நீயா? நானா? இது விஜய் T.V. நிகழ்ச்சி அல்ல ஸைபுத்தீன் ரஷாதி Vs பி.ஜெய்னுல் ஆபிதீன் நீயா? நானா?

 வாதத்தின் போது தங்களை அறியாமல் தவறான தகவல்களை கூறி இருந்தால் அல்லாஹ் அவா்களை மன்னிப்பானாக. பொய்களை வேண்டும் என்று யார் கூறி இருந்தாலும் பாதிக்கப்பட்டவா்களின் பிரார்த்தனைகளின் பலன்களை அவரவா்கள் பெறுவார்கள்.  இதை குறிப்பிட்டு எழுதி விட்டுத்தான் 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/tv-vs.html

மறைந்த மவுலவி ஸைபுத்தீன்  ரஷாதி,  மவுலவி பி.ஜெய்னுல் ஆபிதீன் உலவி ஆகிய இருவரும் செய்த  முனாழராவை -  விவாதத்தை  அப்படியே எழுத்து வடிவிலும் நடுநிலையோடு தந்து வருகிறோம் எழுத்து வடிவு ஒத்துப் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்  என்பதால். 

ஆன் லைன் பீ.ஜே.யில் இருந்துதான் வீடியோ லிங்குகளையும் வெளியிடுகிறீர்கள்  என்று விமர்சனம் செய்த சகோதரர்கள் திருப்திக்காக சுன்னத் ஜமாத் வெளியிட்டதில் இருந்தே ஸைபுத்தீன்  ரஷாதி Vs  பி.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரின்  நீயா? நானா? லிங்கைத் தருகிறோம். 

இதோ சுன்னத் ஜமாத் லிங்




PJ ஒழுங்கா உஸுலுல் பிக்ஹ் படிக்கலெ என்று  ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு உஸுல் பிக்ஹ் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று பீ.ஜே. அளித்த பதிலை எழுத்து வடிவில் இதில் காண உள்ளீர்கள். 



பி.ஜே.யின் 3ஆவது விளக்க உரையும் கேள்விகளும்.

அன்பிற்குரிய சகோதரா்களே! இஜ்மாஃ மார்க்க ஆதாரம் என்று வாதிட வந்து விட்டு ஆதாரம் வைக்கலேன்னு, சொன்ன பிறகும் கூட அவா் (ஸைபுத்தீன் ரஷாதி) ஆதாரம் வைக்கலே. கடைசி வரைக்கும் ஆதாரம் வைக்கிறேன்னுதான் சொல்லிட்டு இருப்பார்.

இஜ்மா என்பது அவா் எதை இஜ்மா என்று சொல்கிறாரோ அதுக்கு என்ன ஆதாரம்? நீங்க இஜ்மா செஞ்சீலே. நீங்க குா்ஆனை இஜ்மா ஆதாரம் ன்னுட்டு (என்று) எதை வச்சு சொல்றீங்க முத நிறுவுங்க. (இ)ரண்டாவது கேள்வி கேளுங்க. அதுக்கெல்லாம் பதில் இருக்கு.

ரொம்ப ஆத்திரப்பட்டு டென்சன் படுறதுலையெல்லாம் நன்மை இல்லை. டென்சன் நீங்க பட்டா நாங்க அதைவிட கூட பட்டுடுவோம். நல்லா இருக்காது. நிதானமா கருத்துக்களை என்ன செய்யுங்க எடுத்து வையுங்க. ஆத்திரப்படுற விதமாக நீங்கள் பேசுவீா்களேயானால் அந்த மாதிரி எங்களுக்கு பேச தெரியும் ஆனா அதுவரைக்கும் வர மாட்டேன். நிதானமா கருத்த கருத்தாக என்ன செய்யணும். எடுத்து வைக்கணும். அதை அறிவுரையா சொல்லிக் கொள்கிறேன்.

அடுத்து என்னன்னடு கேட்டா. ஆதாரம், ஒரு ஹதீஸ எடுத்து வச்சாங்க. அந்த ஹதீஸு சம்பந்தமா நான் ஏன் சொல்லலைன்னு கேட்டா. அதுக்கு ஒரு தலைப்பு இருக்கிறது. அந்த விவாத ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த ளயீபான ஹதீஸ்கள் விஷயத்திலே என்ன மாதிரி நிலைபாடு எடுக்கிறதுண்னு. அதனாலதான் நம்ம இத ளயீபா இருந்தாலும் ஏத்துக் கொள்வோம் ங்றது அவரது கொள்கை ங்றார்.

அவா் கொள்கையில் நின்று வாதிக்கிறதுனாலே அதை ஏற்றுக் கொண்டு நான் வாதிக்கிறேன் அவ்வளவுதான். ஏற்கனவே சொன்னாங்க. ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். ஏற்கனவே சில விஷயங்களை தவறாக ளயீபான ஹதீஸுன்னு சொல்லி இருப்போம். பிறகு சரின்னு தெரிய வரும் சரின்னு சொல்லிட்டு தவறுன்னு தெரிய வரும்.

உதாரணமா(க) சொல்வதா இருந்தால், அபூஹனீபா அவா்கள் வந்து நான் வாழ்க்கையிலே பார்த்ததிலேயே ஜாபிருல் ஜுஃபி என்பவனைப் போல ஒரு பெரும் பொய்யனை பாக்கலை. அப்டிங்றாரு. 

எல்லாரும் இஜ்மா ஒரு முடிவு எடுத்து வச்சிருக்காங்க. அதுக்கு மாத்தமா உடைக்கிறதுக்கு அபூஹனீபா இமாம் வந்து இந்த ஜாபிருல் ஜுஃபி என்பவருடைய ஹதீஸை எடுத்துப் போட்டு என்ன செய்றாரு. யாரு பொய்யன். நான் வாழ்நாள்ல பார்த்ததிலேயே மகா பொய்யன். அந்த ஆள்தான்னு சொல்லிப்புட்டு. அவர் ஹதீஸை ஆதாரமா வச்சிகிட்டு இஜ்மாவை மறுக்கிறார். அபூஹனீபா இமாம்.

இதை இப்னு ஹிப்பான் அவா்கள் பெரிய ஆச்சரிமாக இருக்கிறது. உனக்கு பிரச்சனை நெருக்கடி வந்த உடனே பொய்யன்(எல்)லாம் நல்லவனா ஆயிடுவானா அப்படின்னு ஸஹீஹ் இப்னு ஹிப்பான்ல அத கேட்கவும் செய்கிறார். 

இது வந்து நல்லவா்னு நினைத்து விட்டு கெட்டவா்னு கருதுறது வேற. கெட்டவா்னு சொன்னவா் நல்லவராவது அஜபுதான். ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை சொன்னாங்களே அதையும் இதே மாதிரி கேளுங்க. இப்ப கேட்ட மாதிரி சரியா?

இது டாபிக்கு தனி டாபிக்கா இருக்கிறதுனாலே அதுக்குள்ளே போகலே சொல்லிக் கொள்கிறேன். அதே மாதிரி நஜாத்ல எழுதினதையெல்லாம் மறுக்க மாட்டோம். நஜாத் பத்திரிக்கை ஓப்பனாத்தான் இருக்கு. ஒளிச்சு வச்சிக்கிற விஷயம் கிடையாது.

அடுத்து வந்து உஸுல் பிக்ஹ் நம்ம படிக்கலே அப்படீங்றாங்க. உஸுல் பிக்ஹ் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் எழுதி வைத்துக் கொண்ட ஒரு புத்தகத்தை நான் படிக்க வேண்டிய தேவை கிடையாது. நீங்கள் உஸுல் பிக்ஹுன்னு எழுதி இருக்கிற விஷயம் வண்டவாளங்களெல்லாம் எடுத்து விட்டோம்னு சொன்னா ரொம்ப அசிங்கமாகிப் போயிடும். அதனாலே உஸுல் பிக்ஹ நான் படிக்கலேன்னா படிக்கலேன்னு பெருமைதான் எனக்கு விளங்குதா.

விமா்சனத்திற்காக நான் சில நேரங்களில் படித்திருக்கிறேனே தவிர, அதுலே ஒன்னும் ஏத்துக் கொள்ளத் தக்க எந்த வாதமும் இருக்காது. எந்த லாஜிக்கும் இருக்காது. உஸுல் என்றால் ஒரு லாஜிக்கு, ஒரு அறிவுப்பூா்வமான எந்தக் கேள்விக்குனாலும் ஆன்சா் பண்ணக் கூடிய வகையிலே எழுதப்பட்டணுமில்லையா, அந்த அடிப்படையில் இது கிடையாது. அத வந்து நான் பதிலாக சொல்லிக் கொள்கிறேன்.

அடுத்து என்னான்னு கேட்டா குா்ஆனை நம்புறோமே இஜ்மாதானே அப்டீங்கிறாங்க. இந்த இஜ்மாஃ என்கிறதை சொல்வதற்காக எவ்வளவு பெரிய ஒரு அறியாமை நிறைந்த வாதத்தை வைக்கிறாங்க. குா்ஆனை நம்புகிறோம் என்று சொன்னால். அல்லாஹ்வுடைய ரசூல் அதை குா்ஆன் என்று சொன்னார்கள். முடிவு அல்லாஹ்வுடைய ரசூல் சொன்னதுதான். அந்த செய்தியை நமக்கு ஸஹாபாக்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளா்தான் அதிகமாக இருந்தாங்களே தவிர. குா்ஆன் என்று அவா்கள் முடிவு எடுத்தது தான் ஆதாரமா எங்களுக்கு?

அல்லாஹ்வுடைய ரசூல் அதை குா்ஆன் என்று சொன்னார்கள் (என்பது) ஒரு ரிவாயத்து. அந்த ரிவாயத்தை ஒட்டு மொத்த சமுதாயம் அடுத்த சமுதாயத்திற்கு சொல்லுகிறது. அப்ப ரிவாயத்து- ராவிகள் அதிகமாக இருக்கிறார்கள் அவ்வளவுதான். குா்ஆன் என்று தீா்மானித்தது அவா்கள்தானா? அவா்கள் தீா்மானிக்கா விட்டாலும் நாங்கள் எடுத்துக் கொள்வோம். 

10பேர் மட்டும்தான் சொல்லி இருந்து அல்லாஹ்வுடைய ரசூல் சொன்னார்கள் என்று ஆதாரம் கிடைத்தால், அதை நாங்கள் ஏற்றுக்  கொள்வோம். அப்ப ரிவாயத்து அதிகமாகுது இஜ்மாவாம். எல்லாம் கூடி கூடிதான் முடிவு எடுக்கிறோமாம். என்று இது இஜ்மாஃ என்கிறார்கள்.

அதாவது கருத்தை ஏற்றுக் கொள்வது என்பது வேறு தகவலை ஏற்றுக் கொள்வது என்பது வேறு. இதெல்லாம் தகவல். நான் ஒரு செய்தியை சொல்லுகிறேன் அதை நீங்கள் 100போ்களிடம் எடுத்து சொல்கிறீா்கள் என்று  சொன்னால் அதிலே (அந்த கருத்திலே) உங்களுக்கு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. 

நான் சொன்ன செய்தியை எடுத்து எடுத்து சொல்லிக் கொள்கிறீா்கள். அந்த மாதிரி 1000பேரிடம் போவதனாலே அந்த கருத்துக்கு அவா்கள் சொந்தமாக ஆகி விடமாட்டார்கள். அந்த முடிவுக்கு அவங்க சொந்தக் காரா்களாக ஆகி விடமாட்டார்கள்.

அதனாலே குா்ஆனை ஏற்றுக் கொள்கிறீா்களே என்று கேட்டால் இது ஒரு வாதமா அறிவுடையோர் வைக்கக் கூடிய ஒரு வாதமா நல்லா (நன்றாக) தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து என்ன செய்றாங்கன்னா நம்ம ஸகாத்து சம்பந்தமா, அவா் எடுத்து காட்னார். நானே கூட சொல்லி விடுவேன். எடுத்தெல்லாம் காட்ட வேண்டியதெல்லாம் கிடையாது. நாங்க எதை சொல்லி இருந்தாலும் நீங்கள் ஆதாரத்தை காட்டவா காட்டவா என்று பயம் காட்ட வேண்டாம். நானே கூட எடுத்து எடுத்து காட்டி புடுவேன் (விடுவேன்) விளங்குதா.

ஏகத்துவம் பத்திரிக்கையிலே நம்ம எழுதி இருந்தோம். ஸகாத் கொடுத்த பொருளுக்கு திருப்பி திருப்பி கொடுக்கலாமா? அதைப் போய் தலைப்பு ஆக்கி விடாதீா்கள். தனி தலைப்பு இருக்கிறது. அதனாலே நீங்க இஜ்மாஃ விட்டு கடந்து போய் விடாதீங்க. ஒரு தகவலுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

அது எழுதும்பொழுது இது சம்பந்தமா வரக் கூடிய எல்லா ஹதீஸையும் எல்லாரும் கூடி ஆய்வு செய்தோம். எல்லாவிதமான மாற்றுக் கருத்துடையதை பரிசீலித்தோம். இன்னன்னார் கூடினோம். கூடி தயாரித்து இதை வெளியிட்டு இருக்கிறோம். என்று முன்னுரையில் எழுதி இருக்கிறோம். அது அழிக்கவில்லை. அப்படித்தான் இருந்து கொண்டு இருக்கிறது. அந்த கருத்தில் எங்களுக்கு எந்த ஒரு மறுப்பும் கிடையாது. ஆனால் நாங்களெல்லாம் ஒன்றாக சோ்ந்து எடுத்ததாலே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நாங்கள் சொன்னோமா?

ஒன்றாக சோ்ந்து நாங்கள் ஆய்வு செய்து எடுத்திருக்கிறோம் இது ஒரு இன்பா்மேஷன் (தகவல்). அதுதான் ஆதாரம் என்று சொன்னோமா? நாங்க ஒன்னா சோ்ந்து சொல்லி இருந்தும் அது தவறா இருந்தா ஏற்றுக் கொள்ளக் கூடாது. நாங்கள் ஒன்றாக சோ்ந்து முடிவு எடுத்து சரியாக இருந்தால்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு பேரு (ஆய்வு) செய்து இருக்கிறோமே அது கூட ஏன் சொல்லுகிறோம் என்று கேட்டால், இவுங்களுக்குள்ளே வெட்டு குத்து நடக்குது என்று ஒரு பிரச்சாரம் பண்ணினாங்க. ஸகாத் விஷயமா பி.ஜே.க்கு ஒரு கருத்து மற்ற உலமாக்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது. என்று சில மேடைகளில் பேசப்பட்டதற்குத்தான், ஒரு கருத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். ஆய்வு செய்து ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்று சொல்ல அவசியம் வந்ததே தவிர. 

நீங்களெல்லாம் கூடி இஜ்மாஃ எடுக்கலாமா என்றால், அதை ஆதாரமாக காட்டினோமா? நாங்கள் அனைவரும் சோ்ந்து எடுத்து விட்டோம். அதனால் நீங்கள் கண்டிப்பாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது ஒரு மார்க்க அதாரம் (என்று) சொன்னாமா நாங்க? இதைத்தான் ஆதாரமாக காட்டுகிறார்கள். இஜ்மாவுக்கு உங்கள் ஆதாரத்தை எடுத்து புட்டு புட்டு வைப்பீங்களா இது என்ன ஒரு கேள்வி கேட்கிறீா்கள் எனக்கு தெரியவில்லை.

அதற்கப்புறம் அநாகரீகமாக பேசி இருக்கிறார். கிறுக்கன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் என்கிறார். நான் வந்து அவரை அந்த மாதிரி பேசினார் என்று எடுத்து போட்டார் என்று வையுங்க. நம்ம ஸைபுத்தீன் ரஷாதி உடைய அநாகரீகத்தை நான் எடுத்து போட்டேன்  வைங்க, சகிக்காது வைத்திருக்கிறேன்.

என்னன்ன மாதிரி ஒரு அன் பார்லிமெண்ட் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிறார். என்பதற்கு அது வந்து நிறைய வேறு தலைப்பு இருக்கிறது. அதுக்கு நாளைக்கு தலைப்பு இருக்கிறது. இன்னைக்கு தலைப்புலே தேவை இல்லாமல் இழுக்கிறாரு. அதனாலே அதை விட்டு விடுவோம். தேவைப்பட்டால் அதை எடுத்து போடுவோம்.



பீடி உதாரணம் பீடி வந்து ஒரு ஆயத்தை காட்டி இவா் சொன்னாரு. ஆமா ஆயத்தைக் காட்டி சொன்னேன். அதை எல்லாரும் சோ்ந்து கூடி எடுத்தா தப்பா என்று கேட்கிறீா்கள். சரி எல்லாரும் கூடி சோ்ந்து பீடி குடிக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். நான் ஒரு ஆள் மட்டும் இந்த ஆயத்தை வைத்த சொல்கிறேன். அப்ப எதை எடுத்துக் கொள்வது.

லாதுல்கூ பீ அய்தீகும் இலத்தஹ்லுக என்ற ஒரு ஆயத்தை வைத்து, வலா தக்துலுா அன்புஸகும் என்கிற ஆயத்துகளை வைத்து உங்களை நீங்களே கொள்ளாதீா்கள். வசனத்தை வைத்து பீடி குடிக்காதீா்கள் என்று நான் சொல்கிறேன். ஆயிரம் போ் கூடி நின்று இல்லை இல்லை குடிக்கலாம் என்கிறார்கள். இப்ப எதை எடுத்துக் கொள்வது.

ஆதாரத்தின் அடிப்படையில் உள்ளதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஆள் சொன்னதை (ஏற்றுக் கொள்வீா்கள்) 10போ் சொன்னா ஏற்றுக் கொள்ள மாட்டீா்களா (என்கிறீா்கள்) கரக்டாக இருந்தாதான் எடுத்துக் கொள்ளனும்.

ஒரு ஆள் சொன்னது கரக்டா இருந்தா ஒரு ஆள் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிகமான போ் சொல்வது ஆய்வு ஆதராங்களை கொண்டதாக இருந்தால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிவு ஆதாரத்தை வைத்துதானே தவிர, ஆட்களுடைய எண்ணிக்கையை வைத்து கிடையாது. இந்த அடிப்படையைக் கூட விளங்காமல் என்ன செய்றாங்க. இதெல்லாம் ஒரு பெரிய கேள்வியாக கேட்கிறார்கள்.

அதோடு என்ன செய்றாங்க பீ.ஜெ. பீடி குடிக்கிறதுக்கு ஆதாரம் இருக்கிறது. சாட்சி இருக்கிறது.


எந்த சாட்சி அந்த சாட்சியைப் பற்றி அலசி விட்டுடுவோமா? இப்ப நடந்த சம்பவம் வரைக்கும் சொல்ல வேண்டி வந்து விடும். சாட்சி என்றால் சாட்சி அது தகுதியான ஆளாக இருக்க வேண்டும் அல்லவா.

அப்ப இந்த மாதிரியெல்லாம்போற போக்கிலே சொல்கிற மேட்டரெல்லாம் இருக்கே. இதெல்லாம் தலைப்புக்கு அப்பால் பட்டது. ஒரு விஷயத்தை சொல்வதாக இருந்தால், இஜ்மாவுக்கு இது ஆதாரம் அதை சொல்லுங்க. நாங்க சொன்னதுக்கு மறுப்பை சொல்லுங்கள் அதை விட்டு விட்டு இந்த மாதிரியெல்லாம் சொல்வது சரி இல்லை.



அப்புறம் பாருங்கள். இஜ்மாஃ என்பதற்கு இப்ப ஒரு விளக்கம் சொன்னாருல்ல. அதை சொல்லுங்க. இஜ்மாவுக்கு அவா் போட்ட விளக்கம். இஜ்மான்னா என்னான்னு விவாதத்திலே ஒன்னு பேசுறாரு பாருங்க. இஜ்மான்னா என்னான்னு அவா் என்னன்னவெல்லாம் பேசி இருக்கிறார் பாருங்கள். சபைக்கு தகுந்தவாறு இஜ்மாவுக்கு விளக்கம்.

ரசூலுல்லாஹ் காலத்திலிருந்து. இன்னைக்கு வரைக்கும் ஒருவா் கூட சங்கிலியா இருக்கணுமாம். ஒருவா் கூட மாற்றம் இல்லாமல் சொல்வதுதான் உஸுலுல் பிக்ஹ்லே இஜ்மாஃன்னு சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். ஆனால் உஸுலுல் பிக்ஹில் அப்படி இல்லை என்று இப்ப சொல்கிறார். உஸுலுல் பிக்ஹ் யார் படிக்கவில்லை என்பது இப்ப விளங்கிப் போச்சு.

ஸைபுத்தீன் ரஷாதி அவா்களின் ஆடியோ உரை போட்டு காட்டப்படுகிறது அதில் ரஷாதி அவர்கள்,

சமுதாயம் தொடா்ந்து அங்கீகரித்து வருவதுதான் பெரிய ஆதாரம் சகோதரா்களே. இந்த இஸ்லாமிய சமுதாயம் எதைத் தொடா்ந்து அங்கீகரித்து வந்திருக்கிறதோ இது பலமான ஆதாரங்களில் மிகப் பலமான ஆதாரம். 

அதைத்தான் இங்கே கிதாபுகளிலே இஜ்மாஃ என்று சொல்லுவார்கள். இவரு இஜ்மாவுக்கு நடைமுறைன்னு அா்த்தம் செஞ்சிட்டு அதை பலித்து பேசுறது. இஜ்மா என்று எதுக்கு சொல்றதுன்னு சொன்னா, நபியினுடைய காலத்திலிருந்து இன்று வரைக்கும் இருந்த முஸ்லிம்கள் அத்தனை பேரும், அதை ஒருவா் கூட மாற்றம் செய்யாமல், அப்படியே பாலோ பண்ணி வந்திருப்பாங்களே, அப்படியே ஏற்றுக்கிட்டு வந்திருப்பாங்களே, இதுக்கு பேரு இஜ்மாஃ. இது மிகப் பெரிய ஆதாரம் பலமான ஆதாரம். இந்த ஆாரத்துக்கு புகாரி உடைய லெவலுக்கு ஆதாரமெல்லாம் ஆதாரமே இல்லை. அதைவிட இது பலமான ஆதாரம். என்கிறார்.

பி.ஜே. தனது உரையை தொடா்கிறார் அதில் பி.ஜே,

அப்ப இஜ்மான்னா என்ன சொல்கிறார் என்றால் இப்ப கூட கூடி எடுக்கலாம் என்கிறார். புதியது பிரச்சனைக்கு எடுக்கலாம் என்று இப்ப சொல்றாரு. ஆனால் உஸுலுல் பிக்ஹ்லே என்ன இருக்கு என்கிறார். உஸுலுல் பிக்ஹ்லே இருக்கு என்றுதான் இப்பவும் சொன்னாரு. இதையும் உஸுலுல் பிக்ஹ்லே  இருக்கு என்றுதான் சொல்கிறார். 

நான் கல்வியை 40 வருஷம் படிச்சு கொடுத்திருக்கிறேன் என்றெல்லாம்  சொல்வார். அதெல்லாம் தனியா வச்சிருக்கிறேன். இஜ்மாஃக்கு சொன்ன விளக்கத்தை. பல விளக்கம். இஜ்மாஃவுக்கு அவா் சொன்ன பல்டிகளை பார்த்தீங்கன்னு சொன்னா, இப்ப இவ்வளவு கேள்வியும் கேட்டேனே அதுக்கெல்லாம் காரணத்தோடத்தான் கேட்டிருக்கிறேன். எல்லா இஜ்மாவும் சொல்றாரு அவரு.

அப்ப என்ன சொல்கிறார் என்று கேட்டால் ரசூலுல்லாஹ் காலத்திலிருந்து இன்னைக்கு வரைக்கும் ஒருத்தா் கூட மாற்றம் செய்யாமல் சொல்வதுதான் இஜ்மா. (அப்படி) என்றால், ரசூலுல்லாஹ் காலத்திலே இருந்து விட்டது அல்லவா. அதற்கு பிறகு ஏன் இஜ்மாஃ? 

ரசூலுல்லாஹ் காலத்திலே இருந்து இன்னைக்கு வரைக்கும் ஒருத்தா் மாற்றம் செய்யவில்லை என்று சொன்னால் அதிலிருந்து இஜ்மா தேவை இல்லை என்றுதானே விளங்குகிறது. அதுதான் ரசூலுல்லாஹ் காலத்திலே இருந்து விட்டதே. ரசூலுல்லாஹ் காலத்திலே அது மார்க்கமாக ஆகி விட்தே. அப்ப அதற்குத்தான் நான் கேட்கிறேன் இஜ்மாஃன்னா என்னான்னு அதை விளக்குங்கள்.

அதுபோக நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் ஒழுங்காக பதில் சொல்லவில்லை. நீங்கள் சொன்ன இந்த இஜ்மாவை.  இந்த (ஆடியோ) இஜ்மா. இந்த (மேடையில் சொன்ன) இஜ்மா. இரண்டு இஜ்மாஃ.  

ஒன்று இந்த கிளிப்பிங்கில் நான் சொல்லிக் காட்டுகிற இஜ்மாஃ இன்னும் நிறைய இஜ்மாஃ ஒன்னு ஒன்னா போடுவேன். இப்ப இந்த சபையிலே 2 இஜ்மாஃ வந்து விட்டது. இப்ப என்ன சொல்கிறீா்கள். 

ஒவ்வொரு காலத்தில் உள்ள உம்மத்துகளாகக் கூடி ஆய்வாளா்கள் கூடி முடிவு செய்வது இஜ்மாஃ என்கிறீா்கள். இப்ப நம்மளா கூடி முடிவு செய்யலாம் என்கிறீா்கள். அந்த முடிவுதான் இஜ்மாஃ என்று சொன்னால், நீங்கள் சொன்ன இந்த இஜ்மாதான் எல்லாரும் இஜ்மா என்று சொல்கிறார்களா? 

இதுக்கு மாற்றமா வேறு ஒன்றை இஜ்மா என்று சொல்லி உங்களைவிட பெரிய பெரிய அறிஞா்கள் சொல்லி இருப்பார்களேயானால் அவா்கள் காபிர்களா? வழி கேடா்களா? அல்லது சுன்னத் ஜமாஅத்துக்கு எதிரிகளா? இதுதான் ஒட்டு மொத்த சமுதாயம் நீங்க சொன்ன அந்த இஜ்மா என்ற கருத்தில்தான் இஜ்மா செய்திருக்கிறார்களா?

இப்ப நீங்கள் சொன்னீங்களே இஜ்மாஃலே இஜ்மா இல்லை (என்று) காட்டி விட்டதே. இஜ்மாஃலே இஜ்மா கிடையாது. இந்த (சி.டி. உரையிலே) ஒரு இஜ்மா  இந்த (மேடை. உரையிலே) ஒரு இஜ்மா நிழல் (சி.டி. உரையிலே) ஒரு இஜ்மா நிஜம் (இந்த மேடை. உரையிலே) ஒரு இஜ்மாவாக இருக்கிறது.

அப்ப இஜ்மாஃ என்பதிலேயே வந்து ஒரு கருத்து இல்லை. அதற்காகத்தான் கேட்கிறேன். எந்த இஜ்மாவை சொல்றீங்க. கேள்விகள் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் அதற்கும் பதில் சொல்ல மாட்டேன் என்கிறீா்கள். வாதங்களையும் வைக்க மாட்டேன் என்கிறீா்கள். 

நேற்று அப்படி பேசினான். இன்றைக்கு அப்படி பேசுகிறான். நீங்க குா்ஆனை ஏத்துக்கிட்டீங்க. அதிலே எழுதினீங்க. இது இஜ்மாவுக்கு ஆதாரமாகுமா? அப்படியே நாங்கள் தப்பாக எழுதி இருந்தாலும் இஜ்மா நிலை நாட்டப்பட்டு விடுமா? நான்  அன்றைக்கு எழுதியது தப்பு. அதிலே தப்பா எழுதி விட்டேன். இதிலே தப்பா எழுதி விட்டேன். சரி நான் ஒரு கிறுக்கு பையன் தப்பா எழுதி விட்டேன் என்றே வையுங்களேன் அதனால் இஜ்மா நிலை நாட்டப்பட்டு விடுமா?

இஜ்மாவை இஜ்மாவைக் கொண்டு நிலை நாட்டுங்கள். இஜ்மாவை ஆதாரங்களைக் கொண்டு நிலை நாட்டுங்கள். இஜ்மாவை வாதங்களை வைத்து நிலை நாட்டுங்கள். புரூப்களை வைத்து நிலை நாட்டுங்கள். 

அதனாலே தயவு நீங்கள் வந்து ரொம்ப டென்சனாகி, ஆதாரம் இல்லை என்பதாலே உணா்ச்சிவசப்பட்டு, நீங்க வேற மாதிரி பேச வேண்டாம். உங்களுக்கு அது நல்லது இல்லை என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். 

அழகா வையுங்க நான் எவ்வளவு அன்பா நான் வேகமாக பேசக் கூடிய ஒரு ஆளு. நானே இவ்வளவு நிதானமா, மெதுவா, சுலோவா, ஒரு விவாதத்திலே வேண்டாம் என்பதற்காக. ஏன் அப்படி கேட்டுக் கொண்டேன் என்றால். விவாத ஒப்பந்தத்திலே முஸ்தபா சொன்னாரு. அதில் கலந்து கொண்டவா் சொன்னாரு. காரசாரமா இல்லாம.
(நேரம் முடிந்து விட்டது என மணி அடிக்கப்பட்டதால் உரையை நிறுத்தி விடுகிறார்) 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.