முதலமைச்சர் காரை மறித்து முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைப்பார்களா?
கொரோனா ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற காரை மறித்த மக்கள் கோரிக்கை மனு அளித்தனர் -செய்தி
நாட்டில் முக்கியமான தலைவர்களின் பிறந்த நாட்களிலும் முக்கியமான விசேஷமான நாட்களிலும் சிறைகளில் இருப்பவர்களை கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்கிறார்கள். முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுது இல்லை.
ஒவ்வொரு வருஷமும் தலைவர்கள் பிறந்தநாள் வந்துவிட்டாலே, ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக முஸ்லிம்களின் கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கும். தேர்தல் வந்து விட்டால் முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை அறிவிக்கும். விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை போல் பேசுவார்கள்.
அதுபோல்தான் இந்த ஆண்டும் மறைந்த தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட இருக்கும் ஆணையை எதிர்பார்த்து முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்கள் காத்துக் கிடக்கின்றன.
இன்றைய தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தபொழுது அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு ஜ.உ.சாவின் தலைவர் P.A. காஜா முஈனுத்தீன் பாகவி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
எதிர்கட்சி தலைவராக இருந்தபொழுது கூட்டமைப்பு சார்பாக கொடுக்கப்பட்ட மனுவை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற காரை P.A. காஜா முஈனுத்தீன் பாகவி தலைமையில் மறித்து கொடுத்த மனுவாக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் 6 வது கடமையை அழகிய முறையில் செய்யச் சொன்னவர்கள் நீங்கள் மறக்காமல் விடுதலை செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளார்கள்.
திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளில் கலைஞருக்கு செய்யும் மரியாதையாக வருகின்ற ஜுன் 3 விடுதலை செய்வீர்கள் என்று நம்புகிறார்கள்.
தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்கள் 2009 ஆம் ஆண்டு 10 ஆயுள் தண்டனை கைதிகளையும் 2010 ஆம் ஆண்டு 13 ஆயுள் தண்டனை கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்தார். இவர்களில் அன்றைய நிலையில் 15, 16 ஆண்டுகளைத் தாண்டிய கோவை, மேலப்பாளையம் வழக்கு முஸ்லிம்கள் யாரும் விடுதலை செய்யப்பட்டவில்லை
அ.தி.மு.க ஆட்சியில் புரட்சித் தலைவி என்றழைக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 1992 ஆம் ஆண்டு 230 ஆயுள் தண்டனை கைதிகளும் 1993ல் 132 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
அந்த விடுதலைப் பட்டியலில் முஸ்லிம்களும் இருந்தார்கள். இவ்வளவு பேருக்கு பொது மன்னிப்பா என்று அன்று 230ஐயும் 132ஐயும் பத்திரிக்கைகளில் பெரிதாக எழுதினார்கள். பொதுக் கூட்டங்களிலும் பேசினார்கள். தனியார் T.V.சேனல்கள் இல்லாததால் விவாதங்கள் அவ்வளவு பெரிதாக ஆகவில்லை.
230ஐயும் 132ஐயும் முறியடித்து 1400க்கும் மேற்பட்டவர்களை 2008 தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களின் நண்பர் கருணாநிதி விடுதலை செய்து மெகா சாதனை படைத்தார். அதிலும் கோவை வழக்கு முஸ்லிம்கள் யாரும் விடுதலை செய்யப்பட்டவில்லை.
1400க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்து மெகா சாதனை படைத்த கருணாநிதி. முஸ்லிம்களுக்குத்தான் அதிக கடமைப்பட்டவர். ஒவ்வொரு தேர்தலிலும் 6 வது கடமையை அழகிய முறையில் நிறைவேற்றி வருபவர்கள் முஸ்லிம்களின் தான்.
அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் காரை மறித்து முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை வைக்க மாட்டார்கள். எதிர்கட்சி தலைவராக இருந்தபோது கூட முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காக ஸ்டாலினிடம்தானே கோரிக்கை வைத்தோம்.
அவர் இப்போது முதல்வராகி விட்டார் நாம் அன்று கொடுத்த கோரிக்கை மீது மறக்காமல் நடவடிக்கை எடுத்து விடுதலை செய்வார் என்று நம்புகிறார்கள்.
பல அலுவல்களுக்கிடையில் நீங்கள் மறந்து இருக்கலாம். எனவே நினைவூட்டுவோம் என்று நினைவூட்டுவது கூட மரியாதைக் குறைவு என எண்ணி உள்ளனர்.
ஆகவே பலரது வேண்டுகோளை ஏற்று இந்த நினைவூட்டல் பதிவை வெளியிட்டுள்ளோம்.
Comments