பாங்கில் ராகம் போடுவது கட்டாயமா? பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டுமா? ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?


Hussain Ali அவர்கள் பதிவு பள்ளியின் மோதியார் மக்ரிப் தொழுகைக்கு பாங்கு நிறுத்து நிதானமாக சொன்னார்... நல்லத்தான் சொன்னார்....(நான் கேட்டேன்.. நல்லத்தான் இருந்தது)....ஆனால் பள்ளியில் உள்ள ஒருவர் அவரை பார்த்து இப்படி மெதுவாக சொல்லக்கூடாது என கடிந்து இருக்கிறார்..... அவரோ இகாமத் கூட செல்லாமல் போய் விட்டார் வேலையை விட்டே....(மக்கா/மதினாவில் நீட்டி பாங்கு சொன்னால் மட்டும ரசிப்பார்கள் போல) அன்று தான் அவர் வேலையில் சேர வந்தார்...அன்றே அனுப்பி(விரட்டி)விட்டார்கள்....


பள்ளியில் தொழ வருகிறவர்களுக்கு இமாம்/மோதியார்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாக இருக்கிறார்கள் போல.....ஆள் ஆளுக்கு அதிகாரம்.... தோராணை...... 

இதை இவர் சொல்வதற்கு எந்த வித முறையும் கிடையாது.... கமிட்டி மூலம் தெரிவித்துக்கூட இருக்கலாம்...

பள்ளியில் முன் வரிசையில் நின்று தொழுதால் மட்டும் போது என நினைக்கிறார் போல.....

பாங்கு சொல்ல 2 நிமிடம் கூட வந்த என்ன ஆகிவிடபோகிறது.....

பொருமை இல்லை.....தொழுது என்ன பிரயோஜனம்.....

பெரிய கொத்பா பள்ளியில்..... நேற்று நடந்த நிகழ்வு.....
இது சம்பந்தமாக பலரும் பல கமாண்டுகளை பதிவு செய்து உள்ளார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_26.html

2012ல் போட்ட சவால் பதிவு உங்கள் பார்வைக்கு

ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா? என்ற கேள்விக்கு ஊரான் காசில் தன் பெயரில் நடத்தும் இணையதளத்தில் பதிலளித்துள்ள அண்ணன், பாங்கை விட நீளமாக நீட்டி முழங்கி பதிலளித்துள்ளார். அதில்

பாங்கை நீட்டிச் சொல்லவேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும்.பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை.இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்யவேண்டும் முஅத்தின் பாங்கு சொன்னால் அதைக் கேட்பவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. பாங்குதேவையின்றிநீட்டப்படும் போது பதிலளிப்பவர் அதற்காக நீண்ட நேரம்காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இடையில் பேச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நீட்டாமல் சாதாரண அறிவிப்பைப் போன்று பாங்கு கூறப்பட்டால் இது போன்ற சிக்கல் ஏற்படாது'என்று முதலில் சொல்லியுள்ளார்.

அதாவது ஒரு அறிவிப்பைஉதாரணமாக அண்ணன் இன்று மண்ணடியில் மக்ரிப் தொழாமல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்பதை எப்படி ராகமின்றி சாதாரணமாக அறிவிப்போமோ அதுபோன்று பாங்கையும் அல்லாஹு அக்பர் என்று ராகமின்றி சொல்லவேண்டும் என்று அண்ணன் சொல்கிறார். இதோடு நின்றரா? அடுத்து இதற்கு மாற்றமாக

'ராகத்துடன் சொன்னாலும் ராகம் இல்லாமல் சொன்னாலும் அதில் தவறேதுமில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக நீட்டப்படுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.''என்று சொல்லி அதாவது ராகம் போட்டு சொல்லலாம்; ஆனால் அதிகமாக ராகம் போடக்கூடாது என்று சொல்லி தனக்குத் தானே முரண்படுகிறார். இதோடும் அண்ணன் நிற்கவில்லை. 

அடுத்து இவ்வாறு பாங்கை நீட்டி முழங்குவது தவறு என்றும்,'
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிவாசல்களிலும் கூட பாங்கை நீட்டி முழக்கி கொலை செய்யப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சாரகர்களும் நிர்வாகிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும். 'என்றும் அண்ணன் சொல்லி முடிக்கிறார்.


இதில் இரண்டுவிதமான முரண்பட்ட தீர்ப்பை அண்ணன் வழங்குகிறார்.

1.    பாங்கை ராகமின்றி சாதாரண அறிவிப்பாக செய்யவேண்டும்.
2.    ரொம்ப நீட்டி முழங்காமல் கொஞ்சமாக ராகம் போட்டு சொல்லலாம். ரொம்ப நீட்டி முழங்குவது கொலையாகும்.{மத்ஹப் பாணியோ}
சாதாரண அறிவிப்பாக ஒரு வாசகத்தை சொல்வதும் கொஞ்சம் ராகம் போட்டு ஒரு வாசகத்தை சொல்வதும் முரணானது என்பது சிந்திப்பவர்களுக்கு விளங்கும். அதோடு, மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லாத இந்த விசயத்திலும் அண்ணன் தனது அறிவை திணிக்கக் முற்பட்டதால் முரண்பட்டு நிற்கிறார்.

மேலும், சுன்னத் ஜமாஅத் பள்ளியில் எவ்வாறு நீட்டி முழங்கப்படுகிறதோ, அதுபோன்று தனது ஆதிக்கத்தில் இருக்கும் பள்ளிகளிலும் இவ்வாறு பாங்கை நீட்டி முழங்கி 'கொலை' செய்யப்படுவதாக வருத்தப்படும் அண்ணன், தனது மாவட்ட நிர்வாகிகளும், பிரச்சாரகர்களும் இந்த கொலையை தடுத்து நிறுத்த கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். அண்ணன் ஒரு ஹதீஸை பலவீனம் என்றால் ஏன் என்று கூட கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் தம்பிகளுக்கு, இந்த நீட்டி முழங்கி பாங்கு சொல்லும் கொலையைத் உடனடியாக தடுக்க ஒரு சுற்றறிக்கை அனுப்பினால் நாளையே தூதர்ஷன் செய்திபோல் 'பாங்கு' வாசிக்கப் போகிறார்கள். அதை ஏன் அண்ணன் செய்யவில்லை.

சரி. இவ்வளவு பேசும் அண்ணன் ராகம் போட்டு பாங்கு சொல்வது 'கொலை' என்ற தனது கருத்தில் உண்மையாளர் என்றால் தனது ஆளுமையில் கீழ் உள்ள தலைமையகத்தில் இன்றுவரை நீட்டிமுழக்கி பாங்கு சொல்வதை தடுக்காதது ஏன்? ஊருக்குத்தான் உபதேசமா?

குறிப்பு; அண்ணன் தனது ஆளுமையில் உள்ள தலைமையகத்தில் நீட்டி முழக்கி பாங்கு சொல்லப்படுவதில்லை என்று மறுத்தால், நாம் பதிவு செய்து வைத்துள்ள ஆடியோ டேப்பை வெளியிடுவோம். அதோடு தனது ஆளுமையில் உள்ள ஜமாத்தின் ஏனைய மர்க்கஸ்களிலும் பாங்கு நீட்டி முழக்கப்படுவதில்லை என்று அண்ணன் சொல்லத் தயாரா?
இது வரை நீங்கள் படித்தது 2012ல் போட்ட சவால் பதிவு. இனி கீழே உள்ளது ஆன்லைன் பீ.ஜே.யை அப்படியே தங்கள் பெயரில் ஆக்கி விட்ட தம்பிகளின் தற்போதைய பதிவு
ற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன.
பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும்.
பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை. இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்ய வேண்டும்.
வாசிக்கும் போது எங்கு நீட்ட வேண்டும்? எங்கு நீட்டக் கூடாது? என்று விதிமுறைகள் அரபுமொழியில் உள்ளன. அரபுமொழியில் அமைந்த பாங்கு இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்பட்டால் அதில் தவறில்லை. ஆனால் நடைமுறையில் பாங்கு இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்படுவதில்லை. பாங்கு சொல்பவர் தான் விரும்பிய இடங்களில் தன் விருப்பப்படி நீட்டிக் கொள்கிறார்.
உதாரணமாக அல்லாஹு என்று கூற வேண்டிய வார்த்தையை அல்லா……………………… என்று சில மணித்துளிகள் நீட்டி பிறகு  ஹு என்று கூறுகிறார். இது அரபு மொழியில் இல்லாத வழக்கு முறை. ஒரு வார்த்தையை அம்மொழி வழக்கிற்கு மாற்றமான முறையில் உச்சரித்தால் அது கேலியாகவும், கிண்டலாகவும் அமையும்.
ஹய்ய என்பதை ஹய்ய்ய்ய்ய்ய என்று நீட்டுவதும், அஷ்ஹது என்பதை அஷ்ஹதூஊஊஊ என்று நீட்டுவதும், இன்னும் பலவாறாக அரபு மொழிவழக்கில் இல்லாத வகையில் நீட்டுவதும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும் பாங்கு சொல்வது ஒரு வணக்கமாகும். அதைச் சொல்பவருக்கும், அதைக் கேட்டு பதிலுரைப்பவர்களுக்கும் மார்க்க அடிப்படையில் சிறப்புகள் இருக்கின்றன. வணக்கமாக இருக்கின்ற இந்தக் காரியத்தைச் சரியாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டுமே தவிர கேலிக்குரியதாக ஆக்கிவிடக் கூடாது.
முஅத்தின் பாங்கு சொன்னால் அதைக் கேட்பவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. தேவையின்றி பாங்கு நீட்டப்படும் போது பதிலளிப்பவர் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இடையில் பேச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நீட்டாமல் சாதாரண அறிவிப்பைப் போன்று பாங்கு கூறப்பட்டால் இது போன்ற சிக்கல் ஏற்படாது.
பாங்கில் ராகம் போடுவது கட்டாயமனதல்ல. ராகத்துடன் சொன்னாலும், ராகம் இல்லாமல் சொன்னாலும் அதில் தவறேதுமில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக நீட்டப்படுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிவாசல்களிலும் கூட பாங்கை நீட்டி முழக்கி கொலை செய்யப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சாரகர்களும், நிர்வாகிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
பாங்கு அரபி வார்த்தையும் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது. அரபியில் நீட்டி முழக்குகிற மாதிரி தமிழில் நீட்டி முழக்கிப் பாருங்கள். பாங்கில் ராகம் போடுவது, பாங்கை நீட்டிச் சொல்வது சரியா என்ற கேள்விக்கு உங்கள் உள்ளமே பதில் சொல்லும்
அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)
அல்லாஹு அக்பர் —( அல்லாஹ் மிகப்பெரியவன்)
அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)
அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என சாட்சி கூறுகிறேன்)
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் —( அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என சாட்சி கூறுகிறேன்)
அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என் சாட்சி கூறுகிறேன்)
அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் —-(முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என் சாட்சி கூறுகிறேன்)
ஹை யா லஸ்ஸலாஹ் ––(தொழுகையின் பக்கம் விரையுங்கள்)
ஹை யா லஸ்ஸலாஹ் —(தொழுகையின் பக்கம் விரையுங்கள்)
ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம் விரையுங்கள்)
ஹை யா லல் ஃபலா —(வெற்றியின் பக்கம்
விரையுங்கள்)
அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)
அல்லாஹு அக்பர் — ( அல்லாஹ் மிகப்பெரியவன்)
லா இலாஹ இல்லல்லாஹ்—(அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை)



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.