நாம் யார் வழியில் செல்ல வேண்டும் என்பது முக்கிய விஷயமா? வரட்டு கவுரமா?

அல்லாஹ்வின் துாதர் அனுமதிக்காத வழியில் சென்றால் செல்லுமிடம் சொர்க்கமாக இருக்குமா? பிரிவினைவாதிகள் வழியில் சென்றால்   செல்லுமிடம் எதுவாக இருக்கும்? சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

ஹதீஸ் ஆதாரம் காட்டி விலகிப் போவது ஹராம் என்று  விலாவாரியாக  விளக்கியவர்கள்   சமுதாய   அமைப்புகளை  விட்டு விலகி போய்  இருக்கிறார்கள். 

 பிரிந்து  போயிருக்கிறார்கள். 
தனித்து போய் பிறகு  ஒன்றிலிருந்து  ஆரம்பித்து வெற்றி பெற்று    இருக்கிறார்கள்  என்று கூறி கூறு போட முயற்சி செய்பவர்களே கூறு போட கூறுபவர்களே!

 குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக கூறு போட்ட ஆலிம்ஸாக்களுக்கு அல்லாஹ் அளித்த கேவலத்தைப் பார்க்கவில்லையா? 


உலகில் யாராவது இந்த மாதிரி தங்கள் நாவால் மாட்டி கேவலப்பட்டு இருக்கிறார்களா? புகழ்ந்து தலையில் துாக்கி வைத்து ஆடியவர்கள் கால்களாலேயே எட்டி உதைக்கப்பட்டு சந்தி சிரிக்கும் கேவலத்தை அடைந்துள்ளார்களா? சி்ந்தியுங்கள். 

இம்மை வெற்றியா மறுமை வெற்றியா? எது முக்கியம்? 

 நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பது முக்கிய  விஷயமா? வரட்டு கவுரமா?

இறைத்துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்த தோழர் ஒருவர். அல்லாஹ் வின் துாதரே நான் பல பகுதிகளுக்கு போனேன் போகும்போது ஒரு இடத்தில் அழகான சுவையான நீரூற்று ஒன்று இருக்கிறது. அதற்கு அருகில் அழகான மரம் செடி கொடிகள் இருக்கின்றன. அந்த நீரூற்றை  குடித்துக் கொண்டும் இலைகளை சாப்பிட்டுக் கொண்டும் அங்கேயே   வாழ்க்கையை கழித்து விடலாம் என்று எண்ணுகிறேன்.

இதன் மூலம் முழுமையாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியும்.   முழு நேரமும் அல்லாஹ்வை திக்ரு செய்து கொண்டு இருக்க முடியும். தவறுகளில் ஈடுபட வாய்ப்புகள் இல்லை. பொய் சொல்ல வேண்டிய   நிலை இருக்காது.  ஹராமானது கலந்து விடும் என்ற பயம் இல்லை. வேறு எந்த தவறுகளிலும் ஹராம்களிலும் ஈடுபட வாய்ப்புகள் இல்லை.  எனவே முழுமையாக நல்ல செயல்களை மட்டுமே நான் செய்ய முடியும். என்ற அடிப்படையில் தோழர் கேட்டார். 

அதற்கு அல்லாஹ்வின் துாதர் நான் யூத மார்க்கத்தை கொண்டு   வரவில்லை.

 கிறிஸ்தவ மார்க்கத்தை கொண்டு வரவில்லை. 
வெள்ளை வெளேர் என்ற தெளிவான துாய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை   கொண்டு வந்து இருக்கிறேன். 
அதிலே இதற்கு அனுமதி இல்லை என்று.

ஸஹாபி கேட்ட நோக்கம் நல்ல நோக்கம்தான். காரணங்களும் உண்மையானவைதான். எவ்வளவு நல்ல நோக்கமாக இருந்தாலும் என்ன   காரணத்தைக் கொண்டும் சமுதாயத்தை விட்டு, சமுதாய அமைப்பை விட்டு, ஏற்கனவே இருக்கிற சமுதாய கட்டமைப்பை விட்டு  தனித்து போவதற்கு   அனுமதி இல்லை.  பிரிந்து போவதற்கு   இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

தனித்து போனவர்கள் வலுவாக ஆகி இருக்கிறார்களே! 

போன   நோக்கத்திலே சொன்ன மாதிரி வெற்றி கண்டு இருக்கிறார்களே! 

சிறிய கூட்டமாகப் போய்   பெரிய    கூட்டமாக    ஆகி   இருக்கிறார்களே!   

இப்படி கேள்விகள் வரலாம். தனித்து போவதற்கும் பிரிந்து போவதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா என்பதுதான் முக்கிய கேள்வி. 

இல்லை அது நபி வழி இல்லை என்றாகி விட்ட பிறகு உலகில் கிடைத்த வெற்றியினால் என்ன பயன்.

அல்லாஹ்வின் துாதர் அனுமதிக்காத வழியில் சென்றால் செல்லுமிடம் சொர்க்கமாக இருக்குமா?

 பிரிவினைவாதிகள் வழியில் சென்றால் செல்லுமிடம் எதுவாக இருக்கும்? சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நபி வழி நடந்தால் நரகமில்லை. அதை நாடாத பேர்களுக்கு சொர்க்கமில்லை, சொர்க்கமில்லை என்பதை தமிழ் கூறும் உலகம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. 

இது சம்பந்தமான ஹதீஸ்களை விட இந்த தமிழ் வசனம் பெரும்பாலான தமிழர்களுக்கு தெரிந்த ஒன்று. தமிழ் முஸ்லிம்கள் தெரியாமல் இருப்பார்களா?

தனித்து வாழ முடியாது அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதை   முன்பு  எழுதி இருக்கிறோம். 

சமுதாய அமைப்பு வேண்டாம் நான் முழு நேரமும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடப் போகிறேன் என்று சொல்லி சமுதாயத்தை விட்டு ஒருவர்   ஒதுங்கினால் அவருக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்பதுதான் ஹதீஸ்.

எதற்காக ஒதுங்கினார் தொழுவதற்காக, நோன்பு நோற்பதற்காக, ஹராமான உணவு கலந்து விடக் கூடாது என்பதற்காக இலை தழைகளை உண்ண முடிவு செய்தார்.

 சமுதாயத்தோடு கலந்து இருந்தால்தான் பொய், புறம், பித்தலாட்டம், கோல்மால், தில்லுமுல்லு, திருட்டு போன்ற தப்புகள் செய்யும் நிலை ஏற்படும். 

 அதை செய்யாமல் தப்பிப்பதற்காகத்தான் நல்ல நோக்கத்தோடு ஒதுங்க எண்ணுகிறார்.

இப்படி நல்ல நோக்கத்திற்காக சமுதாயத்தை விட்டு ஒதுங்க எண்ணினால் எண்ணம் நல்ல எண்ணம்தான். ஆனால் அவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று ஆகி விட்ட பிறகு நல்ல எண்ணம் இருந்து  என்ன பயன்.

பிரிந்து செல்பவர் யூத மார்க்கத்தை நோக்கி போகிறார். கிறிஸ்தவ மார்க்கத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறார். என்று நாம் கூறவில்லை. நபிகள் நாயகம் கூறி உள்ளார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்த வரை சமுதாய கட்டமைப்பை விட்டு கூட்டமைப்பை விலகுதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சமுதாய கூட்டமைப்பில் இணைந்துதான் ஒரு தலைமையின் கீழ் தான்  வாழ்ந்து ஆக வேண்டும்.

சமுதாய கட்டமைப்பு  கூட்டமைப்பு அவசியம் என்பதை அனுபவ ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் இந்த காலத்திற்கு தேவையான வாத ரீதியாகவும் முன்பு விளக்கி விட்டோம். மார்க்க ரீதியாகவும் ஹதீஸ்  ஆதாரம் வைத்து விளக்கி விட்டோம்.

ஒருவருக்கு பொய் சொல்லக் கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு பொய் சொல்லாமல் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால்தான் அவர் உண்மையாளர் என பாராட்டைப் பெறுவார். அதற்குரிய நன்மையை அடைவார். 

சமுதாய கட்டமைப்பை விட்டு, பிரச்சனைகளை விட்டு ஒதுங்கி இருப்பவருக்கு பொய் சொல்வதற்கு வாய்ப்பே ஏற்படாது. அப்படிப்பட்ட ஒருவர் நான் பொய்யே சொன்னதில்லை என்று சொன்னால் அதில் பெருமையும் கிடையாது நன்மையும் கிடையாது.

இது போல்தான் ஒவ்வொன்றும் நல்லவன், வல்லவன், உண்மையாளன், நேர்மையாளன் என்பதெல்லாம் அந்த சூழ்நிலைகளில் இருந்து கொண்டு சரியாக நடந்து தன்னை கட்டுப்படுத்தியவன்தான். 

புறம் பேசும் சூழ்நிலை வந்தும் புறம் பேசாமல் இருப்பவரைத்தான் நல்லவர் என்று சொல்லுவோம். 

அது போல் சமுதாய அமைப்பை, கட்டமைப்பை, கூட்டமைப்பை உடைக்கும் நிலை ஏற்பட்டும். அதைச் செய்யாமல்  தலைமைக்கு கட்டுப்பட்டு  இருப்பவரே சமுதாய நலன் விரும்பி. 

பிரிந்து செல்வதற்கும் தனித்து செல்வதற்கும்   வாய்ப்புகள் இருந்தும் அதைச் செய்யாதவர்களே சமுதாய நலனில் அக்கறை உள்ளவர்கள். இஸ்லாத்தை பேணுபவர்கள். 

பிரிந்து செல்பவர் யூத மார்க்கத்தை நோக்கி போகிறார். கிறிஸ்தவ மார்க்கத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறார். நாம் சொல்லவில்லை மேற்கண்ட ஹதீஸில் நபிகள் நாயகம் சொல்லி உள்ளார்கள்.

பிரிந்து செல்வதற்கு தனித்து செல்வதற்கு துாண்டுவது ஆத்திரத்தை ஏற்படுத்துவது ஷய்த்தான்களின் வேலை.

 ஷய்த்தான்களின் துாண்டுகோளில் இருந்து விடுபடுபவர்கள் ஆத்திரத்தை அடக்குவார்கள். 
தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவர்கள் வருந்தியாக வேண்டும். தப்பு செய்தவர்கள் திருந்தி ஆக வேண்டும்.

வீரமாக பேசத் தெரிந்தவர்கள் பின்னால்தான் மக்கள் வருவார்கள். எனவேதான் வீரமாகபேசத் தெரியாதவர்கள் அடங்கிப் போய் விட்டார்கள். அதனால் ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளது.  கூட்டம் அல்லாஹ் நாடினால் யார் பின்னால் வேண்டுமானாலும் வரும்.

மேடையில் பேசத் தெரிந்தவர்களை விட மேடையில் பேசத் தெரியாதவர்களின் கையில்தான் பெரும்பாலான நாடுகளின் ஆட்சி உள்ளது. நாம் யார் பின்னால் போக வேண்டும் என்று சிந்திக்காமல், யார் வழியில் நடக்க வேண்டும் என்று சிந்தியுங்கள்.

 நபி வழி நடந்தால் நரகமில்லை. அதை நாடாத பேர்களுக்கு சொர்க்கமில்லை, சொர்க்கமில்லை.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.