75 எங்கள் காரியத்தை எடுத்துக் கொண்டோம் என்ற சொல் வழக்கு தமிழில் எப்படி? (19)
இலாஹ் என்றால் இறைவன், கடவுள், தெய்வம் என்று பொருள் என பாகம் 17ல் விளக்கி இருந்தோம். இலாஹி என்றால் என்னுடைய இறைவன், என்னுடைய கடவுள், என்னுடைய தெய்வம் என்று பொருள் என்பதை ஏன் குறிப்பிடவில்லை என்று ஒரு சகோதரர் கேட்டுள்ளார்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/05/75-19.html
குறிப்பிடாததற்கு காரணம் இலாஹக, இலாஹுனா போன்று குர்ஆனில் வந்த மாதிரி என்னுடைய இறைவன் என்ற பொருள் தரும் இலாஹி என்பது வரவில்லை. குர்ஆனில் வந்துள்ள வார்த்தைகளை மட்டுமே அபத (அகர - Alphabetical) வரிசையில் தந்து வருகிறோம்.
------------------------
9:50ல் உள்ள அம்ரனா என்பதற்கு பீ.ஜே. தர்ஜமாவில் என்ன மொழியாக்கம் செய்தார்கள். ததஜ அறிஞர்கள் குழுவினரிடம் கேட்டு பதில் தர இயலுமா? என்று கேட்டு பலருக்கு அனுப்பி இருந்தோம். யாரும் பதில் பெற்றுத் தரவில்லை.
பீ.ஜே.யிடம் கேட்டதற்கு அவர் தந்த பதில் விளக்கம்.
தமிழில் அடி என்ற வார்த்தை எத்தனை விதமான பொருள்கள் தருகிறது? மழை அடிக்கிறது, பனி அடிக்கிறது, காற்று அடிக்கிறது, வெயில் அடிக்கிறது என்றால் அடிக்கிறது என்ற நேரடி பொருள் கொள்ள மாட்டோம்.
மழை பெய்கிறது. பனி (மழை) பொழிகிறிது. காற்று வீசுகிறது. என்று எழுதிய நாம் அவற்றில் சிலவற்றை பாகம் 4, 12,14 ஆகியவற்றில் சுட்டிக் காட்டி இருந்தோம். இதை இங்கு நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
அரபு மொழியில் அம்ரு என்ற மூலச் சொல்லில் இருந்து வந்துள்ள வார்த்தைகள். கட்டளை, ஏவல், உத்தரவு , தூண்டி விடுதல், காரியங்கள், விஷயம், அதிகாரம், செய்தி, தீர்ப்பு ஆலோசனை, முடிவு, பணி, கவனமாக, அறிவுரை, கடைசி, அவன் கூற, விஷயம், மார்க்கம், செய்தி, நிலை, அறிவித்தோம்,. நிகழ்ச்சி, திட்டம் போன்ற பொருள்களில் வந்துள்ளதை இதில் காண உள்ளீர்கள்.
45 விதமாக வரும் இந்த 75வது வார்த்தைகள் 261 இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இது வரையிலான 75 வார்த்தைகளை அறிவதன் மூலம் மீண்டும் மீண்டும் வந்துள்ளவற்றை 5891 இடங்களில் புரிவீர்கள்.
அரபு மொழியில் குறில் நெடில் பாடம் மத்து - நீட்டல் விபரம் அரபு மொழி அறியாதவர்களும் குர்ஆனை எளிமையாக வாசிப்பதற்கான பயிற்சி வகுப்பு பாகம்17ல் உள்ளது. அதைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.
75 | اَمَرَ | அமர (7) | 1.கட்டளை 2:27. 7:29. 12:40. 13:21,25. ஏவியதை 4:114. ஏவுவதை 96:12. |
اَمَرْتُكَ | அமர்துக (1) | 2.உனக்குக் கட்டளையிட்ட 7:12. |
اَمَرْتَنِىْ | அமர்தனி (1) | 3.எனக்குக் கட்டளையிட்ட 5:117, |
اَمَرْتَهُمْ | அமர்தஹும் (1) | 4.அவர்களுக்குக் கட்டளை 24:53. |
اَمَرَكُمُ | அமரகுமு (1) | 5.உங்களுக்குக் கட்டளை 2:222. |
اَمَرَنَا | அமரனா (1) | 6.எங்களுக்குக் கட்டளை 7:28. |
اَمَرَهٗؕ | அமரஹு (1) | 7. கட்டளையிட்டதை 80:23. |
اَمَرَهُمْ | அமரஹம் (2) | 8. அவர்களுக்குக் கட்டளையிட்ட(வாறு)12:68. தமக்கு ஏவியதில் 66:6. |
اَمَرُوْا | அமரூ (1) | 9.ஏவுவார்கள். 22:41. |
اٰمُرَنَّهُمْ | ஆமுரன்னஹும் (2) | 10.அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; 4:119(2) |
اٰمُرُهٗ | ஆமுருஹு (1) | 11.நான் கட்டளையிடுவதை 12:32. |
تَاْمُرُكَ | தஃமுருக (1) | 12.உமக்குக் கட்டளையிடுகிறது? 11:87. |
تَاْمُرُنَا | தஃமுருனா (1) | 13. நீர் கட்டளையிடுபவருக்கு 25:60. |
تَاْمُرُهُمْ | தஃமுருஹும் (1) | 14.அவர்களுக்குக் கட்டளையிடுகிறது? 52:32. |
تَاْمُرُوْنَ | தஃமுரூன (4) | 15.ஏவுகிறீர்கள்? 2:44. 3:110. கட்டளையிடப் போகிறீர்கள்? 7: 110. உத்தரவிடுகிறீர்கள்? 26:35 |
تَاْمُرُوْنَـنَاۤ | தஃமுரூனனா (1) | 16.எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்ட 34:33. |
تَاْمُرُوْٓنِّىْۤ | தஃமுரூனீ (1) | 17. எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்? 39:64. |
تَاْمُرِيْنَ | தஃமுரீன (1) | 18. கட்டளையிடுவது 27:33. |
يَاْمُرُ | யஃமுரு(5) | 19. ஏவ 7:28. ஏவுபவன் 16:76. ஏவுபவராக 19:55. கட்டளையிடுகிறான். 16:90. தூண்டுகிறான். 24:21. |
يَاْمُرُكُمْ | யஃமுருகும்(7) | 20.உங்களுக்குக் கட்டளையிடுகிறான் 2:67. 4:58. உங்களுக்குக் கட்டளை இடுகின்றதே 2:93. உங்களுக்குத் தூண்டுகிறான். 2:169.268. உங்களுக்கு ஏவ(மாட்டார்) 3:80. உங்களுக்கு ஏவு(வாரா?) 3:80. |
يَاْمُرُهُمْ | யஃமுருஹும்(1) | 21. அவர்களுக்கு ஏவுகிறார். 7:157. |
يَاْمُرُوْنَ | யஃமுரூன(7) | 22. ஏவும் 3:21. ஏவி 3:104. 9:67. ஏவுகின்றனர். 3:114. ஏவுவார்கள் 9:71. 57:24. தூண்டி 4:37. |
وَّاْمُرْ | வஃமுர்(4) | 23. கட்டளையிடுவீராக! 7:145. ஏவுவீராக! 7:199. 20:132. ஏவு! 31:17. |
أُمِرْتُ | اُمِرْتُ | உமிர்து (11) | 24.கட்டளையிடப்பட்டுள்ளேன் 6:14,163. 10:72,104. 13:36. 27:91(2) 39:11, 12. 40:66. 42:15. |
أُمِرْتَ | اُمِرْتَ | உமிர்த (2) | 25. உமக்குக் கட்டளையிடப்பட்ட 11:112. 42:15. |
أُمِرْنَا | اُمِرْنَا | உமிர்னா (2) | 26. கட்டளையிடப்பட்டுள்ளோம் 6:71. |
اُمِرُوْۤا | உமிரூ (3) | 27. அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். 4:60. அவர்கள் கட்டளையிடப்பட்டனர். 9:31. அவர்களுக்கு கட்டளை 98:5. |
تُؤْمَرُ |
துஃமரு (2) |
28.உமக்குக் கட்டளையிடப்பட்ட தை 15:94. உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை 37:102. |
تُؤْمَرُوْنَ | துஃமரூன (2) | 29.உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை 2:68. கட்டளையிட்டவாறு 15:65. |
يُؤْمَرُوْنَ | யுஃமரூன (2) | 30. உமக்கு கட்டளையிடப்பட்டதை எ தமக்கு கட்டளையிடப்பட்டதை 66:6. |
يَاْتَمِرُوْنَ | யஃதமிரூன (1) | 31.ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். 28:20. |
وَاْتَمِرُوْا | வஃதமிரூ (1) | 32. முடிவு செய்து கொள்ளுங்கள்! 65:6. |
ٱلْأَمْرُ | அல்அம்ரு (72) | 33. மார்க்கம் 45:17,18. செய்தி 4:83. தீர்ப்பு அறிவித்தோம். 15:66. நிகழ்ச்சி 16:77. |
கட்டளை 3:152. 4:47. 7:54,77,150. 9:106.11:43,59, 73,76, 97,101. 13:11. 16:1,33. 17:85. 18:50.19:64. 26:151.
28:44. 33:37,38. 40:78. காரியம் 2:210. 5:52. 6:8,58. 9:48. 11:44,123. 13:2. 19:39. 24:62. 47:21. 54:3. 97:4. காரியங்கள் 10:3,31.32:5. 44:4. 49:7. விஷயம் 8:43. 12:41. 22:67. விஷயங்கள் 47:26. அதிகாரம் 3:128,154(3) 3:159. 4:59,83. 11:97. 13:31. 27:33. 30:4.82:19. திட்டமிட்ட படி 54:12. |
اَمْرًا | அம்ரன் (16) | 34.ஒரு காரியம் 2:117. 3:47. 8:44. 12:18,83. 19:35. 27:32. 33:36. 40:68. 43:79. 79:5. கட்டளை 18:69. 19:21. 44:5. 51:4.65:1. |
اَمْرُكُمْ | அம்ருகும் (3) | 35. உங்கள் திட்டம் 10:71(2) உங்கள் பணி 18:16. |
اَمْرِنَا | அம்ரினா (3) | 36. எங்கள் காரியங்கள் 3:147. |
اَمْرَنَا | அம்ரனா (15) | 37. கவனமாக 9:50. நமது கட்டளை 10:24. 11:40,58,66,82,94. 18:88. 21:73. 32:24. 34:12. 42:52. 54:50. எங்கள் பணியை 18:10. நமது உத்தரவு 23:27. |
اَمْرِهٖ | அம்ரிஹி (22) | 38. தனது கட்டளை 2:109. 7:54. 9:24. 16:2,12. 40:15. தமக்கு அறிவுரை 2:275. தனது வினை 5:95. தன் காரியத்தில் 12:21. தனது காரியத்தை 65:3. அவரது காரியத்தை 65:4. அவனது கட்டளை 14:32. 21:27. 22:65. 30:25. 45:12. அவன் கட்டளை 30:46. அவரது கட்டளை 21:81. 38:36. அவருடைய கட்டளை 24:63. அவனது காரியம் 18:28. அவன் கூற 36:82. |
اَمْرَهَا | அம்ரஹா (3) | 39. அதற்குரிய கட்டளையை தமது காரியத்தின் 65:9. அவற்றின் கடைசி 65:9. |
اَمْرُهُمْ | அம்ருஹும் (12) | 40. அவர்களின் விஷயம் 6:159. அவர்களது இந்தக் காரியம் 12:15. 12:102. தமது காரியத்தில் 18:21(2) 20:62. 21:93. 23:53. தமது காரியத்தின் 59:15. 64:5. தமது காரியங்களில் 42:38, தமது அக்காரியத்தில் 33:36. |
اَمْرِىْ | அம்ரீ (8) | 41.என் விஷயத்தில் 18:73. என் இஷ்டப்படி 18:82. எனது பணி 20:26, 32, எனது கட்டளை 20:90,93 என் விஷயம் 27:32. எனது காரியத்தை 40:44. |
الْاُمُوْرُ | அல் உமூரு (13) | 42. காரியங்கள் 2:210. 3:109,186. 8:44. 22:41,76. 31:22. 35:4. 42:43,53. 57:5. காரியம் 31:17. பிரச்சினைகளை 9:48. |
الْاٰمِرُوْنَ | அல் ஆமிரூன (13) | 43. ஏவுபவர்கள்; 9:112 |
اَمَّارَةٌۢ | அம்மாரதுன் (1) | 44. தூண்டுகிறது. 12:53 |
اِمْرًا | இம்ரன் (1) | 45. காரியத்தை 18:71. |
Comments