பேராசிரியர் பணியில் பொன்விழாக் கண்ட பெரியகுளம் ஸைபுத்தீன் ரஷாதி பெங்களூரில் அடக்கம்.

1960ல் துவங்கப்பட்ட பெங்களூர் தாருல் உலுாம் ஸபீலுர்ரஷாத் அரபிக் கல்லுாரி  இந்த  ஆண்டு (2021)டன் 60 ஆண்டுகளை தாண்டுகிறது.  

பிரிக்கப்படாத ராமநாதபுரம் (இன்றைய தேனி) மாவட்டம்  பெரியகுளத்தைச் சார்ந்தவர் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள். இங்கு படித்துதான் பட்டம் பெற்றார்.  அங்கேயே பேராசியராகவும்  பணிக்கு சேர்ந்தார்.  

அதனால் பெரியகுளம்  ஸைபுத்தீன் ரஷாதி  பெங்களூர்  ஸைபுத்தீன் ரஷாதி  என்று  அறியப்படலானார்.  1988 டிசம்பரில்  அவர் சொன்னது. 20 ஆண்டுகளாக பெங்களூர் தாருல் உலுாம் ஸபீலுர்ரஷாத் அரபிக் கல்லுாரியில்  பேராசியராக வேலை செய்து வருகிறேன் என்று. 

அவரது சொல்படிப்  பார்த்தால் ஸபீலுர்ரஷாத்தில் பேராசிரியராக பொன்விழா (50 ஆண்டுகள்) கண்டவர். அந்த ஸைபுத்தீன் ரஷாதி அவர்கள்  13.05.2021  வியாழன் அன்று பெங்களூரில் மரணம் அடைந்தார்கள். அவரது ஜனாஸா சொந்த ஊரான பெரியகுளம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்த்தால். காலச் சூழல்  அன்று மாலையே அஸருக்குப்பின் பெங்களூரில் நடைபெற்றது. 



இஜ்மா மார்க்கத்தின் ஆதாரம் கிடையாது என்ற P.J.யின் முதல் உரைக்கு இஜ்மாவும் மார்க்கத்தின் ஆதாரமே  என்ற  தலைப்பில் பதில் அளித்துப் பேசிய  மவுலவி  ஸைபுத்தீன் ரஷாதி அவா்களின் உரையை எழுத்து வடிவில் காணுங்கள்.

https://www.youtube.com/watch?v=CMmUUfjRxO4&list=PLp-XhZC4cJl8YaffZjmDQuvDBcLSJvEYu&index=2

கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய இஸ்லாமிய சகோதரா்களே அல்லாஹ்வின் நல்லடியார்களே மார்க்கத்தில் ஆதாரங்கள் எத்தனை? மார்க்கத்தில் இது இஸ்லாமிய மார்க்கமாக கடை பிடிப்பதற்காக வேண்டி ஆதாரமாக கொள்ளத் தக்க வகைகள் எத்தனை. என்ற ஒரு அடிப்படையான கேள்விக்கு இதுவரை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். ஒட்டு மொத்தமாக அஹ்லுஸ்ஸுன்னத்தி வல் ஜமாஅத்தி என்று சொல்லப்படக் கூடிய ஹக்கு வாதிகள் சத்திய வாதிகள் நான்கு விதமான வகைகளை எடுத்து வைத்தார்கள்.

ஒன்று குர்ஆன், இரண்டாவது ஹதீஸ், மூன்றாவது இஜ்மா, நான்காவது கியாஸ்-ஆய்வு. இதில் அல்லாஹ்வுடைய மாபெரும் அருளால் நான்காவது வகையை எதிர் அணி அவா்கள் ஏற்றுக் கொண்டு விட்ட காரணத்தினால் பெயரை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். செயல்பாட்டளவில் அது இல்லாமல் எங்களுடைய மார்க்கத்தை சொல்ல இயலாது என்று ஏற்றுக் கொண்ட காரணத்தினால் அந்த கியாஸ் என்ற வகையை இங்கு விட்டு விட்டு 3ஆவது இருக்கக் கூடிய இஜ்மா என்பதை மட்டும் பேச வேண்டும் என்ற நிலையிலே இன்று நாம் அமா்ந்து இருக்கிறோம்.

இன்ஷாஅல்லாஹ்- அல்லாஹ் நாடினால் அல்லாஹ் தவ்பீக் கொடுத்தால் இதிலும்  அவா்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் .இஜ்மாவையும் ஆதாரம் கொள்வதற்கு. அருமைச் சகோதரா்களே! மார்க்கம் அல்லாஹ் சொந்தமானது. அந்த மார்க்கத்தை விளக்கக் கூடிய பொறுப்பு அல்லாஹ்விற்கு இருக்கிறது. நபிகள் நயாகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவா்களுக்கு அந்த பொறுப்பு தரப்பட்டது. அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து. இதை எதிர் அணியினா் வாசித்த ஆயத்துக்கள் நிச்சயமாக ஊா்ஜிதப்படுத்துகின்றன. அதில் எந்த விதமான சந்தேகமும் அல்ல.

ஆனால் இந்த இரண்டைக் கொண்டு மட்டும் முழுமையான விளக்கத்தை மனிதனுக்கு ஏற்படக் கூடிய அனைத்து விஷயங்களிலும் வழி காட்டுதல்களை நேரடியாக தெளிவாகப் பெற முடியுமா என்று சொன்னால் வாழ்க்கையில் சாத்தியமற்ற நிலை இது. குா்ஆனுடைய ஆயத்துக்கள் எடுத்துக் கொண்டால் ஆறாயிரம் சில்லரை என்று சொல்லுவார்கள். ஹதீஸ் உடைய மொத்த எண்ணிக்கைகளை எடுத்துப் பார்ப்பீா்களேயானால். நாலாயிரம் சில்லரை என்று சொல்லுவார்கள். துண்டு துண்டாக ஆகும்பொழுது ஆயிரக்கணக்கான ஹதீஸ்களாக பிரிந்து விடுகிறது.

ஏறத்தால ஒரு பதினோராயிரம் சொற்றொடா்கள் இதிலே வழிகாட்டுதல்கள் நிச்சயமாக இருக்கிறது. ஒளிவு இருக்கிறது. அல்லாஹ்வுடைய புறத்திலிருந்தான றஹ்மத்தான வழி முறைகள் காட்டப்பட்டிருக்கின்றன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து அடுத்து இன்னொரு ஆயிரம் ஆண்டுகளை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்பொழுது மனிதனுடைய வாழ்க்கையிலே ஏற்படக் கூடிய புத்தம் புதிய ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும் அதை இந்த பதினோராயிரம் சொற்றொடா்களைக் கொண்டு நேரடியாக விளக்கிக் கூற முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது.

பதினோராயிரம் சொற்றொடா்களில் பல லட்சம் பிரச்சனைகளுக்கு தீா்வுகளை நேரடியாக நான் நேரடியாக நேரடியாக என்று சொல்லுகிறேன். தொக்கி நிற்கும் உள்ளே அடங்கி இருக்கும் தோண்டி எடுக்க வேண்டியதிருக்கும் அதற்கு தகுதி உள்ளவா்கள் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். நான் சொல்லுவது நேரடியாக குா்ஆன் ஹதீஸிலிருந்து எல்லா பிரச்சனைகளுக்கும் தீா்வு எடுக்க முடியுமா என்று சொன்னால் நிச்சயமாக ஒரு காலத்திலும் முடியாது.

இதனால்தான் மார்க்கத்தில் ஆதாரம் எப்படி பிடிக்க வேண்டும் என்று நம்முடைய தலையைப் பயன்படுத்தி சிந்திப்பதை விட அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன வழியைச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பதை நீங்கள் சற்று ஆய்வு செய்தால். இஜ்மா உடைய தன்மையை புரிந்து கொள்வீா்கள். அதல்லாமல் இஜ்மாவிற்கே விளக்கம் அது வேறு விதமாக அவா்கள் விளங்கி இருந்த காரணத்தினாலோ அல்லது விளக்கிக் கொடுக்கக் கூடிய விருப்பம் இருக்கிற காரணத்தினாலோ அசல் அதனுடைய தஃரீபை விளக்கத்தை அதனுடைய இலக்கண சட்ட நிதிகளை விதிகளை  மாறி  வேறு விதமான விளக்கங்களை தரப்படுகிறது.

எல்லாரும் கூடி ஒட்டு மொத்தமாகக் கூடி தீா்மானம் போட்டு இஸ்லாமிய சட்டம் என்று சொல்றது. இதுதான் இஜ்மா என்ற ஒரு தவறான கருத்தை மக்களுக்கு போதித்து தாங்களும் தவறிலிருந்து பிறரையும் தவறில் ஆழ்த்தக் கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கிறோம் சகோதரா்களே.

உண்மையில் மார்க்கத்தை எப்படி விளங்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கிக் காட்டினார்கள். ஹழரத் முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு  அன்ஹு அவா்களை தமது பிரதிநிதியாக எமன் தேசத்திற்கு கவா்னராக அனுப்பி வைக்கும்பொழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களுக்கு ஒரு நல்லுரை வழங்கினார்கள்.

அனைத்து ஸஹாபாக்கள் பலபேரு ஸஹாபாக்களை தோ்ந்தெடுத்து பல பகுதிகளுக்கு பிரதிகள்நிதிகளாக அனுப்பி மார்க்கத்தை போதிக்கக் கூடிய அந்த வழிமுறைகளையும் விதி முறைகளையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக் கொடுத்து அனுப்புவார்கள். இது வழக்கமாக இருந்தது. 

பலருக்கு எழுத வைத்து ஏடாகவும் கையில் கொடுத்து இருக்கிறார்கள். பல பேருக்கு இதுவிதமான நிகழ்வுகள் வரலாற்று நுால்களில் நிறைய இருக்கிறது நம்ம பயான் செய்ய வரல்லெ. விவாதம் என்கிற அடிப்படையிலே நான் சொல்றேன். தீனை விளங்குவதற்கு நபிகள் நாயகம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி வழி சொன்னார்கள் பாருங்கள். அந்த வழி முறையிலே நாம் செல்வோமேயானால்தான். நாம் குா்ஆன் ஹதீஸை பின்பற்றியவா்கள். குா்ஆனையும் சுன்னாவையும் பின்பற்றியவா்களா ஆவார்கள்.

அந்த வழிமுறையை தவிர்த்து விட்டு, ஆயத்துக்களை வாசித்து அள்ளி எடுத்து விட்டு, இதுதான் வழி முறை என்று சொன்னால் சுய சிந்தனை என்றுதான் ஆகுமே தவிர, நபியை பின் பற்றுவதன் வழி முறையாக ஆகாது. நான் எப்பொழுதும் சொல்லுவது இப்போதும் சொல்லுகிறேன். 

குா்ஆனை ஹதீஸ்களுடைய துணை கொள்ளாமல் விளங்கவே முடியாது.
குா்ஆனுடைய ஆயத்துக்களை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீனுக்கு அா்த்தம் தெரிவது வேறு. சட்டப் பிரச்சனைகள். ஆழ்ந்து இருக்கக் கூடிய தத்துவங்கள் கருத்துக்கள் இதை நாம் ஹதீஸுடைய துணை இல்லாமல் நேரடியாக விளங்க ஆரம்பிப்போமேயானால் ஏடா கூடாமான கருத்துக்கள் குா்ஆனைக் கொண்டு. இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கிறவா்களெல்லாம் அப்படித்தான் ஆகுது.

ஒவ்வொருத்தரும் தன்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரமாக எடுக்குறது எதை எடுக்குறாங்க குா்ஆனுடைய ஆயத்தைத்தான் எடுத்து வைப்பாங்க. என்ன காரணம். நபியுடைய வழிகாட்டுதலை ஒதுக்கிட்டு வெறும் குா்ஆனுடைய வசனங்களை எடுத்து வைத்து தத்தமது வழி முறைகளுக்கு ஆதாரமாக கொள்றக் கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம்.

அதனாலே இதை விட்டுட்டு நாமலா ஆயத்துக்களை அடுத்து ஒரு பத்து பதினைந்து நம்பர்களை வாய்ப்பாடு மாதிரி போட்டு அனுப்பிச்சிடுறது அடுக்கி விடுறது பெரிய காரியமல்ல. அது நபிகள் பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன வழி முறையில் சொல்லிக் கொடுத்தார்கள். முஆது இப்னு ஜபலை கவா்னராக எமனுக்கு அனுப்பும்பொழுது அவா்களை வாகனத்தில் அமா்த்தி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து செல்கிறார்கள்.

போகும்பொழுது சொல்லுகிறார்கள் முஆதே அடுத்த வருடம் நீ திரும்பி வரும்பொழுது நான் ஹயாத்தாக இருக்க மாட்டேன். எனது கபுருக்கு அருகிலே நீ கடக்கக் கூடிய நிலையைத்தான் நீ காண்பாய். ஆகையினால் உனக்கு ஒரு சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நிகழ்வுகளையும் வழி காட்டுதல்களையும் தருகிறேன் என்று பல செய்திகளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களுக்கு எடுத்து கூறுகிறார்கள்.

அப்பொழுது அதிலிருந்து ஒரு செய்தியாக வருகிறது. ஹஸரத் முஆதைப் பார்த்துச் சொன்னார்கள். மக்களுக்கு நீங்கள் போவீா்கள். மார்க்கத்தை எடுத்துச் சொல்வீா்கள். எதை அடிப்படையாக வைத்து மார்க்கத்தை மக்களுக்கு விளக்குவீா்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேள்வியாக கேட்கிறார்கள்.

ஹஸரத் முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு சொன்னார்கள். இந்த வரிசையைப் பாருங்கள் சற்று யோசித்துப் பாருங்கள். நான் மக்களுக்கு மத்தியிலே அல்லாஹ்வுடைய ரசூலே இறைவனால் வழங்கப்பட்டிருக்கக் கூடிய திருமறையை அடிப்படையாக வைத்து மார்க்கம் சொல்லுவேன்.  தீனைச் சொல்லுவேன் சட்டங்களுக்கு தீா்வை கொடுப்பேன். தீனுடைய அடிப்படை குா்ஆனுடைய அடிப்படையில் நான் எடுத்துச் சொல்லுவேன்.

நான் சொல்லவில்லை ஹஸரத் முஆது இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேள்விக்கு பதிலாகச் சொல்கிறார்கள். அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அடுத்து கேள்வி கேட்கிறார்கள். பஇன்லம் தஜித் பீ கிதாபில்லாஹ் இறை வேதத்திலே ஒரு விஷயத்திற்கு விளக்கத்தை நீ பெற்றுக் கொள்ள முடியா விட்டால். இறை வேதத்திலே இல்லை என்று சொல்லவில்லை. இருக்கலாம் அதை நீ தோ்ந்தெடுக்க முடியாமல் போகலாம். உன்னுடைய விளக்கத்திற்கு வராமலும் போகலாம் இறை வேதத்திலே நீ தேடக் கூடிய பிரச்சனைக்கு தீா்வு நீ பெற்றுக் கொள்ளவிட்டால் பெற்றுக் கொள்ளாவிட்டால் என்ன செய்வீா் என்று கேட்கிறார்கள். 

முஆது இப்னு ஜபல் சொல்கிறார்கள். நாயகமே உங்களுடைய வழி முறை முன்னால் இருக்கிறது நீங்கள் காட்டிக் கொடுத்த தெளிவுரைகள் என்னிடத்தில் இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து மக்களுக்கு நான் எடுத்துச் சொல்லுவேன் என்று ஹஸரத் முஆது இப்னு ரலியல்லாஹு அன்ஹு எடுத்துச் சொல்லுகிறார்கள். அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹ்  முக்கியமான கேள்வி பாருங்க இங்கதான் வருது.

என்னுடைய வழி முறையிலும் உங்களுக்கு அந்த வழி காட்டுதல் கிடைக்காமல் போனால் என்ன செய்வீா்கள். அங்கேயே எடுத்துக் காட்டுகிறார்கள் எல்லா பிரச்சனைகளும் குா்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் நேரடியாக பெற்றுக் கொள்ள முடியாது என்பதை. இல்லாவிட்டால் 3ஆவது கேள்வியுடைய தேவை என்ன வந்தது. முதல் கேள்வி 2ஆவது கேள்வியுடன் விஷயத்தை முடிச்சுடலாம். 

ரசூல்மார்களை அனுப்புனான் நபிமார்களை அனுப்புனான் என்னை இறுதியாக அனுப்புனான். தெளிவான குர்ஆனை அனுப்பி இருக்கிறான். இன்ன ஹாதல் குா்ஆன யஹ்தி லில்லதீ ஹிய அக்வம் பலமான வழியை சரியான வழியைக் குா்ஆன் காட்டிக் கொடுக்கும். நான் சொல்லி காட்டிக் கொடுத்திருக்கக் கூடிய வழி முறையும் தெளிவானது. அடுத்து தேவை இல்லை என்று கேள்வியையே நிப்பாட்டி இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 3ஆவதாக கேட்கிறார்கள். ஹதீஸிலேயும் எனது வழி முறைகள்லேயும் நீங்கள் அணுகக் கூடிய பிரச்சனைக்கு நேரடி தீா்வு கிடைக்க முடியாவிட்டால் என்ன செய்வீா்கள். அப்பொழுதுதான் அவா்கள் சொன்னார்கள். என்னுடைய ஆய்வை வைத்து அறிவை வைத்து சிந்தனையை வைத்து அந்த மார்க்கப் பிரச்சனைக்கு தீா்வு கூறுவேன். மார்க்கத்தை மக்களுக்கு மத்தியிலே எடுத்துச் சொல்லுவேன்.

குா்ஆனில் தெளிவாக இல்லாமல் கிடைக்காமல் போகும்போது. ஹதீஸில் தெளிவாக பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பொழுது. சுய சிந்தனையை இது மார்க்கத்திற்கு உகந்ததா குா்ஆன் ஹதீஸுடைய கருத்துக்கு மோதாமல் இருக்கக் கூடிய ஒரு வழிமுறையா என்பதை சிந்தித்து தீர சிந்தித்து மனசாட்சியை முன்னிறுத்தி அறிவை பயன்படுத்தி ஆய்வை எடுத்து அதன் மூலமாக மக்களுக்கு எடுத்து போதிப்பேன்.

சகோதரா்களே ஹதீஸு தெளிவான ஹதீஸ். பல ஹதீஸ் கிரந்தங்களிலே பதியப்பட்டிருக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த 3ஆவது கேள்வியை கேட்டதற்குப் பிறகு அந்த பதிலைப் பெற்ற பிறகு. முஆது இப்னு ஜபல் உடைய நெஞ்சை தட்டிக் கொடுத்து சொன்னார்கள். அல்ஹம்துலில்லாஹ் அல்லதீ வப்பக லிரசூலி ரசூலில்லாஹ் மாயுஹிப்பு ரசூலுஹு அவ் கமா கால ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

அல்லாஹ்வுடைய ரசூலாகிய நான் எந்த வழியை நான் பிரியப்பட்டேனோ பொருந்திக் கொள்கிறேனோ அந்த வழியை விளக்கிக் கொடுத்த அந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். ரசூலா எனது ரசூலுக்கு இந்த வழி முறைகளை விளக்கி கொடுத்து அல்லாஹ் இந்த தீனுடைய வழிமுறைகளை பூா்த்தி செய்வதற்குண்டான வழி முறைகளைச் சொல்லிக் கொடுத்தானே இப்படி ஒரு சிந்தனையை எனது சமுதாயத்தில் போட்டானே எனது ஸஹாபிக்கு இப்படி சரியான பதிலை சொல்லக் கூடிய வாய்ப்பை கொடுத்தானே அந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் புகழ்ந்தார்கள்.

அருமைச் சகோதரா்களே நான் இங்கே 3ஆவது கேள்விக்கு கிடைத்த பதில் ஆய்வுதான். நான் உங்களிடத்தில் கேட்க வருவது. ஒரு நபருடைய ஆய்வுக்கு இந்த பதிலாகுமேயானால் குா்ஆனிலும் ஹதீஸிலும் நேரடியாக கிடைக்காமல் போகும்பொழுது தெளிவான சட்டங்கள் பெறப்படியா பெறப்படாமல் ஆகும்போது ஒரு கருத்தை பல ஆலிம்கள் அல்ல. குழுமி இருக்கக் கூடிய அனைத்து மக்களும் சோ்ந்து ஆய்வு செய்து மனசிலே தோன்றி தீா்மானம் போட்டு சொல்வதற்கு பெயா் அல்ல. குா்ஆன் ஹதீஸுடைய அடிப்படைகளை உணா்ந்து தேள்வையை உணா்ந்து மார்க்கத்திற்கு முரண் இல்லாத வகையிலே ஒரு சட்ட தீர்வை கொடுப்பதற்கு

(நேரம் முடிந்து விட்டது என மணி அடிக்கப்பட்டதால் உரையை நிறுத்தி விடுகிறார்)

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு