நீங்கள் எந்த இஜ்மாவில் இருக்கிறீர்கள்?

மறைந்த பெரிய குளம் ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள்,  இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் கிடையாது என்ற P.J.யின் முதல் உரைக்கு இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரமே  என்ற  தலைப்பில் பதில் அளித்துப் பேசிய உரையை எழுத்து வடிவில் முன்பு கண்டீர்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2021/05/blog-post_76.html

பெங்களூர் ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள் முதல்  உரைக்கு P.J. அளித்த  பதிலை எழுத்து வடிவில் கீழே காண உள்ளீர்கள். 

பெங்களூர் ஸைபுத்தீன் ரஷாதி பீ.ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருவரின் வாதங்களின் 3வது வீடியோவைக் காண வரும்புபவர்கள் கீழ் காணும் லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=9v8nZbcdqQ8&list=PLp-XhZC4cJl8YaffZjmDQuvDBcLSJvEYu&index=3 



இஜ்மாஃ என்றால் என்ன என்பதில் இஜ்மாஃ இல்லை. இஜ்மாஃ - ஒருமித்த கருத்து என்றால் என்ன என்பதில்  சுன்னத் ஜமாஅத்தவா்களிடத்தில் ஒருமித்த கருத்து இல்லை. என்று ஆதாரம் வைக்கிறார்  இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் கிடையாது என்ற P.J. யின் 2ஆவது   உரையில்இதோ அந்த உரை எழுத்து வடிவில்.


அன்பிற்குரிய சகோதரா்களே திருக்குா்ஆனும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களுடைய வழி காட்டுதல் மாத்திரம்தான் மூல ஆதாரங்கள் வேறு எதுவும் மூல ஆதாரங்கள் ஆகாது என்பதற்கு ஏராளமான சான்றுகளை நான் முன் வைத்து இருக்கிறேன். எதிர் தரப்பினா் (ஸைபுத்தீன் ரஷாதி) இவ்வளவு நேரம் வாய்ப்பு இருந்து கூட எத ஆதாரம் என்று சொல்லுகிறார்களோ அதுக்குரிய ஒரு ஆதாரத்தையும் காட்டவில்லை.

இஜ்மான்னா ஒரு ஆதாரம்டு சொன்னா இந்தா இருக்கு இஜ்மா ஆதாரங்குதற்குரிய ஆதாரம் என்று சொல்லணும். அவா் உரை பூரா என்னவா இருக்கு என்று சொன்னால் கியாஸை ஏற்றுக் கொண்டார்கள். என்னமோ கியாஸ்ங்கிறதை மறுத்துக் கொண்டே இருந்த மாதிரியும் விவாத ஒப்பந்தத்தில் வந்து கியாஸை ஏற்றுக் கொண்டார்கள் என்கிற மாதிரியான ஒரு தோற்றத்தை இங்கே பிரதிபலிக்கிறாங்க.

முதல்ல கியாஸ்ஸுன்னா ஆய்வுன்டு அவா் அா்த்தம் செஞ்சுட்டார். ஒரு சொல்லுடைய அா்த்தம் எப்படி அந்த சொல்லுடைய சொல்லுக்கு சொந்தமானதோ அதிலிருந்து ஆய்வு செய்து எடுக்கிற முடிவும் அத சோ்ந்ததுதான். குா்ஆன்ல இருந்து நேரடி அா்த்தமும் குா்ஆன் சொல்வதுதான் ஆய்வு செய்து விளங்றதும் குா்ஆன் சொல்றதுதான். அதை ஏன் கியாஸுன்னுட்டு தனியா போட்டு பிரிக்கிறீங்க.

குா்ஆனை ஆய்வுதானே செய்யனும் குா்ஆனை ஆய்து செய்து ஒன்றை எடுத்தால் அது குா்ஆனுடைய கருத்துதான். 

ஹதீஸை ஆய்வு செய்து எடுத்தால் (அது) ஹதீஸுடைய கருத்துதான். அப்ப குா்ஆன் ஹதீஸுதான். ஏன் கியாஸுன்னு சொல்றீங்க என்றுதான் விவாத ஒப்பந்தத்திலே கேட்டிருக்கிறோம். இதை 20 ஆண்டுகளாக விளக்கி இருக்கிறோம். 

3 மணி நேரம் கியாஸ் என்றால் என்னன்டு ஒரு பெரிய நீண்ட உரையை நிகழ்த்தி நம்ம ஆன் லைன் பி.ஜெ.டாட்காமில் அது இருக்கிறது. இது பல வருடங்களாக நம்ம சொல்லி வரக் கூடிய ஒரு விஷயம்.

அடுத்து என்னன்டு சொன்னால். இஜ்மாவுக்கு வர்ராங்க. நேரடியாக பெற முடியாது. 6000 வசனத்திலேயும் 4000 ஹதீஸிலேயும் நேரடியா எல்லாம் இருக்குமா? அப்படிங்கிற ஒரு கருத்தை சொல்லி நேரடியாக இல்லாம அதிலிருந்து விளங்குறமே அதுவும் மார்க்கம்தான் என்று ஒரு வாதத்தை வைக்கிறாங்க.

அதற்கு ஆதராமாகத்தான் முஆது இப்னு ஜபல் அவ்ங்களுடை  ஹதீஸை எடுத்து வைக்கிறாங்க. அது நம்ம நிலை பாட்டிலே பலவீனமானதாக இருந்ததாலும் நான் வாதத்திலே வைக்கல. ஏன்னு கேட்டால் பலவீனமானது சம்பந்தமா ஒரு தலைப்பு இருக்கிறது. அதனாலே அதை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டு நான் சொல்கிறேன்.

நீங்கள் சொல்லக் கூடிய இந்த ஹதீஸு இஜ்மான்னு ஒன்னு கிடையாது என்பதற்குத்தான் ஆதாரம். ஏன்னா குா்ஆன்லே உனக்கு தெரியாட்டா என்னான்டு கேட்குறாங்க. ஹதீஸிலே கிடைக்காட்டி என்னான்னு கேட்குறாங்க. அஜதஹிது ரஃஇ வலஆலு. நான் ஆய்வு செய்வேன். அதிலே எந்த குறைவும் வைக்க மாட்டேன். அப்படின்னு முஆது இப்னு ஜபல் சொல்றாங்க. அப்ப நேரடியா கிடைக்காட்டி ஆய்வு செய் என்றுதான் அா்த்தமே தவிர முஆது இப்னு ஜபல்ட எல்லா அறிஞா்களையும் கூட்டி ஏக மனதா மாநாடு போட்டு தீா்மானம் போட்டு இஜ்மாவு செய்ன்னு சொல்லலே.

அவா் ஒரு ஆளுதான் ஆய்வு செய்றார். அப்ப குா்ஆன்லே நேரடியா இல்லாட்டி என்னாங்ற தீா்வு ஹதீஸ்லெ கிடைச்சு போச்சு. நேரடியா இல்லாட்டி சிந்தித்து எடுக்கணும் அவ்வளவுதான். அது குா்ஆன்தான். ஹதீஸ்லே நேரடியா கிடைக்காட்டி சிந்திச்சு எடுக்கணும் அது ஹதீஸ்தான். அப்ப இது வந்து இஜ்மா இல்லைன்டுதான் இது காட்டுது. இஜ்மாவுக்கு அவா்கள் எடுத்து வைத்த முதல் ஆதாரமே. ஏக மனதா கூடி நீங்க முடிவு எடுங்க என்ற கருத்துக்கு எதிராக இருக்கிறது.

அவரவா் ஆய்வு செய்துதான் முடிவு எடுக்க வேண்டும். ஆதாரங்கள் அடிப்படையில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்கிற கருத்தை சொல்லும்பொழுது இத இஜ்மாவுக்கு பெரிய ஆதாரமா இவ்வளவு நேரம் வாய்ப்பு இருந்து கூட இஜ்மாவுக்கு ஒரு ஆதாரத்தை அவங்க என்ன செய்யலே சொல்லலே என்பதை நீங்க கவன(த்தில் கொள்ள வேண்டும்). அவ்வளவு பலவீனமானது இஜ்மா என்பது.

அடுத்ததாக வந்து குா்ஆனை விளங்கிறதை விஷயத்தை சொல்லும்பொழுது. ஹதீஸ் துணை இல்லாமல் விளங்கவே முடியாது. அப்படீன்டாங்க. அது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும், குா்ஆன் வந்து இரண்டு வகையில் விளங்கக் கூடியது இருக்கிறது. அல்லாஹ்வே குா்ஆன்லே சொல்றான்.

லிதுபையின லின்னாஸி மாநுZஸ்ஸில இலைஹிம் வலஅல்லஹும் யதபக்கரூன். நான் அருளியதை நீ விளக்கணும். அவங்க சிந்திக்கணும். அப்ப குா்ஆன்ல வந்து சிந்திச்சு விளங்கக் கூடிய வசனங்களையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். 

துாதா் விளக்கினால்தான் விளங்கக் கூடிய வசனங்களும் இருக்கிறது. எதை துாதா் விளக்கினால் விளங்குமோ அதை துாதா் விளக்கினால்தான் விளங்கணும். (துாதா்) விளக்கத்தை வைத்துதான் விளங்க வேண்டும். 

எதை சிந்தித்து விளங்க முடியுமோ அதை சிந்தித்து விளங்கிக் கொள்ள வேண்டும் என்று 2 வகையில் இருக்கிறது என்பதையும் இந்த விவாதத்தோடு தொடா்பு இல்லாட்டாலும் வைச்சதுக்கு நான் சொல்றேன்.

அவங்க வாதிச்ச ஒட்டு மொத்த விஷயமும் அவ்வளவுதான். அவுங்க இந்த விவாதத்திலே வைச்ச ஒட்டு மொத்த விஷயமே அவ்வளவுதான். அதே நேரத்திலே, இவுங்க இஜ்மா என்பதற்கு இவுங்க என்ன கான்செப்ட்டில் இருக்கிறாங்க என்பதை இதுவரை விளக்க(வில்)லை. இஜ்மான்டா என்னன்னு விளக்கலை. ஆனால் விளக்கினதிலே சூசகமாக ஒன்ன சொல்லி இருக்கிறாங்க என்ன சொல்றாங்க.

குா்ஆன் ஹதீஸை வைச்சு எடுக்கிற முடிவுதான் இஜ்மா அந்த கருத்தை சொல்றாங்க. ஒருவா் முடிவே இப்படி என்றால் எல்லாரும் குா்ஆன் ஹதீஸை வைத்து செய்தால் எப்படிப்பட்டதா இருக்கும் அப்படீங்கிற ஒரு கருத்தை இங்க என்ன செஞ்சிருக்கிறாங்க மூடலா பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்ப நாம இப்ப கேக்றது என்ன தெரியுமா இஜ்மா என்பதைப் பற்றி விவாதிக்க நீங்கள் வந்திருக்கிறீா்கள். நாங்கள் கேட்பது. இஜ்மான்டா என்ன? ஏன் அப்படி  கேட்கிறேன். இஜ்மாஃ என்றால் என்ன என்பதில் இஜ்மாஃ இல்லை.

இஜ்மாஃ என்றால் என்ன ஒருமித்த கருத்து என்றால் என்ன என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. யாரிடத்தில் இல்லை. யார் சுன்னத் ஜமாஅத் என்று இவா்கள் ஏற்றுக் கொள்வார்களோ எதிர் தரப்பினா். அவா்களிடத்தில் இல்லை. அப்ப இஜ்மாஃன்னா நீங்க எத சொல்றீங்க. நீங்க சொல்ற இஜ்மாஃவுக்கு என்ன குா்ஆன் வசனம் ஆதாரம். நீங்க சொல்ற இஜ்மாஃவுக்கு என்ன ஹதீஸ் ஆதாரம்.

இஜ்மாவுக்கு நீங்க எதையாவது சொல்வீா்களேயானால் நீங்க சொல்லாத வேறு இஜ்மாவையெல்லாம் சொல்லி இருக்கிறார்களே அவ்ங்க நிலை என்ன? அந்த இஜ்மா சரியா? என்பதை என்ன செய்யணும். நீங்க சிந்திக்க வேண்டும். புரிந்து கொள்வதற்காக நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்ற மாதிரி, நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லணும்.

சும்ம உங்களுடைய பயானா சொல்லி விட்டு போகக் கூடாது. திருப்ப கேட்கிறேன் ஒருமித்த கருத்து. இஜ்மாஃ என்பதற்கு இலக்கணம் என்ன? எதை இஜ்மான்னு நீங்க சொல்றீங்க? ஒண்ணு.நம்பா் ஒண்.

ஒருமித்த கருத்து இஜ்மா மார்க்க ஆதாரம் என்று சொல்லி சுன்னத் ஜமாஅத் என்று நீங்கள் சொல்லக் கூடியவா்கள் மத்தியிலே ஒருமித்த கருத்து இருக்குதா?

யாரெல்லாம் சுன்னத் ஜமாஅத் என்கிறீா்களோ அத்தனை பேரும் இஜ்மா ஆதாரம் என்று சொல்லி இருக்கிறாங்களா? அதை நீங்க ரண்டாவது கேள்விக்கு பதில் சொல்லணும். சொன்னா அதற்கு நாங்கள் விளக்கம் சொல்லுவோம். மறுப்போம் அதை.

ஒருமித்த கருத்துக்கு நீங்கள் ஒரு விளக்கம் சொல்வீா்களேயானால் சொந்த கருத்தா சொல்றீங்களா? யாராவது சொன்னதை எடுத்து சொல்றீங்களா?

ஏன்னா நீங்க இஜ்மாஃவுக்கு சொன்ன சில சூசகமாக சொன்னதெல்லாம் உங்க சொந்த விளக்கமாக இருக்கிறது. எதிலிருந்தாவது ஸோர்ஸிலிருந்து நீங்கள் சொல்ல வேண்டும். எந்த ஸோர்ஸிலிருந்து இந்த கருத்தை சொல்றீங்க என்பதற்கு இந்த நுால்ல இருக்கு என்று சொல்லணுமே தவிர. ஏன்னா பல கருத்து எழுதி வைச்சிருக்கிறீங்க.

எதை அடிப்படையாக வைத்து சொல்றீங்க சொந்தமா இதில் இல்லாத வேறு இஜ்மாவை நீங்கள் சொல்றீங்களா?

அடுத்து மற்றவா்கள் சொன்ன அடிப்படையில் தான் நீங்கள் சொல்கிறதா இருந்தால் மற்ற அனைவரும் சொன்னதைச் சொல்கிறீா்களா? மற்றவா்கள்ல பல கருத்து இருக்கும்பொழுது அதில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து சொல்கிறீா்களா? இதை விளக்க வேண்டும்.

சரி ஒருமித்த கருத்து என்கிறீா்களே ஒருமித்த கருத்துன்னா ஸஹாபாக்களுடைய ஒருமித்த கருத்து மட்டுமா? அப்படீன்னு சொல்லி இருக்கிறாங்க. நீங்க எதிலே இருக்கிறீங்க? 

ஸஹாபாக்களிலே முஜ்தஹிது ஆய்வாளா்களுடைய ஒருமித்த கருத்து அதுதான் இஜ்மா என்றும் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எதில் இருக்கிறீர்கள்?

மூன்று, முதல் மூன்று தலைமுறை கைருல் குரூன் ஸஹாபி, தாபி, தபவுதாபின்னுங்ற தலைமுறை இருக்கே அவ்ங்களுடைய ஒருமித்த கருத்துதான் இஜ்மா என்றும் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எதிலே, எந்த இஜ்மாவில் இருக்கிறீர்கள்.

அவா்களில் முஜ்தஹிதுகள் சொன்னதுதான் இஜ்மா என்றும் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் எந்த இஜ்மாவில் இருக்கிறீர்கள்.

அதே மாதிரி மதீனாவாசிகளுடைய இஜ்மாதான் ஆதாரம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். சொல்லி இருக்கிறார்கள் என்று நான் சொல்வதெல்லாம் சுன்னத் ஜமாஅத் ஆள்க. நீங்கள் யாரை சுன்னத் ஜமாஅத் என்று சொல்வீா்களோ அவ்ங்க.

மதீனாவாசிகளுடைய இஜ்மாதான் ஆதாரம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அது சரியா? அந்த கருத்தில், அந்த இஜ்மாவில் நீங்கள் இருக்கிறீங்களா?

அல்லது ஒட்டு மொத்த சமுதாயமே ஒன்றுபடணும் என்று சொல்லுகிறார்கள். அதுதான் இஜ்மாவா?

அல்லது ஒட்டு மொத்த சமுதாயத்தில் உள்ள ஆய்வாளா்கள் மட்டும் கூடி முடிவெடுக்கிறது. எல்லாரையும் சோ்த்துக்கிட கூடாது என்ற கருத்து உங்க கருத்தா?

அல்லது பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கிறதா? ஒருத்தா் கூட மாறு செய்யக் கூடாதுங்ற அளவுல அது இருக்கணுமா? எந்த கருத்தை நீங்கள் சொன்னாலும் ஒருவா் கூட மாறு செய்யாத அளவுல இருக்கணுமா? இந்த கேள்வியும் குறிச்சிக்கிட வேண்டும்.

அடுத்து வந்து ஒருமித்த கருத்துன்னா சுன்னத் ஜமாஅத்துடைய ஒருமித்த கருத்தா? அல்லது முஸ்லிமில் உள்ள அனைத்து பிரிவையும் கூட்டிக்கிட்டு ஒருமித்த கருத்து எடுக்கிறதா? என்பதற்கு நீங்க செய்யணும்.

அல்லது சுன்னத் ஜமாஅத் என்று நீங்கள் சொல்லி விட்டீா்களேயானால் நீங்கள் சுன்னத் ஜமாஅத் என்று சொல்லக் கூடிய ஷாபி, ஹனபி, மாலிகி, ஹன்பலி எல்லாரும் சோ்ந்து கூடி மஷுரா பண்ணி ஒருமித்த கருத்தா?

ஷாபிக்கு தனி இஜ்மா ஹனபிக்கு தனி இஜ்மாவா? எத சொன்னாலும் அதற்கு, அது, அவ்வளவும் தவறு என்பதற்கு எங்கள்ட்ட ஆதாரம் இருக்கிறது. நீங்க எத சொன்னாலும்.

அடுத்து வந்து பரேலவிகள் தேவ்பந்திகள் முரண்பட்டிருங்காங்களே ஒரு பிரச்சனை வரும்போது 2 பேரும் கூடி எடுக்கணுமா? அல்லது பரேலவி அவுங்களுக்கு தனி இஜ்மா எடுத்துக்கணுமா?

தேவ்பந்தி தனியா அவுங்களுக்குள்ளே கூடி அவங்க முஜ்தஹிது இஜ்மா எடுத்துக் கொள்ளணுமா? அத சொல்லணும்.

ஷரிஅத்ததுலே மட்டும்தான் ஒருமித்த கருத்து வரலாமா ஹகீகத்து மஃரிபத்து என்றெல்லாம் சொல்றாங்களே அதுக்கெல்லாம் கூட இஜ்மா இருக்குதா? அதையும் சொல்லணும்.

நாலு மத்ஹபுகளுடைய ஒருமித்த கருத்தா? ஒவ்வொரு மத்ஹபு அதை சொல்லிட்டேன் முதல்ல.

அடுத்து வந்து இந்த இஜ்மாங்கிற போ்ல ஒருமித்த கருத்துங்கிற போ்ல ஹகீதாவுல எல்லாம் கூடி அத வகுக்கலாமா?

ஒருமித்த கருத்தைக் கொண்டு கடமையான வணக்கங்களை இஜ்மாவை கொண்டு முடிவு எடுக்கலாமா? எதையெல்லாம் செய்யலாம் இஜ்மாவைக் கொண்டு. ஹகீதா உண்டாக்கலாமா? கடமைக்குதானா? அல்லது சுன்னத்துக்கு மட்டுமா? அல்லது முஸ்தஹப்புன்னு நீங்களா உண்டாக்கி இருக்கிறீங்களே அதுக்கு மட்டுமா எதவேணும்னாலும் செய்யலாமா? அத விளக்ணும்.

சரி அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்தார்கள் என்று எப்படி அறிந்து கொள்வது? மாநாடு போட்டார்களா? கூடினார்களா? அதற்கு ஆதாரத்தை வச்சு எந்த மாதிரி இருந்தால் அனைவரும் ஒன்று பட்டார்கள்னு ஒரு புஸ்தகத்தை எழுதினா, அனைவரும் ஒன்று பட்டார்கள் என்பதை அன்னைக்கு (அன்றைக்கு) எப்படி அறிந்து கொள்ள முடியும். 

பேக்ஸு இந்த மாதிரி டி.வி. தொலை தொடா்பு மீடியாக்கள் இல்லாத காலத்திலே எல்லோரும் ஒன்றுபட்டு இருந்தார்கள் என்பதை இந்த செய்தி அனைவருக்கும் போச்சு அனைவரும் கேட்டார்கள். என்று இஜ்மாவை எப்படி அறிந்து கொள்வது. எந்த ஸோர்ஸை வைத்து அதை அறிந்து கொள்வது. அடுத்து வந்து பெரும்பான்மை பெரும்பான்மை சொல்லியாச்சு.

மவுனமா இருந்தா அது வந்து இஜ்மாவிலே சேருமா? அத சொல்லணும். அதற்கு அடுத்து இப்படியெல்லாம் பல கருத்து என்ன செய்யுது. ஒரு காலத்திலே இஜ்மா செஞ்சு அடுத்த காலத்துலே மாத்தலாமா?

ஹதீஸை இஜ்மா மாத்துமா? குர்ஆர்னுக்கு மாத்தமா இஜ்மா எடுக்கலாமா?  அப்படியெல்லாம் இருக்குது. ஹதீஸை  மாத்தும்னு எழுதி வச்சிருக்காங்க. இதெல்லாம் சுன்னத் ஜமாஅத்தான் எழுதி வச்சிருக்காங்க.

அப்ப நீங்க முதல்ல இஜ்மான்னா உங்களுடைய வரைவிலக்கணம் என்ன? அத சொல்லி இந்த வரைவிலக்கணத்தை நான் ஏன் சொல்றேன் என்றால் இந்த வசனம் ஆதாரம் இந்த ஹதீஸ் ஆதாரம். என்று நீங்கள் நிறுவ வேண்டும். மத்தவங்களுடைய இஜ்மாவை நீங்க ஏன் மறுக்கிறீங்கன்னு சொன்னா அந்த உங்க இஜ்மாவை ஏத்துக் கொள்ளாத வேறு இஜ்மாகாரங்கா காபிரா வழி கேடரா? அத நீங்க சொல்ல வேண்டும்.

உங்க இஜ்மாவை ஏத்துக் கொள்ளாதவர்கள் சுன்னத் ஜமாஅத்தா இல்லயைா? நீங்கள் எதை இஜ்மா என்று சொல்வீா்களோ அந்த இஜ்மாவை அல்லது ஒட்டு மொத்த இஜ்மாவை மறுத்தவா்கள் அனைவரும் சுன்னத் ஜமாஅத்துக்கு வெளியில் உள்ளவா்களா? சுன்னத் ஜமாஅத்திலும் மறுத்தவா்கள் இருக்கிறார்களா இதுகளையும் நீங்கள் என்ன செய்யணும் நீங்கள் பார்க்கணும்.

அதே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட இஜ்மா இருக்கலாமா. முதல் நுாற்றாண்டில் ஒரு இஜ்மா, அத மாத்தி இரண்டாம்  நுாற்றாண்டிலே அத மாத்தி 3ஆம் நுாற்றாண்டிலே என்று இஜ்மா இருக்கிறது. இதை சேர்த்து இருக்கிறார்கள் எடுக்கலாம் என்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் நான் காட்டுவேன். முதல்ல கேள்விதான் உங்கள்ட கேட்கிறேன். இதில் எந்த இஜ்மா எடுக்கிறீா்கள்.





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு