உறுதியாகி விட்டது என்று சமுதாயத்துக்கு நற் செய்தி கூறிய தலைவர் யார் தெரியுமா?


ஒரு மனிதர் (இரவில்) "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் 112ஆவது அத்தியாயத்தை ஓதினார். மற்றொரு மனிதர் செவிமடுத்தார். "குல்ஹுவல்லாஹு அஹத்' என்றே திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததையே மற்றொரு மனிதர் செவிமடுத்தார். 

(இதைக் கேட்ட) அந்த மனிதர் (காலையில்) விடிந்ததும் தலைவரிடம் வந்து அதைப் பற்றி (புகார் மாதிரி) கூறினார்.

அந்தச் சிறிய அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை இவர் சாதாரணமாக மதிப்பிட்டு விட்டார் போலும்

திரும்பத் திரும்ப "குல்ஹுவல்லாஹு அஹத்' ஓதியதை (புகார் மாதிரி) கூறியதைக் கேட்ட தலைவர் என்ன சொன்னார்? என்பதை அறியும் முன் இன்னொரு சம்பவத்தை பார்ப்போம்   
https://mdfazlulilahi.blogspot.com/2019/06/blog-post_48.html

இரண்டு பேர் (இரவில்) நடந்து சென்றார்கள். குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டு நின்றார்கள். குல்ஹுவல்லாஹு அஹது என்று ஓதும் சப்தம் வருகிறது. சிறிது நேரம் நிற்கிறார்கள். குப்வன் அஹது என்று முடித்து விட்டு மீண்டும் குல்ஹுவல்லாஹு அஹது என்றே ஓதுகிறார். 

112 ஆவது அத்தியாயமான சூரத்துல் இக்லாஸை திரும்பத் திரும்ப ஓதுவதையே செவியுற்றார்கள். குல்ஹுவல்லாஹு அஹது என திரும்ப திரும்ப ஓதுவதை கேட்டவர்களில் தலைவர் சொன்னார் வஜபத் - கடமையாகி விட்டது – உறுதியாகி விட்டது என்று சொன்னார்

உடனே உடன் இருந்தவர் உறுதியாகி விட்டதா? என்ன உறுதியாகி விட்டது?- என்ன கடமையாகி விட்டது? என்று கேட்டார். அதற்கு தலைவர் அவர்கள்  என்ன பதில் கூறினார்கள்? சொர்க்கம் (கடமையாகி விட்டது - உறுதியாகி விட்டது) என்று பதில் கூறினார்.

முதல் சம்பவத்தில் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆன் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்''  என்று சொன்னார்கள். 

ப்படி சமுதாயத்துக்கு நற் செய்தி கூறிய தலைவர் யார்? தெரியுமா அவர்தான் இறுதி துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள்.

முதலில் குறிப்பிட்டுள்ள ஹதீஸை அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 5013,5015,7374
இரண்டாவது குறிப்பிட்டுள்ள ஹதீஸை அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: நஸாயி 984

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.