமிழன் TVயில் உண்மையை போட்டு உடைத்து விட்டார்கள். இதில் நானும் சம்பந்தப்பட்டவன், அலைக்கழிக்கப்பட்டவன்  என்பதால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் விளக்க கடமைப்பட்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ் விளக்குவோம். 

ஒரு கோடி எங்கே?  அரங்கம் தெரியும் அந்தரங்கம் யாருக்குத் தெரியும்?என்ற தலைப்புக்கு பதில் மேலே உள்ள தேசிய லீக் சம்பந்தமானது அல்ல. வேறு ஒன்று இருக்கிறது இன்ஷாஅல்லாஹ் அதையும் மக்கள் முன் வைப்போம்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.